Sunday, April 26, 2020

80 வயது மனைவி இறந்ததை அறியாத, 90 வயது முதியவர்

Added : ஏப் 26, 2020 02:08

திருமங்கலம்:மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், ஊரடங்கால் கவனிக்க ஆளின்றி, 80 வயது மூதாட்டி இறந்தார். இதை அறியாமல், 90 வயது கணவர், இரு நாட்களாக இறந்த உடலுக்கு பால் மற்றும் உணவு ஊட்ட முயன்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

திருமங்கலம் பாண்டி, 90. மனைவி ஆண்டாள்,80. இவர்களுக்கு, மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். வெளியூர்களில் வசிக்கின்றனர். உடல்நலம் பாதித்த முதிய தம்பதி இருவரும் தனியே வசிக்கின்றனர். ஊரடங்கால் பிள்ளைகள் நேரில் வந்து கவனிக்க முடியவில்லை.

நேற்று முன்தினம், கொரானா உதவி மையத்தை, கோவையில் இருந்து தொடர்பு கொண்ட மகள், தன் பெற்றோரின் நிலை குறித்து தெரிவித்தார்.இதுகுறித்து, திருமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வி.ஏ.ஓ., பாண்டியராஜன் நேரில் சென்று, இரவு உணவு கொடுத்தார்.

அப்போது, மனைவி இரு நாட்களாக பால், உணவு ஊட்டி விட்டாலும், சாப்பிட மறுப்பதாக பாண்டி தெரிவித்தார். வீட்டிற்குள் சென்று, வி.ஏ.ஓ., பார்த்த போது ஆண்டாள் இறந்து கிடந்தார். இரு நாட்களுக்கு மேலானதால் துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து, வருவாய் துறை அதிகாரிகள், மனைவி இறந்தது தெரியாமல் இருந்த முதியவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...