பல்கலை தேர்வு திட்டம் குழு அமைத்தது யு.ஜி.சி.,
Added : ஏப் 08, 2020 23:23
கொரோனா விடுமுறை நாட்களை சரிக்கட்டி, புதிய கல்வி ஆண்டை திட்டமிடுவது குறித்து ஆலோசிக்க, நிபுணர் குழுவை, பல்கலை மானிய குழு அமைத்துள்ளது.இந்தியாவில், மார்ச், 15 முதல், கல்வி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், பாதியிலேயே பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளன. ஆண்டு பருவ தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.வரும், 15க்கு பின், ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், உடனடியாக தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது.இந்நிலையில், கொரோனா விடுமுறை நாட்களை சமாளித்து, செமஸ்டர் தேர்வுகளை, உரிய நேரத்தில் நடத்தி முடிப்பது குறித்தும், வரும், 2020 - 2021ம் கல்வி ஆண்டை திட்டமிடுவது குறித்தும், உரிய முடிவு எடுக்க, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து, ஆலோசனைகள் வழங்க, நிபுணர் குழுவையும், யு.ஜி.சி., அமைத்துள்ளது. ஹரியானா மத்திய பல்கலையின் துணை வேந்தர், குஹாத் தலைமையில், ஆறு உறுப்பினர்கள், இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் ஆலோசித்து, ஒரு வாரத்தில், செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.
No comments:
Post a Comment