சபரிமலை வழிபாடுக்கு, 'ஆன்லைன் புக்கிங்'
Added : ஏப் 08, 2020 23:09
சபரிமலை : சபரிமலை பக்தர்கள், தங்கள் வழிபாடுகளை நிறைவேற்ற, 'ஆன்லைனில்' முன்பதிவு செய்யும் வசதியை, தேவசம் போர்டு செய்துள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கால், சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நடைபெறவில்லை. சித்திரை விஷு திருவிழா ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், சித்திரை மாத பூஜை நடைபெறும் எனவும், பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.சித்திரை மாத பூஜைக்காக, ஏப்., 13 மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஏப்., 18 வரை பூஜைகள் நடக்கும்.பக்தர்கள் இந்த நாட்களில், தங்கள் சார்பில் நீராஞ்சனம், நெய்விளக்கு, அஷ்டோத்தர அர்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை, சுயம்வர அர்ச்சனை, நவக்கிரக நெய்விளக்கு, கணபதி ஹோமம், பகவதி சேவை என, எட்டு வகை வழிபாடுகளை நடத்தலாம் .
இதற்கு, www.onlinetdb.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தலாம். விரைவில் காணிக்கை செலுத்துவதற்கான வசதியும், இந்த இணையதளத்தில் செய்யப்பட உள்ளது. சபரிமலை அய்யப்பனுக்கு, காணிக்கை செலுத்த விரும்ப விரும்பும் பக்தர்கள், தனலெட்சுமி வங்கி கணக்கு எண்: 012600100000019, 012601200000086 ஆகியவற்றில் செலுத்தலாம்.இத்தகவலை, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment