சேலத்தில், 'குவார்ட்டர்' ரூ.600
Added : ஏப் 08, 2020 23:07
சேலம் : சேலத்தில், 'குவார்ட்டர்' மது பாட்டில், 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஊரடங்கு அமலாகும் முன், சேலம் மாவட்டத்தில், முன்னாள் சாராய வியாபாரிகள், பார் நடத்துவோர், சந்துக்கடை வியாபாரிகள், டாஸ்மாக் மது பாட்டில்களை, பெட்டி பெட்டியாக வாங்கி குவித்தனர்.பதுக்கப்பட்ட சரக்குகளின் விற்பனை, ஒரு வாரம் தீவிரமாக நடந்த நிலையில், தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், கள்ளச்சாராய வியாபாரிகள், சேர்வராயன் மலை, ஜருகு மலை, கல்வராயன் மலைகளில் இருந்து சாராயத்தை வாங்கி வந்து, விற்பனையில் ஈடுபட்டனர்.இதையடுத்து, தனிப்படை போலீசார், ஐந்து நாட்கள் மலைப் பகுதிகளில், 'ரெய்டு' நடத்தி, 163 பேரை கைது செய்ததோடு, இரண்டு கார்கள், 14 இருசக்கர வாகனங்கள், 365 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனால், கள்ளச்சாராய விற்பனை தடை பட்டது. சுதாரித்து கொண்ட, 'டாஸ்மாக்' பதுக்கல் வியாபாரிகள், தங்களிடம் இருப்பு உள்ள சரக்குகளில், போதை மாத்திரை, தண்ணீர் கலந்து, விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சேலத்தில், கிச்சிப்பாளையம், கொண்டலாம்பட்டி, சூரமங்கலம், வீராணம் உள்ளிட்ட பல பகுதிகளில், 30க்கும் மேற்பட்டோர், டூ - வீலர்களில் சென்று, மது விற்பனை செய்கின்றனர். கடந்த வாரம் வரை, குவார்ட்டர், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, 600 ரூபாயாக விலை உயர்ந்தது.
No comments:
Post a Comment