Thursday, April 9, 2020

டாக்டர்கள் போர் வீரர்கள் போன்றவர்கள்: சுப்ரீம் கோர்ட்

Added : ஏப் 09, 2020 02:25 

புதுடில்லி: 'டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், போர் வீரர்களைப் போன்றவர்கள்' என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், விசாரித்தது.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், போர் வீரர்களைப் போன்றவர்கள். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். மேலும், சேவை துறையை சேர்ந்த பலர், வீட்டில் இருந்து பணியாற்றுகின்றனர். அவர்களின் உடல் மற்றும் மனநலன் குறித்தும், அரசு கவனம் கொள்ள வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Call to save asst. professor from alleged victimisation in Periyar University

Call to save asst. professor from alleged victimisation in Periyar University Periyar University has placed an agenda to remove the assistan...