சிங்கப்பூர், கத்தாரிலிருந்து 441 பேர் சென்னை வருகை
Added : ஜூன் 16, 2020 00:02
சென்னை; சிங்கப்பூர், கத்தார் நாடுகளில் சிக்கித் தவித்த, 441 இந்தியர்கள், மூன்று சிறப்பு விமானங்களில், நேற்று முன்தினம் இரவு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
மத்திய அரசு, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, நம் நாட்டிற்கு அழைத்து வர, சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு, சிங்கப்பூர், கத்தார் நாடுகளில் இருந்து, மூன்று சிறப்பு விமானங்கள் சென்னைக்கு வந்தன. அந்த விமானங்களில், 441 பேர் வந்தனர். அவர்கள் அனைவருக்கும், விமான நிலையத்தில், மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. பின் அவர்கள் அனைவரும், தனிமைப்படுத்துதலுக்காக, அழைத்து செல்லப்பட்டனர்.
விமான சேவைகள்சென்னையில் இருந்து நேற்று, டில்லி, கோல்கட்டா, அந்தமான், கவுஹாத்தி, ஐதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரு, மதுரை, திருச்சி, துாத்துக்குடி, சேலம் உள்ளிட்ட, 30 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன.இதேபோல, பல்வேறு நகரங்களில் இருந்து, 30 விமானங்கள் சென்னைக்கு வந்தன. சென்னையில் இருந்து நேற்று, 3,700 பேர், பல்வேறு நகரங்களுக்கு சென்றனர். பல்வேறு நகரங்களில் இருந்து, 1,800 பேர் சென்னைக்கு வந்தனர். 'சென்னையில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், சென்னைக்கு வரும் பயணியரை விட, சென்னையில் இருந்து வெளியேறும் பயணியரின் எண்ணிக்கை, சில நாட்களாக அதிகரித்துள்ளது' என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment