சென்னை சிறப்பு விமானம் இலங்கை அனுமதி மறுப்பு
2020-06-16@ 08:03:41
சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு இலங்கைக்கு சிறப்பு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய 118 பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்கள். மத்திய அரசிடம் சிறப்பு அனுமதிபெற்று பணிக்கு செல்வதற்காக இந்த தனி விமானத்தை ஏற்பாடு செய்திருந்தனர். விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்பு அந்த விமானம் தரையிறங்கப்போகும் விமான நிலையத்தின் அனுமதி பெறவேண்டும்.
அதைப்போல் சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து, கொழும்பு விமானநிலைய கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்டனர். ஆனால் கொழும்பு விமானநிலைய அதிகாரிகள் இந்த விமானம் அங்கு தரையிறங்க அனுமதி தரவில்லை. விமானத்தில் வரும் பயணிகளுக்கு கொரோனா மருத்துவ பரிசோதணை செய்ய அங்கு போதிய வசதியில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இலங்கை செல்ல இருந்த தனியார் சிறப்பு தனி விமானம் ரத்து செய்யப்பட்டது.
No comments:
Post a Comment