மருத்துவ பல்கலை சான்று கவுன்சிலிங்கில் அளிக்கலாம்
Added : நவ 11, 2020 22:34
சென்னை:'மேல்நிலை வகுப்புகளை, மாநில திட்டத்தில் பயிலாத மாணவர்கள், மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போதோ, கவுன்சிலிங் போதோ, தங்களது தகுதி சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
மாநில வழியில் பயிலாமல், பிற பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களில், யாரெல்லாம் மருத்துவ படிப்புகளில் சேரலாம் என்பதற்கான தகுதிச் சான்றிதழ், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் இருந்து பெற வேண்டும்.அந்த சான்றிதழ், விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கப்படுவது வழக்கமான நடைமுறை. அதன்படியே, மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
இந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக, மாணவர்கள் பலர், தகுதி சான்றிதழ் பெற, பல்கலையை நாடுவதால், பல்வேறு அசவுரியங்கள்உருவாகி வருவதாக தெரிகிறது. இதைத் தவிர்க்க, மருத்துவ கல்வி இயக்ககம், புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் தகுதி சான்றிதழை, விண்ணப்ப பதிவின்போதோ அல்லது கவுன்சிலிங் வரும் நாட்களிலோ சமர்ப்பித்தால் போதுமானது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment