Saturday, November 28, 2020

உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கீடு ரத்து

உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கீடு ரத்து

Added : நவ 27, 2020 23:49

புதுடில்லி:'அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில், நடப்பு கல்வியாண்டில், 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில், உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.இந்திய மருத்துவ கவுன்சிலின், மருத்துவப் பட்ட மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி, அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீட்டை, மத்திய அரசு ரத்து செய்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அனுமதியளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில், அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசு மற்றும் சில மருத்துவ சங்கங்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரத்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்தது.இந்நிலையில், இந்த வழக்கில், நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பு:உயர் சிறப்பு மருத்துவ மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் வழங்காமல், மாணவர் சேர்க்கையை, இந்திய மருத்துவ கவுன்சில் நடத்த வேண்டும்.வழக்கு விசாரணை, வரும், பிப்., மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...