Saturday, November 28, 2020

தேஜஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்


தேஜஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

Added : நவ 28, 2020 01:18

மதுரை:மதுரை- சென்னை தேஜஸ் சிறப்பு ரயில்கள் புறப்படும் நேரம் டிச., 4 முதல் மாற்றியமைக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் தற்போது காலை 6:30 மணிக்கு பதிலாக காலை 6:00 மணிக்கு புறப்படும் ரயில் (02613) திருச்சியில் காலை 10:00 மணிக்கும், கொடைக்கானல் ரோட்டில் காலை 11:20 மணிக்கும் புறப்பட்டு மதியம் 12:20 மணிக்கு மதுரை வரும்.

மறுமார்க்கத்தில் மதுரையில் தற்போது மதியம் 3:15 மணிக்கு பதிலாக மதியம் 3:00 மணிக்கு புறப்படும் ரயில் (02614) கொடைக்கானல்ரோட்டில் மதியம் 3:30 மணிக்கும், திருச்சியில் மாலை 5:05 மணிக்கும் புறப்பட்டு இரவு 9:15 மணிக்கு சென்னை எழும்பூர் செல்லும். இந்த ரயில்கள் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024