Added : நவ 27, 2020 23:11
சென்னை:லட்சுமி விலாஸ் வங்கியை, டி.பி.எஸ்., வங்கியுடன் இணைக்கும் நடவடிக்கையில் குறுக்கிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.சிங்கப்பூரைச் சேர்ந்த டி.பி.எஸ்., வங்கியுடன், லட்சுமி விலாஸ் வங்கியை இணைக்கும் திட்டத்தை, ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஏ.யு.எம்., மார்க்கெட்டிங் நிறுவனம் வழக்கு தொடுத்தது.
மனுவில், 'வங்கி ஒழுங்குமுறை விதிகளின்படி, இணைப்பு நடக்கவில்லை; இதனால், வங்கியின் பங்குதாரர்களுக்கு பாதிப்பு ஏற்படும்; இணைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவில் குறுக்கிட, நீதிபதிகள் மறுத்து விட்டனர். லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்களின் நலனை, டி.பி.எஸ்., வங்கி பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை, ஜனவரி, 21க்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment