Sunday, November 22, 2020

யு.ஜி.சி., வழிமுறைகளை மீறவில்லை 'அரியர்' ரத்து வழக்கில் அரசு விளக்கம்

யு.ஜி.சி., வழிமுறைகளை மீறவில்லை 'அரியர்' ரத்து வழக்கில் அரசு விளக்கம்

Added : நவ 22, 2020 00:35

சென்னை:அரசு நியமித்த குழுவின் பரிந்துரை; பல்கலைகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்பே, தேர்வு ரத்து குறித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், பல்கலை மானிய குழு வழிமுறைகள் மீறப்படவில்லை எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை பதில் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், ஊரடங்கு காரணமாக, பொறியியல் மற்றும் கலை, அறிவியல், பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கு, இறுதி செமஸ்டர் தவிர்த்து, மற்ற தேர்வுகளை ரத்து செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். அரியர் தேர்வுகளை நடத்த உத்தரவிடவும் கோரினர்.

இவ்வழக்கில், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலும், பல்கலை மானிய குழுவும், 'அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது' என, பதில் அளித்துள்ளன.முதல்வர் அறிவிப்புஉயர் கல்வித்துறை சார்பில், இணைச் செயலர் இளங்கோ ஹென்றி தாஸ் தாக்கல் செய்த பதில் மனு:கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், உடைமைகளை அப்படியே விடுதிகளில் விட்டு விட்டு மாணவர்கள் சென்று விட்டனர்.

அவர்கள் படிப்பதற்கு, பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லை. பல்கலை மானிய குழு பிறப்பித்த வழிமுறைகளை தொடர்ந்து, அரசு ஒரு குழுவை நியமித்தது.இந்தக் குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். உயர் கல்வித்துறையும், 2020 ஜூலை, 27ல் அரசாணை வெளியிட்டது. ஆகஸ்ட்டிலும், எதிர்பார்த்த அளவுக்கு நோய் தொற்று குறைய வில்லை.

மாணவர்களின் நலன் கருதி, ரெகுலர் மாணவர்களுக்கும், அரியர் மாணவர்களுக்கும் பாகுபாடு காட்டாமல், ஆகஸ்டில் அரசாணை பிறப்பிக்கப் பட்டது.அரசு உத்தரவால், தகுதியுள்ள மாணவர்கள் யாரும் விரக்தி அடையவில்லை. அரியர் பாடங்களுக்கு, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும்.அதில், மாணவர்கள் திருப்தி அடையவில்லை என்றால், அடுத்த தேர்வை எழுதி, மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ளலாம்.

அசாதாரண சூழ்நிலையை கருதி, இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.ஏப்ரலில், யு.ஜி.சி., பிறப்பித்த வழிமுறைகளுக்கு முரணாக, அரசு உத்தரவு இல்லை.உத்தரவு மீறவில்லைஇந்த வழிமுறைகள், அறிவுரை தன்மை உடையது எனவும், வைரஸ் தொற்று சூழ்நிலையை கருதி, ஒவ்வொருபல்கலையும் திட்ட நடவடிக்கையை வகுத்துக் கொள்ளலாம் எனவும் வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு நடத்துவது; மதிப்பிடுவது என்பது பல்கலைகளின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், பல்கலைகளுடன் அரசு ஆலோசித்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவால், மாணவர்கள், பல்கலையின் கல்வித் தரம் குறைந்து விடாது.அரியர் பேப்பர் தொடர்பாக எந்த வழிமுறைகளும் இல்லாததால், அந்த மாணவர்களுக்கும் அரசு விரிவுபடுத்தியது. யு.ஜி.சி., விதிமுறைகள், வழிமுறைகள் எதையும் அரசு உத்தரவு மீறவில்லை.

சூழ்நிலையை கவனமுடன் ஆராய்ந்து, குழுவின் அறிக்கையை பரிசீலித்து, பல்கலைகளுடன் ஆலோசித்த பின்னே, உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுஉள்ளது.

No comments:

Post a Comment

Tamil Nadu Government Servants (Conditions of Service) Act, 2016 TAMILNADU India Tamil Nadu Government Servants (Conditions of Service) Act,...