Thursday, April 1, 2021

45 வயதுக்கு மேலானோருக்கு இன்று முதல் தடுப்பூசி!

45 வயதுக்கு மேலானோருக்கு இன்று முதல் தடுப்பூசி!

Added : ஏப் 01, 2021 00:03

சென்னை:தமிழகத்தில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக, 5,117 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஜன., 16 முதல், தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முன்கள பணியாளர்களை தொடர்ந்து, 45 வயதுக்கு மேற்பட்ட, நாள்பட்ட நோயாளிகளுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை, 30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இன்று முதல், 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, புதிதாக துவங்கப்பட்ட 'மினி கிளினிக்'குகளுடன், 5,117 தடுப்பூசி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தொற்று அதிகரித்து வருவதால், களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, தடுப்பூசி குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024