Thursday, April 8, 2021

6 மாதம்தான்.. மீண்டும் மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தயாராகும் புலம்பெயர்ந்தோர்

6 மாதம்தான்.. மீண்டும் மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தயாராகும் புலம்பெயர்ந்தோர்

மும்பை: சரியாகச் சொல்வதென்றால் ஒரு ஆறு மாதம்தான் ஆகியிருக்கும், ஊரடங்கால் ஊருக்குச் சென்றுவிட்டு, திரும்ப மும்பைக்கு வந்து, அதற்குள் மீண்டும் தங்களது மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தயாராகி வருகிறார்கள் புலம்பெயர்ந்தோர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட போது, தங்களது வாழ்வாதாரங்கள் எல்லாம் முடங்கிப் போனதால் மும்பையை விட்டு, மகாராஷ்டிரத்தின் மிகவும் பின்தங்கிய கிராமங்களை நோக்கிச் சென்ற மக்கள், மீண்டும் இயல்பு நிலைத் திரும்பியதால், ஆறு மாதங்களுக்கு முன்புதான் மும்பை மற்றும் மும்பை மாநகராட்சிக்குத் திரும்பினர்.


மீண்டும் தங்களது வாழ்வாதாரங்களை புதுப்பித்துக் கொண்டு ஓரளவுக்கு பொருளாதார நிலையில் மீண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கை துளிர்விட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான் பேரிடியாக இரண்டாவது அலைத் தாக்கத் தொடங்கியிருக்கிறது.

மகாராஷ்டிரத்தில் அதிகளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவருவதால், இரவு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என்று தொடர்ந்து அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதனால், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், மகாராஷ்டிரத்திலிருந்தும் வந்து மும்பையில் வேலை செய்து வரும் புலம்பெயர்ந்தோர் கடும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். எனவெ. பொதுமுடக்கம் அறிவித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தங்களது உடைமைகளை கட்டித் தயாராக வைத்திருக்கிறார்கள் எண்ணற்ற புலம்பெயர்ந்தோர்.

பொதுமுடக்கத்துக்குப் பின், 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், உத்தரப்பிரதேசம், பிகார், சத்தீஸ்கர், ஹரியாணா, ராஜஸ்தான், கர்நாடகம், குஜராத், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து திரும்பி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், பண்ணைகள், உணவகங்கள், அலுவலகம், வணிக வளாகம் என பல இடங்களில் லட்சக்கணக்கான பணிகளை நிரப்பினர்.

ஆனால், மீண்டும் மகாராஷ்டிரத்தில் இரண்டாவது அலை அடிக்கத் தொடங்கியிருப்பதால், தங்களது மூட்டை முடிச்சுகளை எல்லாம் கட்டிக் கொண்டு, மீண்டும் பிறப்பிடம் தேடி ஓட மனதளவில் தயாராகி வருகிறார்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024