Saturday, April 10, 2021

திருமண அழைப்பிதழில் மணமக்களின் வயது


திருமண அழைப்பிதழில் மணமக்களின் வயது

Added : ஏப் 09, 2021 21:27

ஜெய்ப்பூர்:குழந்தை திருமணங்களை தடுக்க, 'அனைத்து திருமண அழைப்பிதழ்களிலும், மணமக்களின் வயதை அச்சிட வேண்டும்' என, ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., ஆட்சி அமைந்துள்ளது.

விளம்பரம்

இம்மாநிலத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க, பல்வேறு புதிய நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது; இதற்கான அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:குழந்தை திருமணங்கள் சட்டத்திற்கு எதிரானது என்பது குறித்து, மக்களிடம் போதிய விழிப்புணர்வை, அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக, அரசு தரப்பிலும் விளம்பரங்கள் வெளியிடப்படும். திருமண அழைப்பிதழில், மணமக்களின் வயதினை கண்டிப்பாக அச்சிட வேண்டும். இதற்கு ஆதாரமாக, அவர்களின் பிறப்பு சான்றிதழை, அச்சக உரிமையாளரிடம் வழங்க வேண்டும்.

நடவடிக்கை

குழந்தை திருமணங்களில் மேளம் வாசிப்போர், இன்னிசை நிகழ்ச்சி நடத்துவோர், திருமணம் நடத்தி வைக்கும் பண்டிதர், உணவு ஏற்பாடு செய்வோர், பந்தல் அமைப்போர் உள்ளிட்ட, அனைவர் மீதும், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024