Monday, April 19, 2021

மத்திய அரசு அதிகாரிகளுக்கு வீட்டில் இருந்தே வேலை


மத்திய அரசு அதிகாரிகளுக்கு வீட்டில் இருந்தே வேலை

Added : ஏப் 19, 2021 04:04

புதுடில்லி: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில், பெரும்பாலான அதிகாரிகளை, வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படி கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், குறிப்பாக டில்லியில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.இந்நிலையில், பல்வேறு மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில், வாய்ப்புள்ள அதிகாரிகளை, வீட்டில் இருந்து வேலை பார்க்கும்படி கூறப்பட்டுள்ளது.

அனைத்து துறைகளுக்கும் இது தொடர்பான உத்தரவு எதையும், பணியாளர் நலத் துறை பிறப்பிக்கவில்லை. இருப்பினும், சூழ்நிலையை பொறுத்து, அந்தந்த அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.சார்பு செயலர் மற்றும் அதற்கு கீழ் நிலையில் உள்ள ஊழியர்கள் மட்டும், வீடுகளில் இருந்து பணியாற்றும்படி கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்நிலையில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஊழியர்களும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி, அனைத்து துறைகளுக்கும், சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024