21.04.2021
புதுடில்லி:கொரோனா தடுப்பூசி மருந்தை வீணடித்ததில், நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த, தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு, தடுப்பூசி போடப் பட்டு வருகிறது. வரும், 1ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், வீணடிக்கப்பட்ட தடுப்பூசி விபரங்களை கேட்டு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், விவேக் பாண்டே என்பவர் மனு கொடுத்திருந்தார்.
இதற்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள பதிலில் கூறியிருப்பதாவது:நாடு முழுதும், 11ம் தேதி வரை, 10 கோடியே, 34 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில், 44 லட்சத்து, 78 ஆயிரம் டோஸ்கள் வீணாகியுள்ளன.தமிழகத்தில் தான் அதிக பட்சமாக, 12.10 சதவீத டோஸ்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. ஹரியானாவில், 9.74 சதவீதமும்; பஞ்சாபில், 8.12 சதவீதமும்; மணிப்பூரில், 7.8 சதவீதமும்; தெலுங்கானாவில், 7.55 சதவீதமும் வீணாகியுள்ளன.
கேரளா, மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம், மிசோரம், கோவா ஆகிய மாநிலங்களிலும்; டாமன் - டையு, அந்தமான் மற்றும் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களிலும், ஒரு டோஸ் கூட வீணடிக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment