Friday, May 7, 2021

பயணியர் வருகை குறைவால் 34 ரயில்கள் ரத்து


பயணியர் வருகை குறைவால் 34 ரயில்கள் ரத்து

Added : மே 07, 2021 00:46

சென்னை:பயணியர் வருகை குறைவால் தமிழகத்தில் பல்லவன் வைகை தேஜஸ் உட்பட 34 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

* சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையே தினமும் இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் நாளை முதல் ஜூன் 1 வரையும்; சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் நாளை முதல் 31ம் தேதி வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது

* சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் எழும்பூரில் இருந்து 9ம் தேதி முதல் ஜூன் 1 வரையும் மதுரையில் இருந்து நாளை முதல் 31ம் தேதி வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது

சென்னை எழும்பூர் - திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் எழும்பூரில் இருந்து 9ம் தேதி முதல் ஜூன் 1 வரையும்; திருச்சியில் இருந்து நாளை முதல் 31ம் தேதி வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது

* சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இயக்கப் படும் சிறப்பு ரயில் வரும் 13ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது

* சென்னை எம்.ஜி. ஆர். சென்ட்ரல்-ஈரோடு இடையே இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் கோவைக்கு இயக்கப்படும் சேரன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் நாளை முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன

* சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலில் இருந்து கோவைக்கு சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் 15ம் தேதியில் இருந்து 29ம் தேதி வரையும்; கோவையில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் 14 முதல் 28ம் தேதி வரையும் ரத்து செய்யப்படுள்ளன

* சென்னை எம்.ஜி. ஆர். சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும் துரந்தோ சிறப்பு ரயில் 10ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது

* சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் 13 முதல் 27ம் தேதி வரையும்; நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் ரயில் வரும் 14 முதல் 28ம் தேதி வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளன* தாம்பரம் - நாகர்கோவில் இடையே வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நாளை முதல் ஜூன் 1வரை ரத்து செய்யப்பட்டுள்ளது

* சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் - ஜோலார்பேட்டை இடையே தினமும் இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் நாளை முதல் ஜூன் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுள்ளது* தாம்பரம் - நாகர்கோவில் இடையே வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும் சிறப்பு ரயில் 9ம் தேதி முதல் ஜூன் 1 வரை ரத்து செய்யப்படுள்ளது

* சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்துக்கு ஞாயிற்று கிழமைகளிலும் திருவனந்தபுரத்தில் இருந்து சென்ட்ரலுக்கு சனிக்கிழமைகளிலும் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் நாளை முதல் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன

* சென்னை எம்.ஜி. ஆர். சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையே தினமும் இயக்கப்படும் சிறப்பு ரயில் நாளை முதல் ஜூன் 1 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் இருவழியிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024