Monday, May 10, 2021

நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்

நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்

Added : மே 09, 2021 23:47

சென்னை: கொரோனா நிவாரணத்திற்காக, ஒரு நாள் ஊதியத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க, ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்க பொது செயலர் ஜான் வெஸ்லி வெளியிட்ட செய்திக்குறிப்பு:கொரோனா பாதிப்பால், அரசிற்கு ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவும் வகையில், முதல்வர் நிவாரண நிதிக்கு, ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளோம்.தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின், மருத்துவ சிகிச்சைக்கு உதவும், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு உதவும் வகையிலும், நிவாரண நிதியை வழங்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024