Thursday, May 6, 2021

வேலையை விட உயிர் முக்கியம் கதறும் வங்கி ஊழியர்கள்


வேலையை விட உயிர் முக்கியம் கதறும் வங்கி ஊழியர்கள்

Added : மே 05, 2021 23:00

சென்னை:வங்கி ஊழியர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா வந்தால், வங்கி கிளை முழுதும், கிருமி நீக்கம் செய்யப் படுவதில்லை; இதனால், மற்ற ஊழியர்களுக்கும் தொற்று பரவுவதாக புகார் எழுந்துள்ளது.

வற்புறுத்தல்

கொரோனா இரண்டாவது அலை, மிக வேகமாக பரவி வருகிறது.இதில், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 'வங்கிக் கிளைகளில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும்; அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.ஆனால், பெரும்பாலான வங்கிகளில், அதை பின்பற்றுவதில்லை. இதனால், ஊழியர்களிடையே தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

வங்கி அதிகாரிகள் கூறியதாவது:ஊழியர்களுக்கு சளி, காய்ச்சல் இருந்தால், விடுமுறை அளிப்பதில்லை. அவர்களை பணிக்கு வருமாறு, கிளை மேலாளர்கள் வற்புறுத்துகின்றனர்.

நடவடிக்கை

மேலும், ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலும், கிளை முழுதும் கிருமி நீக்கம் செய்யப் பட வேண்டும்.ஆனால், பெரும்பாலான வங்கிகளில், கிருமி நீக்கம் செய்யப்படுவது இல்லை. இதனால், அந்த வங்கிக் கிளையில், பலருக்கு தொற்று பரவுகிறது. ஊழியர்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில், அவர்களுக்கு முதலில் விடுப்பு வழங்க, அனைத்து மேலாளர்களுக்கும், வங்கி நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

பணிக்கு, 50 சதவீத ஊழியர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும். அவற்றை பின்பற்றாத வங்கிகள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி முக்கியமானது தான், ஆனால், அதை விட உயிர் முக்கியம் என்பதை, வங்கிகள் உணர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024