Wednesday, May 5, 2021

மத்திய அரசு அலுவலகம் கட்டுப்பாடுகள் தொடரும்


மத்திய அரசு அலுவலகம் கட்டுப்பாடுகள் தொடரும்

Added : மே 04, 2021 22:13

புதுடில்லி  கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளதால், மத்திய அரசு அலுவலகங்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட வேலை நேரம், 50 சதவீத ஊழியர் மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள், மாத இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 'ஊழியர்கள் மாறுபட்ட வேலை நேரங்களில் பணியாற்றலாம்; 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வர வேண்டும்' என, அறிவிக்கப் பட்டு இருந்தது.'இந்தக் கட்டுப்பாடுகள்,இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது. அனைத்து துறைகளுக்கும் இது பொருந்தும்' என, மத்திய பணியாளர் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பைவிட, அதனால் ஏற்பட்டுள்ள அச்சம், மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், புதிய வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.கொரோனா குறித்த அச்சத்தை நீக்கும் வகையில், 'எப்படி செயல்பட வேண்டும்' என, தொற்று ஏற்பட்டுள்ளோர், அவருடைய குடும்பத்தார், முன்கள பணியாளர்களுக்கு என, தனித்தனியாக, வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024