பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
Added : செப் 17, 2021 23:22
சென்னை:பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு, பல்வேறு வண்ணங்களில் அச்சிடப்பட்ட அசல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியர், கல்லுாரிகளில் சேர, முதற்கட்டமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. பிளஸ் 1 மாணவர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழே வழங்கப்பட்டது. அதன்பின், பிளஸ் 2 துணை தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்ததற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நேற்று முதல் பள்ளிகளில் வழங்கப்பட்டன. சான்றிதழில் மாணவர்களின் பெயர், பதிவெண், புகைப்படம், பள்ளியின் பெயர், பயிற்று மொழி, பாட தொகுப்பு போன்ற விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தாமல், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது.
10ம் வகுப்பு, பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஆனால், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழில், கொரோனா காலத்தில் ஆல் பாஸ் செய்யப்பட்டது குறித்தோ, தேர்வை நடத்தவில்லை என்றோ குறிப்பிடவில்லை.மே மாதம் தேர்வு நடத்தியதாக கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment