Monday, October 25, 2021

பி.எஸ்சி., நர்சிங் படிப்பு இன்று விண்ணப்ப பதிவு


பி.எஸ்சி., நர்சிங் படிப்பு இன்று விண்ணப்ப பதிவு

Added : அக் 24, 2021 23:58

சென்னை--பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட துணை மருத்துவ பட்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது.

நவம்பர், 8 வரை விண்ணப்பிக்கலாம்.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட 19 வகையான, துணை மருத்துவ பட்ட படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு 15 ஆயிரம் இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில், இன்று காலை 10:00 மணி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.நவம்பர், 8 மாலை 5:00 மணி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேட்டை, இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தகுந்த ஆவணங்களுடன், 'செயலர், தேர்வுக் குழு, 162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை -- 10' என்ற முகவரியில், நவம்பர்10 மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024