உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கவனத்துக்கு...
சென்னை 27.10.2021
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட அறிவிப்பு:
வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி பயில்பவர்கள் இளநிலை, முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளில் அங்கீகாரமற்ற அல்லது இணையில்லாத பாடங்களை தேர்வு செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு அதிகம் செலவு செய்து வெளிநாடுகளில் படிக்கும் படிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் இல்லாததால் நம்நாட்டின் வேலைவாய்ப்புகளை அந்த மாணவர்கள் பெறுவதில் சிக்கல்கள் நிலவுகின்றன. மேலும், அதிக செலவு செய்து மாணவர்கள் கல்வி பயில்வதும் வீணாகிவிடுகிறது.
இதை கருத்தில்கொண்டு உயர்கல்வி பயில்வதற்கு வெளிநாடு செல்லும் மாணவர்கள் அதிக கவனத்துடன் படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும்.
வெளிநாடுகளில் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கு நம்நாட்டில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்க இயலுமா என்பதை சரிபார்த்த பின்னர் சேரவேண்டும். அதேபோல, பாகிஸ்தான் சென்று உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் ஏஐசிடிஇ-யிடம் அதற்கான தடையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment