தமிழ்நாடு
சர்க்கரை கார்டுக்கும் பொங்கல் பரிசு?
Added : நவ 20, 2021 19:58
சென்னை:பொங்கல் பரிசு தொகுப்பை தங்களுக்கும் வழங்கும்படி, சர்க்கரை கார்டுதாரர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 2.15 கோடி அரிசி; 3.84 லட்சம் சர்க்கரை என, மொத்தம் 2.18 கோடி ரேஷன் கார்டு தாரர்கள் உள்ளனர்.தமிழக அரசு, வரும் பொங்கல் பண்டிகைக்கு அரிசி கார்டுதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் என, 2.15 கோடி குடும்பங்களுக்கு, 20 வகை மளிகை பொருட்கள் அடங்கியபரிசு தொகுப்பை அறிவித்துள்ளது.
இந்த பரிசு தொகுப்பை, தங்களுக்கும் வழங்குமாறு சர்க்கரை கார்டுதாரர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து சர்க்கரை கார்டுதாரர்கள் கூறியதாவது:பொங்கல் பரிசு தொகுப்பை பாரபட்சமின்றி,சர்க்கரை கார்டுதாரர்கள், எந்த பொருளும் வாங்காத பிரிவினர் உட்பட, அனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்க வேண்டும்.
இல்லையேல், அந்த வகை கார்டுதாரர்கள், அரிசி கார்டுதாரராக மாற வாய்ப்பு அளித்து, அதன் அடிப்படையில் பரிசு தொகுப்பு வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment