தமிழ்நாடு
அண்ணாமலை பல்கலைக்கு புது துணைவேந்தர் நியமனம்
Added : நவ 20, 2021 22:49
சென்னை:சிதம்பரம் அண்ணாமலை பல்கலை துணைவேந்தராக, அறிவியல் ஆராய்ச்சியில் நீண்ட அனுபவம் பெற்ற கதிரேசன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நியமித்துள்ளார்.
துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கதிரேசன், பதவியேற்கும் நாளில் இருந்து, மூன்று ஆண்டுகள் பொறுப்பு வகிப்பார். அறிவியலில் ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார். இங்கிலாந்தில் ஓராண்டு முதுநிலை ஆராய்ச்சி அனுபவம்; ஆசிரியர் பணியில், 36 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
ஆராய்ச்சி கட்டுரைஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மைய இயக்குனராக, அண்ணாமலை பல்கலை வேளாண் துறை தலைவராக, முதல்வராக பணியாற்றி உள்ளார். இவர், 31 ஆராய்ச்சி கட்டுரை களை வெளியிட்டுள்ளார். தேசிய அளவிலான கருத்தரங்கில், 29 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்ததுடன், இரண்டு புத்தகங்களை எழுதி உள்ளார்.
நிர்வாக அனுபவம்
ஆராய்ச்சி மாணவர்கள் 10 பேருக்கு வழிகாட்டியாக இருந்துஉள்ளார். மேலும், 16.11 கோடி ரூபாய் மதிப்புள்ள, 14 ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். கடந்த, 2001ல் பிரிட்டிஷ் பயிர் பாதுகாப்பு கவுன்சில் விருதை வென்றுள்ளார். ஏ.ஐ.ஏ.எஸ்.ஏ., ஹரித் புரஸ்கார் விருது பெற்றுள்ளார். சிங்கப்பூர், நேபாளம், அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா உட்பட, 18 நாடுகளுக்கு கல்வி தொடர்பாக சென்று வந்துள்ளார். எட்டு ஆண்டுகள் பல்கலை நிர்வாக அனுபவம் உடையவர்.
No comments:
Post a Comment