20.11.2021
சபரிமலை:பம்பை தேவசம் கவுன்டரில் 250 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றால், இருமுடி கட்டு கட்டி கொடுக்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள சபரிசலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டு இல்லாமல் வரும் பக்தர்களுக்காக, பம்பை கணபதி கோவிலில் தேவசம் போர்டு சிறப்பு வசதியை ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, பம்பை தேவசம்போர்டு கவுன்டரில் 250 ரூபாய் செலுத்தி ரசீது பெற்றவர்களுக்கு, பம்பை கணபதி கோவில் மேல்சாந்தி அல்லது அவரது உதவி பூஜாரிகள் கட்டு கட்டி கொடுத்து, தலைமேல் ஏற்றி அனுப்புவர்.
ஒரு இருமுடியில், ஒரு நெய் நிறைத்த தேங்காய், மஞ்சள், பொரி, அவல், சர்க்கரை, முந்திரி என 17 வகை பொருட்கள் இருக்கும். கூடுதல் நெய் தேங்காய் விரும்பும் பக்தர்கள் ஒரு தேங்காய்க்கு 80 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். இருமுடிக்கு தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லும் பக்தர்கள் 150 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. அதிகாலை 2:30 மணி முதல், இரவு 8:00 மணி வரை இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
நடை அடைத்தால்
இதற்கிடையே இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு விட்டால், அடுத்த ஒரு மணி நேரத்தில், பக்தர்கள் சன்னிதானத்தில் இருந்து நிலக்கல் சென்று விட வேண்டுமென சன்னிதான போலீஸ் தனி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இங்கு பக்தர்கள் தங்க அறைகள் அனுமதிக்கப்படாத நிலையிலும், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாகவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.மேலும், மழை காரணமாக தடை செய்யப்பட்டிருந்த சபரிமலை பாதை சாலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment