Saturday, November 23, 2024

ஓய்வு பல்கலை அதிகாரி தற்கொலை முயற்சி

ஓய்வு பல்கலை அதிகாரி தற்கொலை முயற்சி

ADDED : நவ 23, 2024 02:16 AM


சிவகங்கை:காரைக்குடி அருகே வைரவபுரத்தைச் சேர்ந்தவர் ஆர்.பத்மாவதி. அழகப்பா பல்கலையில் உதவி பதிவாளராக பணிபுரிந்தார்; 2023 மார்ச் 31ல் ஓய்வு பெற்றார்.

ஓய்வுபெற்று ஒன்றரை ஆண்டு முடிந்தும், அவருக்கு ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கவில்லை. இதுகுறித்து, பல்கலை நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும் தீர்வு எட்டப்படவில்லை.

இதனால், பத்மாவதி நேற்று காலை 11:30 மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

பாதுகாப்பு பணியில் இருந்த சப் - இன்ஸ்பெக்டர் செல்வராஜ், அவரை மீட்டு கலெக்டரின் பி.ஏ., முத்துகழுவனிடம் அனுப்பினார்.

பின், அப்பெண்ணிற்கு முதலுதவி அளித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ஜி.ரவி கூறியதாவது:

அவருக்கு ஓய்வூதிய பலனை கொடுக்கத் தான் விரும்புகிறோம். நேரடியாக அழைத்து பேச முயற்சித்தும் அவர்கள் வரவில்லை. பதிவு தபால் அனுப்பியும் அதை வாங்கவில்லை.

இவருக்கான பணப்பலனை தணிக்கை துறை தான் நிறுத்தி வைத்துள்ளது. பல்கலை நிர்வாகத்திடம் ஒன்றும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024