Thursday, April 13, 2017

மனதில் நிற்கும் மாணவர்கள் 06: ஏறுங்கய்யா பெருமாள்முருகன்

ஓவியம்: முத்து | உள்படம்: ராஜ்குமார்

தீத ஆற்றல் கொண்ட மாணவர்கள் மிகச் சில பேர்தான் இருப்பார்கள். ஆசிரியர்களின் மொழியில் சொன்னால் ‘அவர்களைக் கட்டி மேய்ப்பது கஷ்டம்.’ அவர்கள் படிப்பைப் பற்றிப் பெரிதாக அக்கறைப்படுவதில்லை. ஒரு வகுப்புகூடத் தவறாமல் வந்து உட்கார்ந்திருக்கும் மாணவர்கள் நிறையத் தாள்களில் நிலுவை வைத்திருப்பது வெகு சாதாரணம். ஆனால் ஆற்றலாளர்களான மாணவர்கள் வகுப்புக்கு வருவது அரிதாகவே இருக்கும். ஆனால் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றாவது எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள்.

வெளியே போ!

சாதாரண மாணவர்களை வெளியே போ என்றால், அதை அவமானமாக நினைத்துப் பெரிதும் தயங்குவார்கள். இந்த ஆற்றலாளர்களுக்கு அதுவெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை. “வெளியே போ” என்றால், உடனே போய்விடுவார்கள். இதில் மட்டும் ஆசிரியர் சொல்லைத் தட்டுவதில்லை. சொன்னதும் தைரியமாக எழுந்து உடனே ஒரு மாணவன் வெளியே போனால், ஆசிரியர் அதைத் தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதுவார். ஆசிரியர் உடனே அவன் முதுகுக்குப் பின்னால் கத்துவார். “இன்னமே என்னோட வகுப்புக்கு நீ வராத.” சிலரை அப்படி வரவே கூடாது என்று நிரந்தரமாகக் கட்டுப்படுத்தி வைத்துவிடுவதும் உண்டு.

அம்மாணவர்களே வகுப்பை உயிர்ப்போடு வைத்திருப்பவர்கள். அவர்கள் செய்யும் சேட்டைகளை, குறும்புகளை, சொல்லும் சொற்களை சக மாணவர்களைப் போலவே ஆசிரியரும் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் அப்புறம் பிரச்சினையே இல்லை. வகுப்பு அப்படியொரு சந்தோஷமாகப் போகும். பேசா மடந்தைகளாக இருக்கும் மாணவர்கள் வகுப்புக்குச் சோர்வைத் தருபவர்கள். பேசுபவர்கள் சிலராவது இருந்தால்தான் வகுப்புக்குச் சுவை கூடும்.

அடங்காத தோல்வியாளர்

ஆற்றலாளர்கள் எனக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமானவர்கள். அவர்களுக்கு நிறைய இடம் கொடுப்பேன். என் எல்லைக்குள் அவர்களை எவ்வளவு அனுமதிக்க முடியுமோ அவ்வளவு வரைக்கும் இயல்பாக விடுவதுண்டு. விட்ட பிறகு வழிப்படுத்தலாம். “படி” என்று சொன்னால் படிப்பார்கள். ‘இதை உடனே செய்’ என்றால் ஏனென்று கேட்காமல் செய்வார்கள். நம்பிக்கையும் அன்பும் நிறைந்த மனம் கொண்டவர்கள் அவர்கள். ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுத்தால் மிகச் சிறப்பாக நிறைவேற்றுவார்கள். தலைமைப் பண்பை எளிதாக அடைவார்கள்.

நான் துறைத் தலைவராக இருந்தபோது பயின்ற மாணவர் ராஜ்குமார். சேட்டை என்றால் இவ்வளவுதான் என்று சொல்ல முடியாது. தினம் ஒரு பிரச்சினையைக் கொண்டுவருவார். பின்னணியில் இருந்துகொண்டு சிலரை இயக்கவும் செய்வார். அவர் வகுப்பு மாணவர் ஒருவரைப் பேரவைத் தேர்தலில் நிற்க வைத்துப் பெருமளவு பிரச்சாரம் செய்தார். ஆனால் தோல்விதான் கிடைத்தது. வெற்றியாளர்கள் அமைதியாகிவிடுவார்கள். தோல்வியாளர்கள் அடங்க மாட்டார்கள். வெகுண்டெழுந்து விதவிதமான பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கல்லூரி முதல்வர் என்னை அழைக்கிறார் என்று தகவல் வந்தாலே “ராஜ்குமார் ஏதோ செய்துவிட்டார்” என்று அர்த்தம்.

வரம்புக்குள் வந்த குறும்பு

ஒருமுறை பெரிய பிரச்சினை ஒன்றில் அவரும் அவர் நண்பர்கள் சிலரும் சிக்கிக்கொண்டனர். கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுப்பது உறுதி என்று தெரிந்தது. இடைநீக்கம் செய்து மாதக் கணக்கில் கல்லூரிக்கு வர விடாமல் செய்வது நோக்கமாக இருந்தது. என்ன செய்வது என்று என்னிடம் வந்து நின்றார்கள். யோசனை சொன்னேன். முதல்வர் அதே பகுதியைச் சேர்ந்தவர். அவரது வீட்டுக்குப் போய்ப் பணிவாக நில்லுங்கள். அவர் பேசுவார், நீங்கள் கேட்டுக்கொண்டு நின்றால் போதும், பிரச்சினை தீர்ந்துவிடும் என்றேன். 

பாம்பின் கால் பாம்பறியும்.  அந்தப் பிரச்சினையில் என் யோசனை பலித்ததால், ராஜ்குமார் கொஞ்சம் என் கட்டுக்குள் வந்தார். அவரது ஆற்றலை ஏதாவது வழிக்குள் செலுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு ‘இலக்கிய மன்ற’ நிகழ்வில் தொடர்ந்து பங்கேற்கச் செய்தேன். நன்றாகப் பாடும் திறனும் கொண்டவர். அவர் குறும்புப் பேச்சும் சேட்டைகளும் வரம்புக்குள் வந்ததால் எல்லோரும் ரசித்தனர். அவருக்கு நல்ல கவனமும் கிடைத்தது. திருப்தியாக இருந்தார்.

இப்படி ஏமாந்துபோனோமே!

இரண்டாமாண்டு படிக்கும்போதே ஊரில் ஒரு பெண்ணைக் காதலித்துக் கல்யாணமும் செய்துகொண்டிருந்தார். ஆனால் அந்தத் தகவலைக் கல்லூரியில் பரவாமல் காத்துக்கொண்டார். தெரிந்த சிலர் என்னிடம் சொன்னார்கள். நான் அவரைக் கேட்டேன். திருமணம் ஆகிவிட்டது என்று உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை. மூன்றாமாண்டு முடித்தபோது ராஜ்குமார் எல்லாத் தாள்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவரது வகுப்பு நண்பர்கள் முதுகலைப் படிப்புக்காக திருச்சி, சேலம், கோவை என்று போய்ச் சேர முயன்றுகொண்டிருந்தனர். ராஜ்குமாரிடம் மேலே படிக்க யோசனை சொன்னேன். துறை ஆசிரியர்கள் எல்லாரும் அவருக்கு ஆலோசனை சொன்னார்கள்.

ஒருமுறை கல்லூரிக்கு அவர் வந்தபோது ஆசிரியர்களின் ஆலோசனைக்கும் அறிவுரைக்கும் இடம் கொடுக்காமல் ‘சென்னை, தியாகராயா காலேஜ்ல எம்.ஏ. சேந்துட்டன்’ என்று சொன்னார். நானும் மிகவும் சந்தோஷப்பட்டு அந்தக் கல்லூரியில் பணியாற்றும் என் நண்பர் ஒருவரைச் சொல்லிப் போய்ப் பார்க்கும்படியும் நன்றாகப் படிக்கும்படியும் அறிவுரை சொன்னேன்.
எல்லாம் நல்ல பிள்ளையாகக் கேட்டுக் கொண்டார். பின்னர் விசாரித்தபோது தெரிந்தது, சென்னை தியாகராயா கல்லூரியில் தமிழ் முதுகலைப் படிப்பே இல்லை என்னும் விவரம். இப்படி ஏமாந்து போனோமே என்று ஆசிரியர்கள் பேசிச் சிரித்தோம். அப்போதுதான் அவர் திருமணம் செய்துகொண்ட செய்தியும் உறுதியாயிற்று. திருமணம் செய்த பிறகு வெளியூர் போய்ப் படிக்க வாய்ப்பேது?

ஏறினேன் மகிழ்ச்சியோடு

எனினும் நல்ல ஆற்றலாளரான ராஜ்குமாரின் வால் சுருண்டுவிடவில்லை. அஞ்சல் வழியில் படித்து எம்.ஏ., பி.எட். பட்டம் பெற்றார். தொழில்துறையில் இறங்கி நல்ல சம்பாத்தியத்தோடு வளமாக வாழ்கிறார். அவர் மகன் இப்போது என் மாணவர். சமீபத்தில் தான் வாங்கிய காரைக் கொண்டுவந்து எனக்குக் காட்டிய ராஜ்குமார் ‘ஏறுங்கய்யா, ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்’ என்றார். நானும் ஏறினேன் பெருமகிழ்ச்சியோடு.

பெருமாள்முருகன், எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர். தொடர்புக்கு: murugutcd@gmail.com

நடிகர் விஷாலுக்கு ஒரு வேண்டுகோள்: இயக்குநர் தங்கர்பச்சான் உருக்கமான கடிதம்



குண்டூசி உற்பத்தி செய்பவன் கூட பொருளுக்கு அவனே விலை வைத்துக் கொள்கிறான். 130 கோடி மக்களுக்குத் தேவையான உணவை உற்பத்திசெய்து தரும் உழவனால், அவன் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருளுக்கு விலை வைத்துக்கொள்ள முடிய வில்லை.

ஒரு குடும்பம் முழுவதுமே இரவு பகலாக உழைக்கிறார்கள். அறுவடைக்குப் பின் அவர்கள் முதலீடு செய்த பணம் கூட திரும்பி வருவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அத்தனை பேர்களுக்கும், அவ்வளவு கால உழைப்பையும் கணக்கிட்டு அதற்கான ஊதியம், முதலீடு, அதற்குமேல் கூடுதலாக லாபம் எனச் சேர்த்து உற்பத்திப் பொருளுக்கான விலை கொடுத் தால் விவசாயிகள் எதற்காக போராடப்போகிறார்கள்?

இதைப் புரிந்துகொள்ளாமல் நடிகர் விஷால் போன்றவர்கள் ஏதோ ஒரு விவசாயியின் வங்கிக் கடனை மட்டும் அடைக்க பணம் கொடுப்பதும், விவசாயத்துக்கு உதவ நிதி திரட்டப் போகிறேன் எனச் சொல்வதும், ஒரு சினிமா டிக்கெட் கட்டணத்தில் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தரப் போவதாக அறிவிப்பதும் விவசாயிகளுக்கு பயனளிக்காது.

விஷால் இன்று நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என இரண்டிலுமே முதன்மை பொறுப்புக்களை வகிக்கிறார். தமிழகத்தில் தயாரிக்கப்படும் ஒரு படம் கூட விவசாயிகளின் சிக்கலை பேச மறுக்கிறது. சில நேரங்களில் ஒன்றிரண்டு படங்கள் உருவானாலும் அவை அறிமுக நடிகர்கள் நடித்த படங்களாகவே இருக்கின்றன. 30 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகர்களாக திகழும் நடிகர்கள் கூட ஒரே ஒரு படத்தில் கூட விவசாயிகள் குறித்து கவலைப்பட்டதில்லை.

நடிகர் விஷால் மனது வைத்திருந் தால் இந்த 15 வருடங்களில் தமிழர்களின் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று குறித்தாவது ஒரு படத்தில் நடித்திருப்பார். ஈழத் தமிழர்களின் துயரம், போராட்டம் குறித்த ’தாய் மண்’ என்னும் கதையை நான் அவரிடம் சொல்லி அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கத் தயாராக இருந்தபோதும் ஏனோ அந்தப் படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டார்.
உண்மையில் விவசாயிகளின் அடிப்படை பிரச்சினை என்ன என்பதை புரிந்துகொள்ள விஷால் முயற்சி செய்ய வேண்டும். அவற்றை புரிந்துகொண்ட பிறகு, அவர்களின் பிரச்சினைகளை உங்கள் நடிப்புக் கலையின் மூலம் உலகுக்குத் தெரிய வைக்க முயற்சி செய்யுங்கள். இன்றைய திரைப்படக் கலை உலகம் முழுக்க அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையையும், சிக்கல்களையும் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், நீங்கள் கதாநாயகன் என்கிற பேரில் நடைமுறைக்கு உதவாத வன்முறைகளை விதைத்துக் கொண்டும், பெண்ணுடலை சந்தைப் படுத்தி ஆடவிட்டுக்கொண்டும் இயல்பான திரைப்படம் ஒன்றைக் கூட உருவாக்காமல் இருக்கிறீர்கள். முதலில் நீங்கள் இது பற்றி மட்டும் கவலைப்படுங்கள்.

அடுத்ததாக, தயாரிப்பாளர் களின் பணத்தில் இருந்து ஒரு டிக்கெட்டில் ஒரு ரூபாய் தருவதாக அறிவித்திருக்கிறீர்கள். நானும் ஒரு தயாரிப்பாளன் என்கிற முறையில் கேட்கிறேன்; நீங்கள் பல படங்களில் நடித்திருக்கிறீர்கள். பல படங்களை சொந்தமாக தயாரித்திருக்கிறீர்கள். அதில், எத்தனை படங்களில் முதலீடு செய்த பணம் திரும்பி வந்திருக்கிறது? ஒருவேளை லாபம் கிடைத்திருந்திருந்தால், அது ஒரு சிலருக்குத்தான் என்பதும் உங்க ளுக்குத் தெரிந்திருக்கும். செலவு செய்த பணம்கூட திரும்பி வராமல் செத்து மடியும் விவசாயிகளின் நிலைதான் இன்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலையும்.

தயாரிப்பு செலவில் பாதிக்கும் மேல் நடிகர்களின் சம்பளத்துக்கே போய்விடுகிறது. அதனால் பல தயாரிப்பாளர்கள் நட்டப்பட்டு, திரைத்துறையைவிட்டே போய் விடுகிறார்கள். தற்கொலையும் செய்துகொண்டுவிடுகிறார்கள். எரிகிற வீட்டில் பிடுங்கும்வரை லாபம் என கேட்கிற பணத்தை வாங்கிக்கொண்டு நீங்கள் சென்றுவிடுகிறீர்கள்.

உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்தால், நீங்கள் பதவியில் இருந்த காலத்தில் தயாரிப் பாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, நடிகர் சங்கத்தில் சம்பளக் கட்டுப்பாடுகளை உருவாக்கி, தயாரிப்பாளர்களைக் காப்பாற்றி இருக்கலாம். லாபம் வராமல் போனாலும் முதலீடு செய்த பண மாவது திரும்பிவர உத்தரவாதம் கிடைத்திருக்கும். நடிகர்கள் வாழ்ந்தால் போதும் என நினைக்கும் உங்களிடத்திலேயே தயாரிப்பாளர் சங்கமும் வந்துவிட்டது. கடனால் தற்கொலை செய்துகொள்பவர்கள் விவசாயிகள் மட்டுமில்லை; தயாரிப்பாளர்களும்தான் என்பது விஷாலுக்குத் தெரியாமல் இல்லை.

முதலில் நடிகர்களை ஒருங் கிணைத்து தயாரிப்பாளரே நஷ்டம் முழுவதையும் ஏற்கும் நிலையில் இருந்து விடுவிக்க லாபம் - நஷ்டம் இரண்டிலும் பங்கு வகிக்கும் புதிய நிபந்தனைகளை உருவாக்கி, அழிந்து வரும் தயாரிப்பாளரைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு விவசாயிகளுக்கு உதவுவது பற்றி கவலைப்படலாம். உணவு படைத்த விவசாயியாகவும், மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக் கும் தயாரிப்பாளனாகவும் இருக் கின்ற தன்மானமுள்ளவன் என்பதால் தான் இந்த வேண்டுகோளை உங்களி டத்தில் நான் முன்வைக்கின்றேன்.

வேள்வியும் கேள்வியும்: யார் இந்த விஜயபாஸ்கர்?

    தியாகச்செம்மல்
    தகவல் உதவி: சுரேஷ்

அமைச்சர் விஜயபாஸ்கர் படம்: க.ஸ்ரீபரத்.
அவ்வளவு தத்ரூபமாக ஜெயலலிதாவின் படத்தை அதற்கு முன் யாரும் வரைந்திருக்க முடியாது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் வரையப்பட்டிருந்த அந்த கோலமாவு ஓவியத்தை பார்த்து மகிழ்ந்த ஜெயலலிதா அப்போது அதிமுகவில் முக்கிய இடத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ரகுபதியிடம் யார் இந்த ஏற்பாட்டையெல்லாம் செய்தது என்று கேட்கிறார், அதற்கு இந்த ஏற்பாடுகளை மருத்துவ மாணவரான தனது மகன் அண்ணாமலையும், அவரது நண்பரும் மருத்துவ மாணவரான விஜயபாஸ்கரும் ஏற்பாடு செய்ததாக கூறுகிறார். அப்போது தொடங்கியது, விஜயபாஸ்கரின் அரசியல் அத்தியாயம்.

இன்று வருமான வரித் துறையின் வளையத்திற்குள் சிக்கியுள்ள விஜயபாஸ்கரின் அரசியல் வளர்ச்சி அபரிமிதமானது. புதுக்கோட்டை மாவட்டம் இராப்பூசல் கிராமத்தில் பிறந்தவர் விஜயபாஸ்கர். இவரின் தந்தை சின்னதம்பி அதிமுகவின் தீவிர விசுவாசி. அதுவே ரகுபதி அளித்த அறிமுகத்தின் போது ஜெயலலிதாவின் கவனத்தை முழுவதுமாய் பெற வாய்ப்பை அதிகரித்தது.
அதிமுக மாணவர் அணியில் இணைந்த குறுகிய காலத்தில் அதன் மாநில செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 2001-ல் முதல் முறையாக புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று இளம் சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்றார். 2001 முதல் 2006 வரையிலான கால கட்டத்தில் பெரிய அளவில் அதிகாரத்தில் வளர முடியாமல் போனாலும், கட்சிக்குள் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார். குவாரி, பொறியியல் கல்லூரி என்று தனிப்பட்ட வளர்ச்சியும் விஜயபாஸ்கருக்கு சாத்தியமானது.

ஆனால் 2006-ல் சட்டமன்றத்துக்கு போட்டியிட விஜயபாஸ்கருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் அந்த காலகட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்த காரணத்தால், விஜயபாஸ்கர் பல்வேறு போராட்டங்கள், கூட்டங்கள் என கட்சிப் பணியில் தீவிரம் காட்டினார்.
2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக முதலில் வெளியிட்ட பட்டியலில் விஜயபாஸ்கருக்கு திருவெறும்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் வெளியிடப்பட்ட அறிவிப்பில் விராலி மலை தொகுதி விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டு, 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இதில் முக்கியமானது தன்னை அரசியலுக்கு கொண்டு வந்த ரகுபதியை தோற்கடித்து விஜயபாஸ்கர் பெற்ற வெற்றியாகும்.

(அதிமுக போஸ்டர் | படம்: எல்.சீனிவாசன்)
முதல் 2.5 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக மட்டும் இருந்த விஜயபாஸ்கருக்கு 2013-ம் ஆண்டு மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி குறித்து மிக கடுமையாக விமர்சனம் செய்து சட்டப்பேரவையில் பேசிய அடுத்த நாளே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இருப்பினும் ஆட்சி முடியும் வரை செல்வாக்கு பெற்ற இளைய அமைச்சர்கள் பட்டியலில் விஜயபாஸ்கருக்கு முக்கிய இடம் இருந்தது.

2016-ம் ஆண்டு மீண்டும் அதிமுக அரசு அமைந்த போது விஜயபாஸ்கருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டாலும், ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே கட்சிப் பொறுப்புகளிலிருந்து ஜெயலலிதாவால் விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக விஜயபாஸ்கருக்கு எதிர் முகாமில் இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வைரமுத்துவுக்கு மாவட்ட செயலாளர் பதவி ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது. இப்போது வரை கட்சிக்குள் விஜயபாஸ்கருக்கு எந்தப் பதவியும் இல்லை.
அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்கள் முழுமையாக நடந்தவற்றை உடன் இருந்த பார்த்த ஒரே தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும்தான். மூத்த அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கூட விஜயபாஸ்கர் ஆட்களால் தடுக்கப்பட்டதாக பின்னர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருந்தார். அந்த அளவுக்கு விஜயபாஸ்கர் சசிகலா தரப்பினரிடம் செல்வாக்கு பெற்றிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்ற காலகட்டத்தில் அவருக்கு பதிலாக சசிகலா கட்சி, ஆட்சி ஆகிய இரு பொறுப்புகளையும் ஏற்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்த ஆர்.பி.உதயகுமார் வரிசையில் விஜயபாஸ்கரும் வலுவாக தனது இடத்தை நிலை நிறுத்தினார்.
ஏற்கெனவே புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி தேடி தந்த அனுபவத்தை, ஆர்.கே.நகரிலும் காட்டினார் விஜயபாஸ்கர். ஆர்.கே.நகர் தேர்தலில் இவர் காட்டிய முனைப்பு மற்ற மூத்த அமைச்சர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆர்.கே.நகர் தொகுதியில் நாடார் சமூக மக்களின் வாக்குகளை பெறுவதற்கு கையாளப்பட்ட உத்திகளில் ஒன்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரின் ஆதரவைப் பெறுவது. இந்த பொறுப்பு விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டதாகவும், டிடிவி தினகரனை சரத்குமார் சந்தித்த போது, சரத்குமார் உடனேயே வந்திருந்த விஜயபாஸ்கர் முழு சந்திப்பிலும் உடன் இருந்தார்.

இந்தத் தொடர்புதான் வருமான வரித்துறையின் வளையத்திற்குள் விஜயபாஸ்கரோடு சேர்ந்து சரத்குமாரையும் நிறுத்தியது.

வருமான வரித்துறை சோதனை, பல மணி நேரங்கள் நீடித்த விசாரணையில் கேட்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட கேள்விகள் ஆகியவை, மருத்துவர் விஜயபாஸ்கரை கேள்வி வேள்வியில் சிக்க வைத்துள்ள நிலையில் சென்னையின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அதிமுக போஸ்டர்களில் வேள்வியில் விழைந்த கேள்வியின் நாயகனே என்று டிடிவி தினகரன் புகழப்பட்டுள்ளார். கேள்வியின் நாயகன் தினகரன் என்றால் அவருக்காக வேள்வியில் விழுந்தவர் விஜயபாஸ்கரா?

NEET SUPER SPECIALITY 2017-18



கில்லாடி சரத்... விழிபிதுங்கும் வருமான வரித்துறை !

MUTHUKRISHNAN S

ஏழு வருட அ.தி.மு.க-சமத்துவ மக்கள் கட்சி உறவு, 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பு உடைந்தது. அந்தக் கட்சியின் எம்எல்ஏ-வாக இருந்த எர்ணாவூர் நாராயணனைப் பிரித்து, அ.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுக்க ஏற்பாடுசெய்தனர். அதன்படியே, எர்ணாவூர் நாராயணனும் ஜெயலலிதாவை ஆதரித்தார். ஆனால், வேட்புமனு தாக்கலுக்கு சில நாட்களுக்கு முன்பு... சரத், அ.தி.மு.க உறவு மீண்டும் மலர்ந்தது. திருச்செந்தூர் தொகுதி சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில், தி.மு.க சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணனிடம் சரத் தோற்றார். அதன் பிறகு, அ.தி.மு.க-வில் அவரை கண்டுகொள்ளவில்லை. அவ்வப்போது அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருந்தார்.





திரைப்பட வாய்ப்பும் இல்லாமல், நடிகர் சங்கத்திலும் பொறுப்புகள் இல்லாமல், பரபரப்பு அரசியலும் செய்யாமல் அமைதியாக கொட்டிவாக்கம் வீட்டில் முடங்கிக்கிடந்தார். அவரை நைசாகப் பேசி, ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தரும்படி அழைத்துச்சென்றனர். அவரும் ஓ.பி.எஸ்-க்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று மட்டும் சொல்லிவிட்டு வந்தார். இடைத்தேர்தல் ஆதரவு பற்றி வெளிப்படையாகச் சொல்லாமல், ஓ.பி.எஸ் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டார். கொட்டிவாக்கம் வீட்டுக்குச் சென்ற அவரை டி.டி.வி.தினகரன் டீம் சந்தித்தது. அவரது மனதை மாற்றி, தொப்பி சின்னத்தை ஆதரித்து ஓட்டுக் கேட்க வேண்டும் என்றும், அதற்கு சில டீலிங்குகளையும் பேசினர். அதே நேரத்தில், பி.ஜே.பி-யும் தூதுவிட்டது. இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தினகரன் டீமின் டீலிங் முடிந்தது. அதற்காக, பெரிய தொகை ஒன்றும் கைமாறியதாகச் சொல்லப்பட்டது. திடீர் என்று அணி மாறியதால், ஓ.பி.எஸ் அணியை விட பி.ஜே.பி-தான் கடுமையாக அதிர்ச்சி அடைந்தது.


அந்த நேரத்தில்தான், ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா பிரச்னையும் விஸ்வரூபம் எடுத்தது. அதன்பிறகுதான் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. இடைத்தேர்தலுக்காக பணம் கைமாறிய தகவல் உறுதியானதால்தான், சரத் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் போனார்கள். அங்கு, சோதனை போட்டுப் போட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் டயர்டு ஆனார்களே தவிர, சரத் வீட்டில் பணம் எதுவும் சிக்கவில்லை. சரத் வீட்டுக்குக் கொண்டுசென்ற அந்தப் பணம் எங்கே சென்றது என அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், வருமான வரித்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டனர். எங்கே தாங்கள் போட்ட கணக்கு தப்பாகிவிட்டதோ என்று மண்டையைபோட்டு குழப்பினர்.





இருந்தாலும், சரத் மனைவி ராதிகா நடத்தும் ராடன் டி.வி அலுவலகத்தில் அந்தப் பணம் இருக்கக்கூடும் என்று அங்கு சென்றார்கள். அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். அங்கேயும் ஒன்றும் சிக்கவில்லை. அந்தப் பணம் மீண்டும் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத் வீட்டுக்கே எடுத்துவரப்பட்டுவிட்டது என்று மீண்டும் கொட்டிவாக்கம் வீட்டுக்குப் படையெடுத்தார்கள். மீண்டும், சரத் வீட்டில் சோதனை நடந்தது. இப்படி மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் சோதனை நடத்தி, வருமான வரித்துறையினர் டயர்டு ஆகிவிட்டார்கள்.


இந்த நிலையில்தான் சரத் மற்றும் அவரது மனைவி ராதிகாவை வருமான வரி புலனாய்வு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைத்தனர். அதன்படி விசாரணைக்கு அவர்கள் இருவரும் ஆஜரானார்கள். அவர்களிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அப்போது,ரூ.4.97 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சரத், ராதிகா ஒப்புக்கொண்டனர் என வருமானவரித்துறை தரப்பில் இருந்து தகவலைக் கசியவிட்டனர். இது எதையும் சரத் தரப்பில் இருந்து பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், தன்னை விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்த வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பாடம் புகட்டுவேன் என்று மட்டும் சரத்குமார் நரம்பு புடைக்கச் சொல்லி இருக்கிறார். கறுப்புப் பணத்தை பிடிக்கப்போன வருமான வரித்துறை அதிகாரிகள், வரி ஏய்ப்பு விஷயத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறார்கள். வருமான வரி சோதனை என்ற பெயரில் சென்று, அவர்கள் தங்கள் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டதுதான் மிச்சம் என்று சரத் தரப்பு சொல்லிச் சிரிக்கிறது. விழிபிதுங்கி நின்று, இப்போது என்ன பலன்? ரெய்டுக்குப் போகும்போதே நல்லா பிளான் பண்ணி போக வேண்டாமா..? கில்லாடி சரத்!


- எஸ்.முத்துகிருஷ்ணன்

இனி கல்லறைக்கும் காவல் தேவை! பிணத்துடன் உறவு கொண்ட கயவர்கள்


இறந்தப் பெண்ணுடன் உடலுறவுக் கொண்ட இளைஞர்கள்
லகம் முழுவதும் இந்த நேரத்தில் ஏதோ ஓர் இடத்தில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருப்பார். படித்தவர், படிக்காதவர் என்று வரைமுறை எல்லாம் இப்போது கிடையாது. தனது உடலின் செக்ஸ் தேவைக்காக அலையும் சில ஆண்கள், எந்த இடம்... யார் என்றுகூடப் பார்க்காமல் அவர்களுக்குப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தல்கள் கொடுப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுநாள் வரையில் உயிரோடு இருக்கும் பெண்ணுக்குத்தான் ஆபத்து என்று கூறிக்கொண்டிருந்தோம். இப்போது இறந்த பெண்ணுக்கும் ஆபத்து வந்துவிட்டது. ஆம். ஓர் இறந்த பெண்ணின் உடலுடன் உடலுறவு வைத்திருக்கிறார்கள் வக்கிரபுத்தி படைத்த சில ஆண்கள். இந்த வரிகளைப் படிக்கும்போதே உங்களுக்குக் கோபம் வரலாம். அவ்வளவு பெரிய கொடூரம்தான் இங்கு நடந்துள்ளது. 
உத்தரப்பிரதேசம், கசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இறந்து புதைக்கப்பட்ட பெண்ணின் உடலைத் தோண்டி எடுத்து இரண்டு இளைஞர்கள் உறவு வைத்துக் கொண்டுள்ளார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட 26 வயது பெண்ணை, புதைத்த இடத்தில் இருந்து தோண்டியெடுத்து... அந்தப் பிணத்துடன் உறவு வைத்துவிட்டுப் பின் அந்தப் பிணத்தை நிர்வாணமாக விட்டுச் சென்றுள்ளனர். இரவில் நடந்த இந்தச் சம்பவத்தை, அந்தக் கிராம மக்கள் காலையில்தான் கவனித்துள்ளார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்களுக்கு இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து 20 அடி தூரத்தில் இருந்த அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்த மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு போலீஸில் புகார் அளித்துள்ளார்கள். அதன்படி, ''அந்தப் பெண்ணைக் குழுவாகச் சேர்ந்து, கொடூரமாகப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளனர் என்றும், அவர்கள் 20 அடி தூரத்தில்வைத்து இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்'' என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண்ணின் உறவினர்களை விசாரித்ததில், ''இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். ஆனால், பிரசவிக்கும்போது  அவர் உயிர் இழந்துவிட்டார். இது, எங்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது'' என்று தெரிவித்துள்ளனர். ''இந்தச் சம்பவத்தில் இரண்டுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், 4.5 அடி பள்ளத்தைத் தோண்டி அவர்கள் எடுத்துள்ளார்கள்'' என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அந்தக் கிராம மக்களும் ஒன்றாக இணைந்து, ''இத்தகையக் கொடூரச் செயலைச் செய்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இறந்த பெண்ணுடன் உறவுகொண்டது ஒருபக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது... மறுபக்கம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஓர் இளைஞர் நாயுடன் உறவு வைத்துக் கொண்டுள்ளார். இந்தச் சம்பவமும் அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் அந்த நபர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
சில கொடூர எண்ணம் படைத்த ஆண்களை நினைத்துத்தான் பெண்கள் பயந்து... இரவு நேரங்களில் வெளியில் செல்ல முடியாமலும், பொது இடங்களில் பிடித்த உடையில் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுபோன்ற சம்பவத்தால் இனி, கல்லறைகளும் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். 

வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க இப்படிச் செய்கிறார்கள்! ஏர்டெல், வோடஃபோன், ஐடியாமீது ஜியோ புகார்!


ராகினி ஆத்ம வெண்டி மு.

’டிராய்’ விதிமுறைகளை மீறியதாக ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள்மீது ரிலையன்ஸ் ஜியோ, டிராயிடம் புகார் அளித்துள்ளது.



ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள டிராய் விதிமுறைகளை மீறிச் செயல்படுத்துவதாக, ரிலையன்ஸ் ஜியோ புகார் ஒன்றினைப் பதிவுசெய்துள்ளது.

மேற்கூறப்பட்ட மூன்று நிறுவனங்களும் அவர்களிடமிருந்து வெளியேற விரும்பும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள, நியாயமற்ற, ஏமாற்றும் ஆஃபர்களை மறைமுகமாக வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது, ‘டிராய்- 1999-ம்’ விதிமுறைகளை மீறும் செயலாகும் என ஜியோ குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களைக் கவர அளிக்கும் திட்டங்களைப் பொதுவாக, அதிகாரபூர்வமாக அறிவிக்காமல், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒவ்வொரு ஆஃபர் என வெளியிடுவது முறையற்ற செயல் என்றும் ரிலையன்ஸ் ஜியோ புகார் அளித்துள்ளது.

யார் இந்த ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன்? ஏன் இந்த வன்முறை வெறி இவருக்கு...?!

JAYAPRAKASH T



தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் மதுபானக் கடைகளை அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் இருந்த 230 டாஸ்மாக் கடைகளில் 164 கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் வருமானத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த திருப்பூர் மாவட்டத்துக்குள் அடங்கிய பெரும்பாலான கடைகள் நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டன. இதனால் 90 சதவிகித வருமானம் பாதிப்புக்குள்ளானது. இதனால், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த டாஸ்மாக் அதிகாரிகள் மாற்று இடம்தேடி பம்பரமாய்ச் சுழன்றனர். ஆனால், எங்கு சென்றாலும் டாஸ்மாக் கடைக்கு இடம்கொடுக்க யாரும் முன்வரவில்லை. மாறாக தங்களுடைய எதிர்ப்பையும் தீவிரமாக வெளிப்படுத்தினர்.



இந்நிலையில் அகற்றப்பட்ட மதுபானக்கடை ஒன்றை திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் ஏப்ரல் 11-ம் தேதி அன்று டாஸ்மாக் நிர்வாகம் திறக்க இருப்பதாகத் தகவல் வெளியானதையடுத்து, கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் அந்தப் பகுதியில் குழுமினர். காலை முதலே சாலையில் இறங்கிப் போராடத் தொடங்கினர். வீரியத்துடன் நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர காவல்துறை பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், மக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. 'இப்பகுதியில் மதுபானக்கடை திறக்கப்பட மாட்டாது' என அதிகாரபூர்வமாக எழுதிக்கொடுத்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம்" என மக்கள் உறுதிபடத் தெரிவித்துவிட்டதால், மாலை 4 மணியளவில் காவல்துறையினர் தங்கள் அதிகாரத்தை முன்னெடுக்கத் தொடங்கினர். மதுபானக் கடைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதுடன், வெறியுடன் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறை வெறியாட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் திருப்பூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (ஏ.டி.எஸ்.பி) பாண்டியராஜன்.

திருப்பூர் மாவட்ட உதவிக் கண்காணிப்பாளராக பாண்டியராஜன் பொறுப்பேற்று, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 2005-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றிபெற்று ஆண்டிப்பட்டியில் பயிற்சி டி.எஸ்.பியாகப் பணியில் சேர்ந்த இவரின் சொந்த ஊர் மதுரை திருமங்கலம். பெரியகுளம், உத்தமபாளையம் பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றியவர். அதன்பிறகு திருச்சுழி, பழனி ஆகிய ஊர்களில் டி.எஸ்.பியாகப் பணிபுரிந்திருக்கிறார். இவர் பழனியில் பணியாற்றியபோது, கேரளாவுக்கு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த மணல் கடத்தலைக் கண்டுகொள்ளாமல் இருந்தவர். பின்னர் விழுப்புரம் ஏ.டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னரே திருப்பூரில் பணியமர்த்தப்பட்டார். தன் கீழ் வேலை செய்யும் காவலர்களை பலரது முன்னிலையில் கடினமான, தடித்த வார்த்தைகளால் திட்டக்கூடிய சுபாவம் கொண்டவர் என பாண்டியராஜனைப் பற்றி காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.


மாவட்டத்தின் எந்தப் பகுதியில் போராட்டம் என்றாலும் தன் படையினரோடு சென்று போராட்டக்காரர்களை பயமுறுத்தும் வகையில் மிரட்டலான தொனியிலேயே பேசுவார். சில மாதங்களுக்குமுன் பல்லடம் சுல்தான்பேட்டைப் பகுதி டாஸ்மாக் பிரச்னையில் இதேபோன்ற போராட்டம் நடைபெற்றபோதும், அங்கு சென்று போராட்டக்காரர்களை மிரட்டும் தொனியில் பேசியவர். ஆனால், போராட்டத்தை சுமுகமாக முடித்து வைத்தார்.

ஆனால், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அவர் நடந்துகொண்ட விதம், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தடியடி நடத்தியதும் அங்கிருந்து கலைந்து சென்ற பெண்கள் கூட்டத்துக்குள் புகுந்து, தன் முழு பலத்தையும் அந்தப் பெண்களின்மீது காட்டியிருக்கிறார். எதிரே வந்த பெண்ணின் கன்னத்தில் பாண்டியராஜன் அறைந்ததால், காயம் அடைந்த அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடிய மக்களின்மீது, இந்த அளவுக்கு உக்கிரமான வன்முறையை காவல்துறை ஏன் கட்டவிழ்த்து விட வேண்டும்? பலமுறை அறிவுறுத்தியும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை என்றால், அனைவரையும் கைது செய்திருக்கலாமே? அதிரடிப்படையை அழைத்து வந்து அடிதடியில் ஈடுபட வைத்த ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனுக்கு, பேருந்துகளை வரவழைத்து அனைவரையும் கைது செய்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது?


காலையிலிருந்து 9 மணிநேரம் கடந்தும் போராட்டம் நடத்திய மக்கள், அந்த உறுதியின் மூலம் தங்களின் எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் கைது செய்து ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்தாலும் அங்கிருந்துகொண்டே டாஸ்மாக் ஒழிக என்ற கோஷத்தை அவர்கள் முழங்கிக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். எனவே, இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் எந்த ஒரு தருணத்திலும் மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது என்பதையே போராட்டக்காரர்கள்மீதான காவல்துறையினரின் தாக்குதல் வெளிப்படுத்துகிறது. மக்கள் தெருவுக்கு வந்து போராடி, அதன்மூலம் அவர்களின் கோரிக்கை நிறைவேறினால், எல்லா ஊர்களிலும் மக்கள் போராட்டம் நடத்தத் தயாராகிவிடுவார்கள். அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது என்ற முனைப்பு ஆளும் வர்க்கத்துக்கு அதிகமாகவே உள்ளது. அதற்கு, மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் உடந்தையாக இருந்துள்ளார். மக்கள் கிளர்ந்து எழுந்து ஒரு போராட்டத்தை நீண்ட நாட்கள் நடத்தினால், இந்த அரசு முதலில் அதை முடக்கவே நினைக்கிறது. இல்லையேல் வேறு ஒரு புதிய போராட்டத்துக்கு அரசே வழிவகை செய்து கொடுத்துவிட்டு, அதற்குமுன் நடந்த போராட்டத்தின் வீரியத்தைக் குறைக்கத் துடிக்கிறது.

ஒருவேளை மக்கள் ஒன்றிணைந்து போராடி தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடச்செய்துவிட்டால், தினந்தோறும் சரக்கடித்து விட்டு குடிபோதையில் பைக் ஓட்டிவரும் குடிமகன்களை இனி சிக்னலில் மடக்கி, காவல்துறையினர் ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தமுடியாமல் போய்விடுமே என்ற அச்ச உணர்வில் தன்னிச்சையாக முடிவெடுத்து இந்த வெறியாட்டத்தை நிகழ்த்தினார்களா?

கண்ணியமான முறையில் நடைபெற்ற ஒரு போராட்டத்தை, யாருடைய உயர்மட்ட தூண்டுதலின் பேரில் ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் சீர்குலைத்தார்? யார் இந்தப் பாண்டியராஜன்? அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போம்.

திண்டுக்கல் மாவட்ட திமுக பொருளாளராக இருப்பவர் மணி முருகன். இவர், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமிக்கு மிகவும் நெருக்கமானவராவார். டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்மீது அத்துமீறிக் கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன், மணி முருகனின் நெருங்கிய உறவினர். மேலும் முதல்வராக இருந்த ஜெயலலிதா கொடநாடு சென்று ஓய்வு எடுக்கும்போதெல்லாம், பாண்டியராஜன் அங்கு சென்று பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவாராம். அந்த வகையில் கார்டன்வட்டாரத்துடன் பாண்டியராஜன் நெருக்கமாகி, தனது செல்வாக்கை உறவினர் மணி முருகன் மூலம் ஐ. பெரியசாமிக்கும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். தி.மு.க ஆட்சியில் இல்லாதபோதிலும் ஐ. பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டத்தில் செல்வாக்குடன் வலம் வந்ததற்கு, பாண்டியராஜன் ஏற்படுத்திக்கொடுத்த கார்டன் தொடர்புதான் என்று தி.மு.க-வினரே தெரிவிக்கிறார்கள். அந்த அளவுக்கு செல்வாக்குடன் திகழ்ந்த பாண்டியராஜன், தற்போது யாருடைய தூண்டுதலின்பேரில், போராட்டக்காரர்கள்மீது இதுபோன்ற வன்முறை வெறியாட்டத்தை நடத்தினார் என்பது தெரியவில்லை. எல்லாம் காவல்துறை அதிகாரி பாண்டியராஜனுக்கே வெளிச்சம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

அரசு ஊழியர்கள் ஏப்.25ல் வேலைநிறுத்தம் - 3 லட்சம் பேர் பங்கேற்பு!!!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஏப். 25 முதல் நடக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில்  3 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக சங்கத்தின் மாநில தலைவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சிவகங்கையில் நடந்தது. இதில்   பங்கேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது: 2003க்கு பின் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் என பிடித்தம் செய்த ரூ.15 ஆயிரம் கோடி எங்கே போனதென தெரியவில்லை. இதுகுறித்து சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் தெரிவித்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை
.
இதனால் 2003க்கு பின் பணியில் சேர்ந்து இறந்துள்ள ஊழியர்களின் குடும்பங்கள் ஓய்வூதியம் கிடைக்காமல் பாதிப்படைந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான அரசுத்துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர், கிராம உதவியாளர், சத்துணவு ஊழியர் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப். 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளோம். இதில் சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்; ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம்

பதிவு செய்த நாள் 13ஏப்  2017   03:08




புதுடில்லி: இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, வீட்டிற்கே வந்து, நேரில் டிக்கெட்டை தந்து, கட்டணம் பெறும் வசதியை, ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது.

ரயில்களில் பயணிகள் வருகையை அதிகரிக்க, பல புதிய திட்டங்களை, இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது. இவற்றை, ஐ.ஆர்.சி.டி.சி., அமல்படுத்தி வருகிறது. இந்த வகையில், ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில், ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

டிக்கெட்டிற்கான கட்டணத்தையும், அதன் வாயிலாக செலுத்த வசதி செய்யப்பட்டது. இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்த விபரங்கள், பயணியின் மொபைல் எண்ணிற்கு, குறுஞ்செய்தி மற்றும் இ - மெயில் மூலம் தெரிவிக்கப்படுவதால், காகித பயன்பாடு வெகுவாக குறைந்தது.

புது வசதி :

டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு இல்லாதவர்களுக்காக, இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அவர்களின் வீட்டிற்கு வந்து, டிக்கெட்டை கொடுத்துவிட்டு அதற்கான கட்டணத்தை பெற்றுச் செல்லும், 'கேஷ் ஆன் டெலிவரி' முறையை, நாடு முழுவதும், 600 நகரங்களில், ஐ.ஆர்.சி.டி.சி., துவங்கியுள்ளது.இந்த வசதியை பயன்படுத்த விரும்புவோர், ஆதார் அட்டை மற்றும், 'பான்' அட்டை வைத்திருக்க வேண்டும்.

ஐ.ஆர்.சி.டி.சி., தளத்தில், பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யும் போது, சி.ஓ.டி., எனப்படும், 'கேஷ் ஆன் டெலிவரி'யை தேர்வு செய்ய வேண்டும்.பயண நாளுக்கு ஐந்து நாட்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்கையில், இந்த வசதியை பயன்படுத்த முடியும். இவ்வாறு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும் போது, அதற்கான பணம், பயணியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால், வங்கிக் கணக்கு குறித்த தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.

நோயாளியும் மருத்துவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொண்டு செயல்படுவதுதான் தீர்வு தரும்

‘சிகிச்சை பலனளிக்காமல் நோயாளி மரணம் - மருத்துவர் மீது தாக்குதல்’ எனும் செய்திகள் அடிக்கடி கண்ணில் படுகின்றன. தமிழகத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களில் முக்கால்வாசிப் பேர் ஏதாவது ஒரு வன்முறையைச் சந்திப்பதாக இந்திய மருத்துவச் சங்கம் ஒரு புள்ளிவிவரம் தந்திருக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் பிரச்சினைகள் என்னென்ன? 

முன்பெல்லாம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ‘குடும்ப மருத்துவர்’ இருப்பார். எந்தவொரு நோய்க்கும் அவரிடம்தான் சிகிச்சைக்கு வருவார்கள். இப்போது நோயாளிகள் முதல்கட்ட சிகிச்சைக்கே சிறப்பு மருத்துவரிடம் நேரடியாகச் சென்றுவிடுகின்றனர். தேவைக்கு அதிகமாகப் பரிசோதனைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கிறார்களோ, தேவையில்லாமல் மருத்துவமனையில் தங்கச் சொல்கிறார்களோ என்பன போன்ற சந்தேகங்கள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. சந்தேகப் பார்வையோடு மருத்துவரை அணுகும்போது, நோய் குணமாகவில்லை - உயிர் காப்பாற்றப்படவில்லை - என்றால், மருத்துவர் மேலிருந்த நம்பிக்கையும் கலைந்துவிடுகிறது. 

விழிப்புணர்வின்மை 
 
பெரும்பாலும் விபத்தில் அடிபட்டவர்கள் இறப்பது, அறுவை சிகிச்சையில் மரணம் ஏற்படுவது போன்ற நிலைமைகளில்தான் மருத்துவர்கள் தாக்கப்படுகிறார்கள். பணி நேரத்தில் மருத்துவர்கள் மருத்துவமனையில் இல்லை, தவறான சிகிச்சை அல்லது தாமதமாகச் சிகிச்சை தரப்பட்டது, அலட்சியமாக சிகிச்சை செய்யப்பட்டது போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் இம்மாதிரியான தாக்குதல்கள் நடக்கின்றன. ஒரு சில இடங்களில் நிகழ்கிற இத்தகைய முறைகேடுகள் உண்மை எனத் தெரியவந்தால், இந்திய மருத்துவர்கள் சங்கம் அந்த மருத்துவர் மீதும் மருத்துவமனை மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கிறது. 

ஒருவருக்கு சிகிச்சை பலன் தராமல் போவ தற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது, தாமதமாகச் சிகிச்சைக்கு வருவது. மேற்கத்திய நாடுகளைப் போல் இந்தியாவில் மருத்துவ விழிப்புணர்வு இன்னமும் மேம்படவில்லை. அதிலும் விபத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நிலைமைகளில் நோயாளிகள் எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு வருகிறார்களோ அவ்வளவு விரைவாக சிகிச்சைக்குப் பலன் கிடைக்கும். ஆனால், பெரும்பாலும் அப்படி நடப்பதில்லை. 

அரசின் குறை 
 
மருத்துவமனைகளில், குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் ஆபத்தான நேரங்களில் உயிர் காக்கும் எல்லா சிகிச்சைகளும் கிடைக்கும் என்றே மக்கள் நம்புகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கிற வசதிகள் அங்கு இல்லாதபோது ஏமாற்றம் அடைகிறார்கள். அரசு மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமை. அதை ஏன் செய்யவில்லை என்று நோயாளியோ அவரது உறவினரோ அரசிடம் கேட்பதில்லை. மருத்துவருடன்தான் மோதுகிறார்கள். 

அரசு மருத்துவமனைகளில் அளவுக்கு அதிகமாக நோயாளிகள் வரும்போது மருத்து வரும் சரி, நோயாளியும் சரி பொறுமை இழக்கிறார்கள்; சோர்வடைந்துவிடுகிறார்கள். பொதுவாக, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் இரவு நேரங்களில் வரும் நோயா ளிகளின் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளைத் தருவ தற்குப் பயிற்சி மருத்துவர்களும் முதுகலை மாணவர்களும்தான் பணியில் இருப்பார்கள். தொடர் பணிச்சுமை காரணமாக இவர்கள் சோர்வடைவதால், சில சமயம் சிகிச்சை தாமதமாகலாம். ஒரு விபத்து நடக்கும்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருபவர்களும் உதவிக்கு வருபவர்களும் கும்பலாகக் கூடிவிடுவார்கள். அப்போது அனைவருக்கும் உடனடியாகச் சிகிச்சை தரப்பட வேண்டும் என்று உறவினர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால், அதற்கு ஆள் பலம் / மருத்துவ வசதிகள் அங்கே இருக்காது. அவசரக் கால மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள எண்ணிக்கையில் இந்தியாவில் எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லை என்பதே உண்மை. தவிரவும், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது, கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய மருத்துவமனை நடைமுறை விதிகளாலும் தாமதம் ஏற்படுவதுண்டு. இந்தக் குறைகள் எல்லாமே அரசு தலையிட்டு நிவர்த்தி செய்ய வேண்டியவை. 

என்ன செய்யலாம்? 
 
நாட்டில் மருத்துவர்கள் பலரும் தற்போது எந்நேரம், எவரிடமிருந்து தாக்குதல் நடக்குமோ என்று பயந்துகொண்டுதான் மருத்துவ சேவையைத் தொடர்கிறார்கள். தங்கள் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிற நிலைமையையும் மருத்துவர்களிடம் காண முடிகிறது. எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதுபோல செய்திகளைப் பரபரப்பாகத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் ஊடகங்கள் உண்மை அறியாது வன்முறையைத் தூண்டும் நிகழ்வுகளைப் பெரிதுபடுத்துகின்றன. எரிகிற வீட்டில் எடுத்தது லாபம் என்பதுபோல் சில சமூக விரோதிகள் பாதிக்கப்பட்டவர்களோடு சேர்ந்துகொண்டு மருத்துவர்களை மிரட்டிப் பணம் பறிக்கவும் துணிகிறார்கள். இம்மாதிரியான நிலைமைகள் நீடித்தால், அது மக்கள் சமுதாயத்துக்கு நல்லதில்லை. 

தேவையில்லாமல் மருத்துவர்களை நோகடிக்கும்போது அவர்களின் சேவை மனப்பான்மையில் தொய்வு ஏற்படுவது இயல்பு. மேலும், பணியில் பாதுகாப்பின்மை தரும் மன அழுத்தம் மருத்துவர்களை மட்டுமல்ல, அவர் களிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோயாளி களையும் பாதிக்கும். ஆபத்தில் இருக்கும் அவசர நோயாளிகளுக்குச் சிகிச்சைகள் தரப்படுவதைத் தவிர்க்கக்கூடும். எனவே, இந்த நிலைமைகளைச் சீர்படுத்தும் முதல்படியாக, அனைத்து மருத்துவர்களுக்கும் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதற்குக் காவல் துறை மூலம் அரசு தேவை யான ஏற்பாடுகளைச் செய்ய முன் வரவேண்டும். 

சிந்திக்க வேண்டிய தருணம் 
 
மருத்துவச் சேவையில் கவனக்குறைவு, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும்போது, அவை நிரூபிக்கப்படும் வரை மருத்துவர்களுக்குப் பாது காப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஒரு சட்டமும் உள்ளது. ஆனால், காவல் துறை அதைப் பயன்படுத்தி மருத்துவரைத் தாக்கியவர் களுக்குத் தண்டனை பெற்றுத் தந்ததாக இதுவரை வரலாறு இல்லை. மாறாக, அவசரப்பட்டு மருத்துவர்களைத்தான் கைது செய்கிறார்கள்.
மருத்துவச் சேவை என்பது உயிர் காக்கும் உன்னத சேவை. நாட்டில் ஆரோக்கிய மான சமுதாயம் நிலைப்பதற்கு மருத்துவர் களின் உதவி கட்டாயம் தேவை. மனிதநேயமும் செயலில் நேர்மையும் மருத்துவச் சேவையில் குறைந்துவிடக் கூடாது. அதேநேரம், மருத்துவர்கள் கடவுள்கள் அல்ல; அவர்களும் மனிதர்கள்தான்; மனிதத் தவறுகள் அவர் களுக்கும் ஏற்படலாம்; பொறுமை காக்க வேண்டும் என்ற மனப்பக்குவத்தை மக்கள் ஏற்படுத்திக்கொள்வதும், நோயாளியும் மருத்து வரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொண்டு செயல்படுவதும்தான் நோயாளி மருத்துவர் உறவை மேம்பட வைக்கும். அப்போது நோயா ளிக்கு நோய்ப் பாதுகாப்பும் மருத்துவருக்குப் பணிப் பாதுகாப்பும் கிடைக்கும். அனைவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது. 

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

HC rejects MBBS graduate's plea to appear for PGM-CET

 The Bombay High Court has rejected a petition filed by a MBBS graduate from Mumbai seeking directions to relax the mandatory condition of serving a year in rural areas before taking up post graduate courses or paying bond penalty.

A division bench of Justice Shantanu Kemkar and Justice BP Colabawala, while turning down the plea filed by Dr Shubhra Srivastava, said, "It is not in dispute that the petitioner was admitted in the MBBS course in 2009. The criteria of eligibility to appear for the postgraduate PGM course will only apply."

Dr Srivastava claimed that since she had got admission in the MBBS course in 2009, and the eligibility criteria of a year's mandatory rural service was notified only in 2011, she should be allowed to appear for the postgraduate CET exams.

However, the court after going through the criteria and the fact that the petitioner had appeared for the entrance exams twice in 2015 and 2016, and failed both times, said "We are of the view that the petitioner was fully aware while appearing for the PGM entrance examination of the year 2015 and again in 2016, she cannot be allowed to turn around and challenge the eligibility criteria. If she wants to make an attempt for the third time for the same examination, she cannot be allowed to contend that the eligibility criteria is unreasonable."

The petitioner then pleaded the court to allow her to complete the post graduate course, following which she would serve in a rural area. To this, the bench said, "In the absence of any clause permitting to complete the post graduation first, and then to serve the rural area," the plea is rejected.
Common counselling for PG seats
Staff Reporter
Bengaluru April 13, 2017 00:00 IST
   
Medical and dental postgraduate aspirants who are vying for seats under the Non-Resident Indian (NRI) and management quotas will now have to attend common counselling that will be conducted by the Karnataka Examinations Authority (KEA). This will be effective from the 2017-18 academic year.

Medical Education Minister Sharan Prakash Patil on Wednesday said that with this, the KEA would conduct common counselling for all seats in the State.

The NRI and management quotas with 615 seats across the State account for 25 % of the total number of seats in private colleges and deemed universities. However, the counselling process for the remaining 75 % medical seats in the State is already under way. Nevertheless, two rounds of counselling for aspirants under the 25 % quota will be conducted separately. A calendar of events will be announced in two days, Dr. Patil said. “We will open the registration portal again for candidates who wish to apply for NRI and management quota as many of these candidates may not have applied,” he added.

Students who have written NEET will be eligible to obtain these seats.

Dr. Patil said that fees for the NRI and management quota seats will be fixed by colleges.     
              
  Action against student’s father

The Medical Education Department has decided to initiate action against the ENT specialist at the Bangalore Medical College and Research Institute who was on the panel which gave a prospective student a fake disability certificate. She had used the certificate to obtain an MBBS seat at the Kempegowda Institute of Medical Sciences in 2012-13.

Minister for Medical Education Sharan Prakash Patil said the department would initiate action against Mahesh Babu, the girl’s father who was also on the panel. The Karnataka Examinations Authority cancelled her seat last week after verification by doctors from the National Institute of Mental Health and Neurosciences that the girld had indeed produced a fake disability certificate.

The student was to receive her MBBS degree in 2017-2018 and was in her final year of college.

Deemed varsities to give 25% seats for govt. quota

The seats will be available at ‘concessional’ rates

In a move that is likely to benefit meritorious medical and dental seat aspirants in the State, deemed universities will, for the first time, part with 25% of their postgraduate seats and add them to the government quota. With this, 249 medical seats and 88 dental seats will be added to the existing government quota seat matrix.

At a press conference on Wednesday, Medical Education Minister Sharan Prakash Patil said deemed universities, after several rounds of meetings, had agreed to part with 25% of their seats, which will now be available at “concessional” rates. These seats will be allotted to candidates through the common counselling conducted by the Karnataka Examinations Authority (KEA).

According to official sources in the past deemed universities would part with only a percentage of enhanced seats (additional seats granted by the government to those universities to increase student intake). For instance, if a university had 100 seats and then received permission to add 50 seats, only a percentage of the new seats would be ceded to the government. This is the first time they are parting with a percentage of their total seats, sources said.

Meanwhile, all educational institutions may now have to reserve 30% of their seats for Karnataka students. This will be in addition to the government quota seats that are already being given by unaided and minority institutions, Dr. Patil said. He, however, added that there would be no fee concession for this. This will apply to all: private, religious, and linguistic minority institutions.

Confusion over circular
There was some confusion at the press conference on Wednesday, when Mr. Patil initially announced that 25% seats under the NRI and Management quota would be filled by the colleges themselves and not through centralised counselling.

The department later pointed out that there was a fake Medical Council of India circular doing the rounds with this information. Dr. Patil said they would register a police complaint to find out who created this fake circular.

பெண்ணை அடிக்கும் உரிமையை போலீசுக்கு கொடுத்தது யார்? கொதிக்கிறது தமிழகம் !!

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடப்பதாக முன்னாள் நீதிபதியும், முன்னாள் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு கருத்து கூறி 24 மணி நேரத்திற்குள் நடந்தது அந்த அதிர்ச்சி சம்பவம்.

டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டம் நடத்திய பெண் ஒருவரது கன்னத்தில் மிகவும் கொடூரமாக அறைந்தார் ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன். இந்த காட்சி தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக உலகமெங்கும் சென்று சேர மொத்த பேரும் ஷாக்கில் உறைந்து போயுள்ளனர்.

அரச பயங்கரவாதம், போலீஸ் அராஜகம் போன்ற வார்த்தைகளை படித்து மட்டுமே பழக்கப்பட்ட மக்களுக்கு, நேற்று மீண்டும் ஒருமுறை அதை வீடியோவாக பார்க்கும் 'பாக்கியம்' கிடைத்தது.

*இதற்கா தாக்குதல்?*

மதுபான கடையை மூடக்கூறியதற்கு ஒரு பெண் தாக்கப்படுகிறார், அதுவும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களால் இல்லை.. மதுவுக்கு எதிராக செயல்பட வேண்டிய அரசாங்கத்தின் பணியாளரான காவல்துறையை சேர்ந்தவராலே தாக்கப்படுகிறார் என்பதைவிட ஒரு வெட்கக்கேட்டை இனி தமிழகம் பார்க்க வேண்டுமா? மது வருமானத்தால் அரசை நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலை மட்டுமே போலீசாரின் இந்த கோபத்திற்கு காரணமா, அல்லது அந்த மதுக்கடைகளுக்கு சப்ளையாகும் மதுபானங்களை உற்பத்தி செய்யும் மொதலாளிகளுக்கு காட்டப்படும் விசுவாசமா என்ற கேள்வி சாமானியர்களிடமும் எழுகிறது.

*போராடும் உரிமையை பறிக்கலாமா?*

போராட்டம் எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும், அது இரண்டாம் பட்சம். ஆனால் தாக்குதல் ஏன் என்பதே கேள்வி? ஆயுதம் இன்றி போராட்டம் நடத்த உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் கட்ஜு கருத்து பிரதிபலிக்கிறது.

*தொடுவதே கண்ணியம் இல்லை*

பெண்கள் போராட்டம் நடத்தும்போது அவர்களை ஆண் போலீசார் தொட்டுக்கூட விலக்க கூடாது என்பதே விதிமுறை. அதற்காகத்தான் பெண் போலீசாரும் போராட்ட களங்களில் குவிக்கப்படுகிறார்கள். ஆனால், கை நீட்டி அறைய ஆண் போலீசான பாண்டியராஜனுக்கு உரிமை கொடுத்தது யார்? தற்காப்புக்காக அடித்தேன் என்று கூறி தப்பிக்கலாம் என்று நினைத்தால், அப்பாவி பெண்ணோ நிராயுதபாணியாக நின்று கொண்டிருந்தது ஊடகங்களால் அம்பலமாகிவிட்டது.

*தேசிய ஊடகங்களில் நாறுகிறது*

ஒரு பெண்ணை அழ வைத்தால் அந்த குடும்பம் நன்றாக இருக்காது என்ற நம்பிக்கை கொண்ட மாநிலம் தமிழகம். ஆனால், பெண்ணை பொது வெளியில் இன்னொரு ஆண் அடித்து காது செவித்திறனை கெடுக்கும் ஒரு மாநிலம் எப்படி நன்றாக இருக்கும் என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தரம் கெட்டுவிட்ட, தமிழகத்து அரச நிர்வாகத்தை பாரீர்.. என தேசிய ஊடகங்கள் இந்த அப்பட்ட மனித உரிமை மீறலை திரும்ப திரும்ப காட்டிக்கொண்டுள்ளன.

*பெண்ணின் மாண்பு*

ஜென்ம பகை கொண்ட இரு குடும்பத்து ஆண்கள் மோதிக்கொண்டால் கூட வீட்டிலுள்ள பெண்கள் மீது கை வைக்க மாட்டார்கள். அவர்கள் எந்த முன்னெச்சரிக்கையுமின்றி, தெருவில் நடமாடுவார்கள். பெண்கள் மீது கை வைக்கும் ஆண், ஆண்மை இல்லாதவன் என்ற நம்பிக்கை அடிப்படையிலான, வீர மரபு கொண்டவன் தமிழன் என்பதுதான் இதற்கு காரணம். இப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில் பெண்ணை அடித்த போலீஸ்காரரை இன்னமும் பணியில் தொடர அனுமதிக்க இந்த அரசை நிர்பந்திப்பது யார்?

*குலை நடுங்கும் செயல்*

போலீசாரால் தாக்கப்பட்ட ஈஸ்வரி என்ற பெண் இடத்தில், தங்களுடைய அம்மாவையோ, மனைவியையோ, உடன் பிறந்த சகோதரிகளையோ, மகளையோ வைத்து பொருத்திப் பார்த்தால் ஒரு நிமிடம், தமிழகத்து ஆண்களின் ஈரக்குலை அப்படியே நடுங்குமே, இதில் ஒரு சிறு உணர்வும் இந்த ஆட்சியாளர்களுக்கு இல்லையா? உணர்வற்ற நிலையில்தான் இந்த அரசு இருக்கிறதா?, அல்லது ஆர்.கே.நகரில் சில காலம் கடித்து நடைபெற உள்ள இடைத் தேர்தலில் யாரையெல்லாம் பணத்துக்கு மீண்டும் கையேந்த வைக்கலாம் என ஆட்சியிலிருப்பவர்கள் கணக்கு போட்டுக்கொண்டுள்ளனரா?

*வழக்கு தொடர முடியும்*

இந்திய தண்டனைச் சட்டம் 323 (வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துவது), பிரிவு 354 (பெண்ணின் மாண்புக்கு களங்கம் விளைவிப்பது) ஆகிய வழக்குகளை பெண்ணை தாக்கிய போலீஸ்காரர் மீது பதிவு செய்ய முடியும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
சொல்லில் விளையும் சுகம்

By அருணன் கபிலன் | Published on : 13th April 2017 01:36 AM |

இன்று கணினியும், செல்லிடப்பேசியும் நமது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத கருவிகளாகி விட்டன. இந்தக் கருவிகள் நமக்கு அறிமுகமானபோதில், தமிழுக்கு இனிமேல் மதிப்பில்லை என்னும் வசைமொழியே உரத்து ஒலித்தது. ஆனால், இன்றைய நிலையே வேறு.
கணினிகளை விடவும் எல்லாச் செல்லிடப்பேசிகளிலும் வட்டார மொழித் தட்டச்சுப் பொறி செயல்பாட்டில் இருக்கிறது. தூய தமிழில் அழகான சொற்களால் குறுஞ்செய்தியை அனுப்புகிற மக்கள் கூட்டம் மிகுந்திருப்பது தமிழ்மொழி மிளிர்வின் இன்னொரு அடையாளம்.
எழுதும்போது நேர்ந்த எழுத்துப் பிழைகளைத் திருத்துதற்கு செல்லிடப்பேசியில் பிழைதிருத்தியும் தானியங்கிச் சொற்பதிவும் வசதியாக இடம் பெற்றிருக்கின்றன.

பிறமொழிச் சொற்களைக் கையாளப்புகு முன்னர் அதற்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தேடுவதற்குரிய மொழிமாற்றியை அவர்கள் உடனே பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். புதிய சொற்களை அறிந்து கொள்ளுகிறார்கள். பயன்பாட்டுக்கும் கொண்டு வருகிறார்கள்.
குறுஞ்செய்திகளில் மட்டுமின்றி, முகநூல், கட்செவி, அஞ்சல் (வாட்ஸ் அப்)முதலிய சமூக வலைதளங்களிலும் தமிழில் பரப்பப்படுகிற பரப்புரை வியக்க வைக்கிறது. அவர்கள் பயன்படுத்துகிற சொல்லாடல்களும், மேற்கோள்களும் சங்க இலக்கியங்களிலிருந்து தொடங்கிச் சமகால இலக்கியங்கள் வரைக்கும் தொட்டுச் செல்கின்றன.
இலக்கணங்கள் பேசுகின்றன. மொழிபெயர்ப்புத் தருகின்றன. விவாதங்களை முன்னெடுக்கின்றன. நயமான மறுப்புகளையும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றன.

பேசுகிறபோது பிறமொழிக் கலப்பில்லாமல் பேச இயலாதவர்களும் கொச்சைத் தமிழில் மட்டுமே பேசுகிறவர்களும்கூட செல்லிடப்பேசியின் வாயிலாக, குறுஞ்செய்தியிலும் முகநூலிலும், கட்செவி அஞ்சலிலும் முறையான - இலக்கணப் பிழையில்லாத தமிழைப் பகிர்வது வியப்பினை உருவாக்குகிறது.

இந்த ஐந்து ஆண்டுகளில் செல்லிடப்பேசியைப் பயன்படுத்துகிறவர்கள் நகர்ப்புறம் மட்டுமில்லாமல் கிராமப்புறங்களிலும் அதிகரித்திருக்கிறார்கள். அவர்களுக்குச் செல்லிடப்பேசியின் இயக்கம் என்பது மொழியினை அடிப்படையாக் கொண்டது என்பதை மறுத்துவிட முடியாது.
எண்ணை அழுத்தி அழைப்பினைச் செய்துவிட முடிந்த அவர்களுக்கு அந்த எண்ணைச் சேமிப்பதற்கான வழிமுறையும் அந்த எண்ணுக்குரியவரின் பெயரைப் பதிவிட வேண்டிய வழிமுறையும் எப்படித் தெரியும்?
செல்லிடப்பேசியில் தமிழ் பயன்பாட்டு மொழியான பின்னாலே அவர்களுக்கும் இப்போது மகிழ்ச்சி பிறந்திருக்கிறது. இதன்மூலம் செல்லிடப்பேசியைப் பயன்படுத்த அவர்கள் பிறரது உதவியை நாட வேண்டிய கட்டாயம் இல்லை.

பெரும்பாலும் புகைப்படங்களும் காணொளிக் காட்சிகளுமே பதியப் பெற்றுக் கொண்டிருந்த முகநூலிலும் கட்செவி அஞ்சல்களிலும் தற்போது நீண்ட நயமான கட்டுரை போல உரைகள் பதியப் பெறுகின்றன.
அவை தான் அடைந்த அனுபவங்களையும், மற்றொரு சம்பவத்தின் விரிவுகளையும், ஒரு சமூகச் செயல்பாட்டின் விமர்சனத்தையும் அழகாக முன்வைக்கின்றன. அப்பதிவு அழகுடையதாக இருந்தால் உடனே அவை பலராலும் பகிரப் பெறுகின்றன. தொடர்ந்து வாசிப்புக்குள்ளாகுகின்றன.
மற்றொரு தளமாகிய தொலைக்காட்சிகளில் மொழியாளுமை மெல்ல மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. செய்திகள் வாசிக்கும்போது மட்டும்தான் உச்சரிப்பு, குரல் வளம் முதலியவை முந்தைய காலங்களில் தென்படும்.

இப்போது விளம்பரங்களில் கூட அவை மெருகேறுகின்றன. விழாக்களின் நேரடி வருணனை, நிகழ்ச்சித் தொகுப்பின் பின்னணி, இவற்றிலும் தனித்த சிறப்பான சொல்லாடல்கள் இடம் பெறுகின்றன.

இளஞ்சிறார்களைக் கொண்டு நடத்தப் பெறும் வேடிக்கை நிகழ்ச்சிகள், பாட்டுப் போட்டிகளிலும் கூடத் தமிழின் வளர்ச்சி நன்றாகவே புலப்படுகிறது.
நேர்காண்பவர் கேட்கும் கேள்விகளுக்கு மழலை மாறாமல் விடையளிக்கும் அந்தப் பிஞ்சுகளின் உள்ளத்திலிருந்து தமிழ் ஊற்றெப்பதைக் கேட்கும் போதில் காதில் தேன்வந்து பாய்ந்த உணர்வை அனுபவிக்க நேரிடுகிறது.
பாட்டுப் போட்டிகளில் பாடல்களைச் சற்றும் இசைமாறாமல் கூவுகிற அந்தச் சின்னக் குயில்களின் இசையின் பெருமையை வளமையை என்னென்பது?
இன்னொரு புறம் களத்தில் இருந்து கொண்டு சம்பவங்களைக் குறித்து நேர்காண்பவர் கேட்கும் வினாக்களுக்கு வட்டார வழக்கில் பதிலளிக்கிற கிராமத்துப் பெரியவரின் சொல்லாடல்கள் இன்னும் வளமையானவை.
அவை இட்டுக்கட்டியோ, மாதிரி செய்தோ பேசப்படுபவை அல்ல என்பதை அவருடைய இயல்பான தெளிவான உச்சரிப்புப் புலப்படுத்தி விடுகிறது.
அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்கூட மிக எளிமையாக, அதேநேரத்தில் தாம் கூற வந்த கருத்தை வலிமையாகத் தனக்கு முன்னால் நீட்டப் பெறுகிற ஒலிபெருக்கியில் சொல்கிறார்கள்.
குரல் கொஞ்சம் அவர்களுக்குத் தடுமாறினாலும் தமிழ் என்னவோ இன்னும் மிச்சமிருப்பதாய்த்தான் தோன்றுகிறது.

ஆயினும் சில வேளைகளில் குத்திக்காட்டுதலும், வன்முறை தூண்டும் வாசகங்களும், செவிகளுக்குள் நெருப்பினைக் கொட்டுகின்றன.
நாம் கற்றுக் கொண்டது நன்மையாக இருந்தால் நமக்குப் பின்னால் வரும் தலைமுறைக்கும் அது நன்மையாகவே சென்று சேரும். ஒருவேளை நமக்குத் தீமை கற்றுத் தரப்பெற்றிருந்தால் அதைச் சொல்லாலும் பயன்படுத்தாமல் விலக்கி விடுவதுதானே மேதமைப் பண்பு!

நாம் பேதையுரைகளை விலக்கி விட்டு மேதையுரைகளை எப்போது மொழியப் போகிறோம்? அறிவியல் வளர்ச்சிக்கு இணையாக அறிவும் வளர வேண்டாமா?
தொழில் நுட்பங்களுக்கும் மேலாக நமது பொறி நுட்பங்கள் மேம்பட வேண்டாமா? கருவிகளை விட உயர்வாக நமது கருத்து நிற்க வேண்டாமா?
இன்றைய பொழுதுகளில் சொல் விளைகிறது. சொல்லினால் விளையும் சுகத்தை வருங்காலத்தில் மெதுவாகத்தான் அனுபவிக்க முடியும் போலும். சொல்லில் விளையும் சுகத்தை அனுபவிக்கக் காத்திருப்போம்.

150 MBBS seats in new med college


PUDUKOTTAI, VIRUDHUNAGAR ON TN HEALTH MAP 
 
There will be at least 150 additional seats in government medical colleges in the state from the 2017-18 academic year as the Medical Council of India has cleared the decks for a college in Pudukottai.
 
The Union health ministry's communication is expected before MBBS counselling, based on NEET scores, begins, health secretary J Radhakrishnan said. Until now, there were 2,750 MBBS seats in 21medical colleges, including four in Chennai. In 2016, after 15% of seats were given up for the national quota, counselling was held for 2,318.
Foundation for the college, sanctioned in August 2015, was laid in March 2016 on a 127acre plot at Mullur village. Chennai:
  

100 BDS seats in 2nd govt institute
Chennai:
TIMES NEWS NETWORK 
 


The state government is set to build its second dental college, in the southern district of Virudhunagar, nearly 40 years after the first came up in Chennai. The 100 seats available in the college from 2018 will take the number of dental seats in state-run colleges to 200. On Wednesday , chief minister Edappadi K Palaniswamy issued orders for the establishment of the institution, based on an announcement by former chief minister J Jayalalithaa in the state assembly on August 25, 2015. Palaniswami has given the nod for the state health department to begin construction of buildings and appoint a dean, a release said. after setting up infrastructure and appointing faculty , the state will apply for permission from the Dental Council of India to admit students into BDS course, health secretary J Radhakrishnan said.

The state, which had 21medical colleges, had put off plans to start dental colleges as the demand for MBBS courses was higher. Now, there are 18 self-financing dental colleges under the Tamil Nadu Dr MGR Medical University besides deemed universities. The Tamil Nadu Dental College established in Chennai in 1980 was the sole state-run institution. “ Although there are many dental colleges in the state, we felt the need for a government tertiary care centre in the south,“ he said.

As of now, out-patients dental services are provided in district hospitals and primary health centres thrice a week. “ A government dental college hospital will be able to offer specialised services free,“ a senior doctor said.

பெட்ரோல், டீசலுக்கு நாள்தோறும் விலை நிர்ணயம் மே 1-ந் தேதி முதல் அமல்?

சோதனை ரீதியில் பெட்ரோல், டீசலுக்கு 5 நகரங்களில் நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யப்படும். அந்த நகரங்களில் இந்த திட்டம், மே 1-ந் தேதி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 13, 04:15 AM
புதுடெல்லி,

நமது நாட்டில் கிட்டத்தட்ட 58 ஆயிரம் பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களை, பொதுத்துறை நிறுவனங்களான இந்திய எண்ணெய் கழகம் (ஐ.ஓ.சி), பாரத் பெட்ரோலியம் கழகம் (பி.பி.சி.எல்.), இந்துஸ்தான் பெட்ரோலியம் கழகம் (எச்.பி.சி.எல்.) ஆகியவை நடத்தி வருகின்றன.

சர்வதேச அளவில் நிலவுகிற கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் 1-ந் தேதியிலும், 16-ந் தேதியிலும் பெட்ரோல், டீசல் விலையை இந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

தினந்தோறும் நிர்ணயம்

இந்த நிலையில் தங்கம், வெள்ளி போன்று பெட்ரோல், டீசல் விலையையும் தினந்தோறும் நிர்ணயிக்க இந்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஒவ்வொரு நாளிலும் நிலவுகிற சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் அமையும்.

5 நகரங்களில் அமல்

இந்த திட்டம் முதலில் சோதனைரீதியில் புதுச்சேரி, விசாகப்பட்டினம் (ஆந்திரா), உதய்ப்பூர் (ராஜஸ்தான்), ஜாம்ஷெட்பூர் (ஜார்கண்ட்), சண்டிகார் ஆகிய 5 நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது.

அனேகமாக மே 1-ந் தேதி இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் விஸ்தரிப்பு

இது தொடர்பாக இந்திய எண்ணெய் கழகத்தின் தலைவர் பி. அசோக் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல் கட்டமாக 5 நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படும். இது ஒரு மாதத்திற்குள் அமலுக்கு வரும். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தினந்தோறும் விலை நிர்ணயம் செய்கிற நிலை உருவாகும்.

தினந்தோறும் விலை நிர்ணயம் செய்வது சாத்தியமானதுதான். ஆனால் முதலில் சோதனைரீதியில் செய்து பார்க்க வேண்டி உள்ளது. அதன் சாதக, பாதகங்களை ஆராய்வோம். அதைத் தொடர்ந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் தினந்தோறும் விலை நிர்ணயம் செய்யும் திட்டம் விஸ்தரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதன்மூலம் சர்வதேச போட்டியை இந்தியா சந்திக்க முடியும், அது இந்தியாவுக்கு பலன் அளிக்கும் என்று சொல்லப்படுகிறது.
திருமங்கலம் – நேரு பூங்கா இடையே வரும் மே மாதம் முதல் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

ஏப்ரல் 13, 04:15 AM

சென்னை,
பாதுகாப்பு ஆணையர் இதற்கான ஆய்வை நேற்று தொடங்கினார்.

முதல் சுரங்கப்பாதை

மெட்ரோ ரெயில் சேவைக்காக கோயம்பேடு முதல் திருமங்கலம் வரை உயர்த்தப்பட்ட பாதையிலும், திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக எழும்பூர் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2012–ம் ஆண்டு நேரு பூங்காவில் தொடங்கியது. இந்தப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடந்து வந்தது.

இருந்தாலும், பெங்களூரில் உள்ள மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் வந்து ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினால் மட்டுமே பயணிகளுக்கான ரெயில் சேவையை இந்தப்பாதையில் தொடங்க முடியும்.பாதுகாப்பு ஆணையர்

இந்தப்பாதைக்காக அரசிடம் பெறப்பட்ட அனுமதி குறித்த ஆவணங்களை, பெங்களூரில் உள்ள மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்துக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தினர் அனுப்பி வைத்தனர். இந்த ஆவணங்களை பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் இந்தப்பாதையில் ஆய்வு செய்வதற்காக மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனேகரன் தன்னுடைய குழுவினருடன் நேற்று சென்னைக்கு வந்து ஆய்வு செய்து வருகிறார்.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரனிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–பயணிகளின் பாதுகாப்பு

கேள்வி:– திருமங்கலம் – நேரு பூங்கா இடையே எத்தனை நாள் ஆய்வு செய்ய உள்ளீர்கள்?

பதில்:– இன்று (நேற்று) தொடங்கி 2 நாட்கள் ஆய்வு செய்கிறோம். இதில் முதல்நாள் கோயம்பேடு– திருமங்கலம்– ஷெனாய் நகர் வரை 3.3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 2 வழிப்பாதையிலும், 2–வது நாளில் ஷெனாய் நகர் முதல் நேரு பூங்கா வரை 4.3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஒரு வழிப்பாதையிலும் ஆய்வு செய்ய உள்ளோம்.

கேள்வி:– திருமங்கலம்– நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்ட பாதையில் உங்களுடைய ஆய்வு எவ்வாறு இருக்கும்?

பதில்:– பயணிகளின் பாதுகாப்பை மையமாக கொண்டு தான் எங்கள் ஆய்வு இருக்கும்.ஊழியர்களுக்கு அனுபவம்

கேள்வி:– பயணிகள் பாதுகாப்பில் எடுத்துக் கொள்ளப்படும் அம்சங்கள் எவை?

பதில்:– ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரெயிலிலும், ரெயில் நிலையத்திலும் வேண்டிய அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்பட்டு உள்ளதா?, ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக பயணிகளை எவ்வாறு அப்புறப்படுத்துவது? தீ ஏற்பட்டால் அணைப்பதற்கான கருவிகள் உள்ளனவா? தீ தடுப்பு எச்சரிக்கை அலாரம் செயல்படும் விதம்?, குளிர்சாதன கருவிகள் செயல்படும் விதம், பராமரிக்கும் முறை, பாதுகாப்பு கருவிகளை கையாள்வது குறித்த போதிய அனுபவம் ரெயில் நிலையங்களில் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.80 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை

கேள்வி:– சுரங்கப்பாதையில் ரெயிலை வேகமாக ஓட்டிப்பார்த்து ஆய்வு செய்யும் திட்டம் உள்ளதா?

பதில்:– நாளை (இன்று) பகல் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலும் மெட்ரோ ரெயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி சோதனை செய்ய உள்ளோம். அதற்காக தண்டவாளத்தின் உறுதி தன்மையை தீவிரமாக ஆய்வு செய்வோம்.

கேள்வி:– இயற்கை பேரிடர் காலங்களில் சுரங்கப்பாதையில் எந்த அளவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்?

பதில்:– மழை, வெள்ள பெருக்கு காலங்களில் மழைநீர் சுரங்கப்பாதையில் புகுந்துவிடாமல் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இயற்கை பேரிடரால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் கருவிகளும் உள்ளன.அதிர்வுகளை தடுக்கும் வசதி

கேள்வி:– மேல்மட்ட பாதையிலும், சுரங்கப்பாதையிலும் ஆய்வு செய்வதில் என்ன வித்தியாசம் உள்ளது?

பதில்:– மேல்மட்ட பாதையில் மின்சாரம் மேல்பகுதியில் சற்று உயரத்தில் இருக்கும் இதனை உரசியப்படி ரெயில்கள் இயக்கப்படும். ஆனால் சுரங்கப்பாதையில் ரெயிலின் மேல்பகுதியில் சற்று அருகிலேயே மின்பாதை இருக்கும். எனவே இதனை எச்சரிக்கையுடன் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. சுரங்கப்பாதையில் காற்று வந்து செல்வதற்கான வசதி முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? தீ விபத்து ஏற்பட்டால் பயணிகளை எவ்வாறு காப்பாற்றுவது, அதில் ஏற்படும் புகையை எவ்வாறு வெளியேற்றுவது, ஓடும் ரெயில் திடீரென்று நின்று விட்டால், பின்னால் வரும் ரெயிலை என்ன செய்வது?, அதேபோல் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு என்ன வசதி செய்யப்பட்டுள்ளது? குறிப்பாக ரெயில் மற்றும் ரெயில் நிலைய கதவுகள் முறையாக திறக்கப்படுகிறதா? என்பது குறித்தும் பல்வேறு அம்சங்களில் ஆய்வு செய்யப்படுகிறது.

கேள்வி:– கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரிக்கு கீழே சுரங்கப்பாதையில் ரெயில்கள் இயக்கும் போது அதிர்வுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

பதில்:– டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட பாதையில் ஒரு இடத்தில் லேசான அதிர்வு காணப்பட்டது. அது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. அதேபோல் சென்னையில் அதிர்வுகளை தடுக்கும் வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதால் இங்கு அதிர்வு ஏற்பட வாய்ப்பு இல்லை.மே மாதம் ரெயில் போக்குவரத்து

கேள்வி:– திருமங்கலம்–நேருபூங்கா இடையே முதல் சுரங்கப்பாதையில் எப்போது ரெயில்கள் இயக்கப்படும்?

பதில்:– ஆய்வு முடித்த பின்னர், பணிகளில் சில மாற்றங்கள் இருந்தால் அவற்றை சரி செய்த பின்னர், சான்றிதழ் வழங்கப்படும். அதனடிப்படையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் ரெயில் இயக்கப்படும் நாள் முடிவு செய்யப்படும். எப்படியும் மே மாதம் ரெயில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.அண்ணாசாலையில் விரிசல்

கேள்வி:– மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணியின் போது அண்ணாசாலையில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனை வரும் காலங்களில் தவிர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

பதில்:– பாதுகாப்பான முறையில் தான் பணிகள் நடந்து வருகிறது. மண்ணின் உறுதிதன்மையை அறிந்து அதற்கு ஏற்றார் போல் பணிகளை செய்து வருகிறோம். அண்ணாசாலையில் ஒரு சில இடங்களில் களிமண், வண்டல் மண் மற்றும் பாறைகள், கிராணைட் பாறைகள் மாறி மாறி இருக்கின்றன. இவற்றிற்கிடையில் பணிகளை செய்யும் போது இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்ய ஒப்பந்தக்காரர்கள் ஆட்களை நியமித்து உள்ளனர். இதன் மூலம் உடனுக்குடன் சீர்செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.45 கிலோ மீட்டர் தூரம்

பின்னர் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக அலுவலர் பங்கஜ்குமார் பன்சால் கூறியதாவது:–

திருமங்கலம்–நேரு பூங்காவை இடையே மே மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து நேரு பூங்கா சென்டிரல் ரெயில் நிலையப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து சின்னமலை –வண்ணாரப்பேட்டை இடையே பணிகளை முடித்து ரெயிலை இயக்கவும் திட்டமிட்டு உள்ளோம்.

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக நடந்து வரும் 45 கிலோ மீட்டர் தூரம் பணிகள் முற்றிலுமாக முடிவடைந்து 2018–ம் ஆண்டு அனைத்து பாதைகளிலும் ரெயில்கள் இயக்கப்படும். நீட்டிப்பு செய்யப்பட்ட விம்கோ நகர் பகுதிகளில் 2019–ம் ஆண்டு பணிகளை முடித்து ரெயிலை இயக்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் தன்னுடைய குழுவினருடன் ஆய்வை தொடங்கினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தக கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 
 
சென்னை,

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க(பபாசி) செயலாளர் கே.எஸ்.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தக கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை தவிர மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் ‘பபாசி’ புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு உலக புத்தகத் திருவிழாவை சிறப்பான முறையில் கொண்டாடும் நோக்கத்துடன் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வருகிற 21-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரை புத்தக கண்காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ‘பபாசி’ செய்து வருகிறது.

21-ந்தேதி மாலை 5 மணிக்கு தொடக்க விழா நடைபெறும். விடுமுறை நாட்களான ஏப்ரல் 22, 23, 29, 30, மே 1-ந்தேதிகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், ஏப்ரல் 24, 25, 26, 27, 28 ஆகிய வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தக கண்காட்சி நடைபெறும். எல்லா புத்தகங்களுக்கும் 10 சதவீதம் கழிவு உண்டு. நுழைவுக் கட்டணம் இலவசம்.

குழந்தைகள் புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்களுக்கு என்று சிறப்பு அரங்குகள் இடம் பெறுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
தஞ்சை அருகே தண்ணீர் தேடி வீட்டு வாசலில் கிடந்த முதலை

பதிவு செய்த நாள் 12 ஏப்  2017 22:27

தஞ்சாவூர்: தஞ்சை அருகே, தண்ணீர் தேடி வீட்டு வாசலுக்கு முதலை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், கண்மாய்களில் எப்போதும் தண்ணீர் இருந்து வரும் நிலையில், அங்கே முதலைகள் அதிகளவில் வசித்து வந்தன. ஆனால், தற்போது கோடை வறட்சியின் காரணமாக தண்ணீர் இன்றி போனதால், அங்கு இருக்கும் முதலைகள் தண்ணீர் தேடி, ஊருக்குள் வர துவங்கிவிட்டன. இந்நிலையில், கண்மாயின் கரையை ஒட்டியுள்ள வடுகக்குடியில், ஒரு வீட்டின் முன், 6 அடி நீளமுள்ள முதலை நேற்று தண்ணீர் தேடி வந்த நிலையில், வீட்டின் வாசலில் கிடந்தது. காலை வீட்டில் உள்ளவர்கள் வெளியில் வந்த போது, முதலை கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத் துறையினர் முதலையை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அரசு விழாவில் பங்கேற்க விஜயபாஸ்கருக்கு தடை
பதவியை பறிக்கவும் பழனிசாமி ஆலோசனை


அமைச்சர் பதவியில் இருந்து, விஜயபாஸ்கரை நீக்க, முதல்வர் ஆலோசித்து வருகிறார். சென்னையில், நேற்று நடந்த, அரசு மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதிலாக, அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.



அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான ஆவணங் கள் சிக்கின.அந்த பணத்தை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலம் வழங்கியதும், ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த,  அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. ஆனால், விஜய பாஸ்கர் அமைச்சர் பதவி யில் இருந்து விலகவில்லை.ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்க, அவரை அமைச்சர் பதவி யில்இருந்து நீக்க, முதல்வர் பழனிசாமி முடிவு செய்தார்; அதை தினகரன் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால், அமைச்சரவையில் இருந்து, விஜயபாஸ்கரை நீக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இச்சூழ்நிலையில், நேற்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, உள்ளிருப்பு பயிற்சி மருத்துவர்கள் விடுதி, பார்வையாளர்கள் இரவு காப்பகம், தேர்வுக் கூடம், விரிவுரையாளர்கள் அறை உள்ளிட்ட, ஏழு கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.

இதில், சுகாதாரத் துறை அமைச்சர் என்றமுறையில் விஜயபாஸ்கர் பங்கேற்க வேண்டும்; ஆனால், அவருக்கு முதல்வர் பழனிசாமி தடை போட்டு விட்டார். அதனால், அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, நிதி அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று, கட்டடங்களை திறந்து வைத்தார். பகல், 12:00 மணிக்கு மேல், தலைமை செயலகத்தில், முதல்வர் தலைமையில், மூத்த அமைச்சர்கள்

ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், அமைச்சர் விஜயபாஸ்கரும் கலந்து கொண் டார்.கூட்டத்தில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்தும், விஜயபாஸ்கர் பதவி விலகல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் பதவி விலக வேண்டும் என, முதல்வர், மூத்த அமைச்சர்கள், கட்சியினர் நிர்ப்பந்தம் செய்வதால், விரைவில் அவர் பதவி விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -
இதே நாளில் அன்று

பதிவு செய்த நாள் 12 ஏப்   2017 21:42




1930 ஏப்ரல் 13

சிறந்த தமிழ் அறிஞரும், சிந்தனையாளரும், பாடலாசிரியருமான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, செங்கப்படுத்தான்காடு எனும் கிராமத்தில், அருணாச்சலனார் - - விசாலாட்சி தம்பதிக்கு மகனாக, 1930 ஏப்., 13ல் பிறந்தார்.பள்ளிப் படிப்பை முடித்த இவர், திராவிட இயக்கத்திலும், கம்யூனிச கொள்கையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.பாட்டாளி மக்களின் ஆசை, ஆவேசங்களை பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதினார். அவர் இயற்றிய பல பாடல்கள், 'ஜனசக்தி' பத்திரிகையில் வெளியானது. 1955 ல், படித்த பெண் என்ற திரைப்படம் மூலம், பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட இவர், புகழ் பெற்ற கவிஞரானார். இவர், எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு, கருத்துள்ள பல்வேறு தமிழ் பாடல்களை இயற்றியுள்ளார். 1959 அக்., 8 ல், தன் சிறு வயதில் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.

எம்.பி.பி.எஸ்., சேர பிளஸ் 2 மதிப்பெண் தேவையா? : 'நீட்' தேர்வால் மாணவர்கள் குழப்பம்

'நீட்' தேர்வால், மருத்துவப் படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படுமா என்ற குழப்பத்திற்கு, சுகாதாரத் துறை விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு களில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்விலிருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபை யில் மசோதா நிறைவேற்றப் பட்டது. அதற்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் இன்னும் கிடைக்க வில்லை. 'நீட்' தேர்வுக்கு இன்னும், 25 நாட்களே உள்ளன. இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கில், 'நீட்' தேர்வு மதிப்பெண்படி, மாணவர்கள் சேர்க்கப்படுவரா; பிளஸ் 2 மதிப்பெண்ணும் கணக்கிடப்படுமா என, பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.மாநிலங்களே முடிவு செய்யலாம்

இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது: 'நீட்' நுழைவுத் தேர்வு என்பது, தகுதியை முடிவு செய்யும் தேர்வாகவே கருதப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால் போதும். கடந்த ஆண்டில், 'நீட்' தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என, தனியார் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு, மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. 'நீட்' தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு மேல், எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் என்பதை, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறைந்தபட்ச மதிப்பெண் : தமிழகத்தில், 'நீட்' தேர்வில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்கள், முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இது போன்று, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கும், 'நீட்' தேர்வின் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி பெறலாம். அவர்களில், பிளஸ் 2வில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கின்றனரோ, அவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை கொடுத்து, 'அட்மிஷன்' நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையில், 'நீட்' தேர்வு மற்றும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அட்மிஷன் குறித்த வழிமுறைகளை, தமிழக சுகாதாரத் துறை விளக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

NEWS TODAY 21.12.2024