Monday, June 26, 2017

போலி படிப்புகள்:மாணவர்கள் உஷாராக இருக்க கவுன்சில் எச்சரிக்கை!!!

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத, 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளி, கல்லுாரிகளில், 17 வகையான போலி படிப்புகள் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. 'விபரம் தெரியாமல், மாணவர்கள் இவற்றில் சேர்ந்து ஏமாற வேண்டாம்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்து உள்ளது.

தமிழகத்தில், ஜூலை, 17ல், மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்க உள்ளது. அடுத்த கட்டமாக, நர்சிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.

வேலை கிடைக்கும்

இந்நிலையில், தமிழகத்தில், அனுமதியின்றி செயல்படும், 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளி, கல்லுாரிகளில், 17 வகையாக, போலியான நர்சிங் படிப்புகள் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. இதில், சேர்ந்து ஏமாற வேண்டாம் என, நர்சிங் கவுன்சில், எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:தமிழகத்தில், நர்சிங் பள்ளி, கல்லுாரிகளுக்கு, இந்தியன் நர்சிங் கவுன்சில்மற்றும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மூலம் அங்கீகா ரம் வழங்கப்படு கிறது. இவற்றின் அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில் படித்தால் மட்டுமே, அந்த சான்றிதழ்கள், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்படும்; அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

எனவே, நர்சிங் படிக்க விரும்பும்மாணவர்கள், தாங்கள் தேர்வு செய்யும் பள்ளி, கல்லுாரி மற்றும்நர்சிங் படிப்பு ஆகியவை, அங்கீகாரம் பெறப்பட்டதா என, சரிபார்த்து சேர வேண்டும். கவுன்சிலிங்அங்கீகாரம் பெற்ற, கல்லுாரி, படிப்பு விபரங்களை, /www.tamilnadunursingcouncil.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால், நர்சிங் பயிற்சி என்ற பெயரில், சில பெரிய, சிறிய மருத்துவமனைகள், நிறுவனங்கள், பல்கலைகள், கல்லுாரிகள், பள்ளிகள் போன்றவை, 17 வகையான, போலி நர்சிங் படிப்புகளை நடத்து கின்றன.

இந்த படிப்பை முடிக்கும் மாணவர்கள், பெறக்கூடிய சான்றிதழ்களை, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது. அரசுப்பணியில் சேர முடி யாது. எந்த மருத்துவமனையிலும், செவிலியர்க ளாக பணியாற்ற முடியாது.

போலி படிப்பை நடத்தும் நிறுவனங்கள்,பள்ளி, கல்லுாரி, பல்கலை கள் ஆகியவை மீது, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலின் சட்டப்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அபராதம் விதிக்கப்படும்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, போலி நர்சிங் பயிற்சி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே, போலி படிப்பு நடத்தும் நிறுவனங்கள், தாங்களாகவே போலி படிப்பு நடத்துவதை நிறுத்திக் கொள்வது நல்லது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

போலி படிப்புகள் என்ன?

* ஆறு மாத, டிப்ளமா இன் நர்சிங் அசிஸ் டென்ஸ் கோர்ஸ்

* இரண்டு ஆண்டு படிப்புகள்: டிப்ளமா இன் நர் சிங், டிப்ளமா இன் பர்ஸ்ட் எய்ட் நர்சிங், வில்லேஜ் ஹெல்த் நர்சிங், டிப்ளமா இன் நர்சிங் எய்ட், டிப்ளமா இன் பர்ஸ்ட் எய்ட் அண்ட் பிராக்டிகல் நர்சிங்

* ஓர் ஆண்டு படிப்புகள்: சர்டிபிகேட் இன் நர்சிங், அட்வான்ஸ்ட் டிப்ளமா இன் நர்சிங் அசிஸ் டென்ட், டிப்ளமா இன் ஹெல்த் அசிஸ்டென்ட், நர்ஸ் டெக்னிசியன் கோர்ஸ், ஹெல்த் கெய்டு கோர்ஸ்

* சான்றிதழ் படிப்புகள்: ஹெல்த் அசிஸ்டென்ட், ஹாஸ்பிடல் அசிஸ்டென்ட், பெட் சைட் அசிஸ் டென்ட், பேஷண்ட் கேர், ஹோம் ஹெல்த் கேர்.

‘Medical admission norms half-baked’

Stalin says govt. has failed to keep its promise on NEET

DMK working president M.K. Stalin on Sunday hit out at the State government, saying it had acted in a hurry in announcing the procedure for admissions to MBBS and BDS courses this year. The arrangements made for medical admission were “half-baked and ridiculous,” he charged.
“The government gave a false promise that there would be no NEET for admission to MBBS/BDS courses. Many students who have scored very high marks in Plus Two examinations were unable to perform well in NEET. What will be the remedy for the situation? How will the Government Order protect them? Is there any guarantee that the court will accept the present government’s order reserving 85% of seats for State Board students and 15% for students from other streams?” he said in a statement.
He questioned the basis for allotting 15% of medical seats for CBSE students, wondering how they, despite accounting for only 10% of the student population, could be allowed to walk away with 15% of the seats.
Mr. Stalin said that by failing to get exemption from NEET and dispensing with the marks scored in the Plus Two exam for medical admission, the State government had meted out an injustice to Tamil Nadu students, particularly students from rural areas.
“The AIADMK government is showing enormous interest in supporting the BJP candidate for the Presidential election. But it should have made it clear that it would support its candidate only if the State is exempted from NEET. But the AIADMK government has mortgaged to Delhi the rights of Tamil Nadu, and people of the State will not forgive them,” he said.
‘Against natural justice’
In a statement, PMK leader Anbumani Ramadoss criticised the government’s decision and said it was unfair to students from poorer backgrounds and was also against the principles of natural justice.
Manithaneya Makkal Katchi (MMK) leader M.H. Jawahirullah also disapproved of the move, saying the State government should reconsider this decision and increase the seats for students of Tamil Nadu to 97%.
REACHING OUT - Univ to offer e-courses for 
African states
Chennai:
TIMES NEWS NETWORK


University of Madras is one of five universities across the country that will offer diploma, undergraduate and postgraduate courses to students from African countries through an e-learning module.This will be facilitated by the ministry of external affairs under the PanAfrican e-Network, a project launched under UPA-II that the NDA government has extended for five years.
“The government will offer scholarships to African students that [the Centre will pay] directly to Indian universities which will get around `10 crore per annum. The total budget set aside by the Indian government is around `50 crore per annum,“ a senior university official said.
Each university will be allotted a maximum of 1,500 students, he said.
University of Madras, along with Birla Institute of Technology and Science (BITS), Pilani, Indira Gandhi National Open University (IGNOU) and Amity University , was asked to create course programmes that could be uploaded on e-platforms for the academic year starting in October.
The Pan-African e-network was one of Africa's biggest information and communications technology projects and covered students from 11 countries.
A key advantage for India includes publicity for Indian education abroad.Universities can also offer the courses to students who are not eligible for scholarships, which will help fill their coffers, officials said. University of Madras has been a partner institute from the launch of the project in 2009.
வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் பரோல் விவகாரத்தில் அரசுக்கு சிறைத்துறை அறிக்கை

2017-06-26@ 02:54:53



வேலூர்: பேரறிவாளன் பரோல் கேட்ட விவகாரம் தொடர்பாக அரசுக்கு சிறைத்துறை அறிக்கை அனுப்பியுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேர் வேலூர் மத்திய சிறையிலும், நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பேரறிவாளன் பரோல் கேட்டு மறுத்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதன்பேரில், சட்டசபை செயலகத்தில் இருந்து வேலூர் மத்திய சிறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில், பேரறிவாளன் பரோல் கோரி எப்போது மனு தாக்கல் செய்தார்? அதற்கு எடுத்த நடவடிக்கை என்ன? சமீபத்தில் பரோல் கேட்டு மீண்டும் விண்ணப்பித்தாரா? ஆகிய விவரங்களை உடனடியாக அறிக்கையாக அளிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘பேரறிவாளன் ஓராண்டுக்கு முன்னர் ஒரு மாதம் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதன்பேரில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அப்போது அந்தந்த சிறை டிஐஜிக்கள் உத்தரவின்பேரில் கைதிகளுக்கு பரோல் வழங்கலாம் என உத்தரவு வந்தது. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அப்போது சிறைத்துறை டிஐஜியாக இருந்த முகமது ஹனிபா, பேரறிவாளனின் பரோல் மனுவை நிராகரித்தார். அதன்பிறகு பரோல் கேட்டு பேரறிவாளன் சார்பில் மனு அளிக்கவில்லை. இதுதொடர்பான விவரங்களை அரசுக்கு அறிக்கையாக அனுப்பியுள்ளோம்’ என்றனர்.
ரஜினி புஸ்வாணமாகி விடுவார்: சீமான் பேட்டி

2017-06-26@ 09:37:17

தஞ்சை: தீபாவளிக்கு வைக்கும் பெரிய வெடி வெடிக்காமல் போவது போல் ரஜினியும் புஷ்வாணமாகி விடுவார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தஞ்சையில் பேட்டி அளித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால் பாஜக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளித்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் வரி கணக்கு தாக்கல் கட்டாயம்: ஜூலை 31க்குள் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்

2017-06-24@ 02:36:50




புதுடெல்லி, :ஆமாதபாத்தில் வருமான வரி தொடர்பான கருத்தரங்கில், முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் பி.சி. மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது : வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்படும் கணக்கு விவரங்களில் சந்தேகம் எழும் நிலையில், அது குறித்து விளக்கம் மட்டுமே கேட்கப்படும். ரிடர்ன் தாக்கல் செய்பவர்கள் மீது அரசு முழு நம்பிக்கை வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். வருமான வரி நிபுணரும், ஈஸ்வர் குழு உறுப்பினருமான முகேஷ் படேல் கூறியதாவது: வருமான வரி சட்டத்தில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இது 2.5 லட்சத்துக்கு கீழ் இருந்தால் ரிடர்ன் தாக்கல் செய்ய வேண்டியதில்லை.

ஆனால், இந்தாண்டு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டு மொத்த வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் இருந்தால் வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீண்ட கால ஆதாய பலன்களையும் இதில் சேர்க்க வேண்டும். வருமான வரி கட்டாவிட்டாலும் ரிடர்ன் தாக்கல் செய்ய வேண்டும். இதை அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது சரியான முடிவுதான். சிலர் பல பான் எண்களை பெற்று கொண்டு முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எளிதாக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வளைகுடா நாடுகளில் இன்று ஈகை திருநாளையோட்டி லட்சகணக்கானோர் பெருநாள் தொழுகையில் பங்கேற்பு

2017-06-25@ 15:35:58




துபாய்: முஸ்லிம்கள் புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலம் நிறைவு பெற்ற பிறகு ஈகை திருநாளான‌ ரமலான் பெருநாள் கொண்டாடப்படும். வளைகுடா நாடுகளில் இன்று ஈகைப் பெருநாள் இன்று கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கி பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

சவூதி அரேபியா,கத்தார்,அமீரகம்,குவைத், உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. துபாய் தேராவிலுள்ள ஈத்கா மைதானத்தில் அதிகா காலை ஈத் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இந்த பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் தொழுகையில் பங்கெடுத்து ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர்.
தொடர் விடுமுறையால் திருப்பதி கோயிலில் பக்தர்கள் அலைமோதல் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
2017-06-26@ 05:16:14



திருமலை: மூன்று நாள் தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் 12 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை (இன்று) ரம்ஜான் என 3 நாட்கள் தொடர்விடுமுறை என்பதால், சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர். இதனால் பக்தர்களால் திருமலை நிரம்பி வழிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 81 ஆயிரத்து 12 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை முதல் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வைகுண்டத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி பக்தர்கள் ஆழ்வார் ஏரியை சுற்றி நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் 12 மணிநேரத்திற்கு பின் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள், வைகுண்டத்தில் உள்ள 22 அறைகளும் நிரம்பி நாராயணகிரி தோட்டத்தில் காத்திருந்து 10 மணிநேரத்திற்கு பின் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதேபோல் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு பின் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ள நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் என விஐபிக்களின் சிபாரிசு கடிதம் கொண்டு வந்த பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தும் போதிய அறைகள் கிடைக்காமல் திருப்பதியில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கினர். நேற்று முன்தினம் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.2.77 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
ஜெயில் வேண்டாம்... ஜி.எச். போறேன்...கோவை சிறையில் அடம் பிடிக்கும் கைதிகள்

2017-06-26@ 03:00:30



கோவை: கோவை மத்திய சிறையில் 2 ஆயிரம் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் உள்ளனர். கைதிகளில் சிலர், அடிக்கடி நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என சிறை அதிகாரிகளிடம் முறையிட்டு வருகின்றனர். மாவோயிஸ்ட்கள் உடல்நிலை சரியில்லை என பலமுறை கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து, கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயான் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை போலீசார் சிறைக்கு அழைத்து சென்றபோது, கை வலிக்கிறது, என்னால் சிறையில் இருக்கமுடியாது என புலம்பியுள்ளார். முக்கிய குற்றவாளி என்பதால் சிறை நிர்வாகிகள் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2வது முறையாக, சிகிச்சை முடிந்து சிறைக்கு சென்றபோது, `வலி போகவில்லை. சிறையில் இருக்க மாட்டேன்’ என சயான் அடம்பிடித்தார். போலீசார் மீண்டும் சிறையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சேர்த்தனர். கோடநாடு வழக்கின் மற்றொரு கைதியான மனோஜ் சாமியாரும், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர்களைப்போல் மற்ற கைதிகளும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என அடம் பிடிக்கின்றனர். ‘‘எனக்கு ஏதாவது ஏற்பட்டால் நீங்கள்தான் பொறுப்பு, சிகிச்சைக்கு அழைத்து செல்லாவிட்டால் தற்கொலை செய்வேன்..’’ என பல கைதிகள் மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் சிறை அதிகாரிகள் தவிப்படைந்துள்ளனர். கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கு சிகிச்சை தர மருத்துவமனை உள்ளது. இதில் போதுமான மருத்துவ வசதி இல்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கோவை அரசு மருத்துவமனை வார்டில் சேர்ந்து ஜாலியாக பொழுது போக்க விரும்புவதாக தெரிகிறது. அவர்களுக்கு விடிய விடிய பாதுகாப்பு தர நிற்கவேண்டியுள்ளது என போலீசார் புலம்புகின்றனர்.
எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்

பதிவு செய்த நாள்26ஜூன்
2017
02:21




கோவை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மே, 7ல், 'நீட்' தேர்வு நடந்தது. தமிழகத்தில், 88 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ளன.
மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது:

பிளஸ், 2 தேர்வு முடிவுகள், நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில், வழிகாட்டு ஏடு மற்றும் விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும், 27ம் தேதி முதல் வினியோகிக்கப்படும். மாநிலத்தில் உள்ள, 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை ஜூலை, 7ம் தேதி மாலை 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 8 மாலை 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்ப படிவங்கள் பெற, 'செயலாளர், தேர்வு கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை' என்ற பெயரில், 500 ரூபாய்க்கான வரைவோலை (டி.டி.,) எடுக்க வேண்டும். சுயநிதி தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்பத்துக்கு, 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவசம்; மாணவர்கள் அதற்கான ஜாதி சான்று நகலை வழங்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்ப விபரங்கள் குறித்து விண்ணப்பத்தின் முகப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும். விண்ணப்பங்கள் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணிவரை வினியோகிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் தட்டுப்பாடு இல்லாமல் படிவங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அனைவருக்கும் வழங்கப்படும். மாணவர்கள் நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை. மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க வேண்டியதில்லை. ஜூலை, 14ம் தேதி தரப்பட்டியல் வெளியிடப்படும். விண்ணப்பங்களுக்கான டி.டி., எடுப்பதற்கு அந்தந்த மருத்துவக் கல்லுாரிகளில் வங்கிகளின், சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
லாக்கர் பொருள்: வங்கிகள் கைவிரிப்பு

புதுடில்லி:'வங்கி லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் பாதுகாப்புக்கு, வங்கிகள் பொறுப்பேற்காது' என்பது, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

திருட்டு, தீ விபத்து உள்ளிட்டவற்றில் இருந்து, நகைகள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாக்க, வாடிக்கையாளர்கள், வங்கிகளில் உள்ள பாதுகாப்பு லாக்கரில், அவற்றை வைக்கின்ற னர். ஆனால், இந்த லாக்கரில் வைக்கப்படும் பொருட்கள், திருடப்பட்டால், தீவிபத்து உள்ளிட்ட விபத்துகளால் சேதமடைந்தால், அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்காது.

இது குறித்து டில்லி யைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கி மற்றும், 19 பொதுத் துறை

வங்கிகளிடம் கேட்ட விபரங்களுக்கு, அவை அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

வங்கி லாக்கரை பயன்படுத்துவது தொடர்பாக, நுகர்வோர் மற்றும் வங்கிக்கு இடையே ஏற்படுத்தப் படும் ஒப்பந்தம், குத்தகை அடிப்படையிலான ஒப் பந்தமே. அதனால், அதில் வைக்கப்படும் பொருட் கள் பாதுகாப்பு, வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் நுகர்வோரையே சாரும்.
லாக்கரில் வைக்கப்படும் பொருட்களுக்கு எந்தவித சேதம் ஏற்பட்டாலும், காணாமல் போனால், திருடப்பட் டால்,அதற்கு வங்கி பொறுப்பாகாது. அதனால், இழப்பீடு தர முடியாது.இவ்வாறு வங்கிகள் பதில் அளித்துள்ளன.

அதைத் தொடர்ந்து, நிறுவனங்கள் இடையேயான போட்டி விவகாரத்தை விசாரிக்கும், சி.சி.ஐ., '



எனப்படும் 'இந்திய காம்ப்படிஷன் கமிஷனில் வழக்கறிஞர் புகார் கொடுத்துள்ளார்.'அனைத்து வங்கிகளும் திட்டமிட்டு, இதுபோன்ற பிரிவு களை ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளன. 

லாக்கருக்கு வங்கிகள் பொறுப்பாகாதபோது, காப்பீடு செய்துவிட்டு, வீட்டிலேயே வைத்திருக் கலாமே. லாக்கரில் வைக்கப்படும் பொருட் களின் பாதுகாப்புக்கு வங்கிகளை பொறுப் பேற்கும் வகையில், சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்' என, புகாரில் அவர் கூறியுள்ளார்.
பிளஸ் 2 சான்றிதழில் 'தமிழ்' குழப்பம் 'ஜம்ப்' ஆகும் மாணவர் பெயர்
பதிவு செய்த நாள்26ஜூன்
2017
01:18

மதுரை:பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், மாணவர் பெயரை தமிழில் குறிப்பிடும் நடைமுறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயரை ஆங்கிலம் மற்றும் தமிழில் குறிப்பிடும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. தமிழில் குறிப்பிடும் போது, 'ஷ', 'ஹ' எழுத்துக்களில் இடைவெளி ஏற்படுகிறது;

அதாவது, 'சுதிக்ஷா டி.எஸ்.' என்ற பெயர் 'சுதிக் ஷா டி.எஸ்.' என மாறுகிறது. 'இதேபோல் அசல் சான்றிலும் பெயர் இடம் பெற்றால் குழப்பம் ஏற்படும்' என மாணவர்கள் தவிக்கின்றனர்.

ஆசிரியர்கள் கூறுகையில், 'இப்பிரச்னை குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தோம். எழுத்துரு அமைப்பை மாற்றி குழப்பத்தை தீர்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்' என்றனர்.

பெற்றோர் கூறுகையில், 'உயர்கல்வி சேர்க்கைக்காக அலைந்துகொண்டிருக்கும் நேரத்தில் இதுபோன்று குழப்பம் மன உளைச்சலை தருகிறது. அசல் சான்றிதழில் குழப்பத்தை நீக்க வேண்டும்' என்றனர்.
தனியாக வந்த பெண்ணுக்கு 'ரூம்' தர மறுத்த ஓட்டல்
பதிவு செய்த நாள்25ஜூன்
2017
23:15

ஐதராபாத்:தனியாக வந்த சிங்கப்பூர் பெண்ணுக்கு, முன்பதிவு செய்திருந்தும், தங்குவதற்கு,'ரூம்' தருவதற்கு, ஐதராபாத் ஓட்டல் மறுத்துள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலில் தங்குவதற்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த நுபுர் சரஸ்வத், 22, என்ற பெண், ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தார். அதன்படி, சமீபத்தில் ஐதராபாத் வந்த அவருக்கு, ரூம் தருவதற்கு, ஓட்டல் நிர்வாகம் மறுத்து விட்டது.

'தனியாக வந்ததால், ரூம் தர முடியாது' என, ஓட்டல் ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால், நீண்ட நேரம் ஓட்டலுக்கு வெளியிலேயே, அவர் காத்திருந்தார். அப்படியிருந்தும், ஓட்டல் நிர்வாகம், அவருக்கு ரூம் ஒதுக்கவில்லை. தனக்கு நேர்ந்த அனுபவத்தை, நுபுர் சரஸ்வத், சமூக தளத்தில் பதிவிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக ஏராளமானோர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
அழகானவர்... அன்பானவர்... ஆரோக்கியமானவர்

பதிவு செய்த நாள்26ஜூன்
2017
02:07




மதுரை:'படையப்பா... வயசானாலும் உன் அழகும், ஸ்டைலும் உன்னை விட்டுப் போகவே இல்லை'... இப்போ, இந்த டயலாக்கை அப்படியே நம்ம மதுரை ஹீரோ பெருமாள் தாத்தாவுக்கு சொன்னல் தான் பொருத்தமாக இருக்கும்.

பட்டுப் போல பளிச்சென சிரித்து, 18 வயது இளைஞன் போல மிடுக்காக உடை அணிந்து, நேற்று 108வது பிறந்த நாள் கொண்டாடிய, அழகானவர்... அன்பானவர்... ஆரோக்கியமானவர்... பேசுகிறார்...

''1910ல் உசிலம்பட்டி அருகே உள்ள நடுபட்டி கிராமத்தில் பிறந்தேன், 5வது வரைக்கும் படிச்சிருக்கேன். 12 வயசு இருக்கும் போது மதுரைக்கு வந்து, ஒரு சில வேலைகளில் சேர்ந்து காலத்தை ஓட்டினேன். பின், 1936ல் மெஜூரா கோட்ஸ்ல வேலைக்கு சேர்ந்தேன். 1941ல் கல்யாணம் முடிச்சேன், மனைவி ராஜம்மாள் என்னை நல்லா பார்த்துப்பா. சொத்தெல்லாம் அதிகம் சேர்க்காத எனக்கு விலை மதிக்க முடியாத சொத்துக்களாக 11 குழந்தைகள் பிறந்தது. இதில், 6 குழந்தைகள் இறந்திருச்சு. இப்போ 5 பிள்ளைகள், 13 பேரன்கள் என்னை பார்த்து, பார்த்து கவனிச்சுக்குறாங்க.

ஓய்வு பெற்றும் விவசாயம் பண்ணினேன், இப்பக் கூட என்னால ஒரு நிமிஷம் சும்மா இருக்க முடியாது. அதிகாலை 5:00 மணிக்கு எந்திரிச்சு எதாவது ஒரு வேலை பார்த்துகிட்டு தான் இருப்பேன்.

நான் வசிக்கும் இந்த வீட்டை நானே தான் கட்டினேன். 2011ல் மனைவி தவறிய பின், பிள்ளைங்க தான் எனக்கு எல்லாம். பட்டிக்காடா இருந்த நம்ம மதுரை இன்னிக்கு பெரிய பட்டணமா மாறிப்போச்சு. அதனால, வெளியே போறதில்லை, வீட்டுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் வாக்கிங் மட்டும் போவேன்.

என்னை பொறுத்தவரை வயசு உடம்புக்குத் தான், மனசுக்கு இல்லை. அந்த வகையில் நான் இன்னும் 18 வயசு இளைஞர் தான். இதுவரை மருத்துவமனைக்கு போனது இல்லை, மாத்திரை, மருந்து சாப்பிட்டதும் இல்லை. அதே மாதிரி உணவுக் கட்டுப்பாடும் இல்லை இட்லி, தோசை, மிக்சர், வடை இப்படி பிடிச்சதை இஷ்டம் போல சாப்பிடுவேன். என்னை மாதிரியே எல்லோரும் ஆரோக்கியமாக வாழ, இறைவனை வேண்டுகிறேன்'' என்று, பேசி முடித்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டிய தாத்தா, பேரக் குழந்தைகளுடன் தானும் ஒரு குழந்தையாக மாறிப் போனார்.
'நீட்' தேர்வு: மாணவி சாதனை

பதிவு செய்த நாள்25ஜூன்
2017
23:53

சென்னை;'நீட்' தேர்வில் அகில இந்திய அளவில் ஒதுக்கீடு பிரிவில், சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி லக் ஷண்யா, இடம் பிடித்துள்ளார்.சமீபத்தில் நடந்து முடிந்த, அகில இந்திய அளவிலான, 'நீட்' தேர்வில், சென்னை, முகப்பேர் வேலம்மாள் பள்ளி சார்பில், 109 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இத்தேர்வில், 86 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்து உள்ளனர்.இப்பள்ளியை சேர்ந்த மாணவி ஏ.லக் ஷண்யா, அகில இந்திய ஒதுக்கீடு பிரிவில், 9ம் இடம் பெற்று, சாதனை படைத்துஉள்ளார். இவர், 720க்கு, 635 மதிப்பெண் பெற்றுள்ளார். இச்சாதனை புரிந்த மாணவியை, பள்ளி தாளாளர், முதன்மை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.
நேபாள பயணம்: ஆதார் செல்லாது

பதிவு செய்த நாள்26ஜூன்
2017
03:18




புதுடில்லி:'நேபாளம், பூட்டான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்தியர்கள், அடையாள அட்டை ஆவணமாக, ஆதாரை பயன்படுத்த முடியாது' என, மத்திய உள்துறை அமைச்சகம் கூறிஉள்ளது.

நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள், 'விசா' பெறத் தேவை இல்லை. மாறாக, செல்லத்தக்க தேசிய பாஸ்போர்ட் அல்லது தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் போதும்.

அதே போல், 65 வயதுக்கு மேல், 15 வயதுக்கு கீழ் உள்ள இந்தியர்கள், தங்கள் வயதை உறுதி செய்வதற்கு, 'பான்' எனப்படும், நிரந்தரக் கணக்கு எண், ஓட்டுனர் லைசென்ஸ், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களை, நேபாளம், பூட்டான் நாடுகளில் காண்பிக்க முடியும். ஆனால், ஆதார் அட்டையை ஆவணமாக காண்பிக்க முடியாது.

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: நேபாளம், பூட்டான் நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள், அடையாள ஆவணமாக, ஆதார் அட்டையை காட்ட முடியாது. வெளிநாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் இந்தியர்கள், சர்வதேச விமான நிலையங்களில், புறப்பாடு அட்டையை நிரப்பி சமர்ப்பிக்கும் நடைமுறை, ஜூலை, 1 முதல் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிப்ரவரியில் பொது தேர்வு? சி.பி.எஸ்.இ., விளக்கம்

பதிவு செய்த நாள்25ஜூன்
2017
23:19

புதுடில்லி:'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, ஒரு மாதத்துக்கு முன் நடத்துவது பற்றி, எந்த முடிவும் எடுக்கவில்லை' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில், ஆண்டுதோறும், மார்ச், ஏப்ரல் மாதங்களில், 10ம் வகுப்பு, மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தேர்வு முடிவுகளை, மே மாதத்துக்குள் அறிவிக்க வேண்டியுள்ளதால், தேர்வுத் தாள்களை, வேகமாக திருத்த வேண்டிய அவசியம், ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது.

தேர்வுத் தாள்களை மிக கவனமாக திருத்தி, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த, சி.பி.எஸ்.இ., யோசித்தது. இதற்காக, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, பிப்ரவரி மாதத்தில் நடத்துவது பற்றி ஆலோசித்து வருகிறது. இதற்கு, பல பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, பிப்ரவரி மாதத்திலேயே நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை; இது பற்றி ஆசிரியர்கள் உட்பட சம்பந்தப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்டு, அனைவரின்
ஒப்புதலுடன்தான் முடிவு எடுக்கப்படும்' என்றார்.
டிரம்ப் - மோடி சந்திப்பு:விசா பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக, இந்த ஆண்டு ஜனவரியில் பதவியேற்றார், பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபரான டொனால்டு டிரம்ப். 'அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை' என்ற கோஷத்துடன், அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனால், அமெரிக்காவில் வேலை பார்ப்ப தற்காக செல்லும் இந்தியர்களுக்கான, எச் - 1பி விசா முறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. மேலும், சீனாவுடன், டிரம்ப் நிர்வாகம் நெருக்கமாக உள்ளது.

அதனால், முன்னாள் அதிபர், ஒபாமா நிர்வாகத்தின் போது, இந்தியா - அமெரிக்கா இடையே இருந்த நெருக்கமான உறவு தொடருமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண் டுள்ளார். 2 தலைவர்களும், இது வரை இரண்டு முறை தொலைபேசியில் பேசியுள்ளனர். முதல் முறையாக, இன்று நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர்.மோடி - டிரம்ப் சந்திப்புக்கு ஐந்து மணி


நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இரு தரப்புபேச்சு நடக்க உள்ளன.இதைதவிர, மோடிக்கு, இரவு விருந்து அளிக்கிறார் டிரம்ப். அப்போது, இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளனர்.

டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின், வெளி நாட்டு தலைவர் ஒருவருக்கு, முதல் முறையாக விருந்து அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு தலைவர்களும் அதிக நேரம் பேச உள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பயங்கர வாதம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசிக்க உள்ளனர்.

இந்த சந்திப்புகளின்போது, 'விசா' பிரச்னையை, பிரதமர் மோடி முன்னிறுத்துவார் என, பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தசந்திப்பை தொடர்ந்து, அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின், 20 தலைமை செயல் அதிகாரிகளை, மோடி சந்தித்து,முதலீட்டு வாய்ப்பு கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். பின்னர், வாஷிங் டனின் புறநகர் பகுதியான விர்ஜினாவில்





நடக்கும் நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினரை மோடி சந்திக்கிறார்.

'மோடி உண்மையான நண்பர்':

பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில், டிரம்ப், நேற்று சமூதளத்தில் செய்தி வெளியிட் டிருந்தார். அதில், 'வெள்ளை மாளிகைக்கு, பிரதமர் மோடியை வரவேற்க காத்திருக்கி றேன். உண்மையான நண்பருடன் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளேன்' என, டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து, 'தனிப்பட்ட முறையில் வரவேற் றுள்ள டிரம்ப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவருடனான மிகச் சிறந்த சந்திப்புக்காக, காத்திருக்கிறேன்' என, தன் செய்தியில், மோடி குறிப்பிட்டுள்ளார்.

Sunday, June 25, 2017

பிறவாமை அருளும் திருவாரூர்! இறையன்பர்களின் சொர்க்கபுரி
மு.ஹரி காமராஜ்

திருவாரூரில் பிறந்த எவருக்கும் மறுபிறப்பு என்பதே கிடையாது என்பதும், இறுதி காலத்துக்கு பின்னர் திருக்கயிலையை அடைந்து சிவன் சேவடியைத் தொழுவர் என்பதும் ஐதீகம். அதனால்தான், 'பிறக்க முக்தி தரும் தலமிது' என்று திருவாரூர் போற்றப்படுகிறது.



தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் தேவர்களுக்கு உதவிய முசுகுந்த சக்கரவர்த்தி, 'எனக்குப் பரிசாக சோமாஸ்கந்த மூர்த்தியை வழங்கினால், பெரிதும் மகிழ்வேன்' என்று கூறினார். திருமால் வணங்கிய சோமாஸ்கந்தமூர்த்தியைத் தர விருப்பமில்லாத இந்திரன், மூல சிலையைப்போலவே ஆறு சிலைகளை உருவாக்கி, மூல சிலையை எடுத்துக்கொள்ளச் சொன்னார்

முசுகுந்தர், மூல சிலையைக் கண்டுபிடித்து, கூடுதலாக ஆறு சிலைகளையும் சேர்த்து பரிசாகப் பெற்றார். அவை திருநள்ளாறு, திருநாகைக்காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு தலங்களில் வைக்கப்பட்டன. திருவாரூர் கோயில் 'பூங்கோயில்' என்று அழைக்கப்படுகிறது.

கருவறை, 'திருமூலட்டானம்' என்று அழைக்கப்படுகிறது. மூலவர், 'வன்மீகநாதர்' என வணங்கப்படுகிறார். மூலவரைவிட, இங்கு தியாகேசப்பெருமானே சிறப்பாக வணங்கப்படுகிறார். இவருக்கு எதிரே நின்ற நிலையில் நந்தியெம்பெருமான் இருக்கிறார். இது மிக விசேஷமான அமைப்பு.

திருவாரூர் தியாகேசருக்கு, `வீதிவிடங்கன்’, `தியாக விநோதர்’, `செவ்வந்தி தோட்டழகர்’, `செங்கழுநீர் தாமர்’, `அஜபா நடேசர்’ உள்ளிட்ட 108 திருப்பெயர்கள் உள்ளன. இவரை சிறப்பாக தரிசிக்க, சாயரட்சை பூஜைதான் சிறந்தது. திருமூலட்டானம், திரு ஆரூர் அரநெறி, ஆரூர் பரவையுள் மண்டலி என மூன்று பாடல் பெற்ற தலங்களைக் கொண்ட ஊர் திருவாரூர்.



முதல் இரண்டு தலங்களும் திருவாரூர் கோயிலின் உள்ளேயே அமைந்து உள்ளன. பரவையுள் மண்டலி திருக்கோயில் தேரடி அருகே உள்ளது. இந்த ஊரின் பிரமாண்ட கமலாலய திருக்குளம் ஐந்து வேலி பரப்பளவு கொண்டது.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்று சிறப்பாக சொல்லப்படுகிறது. சிதம்பரத்தைவிட திருவாரூர் காலத்தால் முந்தையது என்பதால், எல்லாக் கோயில்களிலும் தேவாரத் திருப்பதிகங்கள் பாடி முடித்ததும், 'திருச்சிற்றம்பலம்' என்று சொல்லி நிறைவு செய்யும் வழக்கம், திருவாரூரில் மட்டும் இல்லை.

மனுநீதிச் சோழன் ஆட்சி செய்த ஊர் திருவாரூர். கன்றினை இழந்த பசுவின் துன்பம் போக்க, தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொல்லத் துணிந்த மனுநீதிச் சோழன், திருவாரூரைத் தலைநகராகக் கொண்டே ஆட்சிசெய்தார்.

சுந்தரரின் தாயார் இசைஞானியார், சுந்தரர், விறன்மிண்ட நாயனார், நமிநந்தி அடிகள், தண்டியடிகள், சேரமான் பெருமான் நாயனார், செருத்துணை நாயனார், கழற்சிங்க நாயனார் என பல நாயன்மார்களோடு தொடர்பு கொண்ட திருத்தலமிது.



நமிநந்தி அடிகள் நீரால் விளக்கேற்றிய தலமிது. சுந்தரர், பரவை நாச்சியாரை மணந்துகொண்ட தலமிது. சுந்தரருக்காக ஈசனே பரவை நாச்சியாரிடம் நடந்து சென்று தூது போன விந்தையும் இந்த ஊரில்தான் நடந்தது. திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணந்துகொண்டு, 'இனி பிரிய மாட்டேன்' என்று சுந்தரர் வாக்களித்தார். பிறகு கொடுத்த வாக்கை மீறி, திருவொற்றியூரைவிட்டுக் கிளம்பியதால், கண்ணை இழந்தார். பிறகு, இழந்த வலது கண் பார்வையை திருவாரூரில்தான் பெற்றார்.

`பஞ்சமுக வாத்தியம்’ எனப்படும் ஐம்முக முழவம், சுத்த மத்தளம், பாரி நாதஸ்வரம் போன்ற அபூர்வ இசைக்கருவிகள் இந்தக் கோயிலில் உள்ளன. நாட்டியத்தையும், இசையையும் வளர்த்த சிறப்பான கோயில் இது. சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீக்ஷிதர் ஆகிய மூவரும் வாழ்ந்து பாடிய புண்ணியத் தலமிது என்றும் திருவாரூர் போற்றப்படுகிறது.

திருவாரூர் தேர் அழகு, திருவிரிஞ்சிபுரம் மதிலழகு என்று கூறுவதைப்போல திருவாரூரில் தேர் அழகு மட்டுமல்ல, பிரமாண்டமானதும் கூட.



ஆரூரில் பிறவாத பேர்களும் முக்தி அடைய விரும்பினால், திருவாரூர் சென்று தியாகேசப் பெருமானை அவசியம் தரிசித்து வணங்க வேண்டும். கலை, கலாசாரத்தின் பெட்டகமாக விளங்கும் இந்த திருவாரூர், தமிழகத்தின் பொக்கிஷமாகவும் விளங்கிவருகிறது.
பெருமாள் கோயில்களில் சடாரி வைப்பதன் தத்துவம் என்ன?

BHUVANESHWARI K

பெருமாள் கோயில்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பார்கள். பார்ப்பதற்கு கிரீடம்போல் இருப்பதால், நம் தலையில் கிரீடம் வைப்பதாக நாம் நினைத்துக்கொள்வோம். உண்மையில் சடாரி என்பது, கிரீடம் போன்ற ஒரு பீடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் பகவானின் பாதங்களையே குறிக்கும். இதன் பின்னணியில் வைகுண்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் அமைந்திருக்கிறது. முதலில், அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக ராமாயண காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.





தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற, மரவுரி தரித்து வனவாசம் சென்றார் ஶ்ரீராமன். அவருடன் கணவனைப் பிரிய மனமில்லாத சீதையும், அண்ணனுக்கு சேவை செய்வதையே தன் பிறவிப் பயனாகக் கருதிய லட்சுமணனும் உடன் சென்றனர். தம்மை நாடி வருவோரின் பாவங்களைத் தீர்க்கும் கங்கை நதியின் கரையை அடைந்த ராமபிரானை வரவேற்ற குகன், தன்னுடைய பரிவாரங்களுடன் அங்கே இருக்கிறான்.

என்றுமே மனதைச் சமநிலையில் வைத்திருக்கும் ராமபிரானின் உள்ளத்தில் அன்று குழப்பமே மிஞ்சி நின்றது. தனக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை எப்படிச் சமாளிப்பது என்பதில் ஏற்பட்ட குழப்பம்தான் அது. தர்மசங்கடத்துக்குக் காரணமாக அமைந்தது, பரதனின் வரவும், கண்ணீர் பெருக அவன் நின்ற நிலையும்.

தசரதன், தான் கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்களைக் காப்பதற்காகத் தன் உயிரினும் மேலான ராமனை கானகம் அனுப்பினான். இதை அறிந்த பரதன், தன் தமையன் வனம் சென்றதற்குத் தானும் காரணமாக ஆகிவிட்டதை எண்ணி வருந்தினான். அயோத்தியை ஆள்வதற்கு தமையனுக்கே உரிமை உள்ளது என்றும், தனக்கு அரியாசனம் ஏற்க விருப்பம் இல்லை என்றும் கூறி, தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வந்தான்.

'எண்ணில் கோடி இராமர்கள் என்னிலும் அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ' என்று கோசலையின் வாயிலாகக் கம்பன் பெருமைப்படுத்திய பரதன், ராமபிரான் திரும்பி வந்து அயோத்தியின் சிம்மாசனத்தை ஏற்க வேண்டும் என்று பிரார்த்தித்தான்.

ஆனால், பரதனின் வேண்டுகோளை மறுத்த ராமபிரான், பரதன் சொல்வதுபோல் தான் அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீறியதுபோல் ஆகும் என்று மறுத்துவிட்டார். அதே நேரம், பரதனுக்கும் நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லை. சிக்கலான இந்த நிலைக்கு ஒரு தீர்வாகத்தான், பரதன் ராமபிரானின் பாதுகைகளைப் பெற்றான். தன் தலை மீது வைத்து அயோத்தி எல்லையில் இருந்த நந்திகிராமத்துக்கு வந்தான். ராமன் துறந்த திருமுடியை சிம்மாசனத்தின் மீது வைத்தான். அதன் மேல் ராமபிரானின் திருவடியை வைத்து பட்டாபிஷேகம் செய்து, ராமபிரானின் சேவகனாக ஆட்சிசெய்து வந்தான்.



'ராமபிரான் அவதார புருஷராக இருந்தாலும்கூட, தேவர்களுக்கு நிகரான சூரியகுல அரசர்கள் அமர்ந்து ஆட்சிசெய்த சிம்மாசனத்தில், பாதுகைகளையா வைப்பது? ராமபிரானின் வேறு ஏதேனும் ஒரு பொருளைப் பெற்று வைத்திருக்கலாமே? மேலும், பரதன் பாதுகைகளை அரியணையின் மீது நேரடியாக வைக்காமல், அவரின் திருமுடியை வைத்து அதன்மேல்தான் திருவடிகளை வைத்தான். இது எப்படிச் சரியாகும்?' என்ற கேள்வி எழுவது எல்லோருக்கும் இயல்புதான்.

இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதுபோல் அமைந்ததும், வைகுண்டத்தில் நடைபெற்றதுமான ஒரு சம்பவத்தை இங்கே பார்ப்போம்.

ஒருமுறை வைகுண்டத்தில் மகாவிஷ்ணு சயனம்கொள்வதற்காகச் சென்றார். எப்போதும் இல்லாத வழக்கமாக, அவர் தன் பாதுகைகளுடனேயே ஆதிசேஷன் மீது சயனம் கொண்டார். அந்தச் சமயம் முனிவர்கள் வந்திருக்கும் செய்தியைக் கேட்டு, அவர்களைக் காண தன் பாதுகைகளை ஆதிசேஷன் மீது வைத்துச் சென்றார்.

அவர் சென்றவுடன் ஆதிசேஷன் மீது இருந்த திருமுடியும், சங்கும், சக்கரமும் அந்த பாதுகைகளைத் தூற்றத் தொடங்கின. `பகவானின் திருமுடியை அலங்கரிக்கும் நான் இருக்கும் இடத்தில் நீ எப்படி இருக்கலாம்?’, `பாதங்களை அலங்கரிக்கும் நீ ஆதிசேஷன் மீது அமர்வதற்கு அருகதை அற்றவன்’ என்றெல்லாம் கூறின. இன்னும் கடினமான வார்த்தைகளால் தூற்றவும் தொடங்கின.

எவ்வளவுதான் பொறுத்துக்கொள்வது? ஒரு கட்டத்தில் கோபம்கொண்ட பாதுகைகள், 'பகவானை தரிசிக்கவரும் ரிஷிகளும், முனிவர்களும் என்னையே வணங்குகின்றனர். நீங்கள் அவரது கரத்தில் இருந்தாலும் உங்களை யாரும் வணங்குவதில்லை' என்று கூறின. ஆனாலும், அவை மூன்றும் விடுவதாக இல்லை. 'கௌரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் நீ இருக்கக் கூடாது' என்று கூறின.

இதைக் கேட்டு மனம் நொந்த பாதுகைகள் விஷ்ணுவிடம் முறையிட்டன. இதைக் கேட்ட பகவான் புன்னகைத்தவாறே, 'அனைத்தும் நாம் அறிவோம். எனது பார்வையில் எல்லாம் ஒன்றேயாகும். இதை அறியாத சங்கும், சக்கரமும், திருமுடியும் இதற்கான பலனை ஒருநாள் அனுபவிக்கும்' என்று கூறினார்.



இதன் பலனாகவே திரேதா யுகத்தில் ஶ்ரீராமாவதாரத்தில் சங்கும் சக்கரமும் பரத, சத்துருக்ணனாகப் பிறந்தன. பாதுகைகளை இழிவுபடுத்திய அவை, தமது இந்தப் பிறப்பில் பாதுகைகளைத் தம் தலையில் சுமந்துசென்றன. மேலும், அந்தப் பாதுகைகளை திருமுடி மீது வைத்ததற்கு இதுவே காரணமாக அமைந்தது.

இந்தச் சம்பவத்தை நமக்கு நினைவுபடுத்தவே பெருமாள் கோயில்களில் நமக்கு சடாரி வைக்கப்படுகிறது.

இறைவனுக்கு முன்னே அனைவரும் ஒன்றே. அவன் சந்நிதியில் பணக்காரன் - ஏழை; உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடுகள் இல்லை என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே இப்படி 'சடாரி' வைக்கப்படுகிறது.

டாஸ்மாக் : ஆண்களுக்கு வேண்டும்... பெண்களுக்கு வேண்டாம் - ஒரே இடத்தில் போராட்டம்!




திருவள்ளூர் : டாஸ்மாக் கடை வேண்டும் என்று ஆண்களும், வேண்டாம் என்று பெண்களும் திருவள்ளூரில் எதிர் எதிரே ஒரே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழகமெங்கும் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. இவற்றிற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது திருப்பூர் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டமும், அதில் போலீஸ் அதிகாரிகள் கட்டவிழ்த்து விட்ட தாக்குதல்களும்.

இதனையத்து தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்கள் விறுவிறுப்படைந்தன. திருப்பூர் மாவட்டம் கஞ்சம்பாளையத்தில் டாஸ்மாக் 12 மணிக்கு திறக்கப்பட்டாலும், 24 மணி நேரமும் அங்கு மது விற்பனை ஜோராக நடைப்பதால் பெண்களும், குழந்தைகளும் பாதிப்படைவதாக கூறி இன்று பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

மாணவன் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே படூர் கிராமத்தில் அமைந்துள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் கடையை அடித்து நொறுக்கினர். இந்நிலையில் மீண்டும் மதுக்கடையை திறக்க கூடாது என இரண்டாம் வகுப்பு படிக்கும் ஆகாஷ் என்ற மாணவன் குடியை விடு, படிக்க விடு! என்ற பதாகையை ஏந்தியபடி பள்ளி சீருடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டான்.

மதுவால் வாழ்க்கைக்கு உலை

ஏற்கனவே இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட கடைகளில் மாற்று இடங்களில் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்ப டாஸ்மாக் கடைகளை சூறையாடும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். மதுப்பழக்கத்திற்கு ஆண்கள் அடிமையாகி வருவதால் ஏழைக்குடும்பத்தினரின் வாழ்க்கைக்கு உலை வைக்கப்படுவதாக போராட்டதில் ஈடுபடுபவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆண்கள் ஆதரித்து போராட்டம்

இந்நிலையில் ஊத்துக்கோட்டை அடுத்த மெய்யூரில் மதுக்கடை அமைக்கக் கோரி ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடும் ஆண்களுக்கு அருகில் மதுக்கடை கூடாது என்று பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் போராட்டம் நடத்தியதால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

source: oneindia.com
Dailyhunt
ரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட சுவாதியும்... புழல் சிறையில் வயரை கடித்த ராம்குமாரும்

oneindia
சென்னை: ஐடி நிறுவன பெண் ஊழியர் சுவாதியின் மரணம் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு கொடூர சம்பவம். கொல்லப்பட்ட விதமும், அந்த கொலையை துப்புதுலக்கவும், கொலையாளியை பிடிக்கவும் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையும் ஊடக உலகில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள்.

சுவாதி மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. ஆனால் சுவாதியின் கொலையும், கொலையாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமாரின் மரணமும் இன்றைக்கும் பலரது மனதில் சந்தேகங்களை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.

ஜூன் 26, 2016 ஆண்டு வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொல்லப்பட்டார் சுவாதி. 8 தனிப்படை போலீசார் தமிழகம் முழுவதும் சல்லடை போட்டு தேடியதில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரை போலீஸ் கைது செய்தது.

கழுத்தறுபட்ட நிலையில் ராம்குமார் கைது செய்யப்படவே, சிகிச்சைக்குப் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார் ராம்குமார். ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுவாதி கொலையும், ராம்குமார் கைதும் ஊடகங்களுக்கு நல்ல தீனியாக அமைந்தன. 85 நாட்கள் கழிந்து செப்டம்பர் 19ஆம் தேதி புழல் சிறையில் மின்சார வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை கூறியது. சுவாதி கொலை போலவே ராம்குமார் மரணமும் புரியாத புதிராகவே முடிந்து போனது.

சுவாதி கொலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இறந்து போனதால் வழக்கை முடித்து வைக்கக்கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்ற குற்றவியல் நடுவர், சுவாதி கொலை வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

சுவாதி கொலை சம்பவத்துக்கு பிறகு ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக் களை கட்டாயம் பொருத்த வேண்டுமென நீதிபதி என்.கிருபாகரன் விடுத்த வேண்டுகோளை ஏற்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தார். அதன்படி அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறும் ராம்குமாரின் உறவினர்கள், சுவாதி, ராம்குமார் மரணங்களை தேசிய புலனாய்பு அமைப்பினர் விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். சுவாதியின் மரணத்தில் உள்ள மர்மமுடிச்சுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படத்திற்கும் தடை கோரியுள்ளனர்.

சுவாதியை ராம்குமார் ஒருமுறை கூட நேரில் பார்த்ததேயில்லை என்பது அவரது வழக்கறிஞர் ராம்ராஜின் வாதம். அனைவரையும் போல சுவாதியை ஃபேஸ்புக்கில் பார்த்துதான் தெரிந்து கொண்டார். சுவாதி கொலையில் ராம்குமார் நிரபராதி என்று நிரூபிப்போம் என்றும் கூறியுள்ளார் ராம்ராஜ்.

சுவாதி கொலை சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்து விட்டது. கொலைக்கான காரணம் என்ன என்பது மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டது. அதேபோல ராம்குமாரின் மரணம் பற்றிய புதிரும் அவிழ்க்கப்படாமலேயே உள்ளது. சந்தேக கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். விடை கிடைக்குமா?

"உங்க பொண்ணை நம்ம ஸ்கூல் டாய்லெட்டைப் பயன்படுத்த சொல்வீங்களா சார்?" - ஆசிரியருக்கு மாணவியின் கேள்வி!
வி.எஸ்.சரவணன்

க.சதீஷ்குமார்




கற்றல் என்பது உரையாடல்களில் இருந்துதான் தொடங்குகிறது என்பார்கள். ஆனால், நமது கல்விச் சூழல், ஆசிரியர் கூறுவதை மாணவர்கள் கேட்கும்விதமாவே உள்ளது. இது, ஒரு வழிப்பாதை போன்றது அல்லவா. மாணவர்கள், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் இடமாகப் பள்ளிக்கூடம் இருந்தால்தான் மகிழ்ச்சியோடு கற்பார்கள். பள்ளி என்பது மாணவர்கள் கல்வி கற்கும் இடம் மட்டுமல்ல; ஆசிரியர் எனும் வழிகாட்டியை, நண்பர்கள் எனும் பெரும் உறவைப் பெறும் இடமும்கூட. ஆசிரியர் வழிகாட்டியாக இருப்பதோடு, தோழமையுடன் நடந்துகொண்டால், பள்ளியைவிட இனிமையான இடம் வேறு என்ன இருக்கப்போகிறது? ஆனால், ஆயிரம் ஆசிரியர்களில் தோழமையோடு பழகும் ஆசிரியர்கள் மிகச் சொற்பமானவர்களே. அவர்களில் ஒருவர்தான், மணிமாறன்.



திருவாரூர் மாவட்டம், மேல ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர். இந்தப் பள்ளியில் மாணவர்களின் கருத்துகளை அறிந்துகொள்ள ஒரு பெட்டி இருக்கிறது. அதைப் பற்றிய பேச்சுடன் ஆரம்பித்தார் மணிமாறன்.

"மாணவர்கள் நினைத்தவற்றை ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சூழல் வேண்டும். அதற்கான தொடக்கப்புள்ளியே இந்தக் கருத்துச் சுதந்திரப் பெட்டி. 'மனித உரிமைக் கல்வி நிறுவனம்' நடத்திய பயிற்சி ஒன்றில் பங்கேற்றபோது இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். பல பள்ளிகளிலும் இருக்கும் வழக்கமான புகார் பெட்டி போன்றதல்ல. இது, தங்கள் உணர்வுகளை மாணவர்கள் பகிர்ந்துகொள்ளும் பெட்டி. பள்ளிக்குள் தனக்கு ஏற்படும் மகிழ்ச்சி, அவமானம், சோகம், பள்ளியின் குறைபாடு, ஆசிரியர் பற்றி என எதுவாக இருந்தாலும் இந்தப் பெட்டியில் எழுதிப் போடலாம். தன் அடையாளம் இல்லாமலும் கடிதங்களைப் போடலாம். இதை மனித உரிமைக் கல்வி நிறுவனத்தில் பயிற்சிபெற்றதால் நான் மட்டுமே திறக்கலாம். இதில் இடப்படும் கருத்துகளை எவ்வாறு எதிர்கொள்வது எனப் பயிற்சி பெற்றிருக்கிறேன். அதில், முக்கியமான சிலவற்றைச் சொல்கிறேன்.

பெட்டியிலிருந்து எடுக்கப்படும் கடிதத்திலுள்ள கருத்துகளை விருப்பு, வெறுப்பின்றி அணுக வேண்டும், யார் எழுதியிருப்பார் என்கிற ஆராய்ச்சி கூடாது. எழுதியவரின் அடையாளம் தெரிந்தாலும், பொதுவெளியில் காட்டிக்கொள்ளக் கூடாது. கடிதம் எழுதியவரைத் தனிமைப்படுத்தக் கூடாது. சமூக நோக்கத்துடன் அந்தக் கருத்தை அலச வேண்டும். அந்தக் கடிதத்தை சக ஆசிரியர்களிடம் காண்பிக்கக் கூடாது. தேவையெனில் எழுதியிருக்கும் கருத்துக் குறித்து விவாதிக்கலாம். எழுதப்பட்டிருக்கும் பிரச்னைக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பெட்டியில் வந்த கருத்துகள் என்னையே செதுக்கிக்கொள்ளவும் பயன்படுகிறது.

உதாரணமாக, எங்கள் பள்ளிக் கழிவறை உடைந்து சரியான பராமரிப்பின்றி இருந்தது. அது குறித்து நானும் அக்கறையின்றி இருந்தேன். ஒரு நாள் இந்தப் பெட்டியில் ஒரு கடிதம் இருந்தது. 'சார், நம்ம ஸ்கூல் டாய்லெட் ரொம்ப மோசமாக இருக்கு. அதைப் பயன்படுத்தவே பயமாவும் அருவெறுப்பாகவும் இருக்கு. அதை நீங்க கவனிச்சு இருக்கீங்களா? உங்க பொண்ணை அந்த டாய்லெட்டைப் பயன்படுத்த விடுவீங்களா? அதனால், ஸ்கூல் டாய்லெட்டை சரி பண்ணிக்கொடுங்க ப்ளீஸ். - இப்படிக்கு கீழ்படித்த மாணவி' என்று எழுதியிருந்தது. அதைப் படிச்சதும் பெரும் அதிர்ச்சி. என் மகளைக் குறிப்பிட்டு எழுதியிருந்தது இன்னும் நெருக்கமாக உணரவைத்தது. இத்தனை நாளாக கவனிக்காமல் இருந்துவிட்டோமே என்கிற குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. உடனே, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வலியுறுத்தி, கழிவறையைப் புதுப்பித்தோம். ஒருவேளை இந்தக் கருத்துச் சுதந்திரப் பெட்டி இல்லாதிருந்தால், இந்த விஷயம் எனக்குப் புரிஞ்சே இருக்காது.



அடுத்து, ஒரு மாணவன் வீட்டுப் பாடம் எழுதலை. அவன் வகுப்பு ஆசிரியர் தண்டனை கொடுத்திருக்கார். இது நடந்து சில நாள்கள் கழித்து, ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதைப் படிக்கும்போதே நடுங்கிட்டேன். 'சார், நான் அன்னிக்கு வீட்டுப் பாடம் எழுதாது தப்புதான். ஆனா, அன்னிக்கு முதல் நாள் இரவு எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயங்கரச் சண்டை. அம்மாவை அப்பா கடுமையா அடிச்சுட்டு வெளியே போயிட்டாரு. அம்மா அழுதுட்டே இருந்தாங்க. பக்கத்து வீட்டிலே இருந்தவங்க 'ஏதாச்சும் பண்ணிக்காதே'னு அம்மாகிட்ட சொன்னதைக் கேட்டேன். விடியற வரைக்கும் தூங்கவே இல்லை. அதனாலத்தான் வீட்டுப் பாடம் செய்யலை'னு எழுதியிருந்தான். அந்த மாணவனிடம் பேசித் தைரியம் சொன்னேன். அவன் பெற்றோரிடமும் பேசினேன்.

இப்படிப் பல கடிதங்கள், 'என் அப்பா வெளியூரில் இருக்கார். ரெண்டு நாளுக்கு ஒரு தடவை பேசுவார். நேத்துப் பேசும்போது, அம்மா போன்ல பேலன்ஸ் தீர்ந்துட்டதால நான் அப்பாவோடு பேசவே முடியல' என ஒரு மாணவி எழுந்திருந்தாள். உடனே என் போனிலிருந்து அவள் அப்பாவை அழைச்சுப் பேசவெச்சேன்.

சுவாரஸ்யமான இன்னொரு கடிதம் இருக்கு. 'சார், நம்ம ஸ்கூல்ல இருக்கிற பீரோ ரொம்ப பழசாயிட்டு. நாங்க பக்கத்துல போகும்போது எங்க மேல விழுந்துட்டா என்ன ஆகுறது? நீங்கதான் அநாவசியமா போலீஸ் ஸ்டேசன் போகணும்' என எழுதியிருந்தது. படிச்சு சிரிச்சாலும், உடனடியா அந்த பீரோவை மாற்றவும் முயற்சி எடுத்தேன். 'நான் இப்போ எட்டாவது படிக்கிறேன் சார். ஆறாவது படிக்கும்போது சில பொருள்களைத் திருடியிருக்கேன். இப்போ அப்படி செய்யறதில்லை. ஆனால், இப்பவும் நான் திருடுறதா என் ஃப்ரெண்ட்ஸ் சொல்றப்ப கஷ்டமா இருக்கு'னு ஒரு கடிதம். மாணவிகள் தங்களின் தனிப்பட்ட பிரச்னைகளையும் எழுதியிருக்காங்க. என் மனைவியும் இதே பள்ளியில்தான் வேலை செய்யறாங்க. ஒரு கடிதம் தனி கவரில் இருந்தது. கவர் மீது 'இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க வேண்டாம். டீச்சரிடம் கொடுக்கவும்' என்று இருந்தது. என் மனைவியிடம் கொடுத்தேன். ஒரு மாணவி, மாதவிலக்கு பற்றிய சந்தேகத்தை எழுதியிருந்ததாக என் மனைவி கூறினார்.



ஒவ்வொரு மாணவருக்குள்ளும் சொல்வதற்கு எவ்வளவோ செய்திகள் இருக்கு. என் மீது புகார் சொல்லியும் கடிதங்கள் வந்திருக்கு. அந்த விஷயங்களில் என்னைச் சரிசெய்துகிட்டேன். மாணவர்களை இன்னும் நெருக்கமாக நேசிக்க, இந்தப் பெட்டி உதவுகிறது. எல்லாப் பள்ளிகளிலும் இதுபோன்ற கருத்துச் சுதந்திரப் பெட்டி இருக்கணும்" என்று நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் ஆசிரியர் மணிமாறன்.

இதுபோன்ற கடிதங்களில் ஒன்றில், 'தீபாவளிக்கு டிரெஸ் எடுக்கவில்லை' என்று எழுதியிருந்ததைப் பார்த்து, பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் உடை எடுத்துத் தந்திருக்கிறார் மணிமாறன். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உணர்வுகளை மதிக்கும் ஆசிரியர்கள் பணி தொடரட்டும்.
எமிரேட்ஸ் இளவரசிகளுக்கு தண்டனை விதித்து அதிரடி காட்டிய பெல்ஜியம் நீதிமன்றம்!

அஷ்வினி சிவலிங்கம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இளவரசிகள் எட்டு பேருக்கு மனித உரிமை மீறல் குற்றத்துக்காக சிறைத் தண்டனை வழங்கி அதிரடி காட்டியுள்ளது பெல்ஜியம் நீதிமன்றம்.



தற்போது அபுதாபியை ஆளும் அல்-நஹியான் அரசக்குடும்பத்தைச் சேர்ந்த ஷிக்கா ஹம்டா அல்-நஹியான் என்னும் பெண்ணும் அவரின் ஏழு மகள்களுக்கும்தான் பெல்ஜியம் நீதிமன்றம் சிறை வழங்கியுள்ளது. அதுவும் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடரப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

பெல்ஜியத்தில் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பணியாட்களை மனிதநேயமற்று நடத்திய குற்றத்துக்காக எட்டு இளவரசிகளுக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 15 மாதம் சிறைத் தண்டனையுடன் 185,000 டாலர் அபராதம் செலுத்தவும் பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒன் பிளஸ் 5; சென்னையில் புக்கிங் படுஜோர்!

பிரேம் குமார் எஸ்.கே.

கே.கணேசன்

சீனா மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஒன் பிளஸ், அண்மையில் அதன் புதிய தயாரிப்பான ஒன் பிளஸ் 5 மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது.




இதுவரை இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் மூலமாக மட்டும் விற்பனை செய்து வந்த அந்நிறுவனம், இந்த முறை ஒன் பிளஸ் 5 மாடலுக்காகாவே பிரத்யேகமான புதிய கடைகளை சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் அமைத்திருக்கிறது.

இந்நிலையில், சென்னை மீனம்பாக்கத்தில் இதற்காக ஒரு கடை அமைக்கப்பட்டிருந்தது. இன்று மதியம் மூன்று மணி முதல் இந்த கடை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பலர் வரிசையில் காத்திருந்தனர். புதிய மாடல் போன்களை வரிசையில் நின்று வாங்கியும் முன்பதிவும் செய்து சென்றனர். ஒன் பிளஸ் 5 மாடல் விற்பனை கடந்த 22-ம் தேதி இந்தியாவில் தொடங்கியது. ஆனால், சென்னையில் இதன் விற்பனை இன்றுதான் தொடங்கியது.
நீடிக்கும் கத்தார் பிரச்னை... சுஷ்மா ஸ்வராஜ் முக்கியத் தகவல்!

ர.பரத் ராஜ்

கத்தாரில் அடிப்படை பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், 'தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து கத்தாரில் இருக்கும் இந்தியர்களின் நலத்தை பேணுவோம்' என்று கூறியுள்ளார்.



கத்தார், தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்கின்றது என்று குற்றம் சாட்டி சவூதி அரேபியா, எகிப்து போன்ற அரபு நாடுகள் அந்நாட்டுடனான தூதரக உறவை துண்டித்துக் கொண்டன. மேலும், கத்தாருக்கு உணவு பொருள்கள் சப்ளை செய்வது மற்றும் விமானங்கள் அனுப்புவதையும் பிற அரபு நாடுகள் நிறுத்திக் கொண்டன. இதனால், கத்தாரில் பெரும் குழப்பம் சூழப் போகிறது என்று யூகிக்கப்பட்டது. இருப்பினும் துருக்கி போன்ற நாடுகளின் உதவியுடன் நிலைமையை சமாளித்து வருகிறது கத்தார். அங்கு கிட்டத்தட்ட 7 லட்சம் இந்தியர்கள் இருப்பதால், இந்திய அரசும் கத்தார் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இதையடுத்து, கத்தாரில் இருக்கும் இந்தியர் ஒருவர் சுஷ்மா ஸ்வராஜுக்கு, 'நான் கத்தாரில் இருக்கிறேன். இங்கு நிலைமை இன்னும் மோசமாகப் போகிறது. எனவே, இங்குள்ள 7 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களை பத்திரமாக மீட்க இந்திய அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது' என்று ட்விட்டரில் மூலம் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு சுஷ்மா, 'தயவு செய்து கவலைப்படாதீர்கள். நமது நாட்டைச் சேர்ந்த அனைவரின் பாதுகாப்பையும் நலத்தையும் உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அங்கிருக்கும் தூதருடன் நாங்கள் தொடர்பில்தான் இருக்கிறோம்' என்று பதில் அளித்துள்ளார்.
ரஜினி, அஜித், விஜய் இணைந்தால் அரசியலில் மாற்றம் வரும்: புதுசு புதுசா ஐடியா கொடுக்கும் எஸ்.வி.சேகர்!




ரஜினி அரசியலுக்கு வருகிறாரா? இல்லையா? என்று இன்னும் அவரே அறிவிக்கவில்லை. அதற்குள் நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.

இது ஒரு பக்கம் இருக்க, ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் இணைந்து அரசியலுக்கு வந்தால், தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நடிகர் விஜயின் பிறந்தநாளை ஒட்டி, “வருங்கால முதல்வருக்கு வாழ்த்துக்கள்” என்று வாழ்த்து செய்தி அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் நடிகர் எஸ்.வி.சேகர்.

இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த எஸ்.வி.சேகர், ரஜினி, விஜய், அஜித் ஆகிய மூன்று பெரும் இணைந்தால், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறி இருக்கிறார்.

மேலும், அரசாங்க பணத்தையோ, மக்கள் பணத்தையோ திருட வேண்டிய இடத்தில் ரஜினி இல்லை. எனவே அவர் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு?

தங்களை சினிமா இயக்குநர் என்று சொல்லிக்கொள்ளும் சிலரே, ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என ஊளையிடுகிறார்கள். அவர்கள் கட்சிக்கு பணம் எங்கேயிருந்து வந்தது என்பதை சொல்வார்களா?

நதிநீர் இணைப்பை ஆரம்பித்தால் 1 கோடி ரூபாய் கொடுப்பதாக சொன்ன ரஜினியிடம், இப்போதே ஒரு கோடி ரூபாயை கேட்கும் அய்யாக்கண்ணு, மீதி பணத்தை போட்டு அந்த திட்டத்தை நிறைவேற்றுவாரா?

ரஜினியை பார்க்க வேண்டும். அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு போய்விட்டு, அதன் பிறகு எதையாவது கூறுவதா?

ரஜினி அரசியலுக்கு வருவார். அவர் கிங்காக வருகிறாரா? கிங் மேக்கராக வருகிறாரா? என்று தெரியாது. அவர் விஜய்யையும், அஜித்தையும் அழைத்து பேச முடியும்.

நாம் மூவரும் இணைந்து செயல்படலாம் என்று கூற முடியும். நான் வழிகாட்டுகிறேன், எனக்கு பிறகு நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூற முடியும்.

அவர்கள் மூவரும் இணைந்து செயல்பட்டால் நல்லாட்சி கொடுக்க முடியாதா என்ன? நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்?

சொந்த பணத்தில் அரசியல் நடத்த வருபவர்களை பார்த்து கேள்வி கேட்க மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
Dailyhunt
ஆம்’ என்கிறார் அமைச்சர்... ‘இல்லை’ என்கிறார் செயலாளர்...! என்னதான் நடக்கிறது பால் கலப்பட விவகாரத்தில்?

கே.பாலசுப்பிரமணி




"தனியார் பால் நிறுவனங்கள், பாலில் உயிருக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்களைக் கலக்குகிறார்கள்" என்று கடந்த மே மாதம் 24 ஆம் தேதி அதிரடி குண்டைத் தூக்கி வீசினார்பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இது தமிழகத்தையே அதிர வைத்தது. ஆனால், எந்த நிறுவனத்தின் பாலில் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை அமைச்சர் சொல்லவில்லை.


புனே ஆய்வு நிறுவனம் மறுப்பு

பொத்தாம், பொதுவான அவரது அதிரடிக்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். எந்த நிறுவனம் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர். ஆனால், இதுவரை அவர் அது குறித்து வாய் திறக்கவில்லை.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் ஒரு அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டார். "பால் கலப்படம் என்பது உண்மைதான். புனேவுக்கு பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறோம்" என்றார். ஆனாலும், அதிலும் அமைச்சருக்கு சறுக்கல்தான். புனே ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து, "எங்களுக்கு தமிழக அரசிடம் இருந்து பால் மாதிரி எதுவும் சோதனைக்காக வரவில்லை" என்று கூறி அமைச்சரை அதிர வைத்தார்கள்.

ராஜினாமா நாடகம்

உச்சகட்டமாக, "பாலில் கலப்படம் இருப்பது உண்மைதான். நான் அதை நிரூபிக்கத் தவறினால், பதவியை ராஜினாமா செய்யத் தயார்" என்று அறிக்கை விட்டார். இந்த அதிரடி அறிக்கைக்குப் பின்னர், பால் கலப்படம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சைலண்ட் ஆகிவிட்டார். தொடர்ந்து பால் கலப்படம் என்று கூறி வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் முதல்வர் பழனிசாமி, "எதையும் ஆதாரம் இல்லாமல் பேசி மாட்டிக்கொள்ளாதீர்கள்" என்று அறிவுறுத்தினாராம். பால் கலப்பட விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரிய பிரகாசம் என்ற வழக்கறிஞர் பொது நல வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் கடந்த 19 ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில், "2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2017 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழகம் முழுவதும் 886 பால் மாதிரிகள் எடுத்துச் சோதனை செய்யப்பட்டது. அதில் தண்ணீர் மற்றும் காய்கறி கொழுப்பு கலந்து விற்பனை செய்ததாக 132 மாதிரிகளில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. உயிருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய கலப்படம் எதுவும் கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறைச் செயலாளர் சொல்லி இருக்கிறார். தரம் குறைந்த பால் மட்டுமே விற்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ராஜேந்திர பாலாஜிக்கு அதிகாரம் இல்லை

தவிர பால் கலப்படம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது சுகாதாரத்துறையின் கீழ் உள்ள உணவு பாதுகாப்பு அமைப்புதான். உணவுப் பாதுகாப்புத்துறையின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பால் உள்ளிட்ட உணவுப் பொருள்களை தொடர்ந்து மாதிரிகள் எடுத்துச் சோதனைகள் செய்து வருகிறார்கள். கலப்படம் இருந்தால், நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். பால் வளத்துறை அமைச்சர் என்ற முறையில், பால் கலப்படம் குறித்து அவருக்கு எந்தத் தகவல்களும் தெரிவிக்கப்படுவதில்லை. ஆனால், இதெல்லாம் தெரியாமலேயே அதிரடி அறிக்கைகள், பேட்டிகள் கொடுத்து ராஜேந்திரபாலாஜி மாட்டிக்கொண்டார். பால் கலப்படம் குறித்து சுகாதாரத்துறைச் செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர்தான் பதில் அளிக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதில் இருந்தே இது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. எதற்காக திடீரென்று ராஜேந்திர பாலாஜி பால் கலப்படம் என்று அறிவித்தார் என்பது பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

உண்மை இதுதான்

உண்மையில் இதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார் தென்மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஊரைச் சேர்ந்த ஒரு தனியார் பால் நிறுவனம், ஆவினுக்கு இணையாக தமிழகம் முழுவதும் பால் விற்பனையில் ஈடுபடுகிறது. அந்த நிறுவனத்துக்கும் அமைச்சருக்கும் இடையே எழுந்த மோதல்தான் இந்த அளவுக்கு வந்து நின்றிருக்கிறது என்கிறார்கள். எனினும் அமைச்சரின் அதிரடிக்கு அந்த நிறுவனம் பணியவில்லை. "நாங்கள் எந்தவித கலப்படமும் இல்லாமல் பால் விற்கிறோம். முடிந்தால் அமைச்சர் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும்" என்று சொல்லிவிட்டு, அமைதியாக இருந்து விட்டார்கள். இப்போது அமைச்சர் பேசியது போல பாலில் உயிருக்கு ஆபத்தான ரசாயனங்கள் இல்லை என்று நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப்பட்டு விட்டது. சொன்னபடி ராஜினாமா செய்வாரா அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்று பல்வேறு மட்டத்திலும் நெருக்கடி எழுந்துள்ளது.
மனுக்கள் அளித்தே பள்ளியை சீராக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்!

ANANDARAJ K




"மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதோடு ஓர் ஆசிரியரின் கடமை முடிந்துவிடுவதில்லை. நல்ல குடிமக்களை உருவாக்குவதிலும் பெரிய பொறுப்பு இருக்கிறது என்பது என் எண்ணம். ஆசிரியர்கள் செய்யும் நல்ல விஷயங்கள், மாணவர்கள் மனதில் நன்றாகப் பதிந்து, நாம் சொல்லாமலே அவர்களைச் செய்யவைக்கும். அதனால்தான் என்னால் முடிந்த சிறுசிறு சமூக விஷயங்களைச் செய்துவருகிறேன்" என அடக்கமாகப் பேசுகிறார், ஆசிரியர் சாந்தகுமார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகிலுள்ள சானார்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர். சலிப்பின்றி மனுக்களைக் கொடுத்து பள்ளியின் தேவைகளைப் பெறுவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகத் தேவைப்படுவோருக்கான உதவிகளைப் பெற்றுத் தருவது, மாணவர்களுடன் சேர்ந்து விதைப்பந்துகளை உருவாக்குவது என இவரது சமூக அக்கறை நீள்கிறது.



"கும்பகோணம் தீ விபத்து சம்பவம் என் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்திச்சு. நாம் வேலை செய்யும் இடத்தில் ஒரு குழந்தைக்குக்கூட சின்ன விபத்து நடந்துடக்கூடாதுனு உறுதியாக இருந்தேன். சில வருஷங்களுக்கு முன்னாடி, பள்ளிக்குள்ளே இருந்த டிரான்ஸ்ஃபார்மரில் அடிக்கடி தீப்பொறி வந்துட்டு இருந்துச்சு. பள்ளிக்கு மேலாக உயரழுத்த மின் கம்பியும் இருந்துச்சு. இது எந்த நேரத்திலும் மாணவர்களுக்கு ஆபத்தை உண்டாக்கலாம்னு நினைச்சேன். கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தொடர்ச்சியாக மனுக்களைப் போட்டு இரண்டையுமே வேறு பகுதிக்கு மாற்றினேன். பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் ஒரு மூடாத கிணறு இருந்துச்சு. அதைச் சுற்றி இரும்புத் தடுப்புகள் அமைக்க வைத்தேன்'' என்கிறார் சாந்தகுமார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கடந்த ஏழு ஆண்டுகளில் முந்நூற்றுக்கும் அதிகமான மனுக்களை விண்ணப்பித்து, பலவற்றில் வெற்றிபெற்றிருப்பது இவரது ஹைலைட்.



''எல்லாமே பள்ளிக்கும் சுற்றுவட்டார மக்களுக்கும் பயன்படும் விஷயங்கள். ஆண்டுதோறும் திருச்செங்கோடு நகராட்சி சார்பில், அரசுப் பள்ளிகளுக்கு ஒரு கோடி ரூபாய் வரை கல்விப் பணிகளுக்குச் செலவழிக்க வேண்டும் என்பது நடைமுறை. இந்தச் செலவினங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ, அந்தப் பணம் முறையாக பல பள்ளிகளுக்கும் செலவழிக்கப்படுது. டி.எல்.ஓ எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் உள்ளிட்ட தேர்தல் சார்ந்த முகாம் பணிகளுக்கும், கள ஆய்வு மற்றும் மனு வாங்கும் பணிகளுக்கும் உடல்நிலை சரியில்லாத ஆசிரியர்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாங்க. இதை எதிர்த்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுக் கொடுத்தேன். இப்போ, உடல்நிலை சரியில்லாத ஆசிரியர்கள் டி.எல்.ஓ பணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்காங்க" என்கிற சாந்தகுமார், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் தான் பணியாற்றும் பள்ளிகளுக்கு உதவி பெற்றுள்ளார்.

"பல வருஷங்களுக்கு முன்னாடி கல்வி அதிகாரி ஒருவர் பள்ளிக்கு வந்தார். அலுவலகச் செலவுக்காக எல்லா ஆசிரியர்களும் குறிப்பிட்ட தொகையைக் கொடுக்கணும்னு கேட்டு வாங்கினார். இதை எதிர்த்து கலெக்டரிடம் புகார் கொடுத்து, பணத்தைத் திரும்ப வாங்கினோம். மற்றொரு கல்வி அதிகாரி, ஆசிரியர்கள் பணம் கொடுக்க வேண்டும் என சர்க்குலரே வெளியிட்டார். அதனை ஆதாரமாக வைத்து பள்ளிக் கல்வி இயக்குநருக்குப் புகார் அனுப்பினேன். அந்த அதிகாரியைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்தாங்க. எங்கள் ஒன்றியத்தில் இருக்கும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ஒருவரை தரக்குறைவாகப் பேசிய தாசில்தார் பற்றி, உயர் அதிகாரிகளிடம் புகார் செய்து மன்னிப்பு கேட்கவெச்சேன். திருச்செங்கோட்டில் தனியார் கட்டடத்தில் இயங்கிவந்த அரசு நூலகத்தை, பல முயற்சிகளுக்குப் பிறகு அரசுக் கட்டடத்துக்கு மாத்தினேன்'' என்று அடுக்குகிறார் சாந்தகுமார்.



மாணவர்களிடமும் சமூகச் சிந்தனையை விதைக்கும் விதமாக, பள்ளி மற்றும் அவரவர் வீடுகளுக்கு அருகே இருக்கும் மரங்களிலிருந்து விழும் விதைகளைச் சேகரிக்கச் செய்கிறார் சாந்தகுமார். ''அப்படிச் சேகரிக்கும் விதைகளை மழைக்காலங்களில் விதைப்பந்துகளாகத் தயார்செய்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசுவோம். விதைப்பந்துகள் பலவும் செடிகளாகி, மரங்களாக வளர்ந்துட்டிருக்கு'' எனப் புன்னகைக்கிறார்.
தனது அடுத்த செயல்பாடாக, பள்ளியில் பாழடைந்த நிலையிலிருக்கும் எ.எஸ்.ஏ கட்டடம் ஒன்றை இடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார் சாந்தகுமார்.
இருளில் மூழ்கியிருக்கும் பாம்பன் பாலம்!

உ.பாண்டி

பிரசித்தி பெற்ற பாம்பன் பாலம் சமீப காலங்களாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. நவீன தார்ச்சாலையால் உயிர்ச்சேதம், வாகன சேதம் போன்றவற்றால் பீதியில் மக்கள் பயணம் செய்கின்றனர்.




இந்நிலையில் கடந்த இரண்டு வார காலமாக பாம்பன் பாலத்தில் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை. ஒளிரும் ஸ்டிக்கர் எதுவும் ஒட்டப்படவில்லை. இருளை கிழித்துக் கொண்டு பாம்பன் பாலத்தில் வரும் வாகனங்கள் சுரங்கப்பாதையில் வருவது போல் பீதியில் பயணிக்கின்றன. காவல்துறையின் பாதுகாப்பும் இல்லை. பெரிய விபத்து நிகழும் முன் அரசு விழித்துக் கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் விருப்பம்.
வாய் பிளக்க வைக்கும் கேலக்ஸி நோட் 8-இன் விலை!

சி.மீனாட்சி சுந்தரம்




சாம்சங் நிறுவனம் புதிதாக டெக் உலகில் களமிறக்கும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. பலரும் எதிர்பார்த்துவரும் இந்த போன், ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இதன் லான்ச் தள்ளிப்போயுள்ளது. கேலக்ஸி நோட் 8-ன் அதிகாரப்பூர்வமில்லாத விலையும் வெளியாகியுள்ளது.

999 யூரோ, டாலர்களில் 1118, அது இந்திய மதிப்பில் 72,018 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 12 மெகா பிக்ஸல் டூயல் ப்ரைமரி கேமரா, குவால்கம் ஸ்நாப்டிராகன் 835 அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், இத்துடன் 6 ஜிபி ரேம் மற்றும் 3300 எம்ஏஎச் பேட்டரி அம்சம் கொண்டுள்ளது.
“இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது!” - கண்ணதாசன்

ஜெ.பிரகாஷ்




“எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது'' என்றவர் கவியரசு கண்ணதாசன். அவருடைய பிறந்ததினம் இன்று. பல மனிதர்களிடையே பழகி அதற்கான அனுபவங்களைப் பெற்றதால்தான், அவர் அந்த வரிகளை அப்படி எழுதியுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் கண்ணதாசன், மனிதர்களுக்கேற்ற ஒரு மகத்துவமிக்க வரிகளை இப்படி எழுதியிருந்தார். ''யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டியிருக்கும்''.

மனித மனங்களில் இந்த மந்திர வரிகளை விதைத்த அவர், அந்தக் காலத்தில் தாம் செய்த தவறுகள் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.

''சேராத கூட்டத்தில்
என்னை மறந்துநான்
சேர்ந்தநாள் அந்தநாளே

செறிவான புத்தியைத்
தவறான பாதையில்
செலுத்தினேன் அந்தநாளே!''

இப்படி வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களையும், சந்தித்த பிரச்னைகளையும் தன் அனுபவங்கள் மூலம் பாடல்களாகவும், கட்டுரைகளாகவும் எழுதியதால்தான் பின்னாளில் அவர், மிகச்சிறந்த கவிஞராக உருவாவததற்கு அடிகோலியது; அரசியலில் கால்வைத்த பிறகு, அவரால் அனைத்தையும் உணர்ந்துகொள்ள முடிந்தது; உடலுக்கு அழிவு தரக்கூடியதிலிருந்து அவர் விலகியபோது காலனிடம் சிக்கிக்கொள்ள நேர்ந்தது.

அவர், தன்னுடைய அரசியல் களம் எப்படிப்பட்டது என்பதை மிகவும் தெளிவாகத் தன்னுடைய சுயசரிதைகளிலும், பிற நூல்களிலும் குறிப்பிட்டுள்ளார். தொடக்கத்தில் தி.மு.க-வில் காலடி எடுத்துவைத்த கவிஞர், அவருடைய நண்பரும் தி.மு.க-வின் தலைவருமான கருணாநிதியைப் பற்றி அரசியல்ரீதியாக இப்படிக் குறிப்பிடுகிறார்.



''கருணாநிதியின் அரசியல் சாமர்த்தியம்!''

''கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான்; எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்; எந்த ஊரில் கிளை இருக்கிறது, இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல்நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி. பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால், அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழவைக்க வேண்டும் என்றால், அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவரைச் சாகசம் செய்தாவது வரவழைத்துவிடுவார்; உள்ளே இழுத்துவிடுவார். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்துகூட ஆள்களை இழுத்துக்கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆள்களை இழுக்கக் கூடியவர். எம்.ஜி.ஆர் விஷயத்தில், யானை தடம் தப்பியதைப்போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம். நிர்வாகத்தில் ஏற்கெனவே இருந்த எல்லாரையும்விட அவர் திறமைசாலி என தலைமைச் செயலகத்தில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்கள்'' என்று கருணாநிதியைப் பற்றிச் சொன்ன கவிஞர் கண்ணதாசன், அதேவேளையில்... புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றியும் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“எம்.ஜி.ஆர் கெட்டிக்காரர்!”

“யாருடன் மிகவும் நெருக்கமாக இருந்தால், எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒருகட்டத்தில் ஆகிவிட்டது. எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது. ஆனால், அரசியலில் அவர் நடந்துகொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கிற சக்தி இல்லை என்பது புரிந்தது. திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்டபோது... அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவுவரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள்... அவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்'' என்று எம்.ஜி.ஆரைப் பற்றிப் புகழ்கிறார்.



அரசியல் கண்ணோட்டம்!

கருணாநிதி, எம்.ஜி.ஆர் மட்டுமல்லாது, தந்தை பெரியார், காமராஜர், அண்ணா, நேரு, இந்திரா காந்தி, ராஜாஜி எனப் பலருடைய பண்புகளையும் அவர்கள் நடந்துகொண்ட விதங்களையும் எந்த நேரத்திலும் தயங்காது துணிச்சலுடன் சொன்னவர் கண்ணதாசன். பொதுவாக, ''கட்சித் தலைவர்கள் அதாவது, அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வாழ்வதையே விரும்பினார்கள்; தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சுயலாபத்துக்காகவே செயல்பட்டனர்; கொள்கைகளைப் பற்றி மேடையில் முழங்கினாலும், அவர்கள் அதில் நம்பிக்கையோ, உடன்பாடு உள்ளவர்களோ இல்லை'' என்பதே அவரது வாதமாக இருந்தது. மேலும், அவர் வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வோர் இயக்கங்களிலும் இருந்தபோது... அரசியல் தலைவர்கள் பலரையும் தன் எழுத்துகளால் பந்தாடினார்; அதே சமயத்தில் அவர்களுடன் நெருங்கியிருந்தபோது பாராட்டவும் செய்தார். இப்படிக் கண்ணதாசனின் எழுத்தோவியத்தில் அடிப்பட்டவர்களும், அழகாக்கப்பட்டவர்களும் எத்தனையோ பேர்? அவர், அரசியல் தலைவர்களை மட்டுமல்லாது பலருடைய ஆட்சியைப் பற்றியும் விமர்சனம் செய்தார்.

''ஆடும் மாடும் அமைச்சர்களாயின!''

ஒருசமயம், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தமிழக - கேரள எல்லையில் இருந்த தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழ்நாட்டோடு சேர்க்கப்படாமல் கேரளத்தில் சேர்ந்தன. இதை, தமிழக அமைச்சர்கள் பொருட்படுத்தாமல் விட்டதைக் கண்ட கண்ணதாசன்,

''மேடும் குளமும் கேரளாக்காயின
ஆடும் மாடும் அமைச்சர்களாயின'' - என்று எழுதினார்.

அதுமட்டுமல்லாது, அடிப்படைத் தத்துவமான மக்கள் நலன் என்பதே நிலையானது என்பதைக் கண்ட கவிஞர், அதை அடையும் வழியில் மாற்றங்களை மேற்கொள்ளும்போது, தலைவரும் தர்பாரும் மாறும் என்பதை,

''தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்’' - என்று சுட்டிக்காட்டினார்.

இப்படி எழுத்துலகில் கொடிகட்டிப் பறந்த கண்ணதாசன், அரசியல் என்ற பயணத்தில் தொடர்ந்து பயணிக்கவில்லை என்றபோதும், அதில்பட்ட கசப்பான உணர்வுகள் அவரது மனதை ஒருவகையில் காயப்படுத்தின என்பதும் நிஜம்.
குழந்தைகளை நிமிடத்தில் மரணிக்கச் செய்யும் செடி இருக்கிறதா? வாட்ஸ்அப் தகவல் உண்மையா?

இரா.கலைச் செல்வன்

“ஜாக்கிரதை... இது ஓர் உண்மைக் கதை. சமீபத்தில் என் மகன், இந்தச் செடியின் இலையை சாப்பிட்டதால் இறந்து விட்டான். இது நம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சாதாரணமாகக் காணக் கிடைக்கும் ஒரு செடிதான். ஆனால், நாம் நினைப்பதுபோல் இது அத்தனை அழகானது அல்ல... மிகவும் ஆபத்தானது. இது ஒரு குழந்தையை ஒரு நிமிடத்தில் கொன்றுவிடும். ஒரு பெரியவரை 15 நிமிடத்தில் கொன்றுவிடும். இந்தச் செடியில் கைகளை வைத்துவிட்டால், தயவு செய்து அதைக் கண்களில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்வை பறி போகும் வாய்ப்புகள் அதிகம். உங்கள் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் இதைப் பகிர்ந்து, அவர்களைக் காப்பாற்றுங்கள்..." சமீபத்தில் இந்தச் செய்தி வாட்ஸ் அப்பில் அதிகம் பகிரப்பட்டது. இதே செய்தி இரண்டு வருடங்களுக்கு முன்னரும் இப்படி பகிரப்பட்டது. ஆனால், இது உண்மை தானா?



இன்று டெக்னாலஜி ஆளும் யுகத்தில் இருக்கிறோம். ஜஸ்ட் ஒரு க்ளிக்... அவ்வளவுதான். எங்கும், எப்போதும் , எதுவும், கிடைக்கும். இன்று தகவல்கள் என்பது ஒரு கடல் அலை பொங்கி வருவது போல் நமக்கு கிடைக்கின்றன. அதிகப்படியான விஷயங்களைத் தெரிந்துக் கொள்வது நல்லதுதான். ஆனால், பல சமயங்களில் அந்த அலை பல குப்பைகளையும் கொண்டு வந்து விடுகிறது. இந்தத் தகவல்களில் உண்மையையும், பொய்களையும் பிரித்தறிவது என்பது சிரமமான விஷயமாக இருக்கிறது... அல்லது அதற்கான சிரத்தையை நாம் மேற்கொள்வதில்லை. சரி... இந்த செய்திக்கு வருவோம். நிச்சயம் நம்மில் பலர் இந்த செய்தியையோ... இப்படியான ஏதோ ஓர் செய்தியையோ அது என்ன, ஏது என்ற உண்மையை ஆராயமல் பலருக்கும் பகிர்வோம். அது பலருக்கும் தேவையற்ற அச்சத்தையும், உணர்வுக் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்தும். இந்தச் செய்தியும் கிட்டத்தட்ட அப்படித்தான்...

இது " டைஃபன்பேக்கியா " ( Dieffenbachia ) என்ற ஒரு செடி வகை. இது அழகிற்காக வளர்க்கப்படும் செடி. பெரும்பாலும் அபார்ட்மெண்ட்களில், அலுவலகங்களில் உள்ளேயே வைத்து வளர்க்கப்படுகிறது. இரண்டு வாரத்திற்கொரு முறை இதற்கு தண்ணீர் ஊற்றினால் போதும். குறைந்தளவிலான சூரிய வெளிச்சம் இதற்குப் போதும். தேவையும் அதுதான். வெட்டவெளியில் வைத்து வளர்த்தால் மொத்த செடியும் கருகிவிடும். இதன் பூர்வீகம் மெக்சிகோ, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அர்ஜெண்டினா என்று சொல்லப்படுகிறது. இன்று உலகம் முழுக்கவே, அலங்காரத்திற்காக இந்தச் செடி வளர்க்கப்படுகிறது. பரவும் செய்திகள் சொல்லும் அளவிற்கு இது அபாயகரமானதா என்று கேட்டால்... பதில் இல்லை என்பதுதான்.



டைஃபன்பேக்கியா குறித்து முழுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டவர், அமெரிக்காவின் பிட்ஸ்பெர்க் யூனிவர்சிட்டியின் பேராசிரியர் எட் க்ரென்ஸெலோக். அவர் பரவும் இந்த வதந்திகள் குறித்து இப்படியாக பதிவிட்டுள்ளார்...

“நான் பல ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். என்னைச் சுற்றி இந்த "டைஃபன்பேக்கியா"க்கள் எப்போதும் இருக்கும். ஆனால், என் அனுபவத்தில் இதுவரை இதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதில்லை. சமயங்களில் இதிலிருந்து வெளியேறும் பால் கைகளிலோ, கண்களிலோ பட்டால் சற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்." என்று சொல்லியுள்ளார். மேலும், அவர் சில முக்கிய அறிவியல் விளக்கங்களையும் கொடுத்துள்ளார்.

டைஃபன்பீக்கியாவில் கால்சியம் ஆக்சோலேட் ( Calcium Oxalate ) என்ற வேதியியல் பொருள் உள்ளது. அது ஒரு ஊசியைப் போல, ஒரு பக்கம் கூர்மையாக உருமாறுகிறது. இதை ராஃபைட்ஸ் ( Raphides ) என்று சொல்கிறார்கள். அந்தச் செடியின் இலைகளை உடைக்கும் போதோ, அல்லது பிற பகுதிகளை தொந்தரவு செய்யும் போதோ, இந்த ராஃபைட்ஸ் நம் கைகளில் படும் வாய்ப்புகள் இருக்கின்றன. இது ஒரு வித எரிச்சலை அளிக்கும். சமயங்களில் மரத்துப் போகும் உணர்வினை ஏற்படுத்தும். கண்களில் பட்டால் சமயங்களில் மற்றபடி பார்வை பறி போகும் என்பதெல்லாம் வதந்திதான்.



டைஃபன்பேக்கியாவை "டம்ப் பிளான்ட்" ( Dumb Plant ) என்று சொல்கிறார்கள். அதாவது, " ஊமைச் செடி ". இதை சாப்பிடுபவர்கள் ஊமையாகிவிடுவார்கள் என்ற ஒரு வதந்தியும் இருக்கிறது. ஆனால், அது அப்படிக் கிடையாது. இலை நாவில் படும்போது, ராஃபைட்ஸ் நாவினை மரத்துப் போகச் செய்கிறது. அதுமட்டுமல்லாமல், அது வாயை வீங்கச் செய்துவிடும். இதனால், சில மணி நேரங்களுக்கு சரியாக பேச முடியாது. இது குறித்த ஒரு வரலாற்றுப் பதிவையும் குறிப்பிடுகிறார்கள். அதாவது, அந்தக் காலங்களில் ஆப்ரிக்கர்களை அடிமைகளாக கொண்டு செல்வார்கள். அப்போது, சில முதலாளிகள் அடிமைகளின் வாய்களில் இந்தச் செடிகளைப் போட்டு, அவர்கள் பயப்படுவதைக் கண்டும், பேச முடியாமல் அலறுவதைக் கண்டும் சிரித்து விளையாடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இப்படி, நிகழ்கால ஆராய்ச்சிகளிலும், கடந்த கால வரலாறுகளிலும் கூட இந்தச் செடிகள் உயிரைப் பறித்தாக எந்த சான்றுகளும் இல்லை. இதுகுறித்து, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவி வேளான் அலுவலரான ரூபன் செல்வக்குமாரிடம் கேட்டபோது,

"அழகிற்காக வளர்க்கப்படும் இந்தச் செடிகள் அவளவு ஆபத்தானவை அல்ல. இதுகுறித்த ஆராய்ச்சிகள், தமிழ்நாட்டில் எங்கும் நடந்ததில்லை. அதனால், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் சொல்வதைதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், அதுதான் உண்மையாகவும் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், இந்தச் செடி உயிர் பறிக்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கும்பட்சத்தில், உலகளவில் இது பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், அத்தனை வீடுகளிலும், அலுவலகங்களிலும் இந்தச் செடிகள் நிறைந்திருக்கின்றன. " என்று சொல்கிறார். இப்படி மொத்தமாக ஆராய்ந்துப் பார்க்கும்போது, பல லட்சம் ஷேர்களைக் கண்ட அந்த செய்தி, அடிப்படை ஆதாரமற்றது என்பது நிரூபணமாகிறது.



இன்றைய யுகத்தின் ஆகச் சிறந்த ஆயுதமாக இருப்பது நம்முடைய செல்போன்கள். அதில் நாம் பகிரும் ஒவ்வொரு தகவல்களும், ஒரு அணுகுண்டிற்கு ஒப்பானவை. எனவே, அந்த அணுகுண்டுகளைக் கைமாற்றும் போது அதீத கவனத்துடன் செயல்பட வேண்டிய அவசியமிருக்கிறது. ஏனென்றால், அந்த குண்டு வெடித்தால் பாதிக்கப்படப் போவது நீங்களும் , நானும் தான்...

அற்றுப் போய்விடுமோ அரவை மில் சத்தம்..?

கரு.முத்து

நெல் அரவை மில்லில் இருந்து வரும் காதைப் பிளக்கும் கர..கர.. சத்தம். தவிட்டு மழையில் நனைந்து நிற்கும் அரவைக்காரர். கரகரப்பை மிஞ்சிய டெசிபலில் அவரோடு அரவைக் கூலியை அவதானிக்கும் சம்சாரிகள்.. இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் அரவே வழக்கொழிந்துவிடும் போலிருக்கிறது.

முன்பெல்லாம், ஓரளவுக்கு பெரிய ஊராக இருந்தால் நிச்சயம் ஒரு நெல் அரவை மில் இருக்கும். சம்சாரிகள் தங்களது நிலத்தில் அடித்த நெல்லை, கருக்கலில் அவித்து பக்குவமாய் காயவைத்து பதம் பார்த்து அரைப்பதற்காக இந்த அரவை மில்லுக்கு வண்டிகட்டி வருவார்கள்.

அலம்பல் அரவைக்காரர்
அரவைக்காரர் வருவதற்கு முன்னதாகவே நெல்லைக் கொண்டுபோய் வரிசையில் வைத்துவிட்டுக் காத்துக் கிடப்பார்கள். அரைக்கால் டிராயரை மாட்டிக் கொண்டு, கடைவாயில் வெற்றிலையை அதக்கியபடி ஒன்பது மணிக்கு ஆடி அசைந்து வருவார் அரவைக்காரர். மில் முதலாளிகூட அவ்வளவு பிகு பண்ணமாட்டார்.. இவரது அலம்பல் தாங்கமுடியாது. அதனால், நம்மவர்கள் அவரிடம் அவ்வளவு பவ்யம் காட்டுவார்கள்.

கிடக்கும் நெல் மூட்டைகளை கண்களால் கணக்குப் போட்டபடியே மெஷினைத் தட்டிவிடுவார்; கரகரக்க ஆரம்பித்துவிடும் சத்தம். பொழுது சாய்ந்த பிறகும் ஓயாத இந்த சத்தம் சில சமயங்களில் 2 கிலோ மீட்டருக்கு அப்பாலும் எதிரொலிக்கும். இப்படி, சம்சாரிகள் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக ஏகாந்தம் பரப்பிய நெல் அரவை மில்களை இப்போது பார்க்கமுடியவில்லை. எல்லாம் ‘மார்டன் ரைஸ் மில்’ மயமானதால் சம்சாரிகளும் இப்போது பளபளக்கும் பை அரிசிக்கு மாறிவிட்டார்கள்.

இதுவும் எத்தனை நாளைக்கோ?
இதனால், பெரும்பாலான ஊர்களில் அரவை மில்கள் இழுத்துமூடப்பட்டு விட்டன. மிளகாய் பொடி, மாவு வகைகள் அரைப்பதை நம்பி ஏதோ ஒரு சில மில்கள் மட்டும் தொண்டைக்கும் நெஞ்சுக்கும் ஓடிக் கொண்டி ருக்கின்றன. இதுவும் இன்னும் எத்தனை நாளைக்கோ! “எங்க மில்லை ஆரம்பிச்ச புதுசுல இங்கிருக்கிற மழவராயர் வீட்டுல ரெண்டு நாளு காத்துக்கிடந்து நெல் அரைச்சிட்டுப் போவாங்களாம். ஆனா இப்ப, நாள் முழுக்கக் காத்துக் கெடந்தாலும் ஒரு மூட்டை நெல் அரவைக்கு வரமாட்டேங்குது. இந்த லட்சணத் துல ஓடுனா கரன்டு பில்கூட கட்டமுடியாதுன்னு தெரிஞ்சுது. அதனால, மில்லை மூடிட்டோம்’’ என்கிறார் மூன்றாவது தலைமுறையாக அரவை மில் வைத்திருந்த நல்லூர் ரமேஷ்,

என்ன நெல்லுல வந்த அரிசின்னே தெரியாம, எப்படி தயாராகுதுன்னே தெரியாம அதை வாங்கிச் சாப்டுறாங்க. நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க.

“எங்க மில்லை ஆரம்பிச்ச புதுசுல இங்கிருக்கிற மழவராயர் வீட்டுல ரெண்டு நாளு காத்துக்கிடந்து நெல் அரைச்சிட்டுப் போவாங்களாம். ஆனா இப்ப, நாள் முழுக்கக் காத்துக் கெடந்தாலும் ஒரு மூட்டை நெல் அரவைக்கு வரமாட்டேங்குது. இந்த லட்சணத் துல ஓடுனா கரன்டு பில்கூட கட்டமுடியாதுன்னு தெரிஞ்சுது. அதனால, மில்லை மூடிட்டோம்’’ என்கிறார் மூன்றாவது தலைமுறையாக அரவை மில் வைத்திருந்த நல்லூர் ரமேஷ்,

பை அரிசிக்கு பழகிட்டாங்க
தட்டுத் தடுமாறி அரவை மில் நடத்திக் கொண்டி ருக்கும் ஆச்சாள்புரம் மயில் வாகனன், “விவசாயக் குடும்பங்கள்லயே இப்ப நெல் அரைச்சுச் சாப்பிடும் பழக்கம் குறைஞ்சு போச்சு. வெளஞ்ச நெல்ல களத்து மேட்டுலயே வித்துக் காசாக்கிட்டு பை அரிசியை வாங்கிச் சாப்பிடப் பழகிட்டாங்க. அதனால, எங்களுக்கு வேலை இல்லாம போச்சு. ஏதோ, மிளகாய் பொடி, மாவுன்னு அரைக்க வர்றவங்களால எங்களுக்கு வாய்க் கும் கைக்குமா பொழப்பு ஓடுது’’ என்கிறார்.
சீர்காழி அருகே திருமைலாடி யிலிருந்து நெல் அரைக்க வந்திருந்த ராஜேந்திரன் “பகட்டா தெரியும் பை அரிசியில எவ்வளவு கெடுதல் இருக்கு தெரியுமா? என்ன நெல்லுல வந்த அரிசின்னே தெரியாம, எப்படி தயாராகுதுன்னே தெரியாம அதை வாங்கிச் சாப்டுறாங்க. நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க. ஒருமூட்டை நெல் அரைச்சா இரண்டு மாசத்துக்கு வரும். தீர்ந்துட்டா திரும்ப அரைச்சுக்குவோம். இதுல உள்ள திருப்தியும், தெம்பும் வேற எதுலயும் வராதுங்க’’ என்கிறார்.

ராஜேந்திரன்கள் இருப்பதால் தான் இன்னமும் எங்காவது ஒரு மூலையிலாவது நெல் அரவை மில்கள் மூச்சுவிட்டுக் கொண்டிருக் கின்றன.

அமெரிக்கா போக ஆசையா? - விசா நேர்காணல் எப்படி இருக்கும்?

சுற்றுலா விசாவுக்கான நேர்காணல் எப்படி நடக்கும்? என்னென்ன கேள்விகள் கேட்கப்படும்? அதற்கு நாம் எப்படித் தயாராவது?

நிர்மலா, கோவை.
பொதுவாக விசா நேர்காணல்கள் சுருக்கமாக, அதாவது 2 முதல் 3 நிமிடங்களுக்குள்தான் இருக்கும். உங்கள் பயணத்தின் நோக்கம், விசா பெறுவதற்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கிறீர்களா என்பவற்றைத் தீர்மானிக்கும் கேள்விகளை அதிகாரி உங்களிடம் கேட்பார். உங்களைத் தயார்படுத்த உதவும் விசா கேள்விப் பட்டியல் என்று ஏதும் கிடையாது. ஒவ்வொரு விண்ணப்பதாரரின் பின்னணியும் தனித்தன்மை வாய்ந்தது என்பதால், உங்கள் வாழ்க்கை சார்ந்த விஷயங்களையே விசா அதிகாரியிடம் சொல்ல வேண்டும். நேர்காணலுக்கு வருபவர்களுக்கு ஒரு டிப்ஸ்: அதிகாரியுடன் பேசுங்கள்... உண்மையைப் பேசுங்கள்.

என்னுடைய சுற்றுலா விசா காலாவதியாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இப்போது நான் மீண்டும் அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்ல விரும்புகிறேன். என்னிடம் ஏற்கெனவே இருக்கும் விசாவைப் புதுப்பித்துக்கொள்ள முடியுமா? அல்லது மீண்டும் புதிதாக விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?

ரகு, புதுச்சேரி.

நீங்கள் புதிதாக விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களுக்குப் பார்க்க வேண்டிய இணையதளம்: www.ustraveldocs.com/in
நான் அமெரிக்கச் சுற்றுலா விசா வாங்கி மூன்றாண்டுகள் ஆகின்றன. அதிலும், என் பாஸ்போர்ட்டிலும் என் பெயருக்குப் பின்னால் என் அப்பாவின் பெயர் உள்ளது. இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு எனக்குத் திருமணமானது. இப்போது என் புதிய பாஸ்போர்ட்டில், என் பெயருக்குப் பின்னால் என் கணவரின் பெயரைச் சேர்க்க நினைக்கிறேன். அதே போலவே, என் அமெரிக்கச் சுற்றுலா விசாவிலும் பெயரை மாற்ற நினைக்கிறேன். அதற்கு என்ன வழிமுறைகள்?

தேவகி, திருப்பூர்.

விசாவில் பெயரை மாற்ற நீங்கள் விரும்பினால், உங்கள் பாஸ்போர்ட்டில் உரிய மாற்றம் செய்த பின், புதிய விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட்டில் என்ன பெயர் இருக்கிறதோ அதுவே விசாவிலும் பதிவாகும்.

என்னுடைய சுற்றுலா விசா காலாவதி ஆவதற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. சுற்றுலா விசாவில் ஆறு மாதம்வரை அமெரிக்காவில் தங்கலாம் என்று அறிகிறேன். எனில், நான் அமெரிக்கா சென்று மூன்று மாதங்களில், என்னுடைய விசா காலாவதி ஆகும். அப்போது என்னுடைய சுற்றுலா காலத்தை நீட்டிக்க நான் என்ன செய்ய வேண்டும்?

லக்ஷ்மி ராஜன், ஈரோடு.

அமெரிக்க விசா, விமான (வழியாக) நிலையம் அல்லது தரை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சுங்கம், எல்லைப் பாதுகாப்பு ஆய்வாளரிடம் அனுமதி கோர இடமளிக்கிறது. ஆகவே, அமெரிக்காவுக்குள் நீங்கள் நுழையும்போது, உங்கள் விசா செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். அமெரிக்காவுக்குள் நுழையும் இடத்தில் (port of entry), குடியேற்ற அதிகாரி குறிப்பிடும் காலம்வரை அங்கே நீங்கள் தங்கலாம். அமெரிக்காவிலிருந்து வெளியேறிவிட்டால், மறுபடியும் உங்கள் விசாவைப் புதுப்பித்து அங்கு செல்லலாம்.
முதியவர்கள் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது, ஏதேனும் சலுகைகள் வழங்கப்படுகின்றனவா?

ஸ்ரீரமணன், சென்னை.
80 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள், விண்ணப்பம், உரிய ஆவணங்களை அதற்குரிய பரிசீலனைப் பெட்டியில் (Drop Box) போடலாம். நேர்காணலுக்கு வரத் தேவையில்லை.
நன்றி: அமெரிக்கத் துணைத் தூதரகம், சென்னை

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...