Monday, October 9, 2017

மாநில செய்திகள்

ஆஸ்பத்திரியில் சசிகலா 2–வது நாளாக நடராஜனை சந்தித்தார்; 45 நிமிடங்கள் அருகில் இருந்து கவனித்தார்


ஆஸ்பத்திரியில் கல்லீரல் மாற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை நேற்று 2–வது நாளாக சசிகலா சந்தித்தார். 45 நிமிடங்கள் அருகில் இருந்து அவரை கவனித்தார்.

அக்டோபர் 09, 2017, 03:45 AM

சென்னை,சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில், கடந்த 4–ந் தேதி கல்லீரல் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடராஜன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கணவர் நடராஜனை பார்ப்பதற்காக, பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் இருந்து கடந்த 6–ந் தேதி சசிகலா பரோலில் வெளியே வந்தார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியா வீட்டில் தங்கியுள்ள சசிகலா, நேற்று முன்தினம் ஆஸ்பத்திரி சென்று நடராஜனை சந்தித்து திரும்பினார். இந்த நிலையில், நேற்று 2–வது நாளாக சந்திப்பதற்காக பெரும்பாக்கம் குளோபல் ஆஸ்பத்திரிக்கு முற்பகல் 11.40 மணிக்கு சசிகலா காரில் வந்தார். அவருடன் இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ண பிரியா, ‌ஷகிலா, திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் வந்திருந்தனர்.

நேராக 2–வது மாடிக்கு சென்ற சசிகலா அங்குள்ள 2005–ம் எண் கொண்ட அறையில் ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தார். அப்போது, உறவினர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர், 12.45 மணிக்கு கணவர் நடராஜனை சந்திப்பதற்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள கல்லீரல் மாற்று தீவிர சிகிச்சை பிரிவுக்கு சசிகலா சென்றார்.

மதியம் 1.30 மணி வரை 45 நிமிடங்கள் அங்கிருந்த சசிகலா, கணவர் நடராஜனை அருகில் இருந்து கவனித்து கொண்டார். நடராஜனின் கழுத்தில் ‘டிரக்கியாஸ்டமி’ கருவி பொருத்தப்பட்டுள்ளதால், அவரால் பேச முடியவில்லை. அதனால், கையை அசைத்து சைகை மூலமே அவர் சசிகலாவுடன் பேசினார். அவரது சைகையை புரிந்துகொண்டு, சசிகலாவும் அதற்கான பதிலை அளித்தார். பரோல் முடிந்து சிறைக்கு திரும்புவதற்கு முன்பாக, மீண்டும் சந்திக்க வருவதாக நடராஜனிடம் சசிகலா தெரிவித்தார்.

பின்னர், அங்கிருந்து அறைக்கு திரும்பிய சசிகலா, மதியம் 2 மணி அளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டார். நேராக தியாகராயநகரில் உள்ள கிருஷ்ண பிரியா வீட்டிற்கு வந்த அவர் அங்கேயே ஓய்வெடுத்தார்.

நேற்று முன்தினம் நடராஜனை சசிகலா சந்திக்க சென்றபோது, அவரது ஆதரவாளர்கள் நிறைய பேர் அங்கு குவிந்தனர். எம்.பி.க்கள் உள்ளிட்ட சிலர் அவருடன் ஆஸ்பத்திரி உள்ளேயும் சென்றனர். இது கர்நாடக சிறைத்துறை விதித்த நிபந்தனைகளை மீறியதாக கூறப்பட்டது.

ஆனால், நேற்று சசிகலாவின் ஆதரவாளர்கள் யாரும் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை. இதனால், அங்கு பாதுகாப்பு பணிக்கு நின்ற போலீசாரும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
மாவட்ட செய்திகள்

சேலம், ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு



சேலம், ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு நடத்தினார். ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதலாக ஒரு ஆம்புலன்ஸ் வழங்கவும் நடவடிக்கை எடுத்தார்.

அக்டோபர் 08, 2017, 08:00 AM

சேலம்,

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் டெங்கு அறிகுறி இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த ஒரு மாதத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 50–க்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென்று வந்து ஆய்வு நடத்தினார். காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டவர்களை வார்டு வாரியாக சென்று பார்வையிட்டார். அப்போது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.அப்போது நோயாளிகளின் உறவினர்கள், ஆஸ்பத்திரியில் போதிய படுக்கை வசதி இல்லை என்றும், ஒரே படுக்கையில் 2 அல்லது 3 குழந்தைகளை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், போதிய கழிவறை வசதி இல்லை என்றும் தெரிவித்தனர். அதையடுத்து நோயாளிகளுக்கு தேவையான வசதி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகள் குறித்த விவரங்களை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் யார் கேட்டாலும் மறைக்காமல் உள்ளதை தெரிவிக்க வேண்டும். டெங்கு பாதிப்பு உள்ளவர்கள் பற்றியும் வெளிப்படையாக தெரிவிக்கவும் டீன் கனகராஜ், கண்காணிப்பு மருத்துவர் டாக்டர் சம்பத் ஆகியோரிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கலெக்டர் ரோகிணி, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, சேலம் மாநகர் நல அலுவலர் டாக்டர் பிரபாகரன் மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.முன்னதாக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். தொடர்ந்து காய்ச்சலால் பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் வார்டிற்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘‘ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் நியமனம் செய்யவும், தேவைப்படும் நிதி வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய 108 ஆம்புலன்ஸ் நாளை (அதாவது இன்று) வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு உடனடியாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளது.‘‘ என்றார்.
தலையங்கம்
ரெயிலில் 8 மணி நேரம் தூக்கம்



அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது.

அக்டோபர் 09 2017, 03:40 AM

அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. தொழில் நிமித்தமாகவும், படிப்பு வி‌ஷயமாகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும், விடுமுறையை கழிப்பதற்காகவும், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காகவும் மக்கள் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். வான்வழி, தரைவழி, ரெயில்வழி என்று 3 வகை போக்குவரத்துகள் இருந்தாலும், உடலில் உள்ள ரத்தநாளங்கள் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதுபோல, இந்தியாவில் மூலைமுடுக்கெல்லாம் செல்வது ரெயில்தான். உலகிலேயே 4–வது பெரிய ரெயில்வே என்றால் அது இந்திய ரெயில்வேதான். இந்தியா முழுவதும் 1,19,630 கி.மீ. நீளமுள்ள தண்டவாளங்கள் இருக்கிறது. 7,216 ரெயில் நிலையங்களில் 12,617 ரெயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 கோடியே 20 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள். இதில் குறைந்ததூரத்திற்கு பயணம் செய்பவர்களும் உண்டு. தொலை தூரங்களுக்கு பயணம் செய்பவர்களும் உண்டு. ஒரு இரவு பயணம் என்று தொடங்கி, 2 நாட்கள், 3 நாட்கள்வரை ரெயிலிலேயே பயணம் செய்யும் தூரமும் உண்டு. இத்தகைய பயணிகளுக்காக தூங்கும் வசதிகொண்ட ரெயில் பெட்டிகளில் கூடுதலாக கட்டணம் செலுத்தி பயணம் செய்யலாம். 3 அடுக்குகள் கொண்ட 2–ம் வகுப்பு பெட்டி, 3 அடுக்குகள் மற்றும் 2 அடுக்குகள் கொண்ட குளிர்சாதனபெட்டி, முதல்வகுப்பு ஏசி பெட்டி என்று பல்வேறு கட்டணங்களில் ரெயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

இந்திய ரெயில்வே வர்த்தக குறிப்பேட்டில் 652–வது பாராவில், இவ்வாறு தூங்கும்வசதி கொண்ட ரெயில் பெட்டிக்காக ரிசர்வ் செய்பவர்கள், இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை அந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று இருக்கிறது. பொதுவாக, பயணிகள் ரெயிலில் ஏறியவுடன் தூங்க செல்ல வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதில் மேல்படுக்கையை ரிசர்வ் செய்தவர்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லை. நடுபடுக்கையிலும், கீழ்படுக்கையிலும் ரிசர்வ் செய்தவர்கள் தூங்கவேண்டும் என்றால், மற்ற பயணிகளும் அதற்கு ஒத்துழைத்தால்தான் முடியும். ஏனெனில், நடுபடுக்கையை போட்டு தூங்கச்சென்றால், கீழ்படுக்கையில் உட்கார்ந்து செல்லும்போது தலைதட்டி அசவுகரியமாக இருக்கும். அதுபோல, கீழ்படுக்கையை ரிசர்வ் செய்தவர்கள் தூங்கவேண்டும் என்று நினைத்தால் மற்றவர்கள் உட்கார்ந்து செல்லமுடியாது. அவர்களும் கட்டாயமாக தூங்கசெல்லவேண்டிய நிலை ஏற்படும். இதனால் பலநேரங்களில், பயணிகளுக்குள் வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம். இந்தநிலையை தடுக்க இப்போது ரெயில்வேதுறை, தூங்கும் நேரத்தை இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணிவரை என்று இருந்தநிலையை மாற்றி, இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணிவரை என்று மாற்றியமைத்துள்ளது. என்றாலும், உடல்நலக்குறைவு உள்ளவர்கள், உடல் ஊனமுற்றோர், கர்ப்பிணி பெண்கள் பயணம் செய்யும் போது, அவர்கள் சற்று கூடுதலான நேரம் தூங்கநினைத்தால் அவர்களுக்கு பயணிகள் சற்று விட்டுக்கொடுக்கவேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறது.

இதையெல்லாம் இதுபோல விதிகளைச் சொல்லி நிறைவேற்ற முடியாது. பயணிகள் ஒருவருக்கொருவர் நட்புடன் பழகி பயணம் செய்தால் பயணம் இனிமையாக இருக்கும். உடன்வரும் பயணிகளோடு இதுபோன்ற விதிகளை சுட்டிக்காட்டி, தகராறு செய்தால் நிச்சயமாக பயணம் இனிமையாக இருக்காது. எனவே, இதுபோன்ற சின்னசின்ன வி‌ஷயங்களிலெல்லாம் விதிகளை கொண்டுவந்து, பயணிகளுக்கிடையே ஒரு கசப்பான உணர்வை உருவாக்காமல், பயணிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்துகொடுத்து குறிப்பிட்ட நேரத்தில் ரெயில் போய்ச்சேருவது, நல்ல தரமான உணவு வசதிகள் அளிப்பது, ரெயில் பெட்டிகளை சுத்தமாக வைத்திருப்பது, நல்ல தண்ணீர் வசதி செய்துகொடுப்பது போன்ற வி‌ஷயங்களில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். நிறைவான வசதி, மகிழ்வான பயணம் என்பதை நடைமுறைக்கு கொண்டுவந்தால், இதையெல்லாம் பயணிகள் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்பதுதான் பொதுவான கருத்து.

Sunday, October 8, 2017


அரசுஊழியர்களுக்கு சாதகமான அரசானைகள்!!!

1)GO.MS.200 P&AR dt 19.4.96

உயர்கல்வி பயில அனுமதி
கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள்
துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால்,அனுமதி
அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.


2)GOVT Leter no 14735/s/10/
dt 08.042010
தகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய
அனைத்துதகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து
ஆறுமாதத்திற்குள்
தகுதிகான்பருவம் நிறைவு
செய்துஆனைகள் பிறப்பிக்க
பட வில்லை என்றால்,தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ்அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.

3)GO.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75
துறைத்தலைவரால்
வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு
அலுவலருக்கு மேல்முறையீடு
செய்த ஒரு அரசுஊழியரின் விண்ணப்பத்தின் மீது
ஆறு மாதத்திற்குள் மேல்முறையீட்டு
அலுவலா் இறுதி ஆனைபிறப்பிக்கவேண்டும்.

4)GO.MS.112 P&AR
அசையாசொத்துவாங்க
அனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும்
அவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி
அளிக்கவில்லை, என்றால்
அனுமதி அளித்ததாக கருதி
அவ்வரசுப்பணியாளர் அவ்
அசையாசொத்தை வாங்கிக்கொள்ளலாம்.

5)Govt Leter 248 P&AR dt 20.10.97
தண்டனைகள் நடப்பிலிருப்
பதால் பதவிஉயர்வு நிறுத்தப்
பட்ட அரசுஊழியருக்கு அதே
தண்டனை நடப்பிலிருந்தாலும்
அடுத்தபதவிஉயர்வு வழங்கவேண்டும்.

6)Govt Leter no 35/N/2012-/9
P&AR N Dept 03.04.2013
ஒமுங்குநடவடிக்கை நடப்பிலிருப்பவருக்கு ஓய்வு
பெரும் நாள் அன்று Not Permited For Retired ஆனை
வழங்கப்படவில்லை என்றால்
அவா் ஓய்வுபெற்றதாக கருதப்படும்.

7)Tamilnadu Govt Servent Conditions And servuce Act 2016 Rule 44
அரசுஊழியரிடம் பதவி
உயர்வுவேண்டி பெறப்பட்டை
மேல்முறையீட்டு விண்ணப்பத்தை துறைத்தலைவர் நாண்கு மாதத்திற்குள் முடிக்கவேண்டும்.

8)Govt Leter No 12516 P&AR 2015
அரசுஊழியர்களின் கோரிக்கை சாா்ந்த எந்த மனுவாக இருந்தாலும்
அவர்கள் விண்ணப்பிக்கும்
போதே அனைத்து விவரங்கள்
மற்றும் விளக்கங்கள் கேட்டு
பெறவேண்டும் இரண்டாம்
முறை எதுவும் கேட்கக்கூடாது.

Bombay HC Sets Aside Order Permanently Barring Medical Student From Seeking Admission To Any MBBS Course In Maharashtra [Read Judgment] | Live Law

Bombay HC Sets Aside Order Permanently Barring Medical Student From Seeking Admission To Any MBBS Course In Maharashtra [Read Judgment] | Live Law: In a huge relief to a 22-year-old medical student, the Bombay High Court has quashed and set aside an order of the Director of Medical Education and Research which cancelled the admission secured on merits in open category and permanently barred him from pursuing any health science course in Maharashtra. The reasoning behind this order …

Two tiger cubs maul zoo gatekeeper to death

TNN | Updated: Oct 8, 2017, 09:15 IST

HIGHLIGHTS

A gatekeeper of Bannerghatta Biological Park was mauled to death by two white tiger cubs.
The incident comes close on the heels of another case of negligence reported in the safari area last month.(Representative image)

BENGALURU: Anjaneya alias Anjini, 40, a daily wage labourer hired as a gatekeeper at the safari enclosure in the Bannerghatta Biological Park (BBP), 30km southeast of Bengaluru, was mauled to death by two white tiger cubs on Saturday evening. Both the cubs are one-and-ahalf years old. A BBP official said Hucchegowda, a senior zoo staffer in-charge of the tigers' enclosure, took Anjaneya's help as one of his assistants was on leave. Anjini had joined work on October 1 after quitting his job as a security guard. The tigers attacked him when he entered the cage to remove food remains. Anjaneya alias Anjini, 40, a gatekeeper who was mauled to death by two white tiger cubs at the safari enclosure at Bannerghatta Biological Park (BBP), did not realize tigers were in the cage when he walked in.

"It's a practice to feed tigers after the safaris are over around 5pm. Anja neya entered the cage to clean bones, not realizing the tigers were there. Soorya, a tiger adopted by MLA Ashok Kheny, and its cubs Vanya and Jhansi Rani were resting inside," an official said.

He added that one cub saw the stranger in the cage and jumped on him and bit his neck. The other cub joined the attack. "When Anjaneya started screaming, the tigers got enraged and took him into the safari area. He succumbed to the injuries," the official said.

Staffers rushed to the spot and informed higher officials who brought the tigers under control. Sources say parts of Anjaneya's body were eaten by tigers but there was no official confirmation. The body was later shifted to Victoria Hospital for postmortem. Bannerghatta police said a complaint was registered by the zoo authorities. Anjaneya, a resident of Hakki Pikki colony, is survived by his wife and two kids.

BBP executive director Santosh Kumar said, "The incident happened around 5.30pm. Anjaneya failed to properly operate the gates of the holding place and the safari area. This resulted in the tigers attacking him. His neck was bitten." When asked why an inexperienced worker was sent to feed tigers, Santosh said a senior staffer was around. "In fact, the tigers chased him too. But he was lucky to get to a safe place. We're conducting an inquiry," he added. As per zoo rules, only experienced staffers should be deployed for work in the enclosure.

TOP COMMENTHe was given the role of Gatekeeper, but apart from that he was asked to replace an experienced Animal Keeper and perform the job of feeding the tigers. In India, this happens everywhere, ie: to put ... Read MoreEMC3

Negligence in the past

Anjini's death comes close on the heels of another negligence case reported in the safari area last month.Negligence by staffers who manage the safari enclosures had led to a ferocious fight between Royal Bengal tigers and white tigers.

கரை புரளும் தீபாவளி உற்சாகம்... கூட்டம்... கொண்டாட்டம்!  கடை 

வீதிகளில் விறுவிறு வியாபாரம்!


தீபாவளியை முன்னிட்டு, கோவை மாநகர கடை வீதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது; தள்ளுபடி, சலுகை, இலவசம் என, நிறுவனங்கள் வாரி வழங்குவதால், வியாபாரம் உச்சத்தை எட்டியுள்ளது.வழக்கத்தை விட, இந்த ஆண்டில், ஐப்பசி முதல் நாளிலேயே தீபாவளி வந்து விட்டது. 

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து வந்ததால், செப்டம்பரிலேயே பண்டிகை உற்சாகம் களை கட்டத் துவங்கியது. கடந்த ஒரு வாரமாக, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், ராஜவீதி, டி.பி.ரோடு உள்ளிட்ட முக்கிய வர்த்தகப் பகுதிகளில், மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கே இடமின்றி, பொது மக்கள் தவித்து வருகின்றனர்.ஜவுளி நிறுவனங்கள், தங்கள் கடைகளின் முகப்புகளை பிரமாண்டமாக அலங்கரித்து, மக்களை வசீகரிக்கின்றன.

 ஓவியா சேலை, லெஹங்கா, விதவிதமான சுடிதார் என புதுப்புது டிசைன்களிலும், கவர்ச்சிகரமான வண்ணங்களிலும் ஆடைகளைக் குவித்து, பெண்களை ஈர்த்து வருகின்றன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டில், குழந்தைகளுக்கான ஆடைகள், அதிகளவில் இறங்கியுள்ளதாகக் கூறுகிறார் ஜவுளிக்கடை நிர்வாகி ஒருவர்.ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹோம் அப்ளையன்சஸ் என பல்வேறு நிறுவனங்களும், தள்ளுபடி, சலுகை மற்றும் பரிசுகளை வாரி வழங்கி வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு 'ஸ்லோகன்' போட்டி நடத்தி, அட்டகாசமான பரிசுகளை அள்ளித்தருகின்றன. இதனால், பொது மக்களுக்கு எந்தக் கடையில் எதை வாங்குவது என்பதில் பெரும் குழப்பமும் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், எல்லாக் கடைகளிலும் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது.பல்வேறு கடைகளுக்கும் சென்று, 'ஷாப்பிங்' முடித்த பின், உறவுகள், நட்புகள் சகிதமாக, ஓட்டலில் சென்று சாப்பிடுவது, நமது மக்களுக்கு வாடிக்கையான விஷயம். அந்த வகையில், ஓட்டல்களிலும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

 கடந்த மாதத்தில், தொடர் மழை காரணமாக, பண்டிகை வியாபாரத்தைப் பார்க்க முடியாத சிறு வியாபாரிகள், சமீபத்திய நாட்களில் வியாபாரம் ஓரளவுக்கு நடப்பதால், நிம்மதிப் பெருமூச்சு அடைந்துள்ளனர்.ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த பின், பல நாட்களாக இறங்கு முகத்தில் இருந்த வியாபாரம், கடந்த இரு வாரங்களாக மீண்டும் ஏறுமுகத்தில் இருப்பதாக வணிக நிறுவனங்கள் நடத்துவோர், மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில், வரும் வாரத்தில் வியாபாரம் உச்சத்தைத் தொடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., போன்றவற்றால் ஏற்பட்ட தேக்கநிலை மாறுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.

-நமது நிருபர்-

நர்சிங், பிபார்ம் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: அரசு மருத்துவக் 

கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின

பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உள்ளிட்ட 9 பட்டப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 796 இடங்கள் நிரம்பவில்லை.

தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பிபார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பிஎஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய 9 பட்டப் படிப்புகள் உள்ளன. 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7,843 இடங்கள் உள்ளன.

தனியார் கல்லூரிகளில் காலியிடம்

இந்தப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று நடந்த கடைசி நாள் கலந்தாய்வில் 230 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை பெற்றனர்.

முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்களும் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7,843 இடங்களில் 7,047 இடங்கள் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 796 இடங்கள் காலியாக உள்ளன.

விரைவில் 2-ம் கட்டம்

இது தொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜிடம் கேட்டபோது, “முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். 2-ம் கட்ட கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 796 இடங்கள் நிரப்பப்படும்” என்று தெரிவித்தார்.
மூலக்கதை

விபத்து இழப்பீட்டு வழக்குகளில் ஆயுர்வேத மருத்துவர்களின் 

ரசீதுகளை ஏற்க வேண்டும்: கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு


விபத்து இழப்பீட்டு வழக்குகளில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்கள் அளிக்கும் ரசீதுகள் மற்றும் சான்றிதழ்களை கீழமை நீதிமன்றங்கள் ஏற்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்ராஜா என்பவர் 2006-ல் லாரி மோதி இடது காலில் பலத்த காயம் அடைந்தார். இதற்காக சித்த மருத்துவரிடம் சிகி்ச்சை பெற்றார்.
விபத்து இழப்பீடு கோரி நெல்லை நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அப்போது சித்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதற்கு ஆதாரமாக சித்த மருத்துவர் அளித்த சான்றிதழ்களையும், ரசீதுகளையும் தாக்கல் செய்தார். இவற்றை ஏற்க மறுத்து, கார்த்திக்ராஜாவுக்கு வெறும் ரூ.13 ஆயிரம் மட்டும் இழப்பீடு வழங்க 2010-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் கார்த்திக்ராஜா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவு: இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் சித்த மருத்துவர்கள் அளிக்கும் சான்றிதழ்கள் செல்லத்தக்கது என்றும், சிகிச்சை தொடர்பாக சான்றிதழ் வழங்க சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை மருத்துவர்களுக்கு அதிகாரம் உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது இழப்பீடு வழங்க ஆங்கில மருத்துவர்கள் அளிக்கும் ரசீது மட்டுமே ஏற்கக்கூடியதுஎன கீழமை நீதிமன்றம் முடிவுக்கு வந்தது சட்டவிரோதம்.

அரசு அங்கீகரித்துள்ளது

இந்தியாவில் காலம்காலமாக சித்தா மருத்துவம் நடைமுறையில் இருந்து வருகிறது. சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ  முறைகளை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. சிக்கன் குனியா, டெங்கு போன்றவற்றை கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயம் சித்த மருந்துதான். இதை மத்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

இதனால் சித்தா, ஆயுர்வேதம், யுனானி சிகிச்சை பெற்றவர்கள் இழப்பீடு பெறத் தகுதியானவர்கள். சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவர்கள் அளிக்கும் சான்றிதழ்கள், ரசீதுகள் இழப்பீட்டுக்குத் தகுதியானவை என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

விழுப்புரம் லாரி, கார் விபத்து - சென்னையைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே இன்று நள்ளிரவு நடந்த கோர விபத்தில் சென்னையை சேர்ந்த பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியை அதன் ஓட்டுநர் தூங்குவதற்காக, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் என்ற கிராமத்தில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த இனோவா கார் ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது அதில் பயனம் செய்து கொண்டிருந்த சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் உமா, அம்பத்தூரைச் சேர்ந்த மீனா, ரமேஷ் கண்ணா மற்றும் சுகுனா, காரின் ஓட்டுநர் பிரசாந்த் உள்ளிட்ட 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் அனீஷா என்ற இளம்பெண் மட்டும் படுகாயத்துடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ’துக்க நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னையில் இருந்து சேலம் நோக்கிச் சென்றிருக்கின்றனர். அப்போது இந்தத் துயர சம்பவம் நடைபெற்றிருக்கின்றது’ என்று தெரிவித்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவக்கியிருக்கின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் விதிகளை மீறி சாலைகளிலேயே நிறுத்தப்படுகின்றன. அதை கவனிக்க வேண்டிய காவல்துறையும் கண்டு கொள்வதில்லை. அதன் காரணமாகவே இப்படியான விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன என்கின்றனர் பொதுமக்கள்.


டெங்கு காய்ச்சல் வார்டுகளில் இடநெருக்கடி:மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் வருவதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால், சுகாரத்துறையினர் தங்களின் பதவிகளை தக்க வைக்கவும், டெங்கு விசாரணையில் இருந்து தப்பிக்கவும் டெங்குவால் மரணம் என யாருக்கும் மறந்தும்கூட பதிவு செய்வதில்லை.

அரசு மருத்துவமனையில் உடல்களை ஒப்படைக்கும்போது, டெங்கு காய்ச்சல் என சான்று கொடுக்க மாட்டோம் என்ற நிபந்தனையின் பேரிலேயே சடலங்களை உறவிவனர்களிடம் ஒப்படைக்கின்றனர். உறவினர்களும், இறந்தவர் உடல்களை எந்த சேதாரமும் இல்லாமல் பெறுவதற்காக மருத்துவமனை முடிவுக்கு சம்மதித்து உடல்களை பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. நோயாளிகள் ஆபத்தான கட்டத்தை நெருங்கும் நிலையில், அவர்களை கைவிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தனியார் மருத்துவமனைகள் அனுப்பி விடுகின்றன.
ஆரம்ப சுகாதார நிலையங்களும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல், மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ்களில் அனுப்பி விடுகின்றன. அதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை மையம் தொடங்கும் அளவுக்கு டெங்கு காய்ச்சல் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

மதுரை அரசு மருத்துவமனையில் உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவில் 200-க்கும் மேற்பட்ட காய்ச்சல் நோயாளிகள் வருகின்றனர். இவர்களில் பலருக்கு மருத்துவமனையின் 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை பிரிவில் டெங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டால் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்படுகின்றனர். அதற்கு பிறகு அவர்கள் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் 304, 202, 115 ஆகிய வார்டுகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் வார்டுகளில் ஐசியூ பிரிவிலும், பொது வார்டுகளில் வைத்தும் டெங்கு பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் நோயாளிகள் குவிவதால் மருத்துவனையில் அவர்களுக்கு போதிய பெட் வசதியில்லாமல் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், பெட் வசதியில்லாமல் அவர்கள் தவிப்பதும், முழுமையான சிகிச்சை பெறும் முன்பே டெங்கு காய்ச்சல் நோயாளிகள் வெளியேற்றப்படுவதும் தொடர்கிறது.

மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் கூறியதாவது: காய்ச்சலுக்கு தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலியாக இருக்கிற பெட்டுகளை ஒருங்கிணைத்து காய்ச்சல் நோயாளிகள் தடையின்றி சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள் அதிகமாக வந்தால் மற்ற வார்டுகளிலும் வைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது. அனைவருக்கும் பெட் வழங்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.
உங்கள் இ-வாலட்டில் இருக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா?

கார்க்கிபவா



இ-வாலட்கள் டெங்குவை விட வேகமாகப் பரவி வருகின்றன. வசதியாக இருப்பது, கையில் ரொக்கமாக வைத்திருக்கத் தேவையில்லை என்பது போல பல நல்ல விஷயங்கள் இருப்பதால் மக்களும் இவற்றை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இ-வாலட் நிறுவனங்கள் தரும் தள்ளுபடிகளும், கேஷ்பேக் ஆஃபர்களும் இன்னும் அதிகமானோரை இ-வாலட் பக்கம் திருப்பி வருகிறது.
இ-வாலட் பயனர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை அந்தந்த நிறுவனங்களே சொல்லித் தந்துவிடுகின்றன. அதிலும் கவனமாக இருக்க வேண்டிய சில பாதுகாப்பு வழிகளைப் பார்க்கலாம்.

டவுன்லோடு:
அதிகாரபூர்வ ஆப் ஸ்டோர்களிலிருந்துதான் இந்த ஆப்களைத் தரவிறக்க வேண்டும். மற்ற இணையதளத்திலிருந்தோ, மின்னஞ்சல் அல்லது ப்ளூடூத் மூலமாக யாராவது அனுப்பினாலோ அவற்றை இன்ஸ்டால் செய்ய வேண்டாம். அவ்வப்போது வரும் ஆப் அப்டேட்களைத் தவறாமல் செய்துவிடவும்.

பாஸ்வேர்டு:
இப்போது கைரேகை ஸ்கேனர் வந்துவிட்டதால் பெரும்பாலானோர் அதை ஆக்டிவேட் செய்துவிடுகிறார்கள். அந்த வசதி இல்லாத மொபைல் வைத்திருந்தால் உடனே பாஸ்கோடு போட்டுவிடவும்.

அதிகப் பணம் வைத்திருக்க வேண்டாம்:
பெரும்பாலும் இ-வாலட் பயன்படுத்துகிறவர்கள் பெரிய தொகை இருக்கும் பொருள்களை அதன் மூலம் வாங்குவதில்லை. சிறிய அளவிலான ட்ரான்ஸாக்‌ஷனுக்குதான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எதுவாக இருந்தாலும், இ-வாலட்களில் அதிகப் பணம் வைக்க வேண்டாம். தேவையானபோது அப்லோடு செய்துகொள்ளலாம்.

கிரெடிட் /டெபிட் கார்டு தகவல்கள்:
நேரத்தை மிச்சப்படுத்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்களைச் சேமித்து வைக்கும் ஆப்ஷன் இருக்கும். எப்போதும் அதை செய்துவிட வேண்டாம். முடிந்தவரை, ஒவ்வொரு டிரான்ஸாக்‌ஷன் போதும் அதை எண்டர் செய்வதே பாதுகாப்பானது.

பாஸ்வேர்டை மாற்றுங்கள்:
மின்னஞ்சலுக்கு மட்டுமல்ல; மொபைல் மற்றும் இ-வாலட் பாஸ்வேர்டுகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றப்பட வேண்டும். மொபைலுக்கும், இ-வாலட்டுக்கும் ஒரே பாஸ்வேர்டு வைப்பதை தவிர்க்கவும்.



விளம்பர கால்கள்:
தொலைபேசிவழி யாராவது அழைத்து இ-வாலட் பற்றியத் தகவல்கள் கேட்டால், அதைப் பகிராதீர்கள். குறிப்பாக பாஸ்வேர்டு போன்றத் தகவல்களை எந்த இ-வாலட் நிறுவனமும் தொலைபேசியில் கேட்காது என்பதைக் கவனத்தில்கொள்ளுங்கள்.

மின்னஞ்சல்:
இ-வாலட் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களைப் பொதுவாக குறுஞ்செய்தி மூலம் நாம் பெறுவோம். அதோடு சேர்த்து மின்னஞ்சல் நோட்டிஃபிகேஷனும் ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள். ஏனெனில், சில சமயங்களில் குறுஞ்செய்தி வருவது தாமதமாகலாம்; அல்லது வராமலும் போகலாம்.

டபுள் செக்:
மொபைல் மற்றும் டிடிஎச் ரீசார்ஜுகள்தான் மொபைல் வாலட்கள் மூலம் அதிகம் செய்யப்படுகின்றன. இதைச் செய்யும்போது மொபைல் எண் மற்றும் டிடிஎச் ரெஜிஸ்ட்ரேஷன் எண்களைக் கவனமாக டைப் செய்யவும். தவறான எண்களுக்கு ரீசார்ஜ் ஆகிவிட்டால் அதைத் திரும்பப் பெற இயலாது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முஸ்லிம் நாகஸ்வரக் கலைஞர்கள்!

எம்.குமரேசன்

கலைக்கு சாதி, மதம் கிடையாது என்பதுபோல, ஏழுமலையான் கோயிலில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரு கலைஞர்கள் நாகஸ்வர வித்வான்களாக சேவகம் செய்துவருகின்றனர்.




நாகஸ்வரக் கலைஞர்களில் ஷேக் சின்ன மவுலானா, தனக்கென தனிப் பாதை வகுத்தவர். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உலகமெங்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்துவதுபோல, முதன்முதலாக உலகம் முழுக்கச் சுற்றுப்பயணம் சென்று, நாகஸ்வரக் கச்சேரி நடத்திய பெருமைமிக்கவர். இசைத் துறையில் அவர் பெறாத விருதுகளே கிடையாது. சங்கீத கலாநிதி, சங்கீத சூடாமணி போன்ற விருதுகளுடன் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். இவரின் பேரன்கள் காசிம் மற்றும் பாபு ஆகியோர்தான் இப்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆஸ்தான நாகஸ்வரக் கலைஞர்கள்!

தாத்தா சின்ன மவுலானாதான் இவர்களுக்கு குரு. ஆறு வயதிலிருந்தே நாகஸ்வரம் கற்றனர். பன்னிரண்டு வயதில் தனியாகக் கச்சேரி நடத்தினர். சின்ன மவுலானா மேற்பார்வையில் இசை பயின்ற இவர்களை, 1996-ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம், ஆஸ்தான நாகஸ்வரக் கலைஞர்களாக நியமித்தது. ஏழுமலையான் கோயிலில் எந்த முக்கிய விழா நடந்தாலும் இவர்களின் நாகஸ்வரக் கச்சேரி அரங்கேறும். சமீபத்தில் நிறைவுற்ற திருப்பதி பிரம்மோற்சவ விழாவிலும், இவர்கள் பங்கேற்று நாகஸ்வரம் வாசித்தனர். கடந்த 21 ஆண்டுகளாக ஏழுமலையானுக்கு இந்தச் சேவையைச் செய்துவருகின்றனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதி, நாகஸ்வர கலைஞர்களுக்குப் புகழ்பெற்றது. இந்தச் சகோதரர்களுக்கும் பூர்வீகம் குண்டூர்தான். 300 ஆண்டுகளாக இவர்களின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக நாகஸ்வரம் வாசித்துவருகிறது. தற்போது, தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தில் இவர்கள் நிரந்தரமாகக் குடியேறியுள்ளனர். நாகஸ்வரம் வாசிக்கும்போது நெற்றியில் திருநீர் பூசி பக்தி மணம் கமழ காணப்படுகின்றனர். திருப்பதி மட்டுமல்ல, சிருங்கேரி மடம், ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில்களுக்கும் இவர்கள்தாம் ஆஸ்தான நாகஸ்வரக் கலைஞர்கள்.



1999-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி ஷேக் சின்ன மவுலானா மறைந்தார். தாத்தாவின் பெயரில் ஷேக் சின்ன மவுலானா அறக்கட்டளை தொடங்கி நடத்திவருகின்றனர். ஸ்ரீரங்கத்தில் நாகஸ்வரம் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனர். தவிலும் கற்றும்கொடுக்கின்றனர். சின்ன மவுலான மறைந்த ஏப்ரல் மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் அவரைப் போற்றும் வகையில் சிறப்பு ஆராதனை நடத்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகிறது. நாகஸ்வரம் மற்றும் தவிலில் சிறந்து விளங்கும் 10 பேரைத் தேர்ந்தெடுத்து, அதில் தேர்ந்தவர்களிடம் பயிற்சி பெறவைக்கின்றனர். இதற்காக அவர்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி சின்ன மவுலானா அறக்கட்டளை வழங்குகிறது. தேவைப்படுபவர்களுக்கு நாகஸ்வரமும் வாங்கிக் கொடுக்கின்றனர்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று நாகஸ்வரக் கச்சேரி செய்யும் காசிம் சகோதரர்கள் கூறுகையில், ``தாத்தாவும் எங்கள் தந்தை ஷேக் காசிம் சாகிப்பும்தான் மானசீகக் குருக்கள். நாங்கள் 9-வது தலைமுறை. கலைஞனுக்கு சாதி, மத, பேதமில்லை. கலைக்கு மதிப்பளிக்கும் வகையில், ஏழுமலையான் கோவிலில் எங்களை ஆஸ்தான நாகஸ்வரக் கலைஞர்களாக நியமித்துள்ளனர். திருமலையில் நடைபெறும் எல்லா விழாக்களிலும் நாங்கள் இசைப்போம். ஸ்ரீரங்கம் கோயில், சிருங்கேரி மடம் போன்றவற்றுக்கும் ஆஸ்தான வித்வான்களாக இருக்கிறோம். நாகஸ்வரக் கலை அழிந்துபோய்விடக் கூடாது. நம் பாரம்பர்ய மங்கல இசை காக்கப்பட வேண்டும்'' என்கின்றனர்.

ஏழுமலைவாசனின் எழில் உருவத்தைக் கண்ட பக்தர்கள், இவர்களின் இசையையும் செவி குளிரக் கேளுங்கள்!

மனைவிக்குச் சன்மானம் வழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! நினைவுதினப் பகிர்வு!

ஜெ.பிரகாஷ்




கிட்டத்தட்ட அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் திரைப்படக் கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்தார் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர். அதற்கு, கவிஞர் கண்ணதாசனும் பலியானார். விழா ஒன்றில்... அந்தப் பத்திரிகை ஆசிரியரைச் சந்தித்த ஒரு கவிஞர், ‘‘(கண்ணதாசனைக் குறிப்பிட்டு) கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்குக் கவிதையைப் பற்றி என்ன தெரியும்?’’என்று கோபத்துடன் கேட்டாராம். கவிஞர்கள் விஷயத்தில் யாரையும் விட்டுக்கொடுக்காத அந்தக் கவிஞர் வேறு யாருமல்ல... ‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ள நல்லவரின் கூட்டாளி’’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தனால் பாராட்டப்பெற்ற நம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான் அந்தக் கவிஞர். அவருடைய நினைவு தினம் இன்று.

‘நண்டு செய்த தொண்டு!'

கல்யாணசுந்தரம் வசித்த ஊரில் ஒரு மிராசுதார் இருந்தார். அவரிடம் ஒரு சிறுநிலத்தைக் குத்தகைக்கு விவசாயம் செய்துவந்தது கவிஞரின் குடும்பம். ஒருநாள் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்றார், கவிஞர். அப்போது மிராசுதார், ‘‘எங்க வயலுக்கு இப்பத்தான் தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருக்கோம். அது, முடிஞ்சப்புறம் உங்க வயலுக்குத் தண்ணி பாய்ச்சு’’ என்று சொல்ல... வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பினார் கவிஞர். மிராசுதாருக்குப் பலவேலி நிலம் என்பதால், அவை அனைத்துக்கும் தண்ணீர் பாய இரவாகிவிடும். ஆகையால், மறுநாள் காலையில்தான் நம் நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியும் என்று நினைத்த கவிஞர், அப்படியே தூங்கிப்போனார். மறுநாள் காலை எழுந்ததும், வயலுக்குச் சென்றார் கவிஞர். அங்கே, அவருடைய நிலத்திலும் தண்ணீர் தேங்கியிருந்தது.நமது நிலத்துக்கு யார் தண்ணீர் பாய்ச்சியிருப்பார்கள் என்று யோசித்த அவர்,நண்டு போட்ட துளை வழியாகத் தண்ணீர் வந்திருப்பதைத் தெரிந்துகொண்டார். இதைத்தான், ‘நண்டு செய்த தொண்டு’ என்ற தலைப்பில் ஒரு கவிதையாக எழுதினார் கல்யாணசுந்தரம். அந்தக் கவிதை, ‘ஜனசக்தி’ இதழில் வெளியானது.

17 வகையான தொழில்கள்!

''என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட கல்யாணசுந்தரம், இளம்வயதிலேயே தன்னுடைய பாடல்களில் பொதுவுடைமை கருத்துகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர்.



‘ஓடிப்போ... ஓடிப்போ கெண்டைக் குஞ்சே!
கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே...
தூண்டில்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே!’

- என்று தன்னுடைய 15-வது வயதிலேயே வாழ்க்கையின் தத்துவத்தைத் தன் அனுபவ நிகழ்வின் மூலம் கவிதையாக எழுதியவர் கல்யாணசுந்தரம். அவர், பாடல் எழுதத் தொடங்கும்போதெல்லாம், ‘வாழ்க பாரதிதாசன்’ என்ற தலைப்பில் எழுதிவிட்டுத்தான் பாடல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன்னுடைய 29 வயதுக்குள் 17 வகையான தொழில்களைச் செய்து பழகியவர் அவர். அதனால்தான், ''அவருடைய பாடல்களில் பன்முகங்களைக் காட்ட முடிந்தது'' என்று புகழ்ந்தவர்கள் பலர். அவருடைய பாடல்களைத் தொகுத்த பாலகிருஷ்ணன் என்பவர், ''கல்யாணசுந்தரம் பாடல்களை 12 வகைகளாகப் பிரிக்கலாம்’’ என்று கூறியுள்ளார்.

நிருபரிடம் சொன்ன வாழ்க்கை வரலாறு!

‘‘உங்கள் வாழ்க்கை வரலாற்றைப் பத்திரிகையில் எழுதவேண்டும்’’ என்று கேட்டநிருபர் ஒருவரை, தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம்நடந்துசென்றார் கல்யாணசுந்தரம். பிறகு, ரிக்‌ஷா ஒன்றில் அவரை அழைத்துச்சென்றார். அதன் பிறகு, பஸ்ஸில் பயணம். கடைசியில் கார் ஒன்றில் ஏறி, தன் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்க... தன்கூடப் பயணித்த நிருபர், ‘‘கவிஞரே, வாழ்க்கை வரலாறு’’ என்று ஞாபகப்படுத்தியுள்ளார். அதற்கு, ‘‘முதலில் நடையாய் நடந்தேன்; பிறகு, ரிக்‌ஷாவில் போனேன்; அதன் பிறகு,பஸ்ஸில் போக நேர்ந்தது; இப்போது கார். இதுதான், என் வாழ்க்கை. இதில் எங்கே இருக்கிறது வரலாறு?’’ என்று சிரித்துக்கொண்டே தன் வாழ்க்கையைச்சொல்லிவிட்டுப் போய்விட்டாராம் கவிஞர்.

பட அதிபருக்கு எழுதிய கவிதை!

கல்யாணசுந்தரம், ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் துணிச்சல்மிக்கவராக இருந்தார். திரைப்படம் நிறுவனம் ஒன்றுக்கு அவர் பாட்டு எழுதிக்கொடுத்தார். ஆனால், பணம் கைக்கு வந்துசேரவில்லை. பணத்தைப் பெறுவதற்காகப் பட அதிபரிடம் நேரில் சென்று கேட்டிருக்கிறார். ‘‘பணம் இன்னிக்கு இல்லே...நாளைக்கு வந்து பாருங்கோ’’ என்று பட அதிபர் பதில் சொல்ல... அதைக் கேட்ட கல்யாணசுந்தரமோ, பணம் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். ‘‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்’’ என்று பட அதிபர் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார். உடனே கல்யாணசுந்தரம்,சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

‘தாயால் வளர்ந்தேன்...
தமிழால் அறிவு பெற்றேன்...
நாயே - நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்...
நீ யார் என்னை நில் என்று சொல்ல?’

- என்று அதில் இருந்ததைப் பார்த்த பட அதிபர், அடுத்த நிமிடமே பணத்தைக் கொடுத்தனுப்பினாராம்.



மனைவிக்குச் சன்மானம்!

அதேநேரத்தில், மற்றவர் மூலம் தனக்குக் கிடைத்த சன்மானத்தை அவருக்கே திருப்பிக்கொடுத்து அழகு பார்த்தவர் கல்யாணசுந்தரம். ஒருநாள் அவருடைய அண்ணன் மனைவிக்கு வளைகாப்பு. அன்று... அவர் மனைவி கவிஞரிடம், ‘‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் முகத்துல பொன் சிரிப்பு’’னு கிண்டலாகச் சொன்னாராம். இதைத்தான் அவர், ‘கல்யாணப் பரிசு’ படத்தில் பல்லவியாகப் போட்டு பாட்டு எழுதினார். ‘‘இது, நீ எழுதிய பாட்டு. இந்தாப் பிடி சன்மானம்’’என்று அந்தப் பாட்டுக்குக் கிடைத்த பணத்தை அவர் மனைவியிடம் கொடுத்தாராம்.

‘தானா எவனும் கெடமாட்டான்
தடுக்கி விடாம விழமாட்டான்
போனா எவனும் வரமாட்டான் - மேலே
போனா எவனும் வரமாட்டான் - இதப்
புரிஞ்சிக்கிட்டவன் அழமாட்டான்!’

- என்று கவிஞர் கல்யாணசுந்தரம் தாம் இறப்பதற்கு முன் ஒரு திரைப்படத்துக்கு, பாடல் ஒன்றை எழுதியிருந்தார். ஆம் உண்மைதான். மேலே போனா எவனும் வரமாட்டான் என்று எழுதியதால்தான் என்னவோ தெரியவில்லை. அவரை இளம்வயதிலேயே அழைத்துக்கொண்ட காலனும் பூமிக்குத் திருப்பியனுப்பவில்லை.

முதியோர் நலனில் இளையோர்க்கு அக்கறை இருக்கிறதா?

Published : 04 Oct 2017 09:24 IST

எஸ்.வி.வேணுகோபாலன்





முதியோர் தினமான அக்டோபர் 1 அன்று சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் பலர் முதியோர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததைப் பார்க்க ஆறுதலாக இருந்தது. அன்று ஒரு நாள் மட்டுமாவது இளம் தலைமுறையினர் பலருக்கு, முதியவர்கள் பற்றிய நினைவும் அக்கறையும் வெளிப்பட்டது நல்ல விஷயம்தான். மற்ற நாட்களில்? இளம்வயதில் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவன் நான். ரயில்வே சந்திப்பு மாதிரி அமைந்துவிட்ட அவளது வீட்டில் அதிகம் மூத்த தலைமுறையினரின் வருகையை, அவர்தம் பாடுகளை, பெருமிதங்களை, புகார்களை நேரடியாக உணரும் வாய்ப்பு அந்தப் பருவத்திலேயே எனக்கு வாய்த்தது. அப்போதெல்லாம் பத்தாணிப் பாட்டி அடிக்கடி சொல்லும் பழமொழி, "பழுத்தோலையைப் பார்த்துச் சிரிச்சதாம் குருத்தோலை" என்பது. பின்னர் கேட்டறிந்து புரிந்து கொண்டேன், தனக்கும் ஒரு முதுமை வரும் என்பதறியாத இளமையின் ஏளனப் போக்கை அது பகடி செய்கிறது என்று.

மருகும் மனங்கள்

உலக அளவில் மக்கள் தொகையில் முதியோர் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவிலும், 2011-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி, 121 கோடி மக்கள் தொகையில் 8.6% அதாவது 10.39 கோடி முதியோர்! அதன் பொருள் குடிமக்கள் மிகவும் பரவசத்தோடும், மகிழ்ச்சியோடும் தங்களது ஆயுளை நீட்டித்துக் கொண்டு வாழ்கின்றனர் என்பதல்ல. முதியவர்கள் பலர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இளம் தலைமுறையினர் பொருட்படுத்துவதுகூட கிடையாது. “நிம்மதியாக வாழத்தான் முடியவில்லை, நிம்மதியாகக் கண்ணை மூடவாவது முடியுதா?” என்ற மனதுக்குள் மருகும் பல முதியவர்களின் குரல் நம் காதுகளை எட்டுவதேயில்லை.

சமூகத் தன்மை, பொருளாதார வலு, குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்ட எத்தனையோ காரணிகள்தான் முதியோரின் வாழ்நிலைமைகளைத் தீர்மானிக்கிறது. உடலில் வலு இருக்கும் வரை ஏதேனும் வேலை செய்துகொண்டும், பொருள் ஈட்டிக்கொண்டும் வாழும் முதியோர் உடல் ரீதியாகவும் சற்று தங்களை முன்னேற்ற கதியில் வைத்துக் கொள்ள முடிகிறது. அதற்கு இயலாதோர் உடல் நலனும் நலிவுற்று, உளவியலும் காயப்பட்டு வேதனையோடு கழிக்க வேண்டியிருக்கிறது.

‘வெள்ளி விழா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உனக்கென்ன குறைச்சல்?’ என்று தொடங்கும் கவிஞர் வாலியின் அருமையான பாடல், ‘கடந்த காலமோ திரும்புவதில்லை, நிகழ்காலமோ விரும்புவதில்லை, எதிர்காலமோ அரும்புவதில்லை...இதுதானே அறுபதின் நிலை!’ என்று முதுமை எதிர்கொள்ளும் சவாலான காலகட்டத்தைச் செம்மையாகச் சொல்கிறது. சாலையோரம் நடந்துசெல்ல நேர்கையில், பயணங்களில், கடைகளுக்குச் சென்று பொருள் வாங்கும் தருணங்களில், மருத்துவமனைகளில் என அலைய நேருகையில் தம்மை மதிப்போர் யாருமற்ற தருணங்களை எதிர்கொள்ளும்போது முதியோர் அடையும் தாழ்மை உணர்ச்சியை விவரிக்க முடியாது. பேருந்துகளில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் இருக்கையை மீட்டெடுக்கக் கூடப் பல நேரங்களில் கடுமையான வசைகளை வாங்கித் திரும்ப நேரும். முதியவர்கள், சொல்ல முடியாத வலிகளுடன் கால்கடுக்க நின்றிருக்க, இளைஞர்கள் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் பேருந்து இருக்கைகளில் அமர்ந்திருப்பது அன்றாடக் காட்சி.

தியாகம் செய்யப்படும் கனவுகள்

பணிக் காலத்தில் தங்களால் செய்ய முடியாத பல விஷயங்களை, பணியிலிருந்து ஒய்வு பெற்றுக்கொண்ட பிறகு செய்துகொள்ளலாம் என்று பலரும் பட்டியல் போட்டு வைத்திருப்பார்கள். ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. தங்கள் திட்டங்களையெல்லாம் பரணில் மூட்டை கட்டிப் போட்டுவிட்டுத் தத்தம் மகன், மகள் குடும்பத்தைப் பொறுப்பெடுத்துப் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் பல முதியவர்களுக்கு ஏற்படுகிறது. உண்மையில் அதை உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். அதற்கான கூடுதல் பக்குவத்தை அவர்களுக்குக் காலம் அவர்களுக்கு அருளுகிறது. தங்களது பிள்ளைகளை கவனித்துக் கொண்டதை விடக் கூடுதல் நேரமெடுத்து பேரக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள முடிகிறது வயதானோர்க்கு.

20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்புவரை, வீட்டுக்கு அருகமை நட்பு வட்டம் குழந்தைகளுக்கு வாய்த்தது போலவே, முதியோர்க்கும் வாய்த்திருந்தது. இப்போது நிலைமை முற்றிலும் வேறு. இடப்பெயர்ச்சி கூட முதியோரது சொந்தத் தீர்மானத்தில் அமைவதில்லை. குடும்ப விஷயங்களில் முதியோர் கருத்து சொன்னாலும் பிரச்சினை, சொல்லாமல் நகர்ந்தாலும் பிரச்சினை. இதுபோன்ற சவால்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல என்றாலும், சில விஷயங்களில் நெகிழ்வுத்தன்மை கொண்டிருந்தால் இதுபோன்ற பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். பலர் அதை வெற்றிகரமாகச் செய்துகொண்டும் இருக்கிறார்கள்.

தாங்கள் வாழ்ந்த காலத்தின் தன்மையை அடிப்படையாக வைத்தே இன்றைய உலகைப் பார்த்து நொந்து கொள்வது பயன்படாது. முன்னேற்றமான மாற்றங்களை உளமார ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் இது.

பரஸ்பரப் புரிதல் அவசியம்

பல்வேறு சமூக பொருளாதார நடப்புகளின் காரணமாக, ஏற்கெனவே பல சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் பெரும்பான்மை இல்லங்களில், தங்களுக்கான மரியாதைக்குரிய இடத்தைத் தன்னை தன்னடக்கப் புரிதல்களோடு தக்கவைத்துக்கொள்ள வேண்டியது முதியோர் பொறுப்பாகிறது. இளம் தலைமுறையினர் பலர் எதிர்பார்ப்பது இதைத்தான். அதே சமயம், ஒரு குடும்பத்தில் மூத்த அங்கத்தினர் இருப்பது ஒரு இல்லத்துக்கு எத்தனை அனுபவ ஞான வெளிச்சத்தை வழங்குகிறது என்பதை இளைய, நடுத்தர வயதினரும் உணர வேண்டி இருக்கிறது. மூத்த குடிமக்கள் பாதுகாப்பை வெறும் சட்டத்தால் உறுதி செய்துவிட முடியாது.

கண்ணியத்தோடு நடத்தப்பட்டால் போதும் என்பதுதான் தற்காலத்தில் முதியோரது குறைந்தபட்ச கோரிக்கை! கொடிய சொற்களால் தாக்கப்படுவது அவர்களுக்குத் தாளமாட்டாத வேதனை தரக்கூடியது. முதியோர் தினத்துக்கான இவ்வாண்டின் முழக்கம், "தவறாக நடத்தப்படுதல் குறித்த விழிப்புணர்வு " (Abuse awareness ) என்றுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூகக் கல்வி புகட்டப்படாமல், அலுப்பும் சலிப்புமற்ற முறையில் முதியோர் நடத்தப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது. குருத்தோலைகள் கவனிப்பார்களாக!

- எஸ்.வி. வேணுகோபாலன்,

எழுத்தாளர், தொடர்புக்கு: sv.venu@gmail.com

பெண்ணும் ஆணும் ஒண்ணு 21: புகுந்த வீட்டை ஏன் வெறுக்கிறாள்?

Published : 18 Sep 2017 11:09 IST

ஓவியா




சாதி, வரதட்சணை இவற்றுடன் கைகோக்கும் இன்னொரு விஷயம், ஜாதகம் பார்ப்பது. ஜாதகப் பொருத்த பிரச்சினைகளுக்காக ஆண்டுக்கணக்கில் திருமணங்கள் தள்ளிப்போவதும் உண்டு. இப்படியான சூழலில் வெறும் குழப்பத்திலும் பதற்றத்திலும் காத்திருப்பவர்களாகப் பெண்கள் தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர். இந்தக் காலங்களில் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தால்கூட சில வீடுகளில் நிறுத்திவிடுகின்றனர். கோவிலுக்குச் சென்று வேண்டுதல் நடத்துவது, ஜோசியரிடம் செல்வது எனச் சுழலும் வாழ்க்கை. அதுவரை படிக்கவைத்த உயர் படிப்புகள் எவையும் இது மாதிரியான நேரத்தில் பயன்படுவதோ பயன்படுத்தப்படுவதோ இல்லை. படிப்பு, வேலை, தோற்றம் ஆகிய பொருத்தங்களுக்கெல்லாம் முன் நிபந்தனையாகப் போய்விடுகிறது இந்த ஜாதகப் பொருத்தம். ஜாதகம் பொருந்துகிறதா என்று பார்த்த பின்னரே மற்றவற்றைத் தொடர்கிறார்கள்.

பெண் பார்க்கும் படலம்

ஜாதகப் பொருத்தத்துக்குப் பிறகு பெண் பார்ப்பது என்று ஒரு நாளைக் குறிப்பார்கள். இப்போது இதில் ஓரளவு மாற்றம் வந்திருக்கிறது. சில காலங்களுக்கு முன்புவரை ஒரு பண்டத்தை வாங்குவதற்கு முன் எப்படிச் சோதித்துப் பார்ப்பார்களோ அதுபோல் பெண்ணைப் பரிசோதித்துப் பார்ப்பார்கள். பெண்ணை நடக்கச் சொல்லிப் பார்ப்பது, பாடச் சொல்லிக் கேட்பது இவையெல்லாம் இதில் அடக்கம். இவ்வளவும் செய்துவிட்டுப் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப் போகும் கொடுமையும் நடக்கும். சில முறை இந்த மாதிரி நடந்துவிட்டால் அந்தப் பெண்ணின் மனம் அவமானத்தால் பட்டுப்போகும். பல பெண்களுக்கும் மிகக் கொடுமையான காலகட்டமாக அந்த நாட்கள் அமைந்துபோகும். துள்ளல் மிகுந்த கனவுகள் எல்லாம் பட்டுப்போய், அமையும் வாழ்க்கை எதுவானாலும் சரி என்கிற மனநிலை இயல்பாகவே அவர்களுக்கு வந்துவிடும்.

பெண் பார்க்கும் சடங்கு, பெண்ணின் அடிப்படைத் தன்மானத்தைக் கேள்வி கேட்கும் நிகழ்வு என்ற புரிதல் படித்த பெண்களுக்கு முழுமையாக வந்திருக்கிறதா என்பது பதில் சொல்ல முடியாத ஒரு கேள்விதான். மாப்பிள்ளை பார்ப்பது எனும் சடங்கு இங்கு கிடையாது. பெண் பார்ப்பது என்ற கருத்தே பெண்ணை இழிவுபடுத்துகிறது என்பதை நாம் இன்னும் உணராமல்தான் இருக்கிறோம்.

மாறாத சடங்குகள்

காலமாறுதலும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை உருவாக்கியிருக்கும் புதுவெளியும் இந்த நிகழ்வின் வடிவங்களில் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றன. அதன் உச்சபட்ச மாற்றமாக இப்போது மாப்பிள்ளையும் பெண்ணும் பேசிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பெல்லாம் பெண் நிமிர்ந்து மாப்பிளைளையைப் பார்க்கக்கூட முடியாது. ரகசியமாகத்தான் பார்க்க முடியும். பார்க்காமலேயே சம்மதித்த திருமணங்களும் ஏராளம். இதனால் கடுமையான ஏமாற்றத்துடன் தொடங்கப்பட்ட மணவாழ்க்கைகளும் ஏராளம். பண்பாடு என்ற பெயரில் எவ்வளவு பெரிய தவறுகளை எல்லாம் நாம் செய்துவந்திருக்கிறோம்?

மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் சேர்க்கும் செல்வத்தின் முக்கிய பலன் தனது பிள்ளைகளுக்கு இது போன்ற சடங்குகள் அனைத்தையும் கடைப்பிடித்துத் திருமணம் செய்துவைப்பதுதான் என்று நம்புகிறார்கள். செல்வமில்லாதவர்கள் கடன் பெற்று, தங்கள் பிற்கால வாழ்க்கையையும் ஓய்வையும் விற்று இந்தத் திருமணக் கடன்களை முடிக்கிறார்கள். ஆனால், அந்தச் சடங்குகள் எல்லாம் பகுத்தறிவுக்கும் மனித வாழ்க்கைக்குத் தேவையான நியாயங்களுக்கும் அப்பால் நிற்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

திருமண வாக்குறுதிகள்

இவையெல்லாம் கூடிவந்த பின் இரு வீட்டார் சம்பந்தம் பேச முற்படுகிறார்கள். திருமணத்துக்குப் பின் பெண் வேலைக்குப் போக வேண்டுமா போகக் கூடாதா போன்றவற்றை இந்தப் பேச்சுவார்த்தைகள் தீர்மானிக்கின்றன. இப்போது பெண் மாப்பிள்ளையுடன் பேசத் தொடங்கிவிட்டபடியால் இந்தப் பெரியவர்கள் பேச்சுடன் உடன்பட்டோ முரண்பட்டோ அவர்கள் தங்களுக்குள் ஒரு பேச்சுவார்த்தை நடத்திக்கொள்கிறார்கள். அதில் பெரும்பாலும் பெண் வேலைக்குச் செல்வது, அவள் பிறந்த வீட்டுடன் அவள் வைத்துக்கொள்ள விரும்பும் உறவின் தன்மை போன்றவை பற்றிய பிரச்சினைகள் இடம்பிடிக்கின்றன. இதில் ஆண்தான் வழங்குகிறவனாக இருக்கிறான். எனவே, அவன் கோரிக்கை என்று எதையும் வைப்பதில்லை. கிட்டத்தட்ட வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு வாக்குறுதி வழங்குவதே அவர் பணியாக இருக்கிறது. நமது மக்களுக்குத் தேர்தல் வாக்குறுதிகள் வழங்கும் அரசியல்வாதிகள் தங்கள் சொந்த வாழ்க்கையில் இங்குதான் பிறக்கிறார்கள்.

சிறை வைத்துவிட்டு நீதியா?

இப்படிப் பல கட்டங்களைத் தாண்டித்தான் இங்கு திருமணங்கள் நடக்கின்றன. பெண் கழுத்தில் ஆண் தாலி கட்டுகிறான். இந்தத் தாலிக்குள்ள பொருள் ஒன்றுதான். தாலி கட்டிய கணவனுக்குச் சொந்தமானவள் இந்தப் பெண், அவனது உடைமை என்பதுதான் அது. மருத்துவர், உளவியல் நிபுணர், பொறியியல் வல்லுநர், காவல் துறை அதிகாரி, நீதிபதி என எந்தத் துறையைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் இந்தச் சமுதாயத்தில் இன்றுவரை அவர்களை ஆண்கள் வெட்ட வெளிச்சமாக ஒரு பண்டமாக நடத்தி, உடைமை கொண்டு சாசனம் எழுதிக்கொள்கிறார்கள். கட்டுகிறவருக்கும் கட்டிக்கொள்கிறவருக்கும் உறுத்தவில்லை. இந்தத் தாலி கட்டுதல் பற்றிப் பேசக்கூட முடியாத அளவுக்குப் புனிதப் பூச்சு பூசி வைத்திருக்கிறார்கள்.

இதன் பிறகு மணமான பெண் தனது பிறந்த வீட்டிலிருந்து கணவன் வீட்டுக்கு இடம்பெயர்கிறாள். இதுதான் அடிப்படையான சிக்கல். ஒரு பெண் திருமணத்தால் தனது வீட்டைத் துறந்து செல்கிறாள். ஆனால், ஆணுக்கு இந்தச் சிக்கல் இல்லை. இங்கு பெண் வாழ்க்கையின் நோக்கம் மறைமுகமாக ஒட்டுமொத்த சமுதாயத்தால் வலியுறுத்திச் சொல்லப்படுகிறது. இனி போகிற இடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டியதே அவளுக்கான விதி. இதுதான் அவள் வாழ்வுக்கான தர்மம். இதைப் போன தலைமுறைப் பெண் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டதுபோல் இந்தத் தலைமுறைப் பெண் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதை மறுத்தும் அவள் பேசத் தொடங்கவில்லை. தனது மறுப்பைத் தனது மனநிலையாக வைத்துக்கொள்கிறாள் பெண். இதுதான் இன்று பல குடும்பங்களின் சிக்கலாகப் பரிணமிக்கிறது.

இந்தத் தலைமுறைப் பெண் முதியோரைப் பார்த்துக்கொள்வதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறாள். முதியோர் பாதுகாப்பின் தேவை குறித்து நாம் பேசத்தான் வேண்டும். ஆனால், முதலில் கடமைகளை வரையறுப்பதில் இந்தச் சமுதாயம் என்ன நீதியைப் பின்பற்றியிருக்கிறது? ஆண் வீடு சார்ந்து பெண்ணின் வாழ்க்கை என்ற அநீதியான சட்டகத்துக்குள் பெண்ணின் வாழ்க்கையைச் சிறை வைத்துவிட்டு அவளிடமிருந்து நீதி கேட்பது என்ன நியாயம்? இந்தக் கேள்விக்கான முதல் பலி பெண் கணவனைத் தவிர கணவன் வீட்டு உறுப்பினர்களைத் தனது முழு உறவாக ஏற்றுக்கொள்ள மறுதலிப்பதிலிருந்து தொடங்குகிறது. தன் இடம் எது என்கிற சிக்கலிலிருந்தே அவர்களின் மணவாழ்க்கை சிக்கல்கள் ஆரம்பமாகின்றன.

(இன்னும் தெளிவோம்)

கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர் | தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk

பெண்ணும் ஆணும் ஒண்ணு 22: தனிக்குடித்தனம் நல்லதா?

Published : 24 Sep 2017 11:56 IST

ஓவியா




அன்பு வழியைத் தங்கள் உறவாகக்கொண்ட தம்பதி, சமுதாயத்தில் அறம் பேணி வாழ்வது குறித்து, ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ என்ற குறளில் வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று குடும்பம் என்கிற அமைப்பு, சமுதாய அறம் பேணுதலைப் பற்றிக் கவலைப்படுகிறதா? சமுதாயத் தளத்தில் இன்று எவையெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசுகிறோமோ அவை அனைத்தையும் பாதுகாக்கிற அமைப்பாகவே அது இருக்கிறது. அதனால்தான் சமீபத்தில் தனது 95-வது வயதைக் கொண்டாடிய முதுபெரும் இலக்கியவாதி கி.ராஜநாராயணன் , “சாதி ஒழிய வேண்டுமென்றால் ஒரே சாதித் திருமணத்தை நிறுத்துங்கள்” என்று பேசியிருக்கிறார். ஒரு கட்சிக்காரராகவோ சமுதாயப் போராளியாகவோ தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாத ஒரு மக்கள் எழுத்தாளர் இப்படிப் பேசியிருப்பதைத் தமிழ்ச் சமுதாயம் கேட்காததுபோல் இருப்பது சரியல்ல. குறைந்தபட்சம் ஏதோ அடிப்படையான தவறு இருக்கிறது என்றாவது சிந்திக்க முன்வர வேண்டும். ஆம், இன்றைய வாழ்க்கை முறையில் அறம் என்பது தொலைந்து போன சொல்லாகிக்கொண்டிருக்கிறது.

தனிக் குடித்தனமா கூட்டுக் குடும்பமா?

இந்தத் திருமண வாழ்வின் அறம் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இப்போது பெண் கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதா தனிக் குடும்பத்திலா என்ற கேள்வி தலையெடுக்கிறது. எப்படியாவது தனிக் குடும்பத்தில்தான் வாழ வேண்டும் என்று பெண்ணும் பெண்ணைப் பெற்றவர்களும் விரும்புகின்றனர். அதை மனதில் நிறுத்தியே பல்வேறு சிக்கல்கள் செயற்கையாகவும் இயற்கையாகவும் உருவாகி வளர்கின்றன. இதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை இரண்டும் இருக்கும் பெற்றோர் சற்றுகூட குழப்பமில்லாமல் தங்கள் பெண், மாப்பிள்ளையுடன் தனிக்குடித்தனம் வாழ வேண்டுமென்றும் மருமகள் தங்கள் மகனுடன் கூட்டுக் குடும்பத்தில் வாழ வேண்டுமென்றும் விரும்புகின்றனர். வயது முதிர்ந்தோரைப் பாதுகாக்கும் அரசு நிறுவனங்களும் முறையான பொது மையங்களும் இல்லாத ஒரு சமுதாயத்தில் (முதியோர்கள், நகரப் பேருந்துகளில்கூட பாதுகாப்பாக ஏற முடியுமா என்பது பெரிய கேள்விக்குறிதான். அவர்கள் ஏறும்வரை பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்குப் பொறுமை இருப்பதில்லை) இதன் விளைவுகள் பல பரிணாமங்களைப் பெறுகின்றன.

அறமற்ற பிரச்சினைகள்

எது நியாயம் என்று தீர்ப்பு சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொரு குடும்பத்தின் சிக்கல்களும் தனித்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. வயது, பணம், சமுதாயச் செல்வாக்கு இப்படிப் பல காரணிகள் ஒன்றுக்கொன்று முரணாகச் செயல்படுகின்றன. குறிப்பாக மனிதர்களின் குணங்கள், அவர்கள் கடந்த கால வாழ்க்கை அவர்கள் மனதில் உருவாக்கியிருக்கும் சுவடுகள் இவற்றுக்குச் சம்பந்தமே இல்லாத இன்னொரு சுமைதாங்கியாக இருக்கப் பெண் நிர்ப்பந்திக்கப்படுகிறாள். அவளோ சின்னப் பெண்ணாக இருக்கிறாள். அவளுக்கு இப்போது ஒரு புதிய உலகம் திறக்கப்பட்டிருக்கிறது. அதில் பயணிக்கவே அவள் விரும்புகிறாள். போன தலைமுறையின் சுமைதாங்கியாக வாழ அவள் விரும்பவில்லை. சரி. அவள் அப்படிதான் வாழ வேண்டும் என்று எப்படி சொல்ல முடியும்?

இதில் கணவன்களின் செயல்பாடு என்ன? பெண் பார்க்கும் படலத்தில் பெண் கேட்ட அனைத்துக்கும் வாக்குறுதிகளை அள்ளித் தருவார்கள். ஆனால், பிரச்சினைகளைத் தீர்க்காமலேயே பிரதமர் தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதுபோல் செய்ய நிறைய பேர் ஆசைப்படுகிறார்கள். இல்லையெனில் அவர் வெளிநாடுகளுக்குப் பயணிப்பதைப் போல இவர்கள் அலுவலகங்களில் தஞ்சமடைந்துவிடுகிறார்கள். குடும்பங்களில் இன்று நிலவும் பிரச்சினைகளிலும் அறமில்லை. அவை தீர்க்கப்படும் முறைகளிலும் அறமில்லை.

குடும்ப அமைப்பின் முக்கிய நோக்கங்களாக இன்றுவரை சொல்லப்படும் முதியோர் பாதுகாப்பு, குழந்தை வளர்ப்பு இரண்டுமே மிகுந்த நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. தனிக் குடும்பத்துக்கான காரணங்கள் வலுவானவை. ஆனால், அது நம் சமூக அமைப்பாக மாற வேண்டுமென்றால் இன்னும் பல துணை அமைப்புகள் தோன்றியிருக்க வேண்டும். அவை இன்னும் தொக்கி நிற்கின்றன. அவற்றைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக நாம் பழைய கூட்டுக் குடும்பத்தின் புனிதம் பற்றிப் பேசத் தொடங்குகிறோம்.

வீட்டைப் பராமரிக்கும் பெருஞ்சுமை

தனிக் குடும்பத்தில் பெண், வேலைக்குப் போகாதபட்சத்தில் அலுவலகம் செல்வது ஆணின் வேலை என்றும் வீட்டைப் பராமரித்து அந்த ஆணின் தேவைகளையும் குழந்தையின் தேவையையும் கவனிப்பது மனைவியின் பொறுப்பு என்றும் ஆக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் கூட்டுக் குடும்பத்தில் வீட்டு வேலை செய்வதை விரும்பாத பெண்கள் பலரும் இந்த அமைப்பில் வீட்டுப் பராமரிப்பு மட்டுமே தனது பணியா என்று கேள்வி கேட்பதில்லை. ஒரு பெரிய பகுதியினர் இதனைத் தங்களுக்குச் சாதகமாகவே எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், உண்மையில் தனிக் குடும்பத்தில் குழந்தைப் பராமரிப்புக்காக வேலைக்குப் போக வேண்டாம் என்ற முடிவெடுக்க வேண்டிய நிலையில் பெண்தான் இருக்கிறாள். மாமியார் அல்லது தாயாரின் அனுசரணை கிடைத்த பெண்களால் மட்டுமே வேலைக்குச் செல்ல முடிகிறது.

வேலைக்குச் செல்லும் பல பெண்கள் அதன் மூலம் தாங்கள் பெறும் சமூக அடையாளத்தை உணரத் தொடங்கிவிட்டார்கள். இப்படி உணர்ந்த பெண்கள் பல தடைகள் வந்தபோதும் தங்கள் பணி வாய்ப்பைத் துறக்க விரும்புவதில்லை. ஆனால், அரசுப் பணி போன்ற பாதுகாக்கப்பட்ட பணியிலுள்ளவர்களுக்கே இது முழுமையாகச் சாத்தியப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் மகப்பேறு காலம் மற்றும் குடும்பத்திற்கு அவர்கள் கவனம் அதிகம் தேவைப்படும் காலங்களில் அல்லது தங்களுக்கே ஆரோக்கியம் குன்றிய காலங்களில் தங்கள் பணிவாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்வதில் அவர்களுக்குக் குடும்பமும் தடையாக இருக்கிறது. பணி தரும் நிறுவனங்களும் தடைகளை ஏற்படுத்துகின்றன.

விடைபெற்றது வீட்டின் எளிமை

வேலைக்குப் போகும் பெண்களின் முக்கியப் பிரச்சினை வீட்டு வேலைகள். நிறைய இயந்திரங்கள் வந்துவிட்டதால் வீட்டு வேலைகள் எளிமையாக்கப்பட்டுவிட்டதாகப் பலரும் சொல்கிறார்கள். ஆனால், முன்பு ஒரு விறகடுப்பும் அத்துடன் இணைந்த கொடி அடுப்பும் மட்டும் இருந்த நமது வீடுகளில் இன்று அடுப்புகள் மட்டுமே ஐந்தாறு வகைகள் இருக்கின்றன. காஸ், மின் அடுப்பு, மைக்ரோவேவ் அவன், கிரில் அடுப்பு இப்படிப் பட்டியல் போகிறது. ஒரு வேளை சமையல் நடந்தது போய் அனைத்து வீடுகளிலும் நான்கு வேளை சமையல் நடக்கிறது. உணவு முறை மாறியிருக்கிறது அல்லது மாறிக்கொண்டேயிருக்கிறது. முக்கியமாகப் பெண்களைக் குறிவைத்துப் புதிய புதிய உணவுக் கோட்பாடுகள் வந்து குவிந்துகொண்டே இருக்கின்றன. வீட்டின் எளிமையும் விடைபெற்றிருக்கிறது. தாங்கள் வாழத்தக்கதாக வீடு இருக்க வேண்டும் என்ற நிலை கொஞ்சம் மாறி எல்லோரும் காணத்தக்கதாக வீட்டை வைத்துக்கொள்ள வேண்டும் என்று கண்ணுக்கு தெரியாத ஒரு நிர்ப்பந்தம் பெண்கள் மீது சுமத்தப்படுகிறது. இந்த அனைத்து மாற்றங்களும் அதிகப்படுத்தியிருப்பது பெண்களின் வீட்டு வேலைகளைத்தான்.

(இன்னும் தெளிவோம்)

கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்

தொடர்புக்கு: oviacs2004@yahoo.co.uk

காய்ச்சலால் அடுத்தடுத்து பலர் பலியான சோகம்: அச்சத்தில் திண்டுக்கல் பகுதி மக்கள்

Published : 07 Oct 2017 13:38 IST

பி.டி. ரவிச்சந்திரன்திண்டுக்கல்



மாணவி பூஜா

திண்டுக்கல் பகுதியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள் அடுத்தடுத்து பலியாகி வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. வறட்சி காலத்திலேயே, பழநி பகுதி மக்களை வாட்டி வதைத்த காய்ச்சல், தற்போது மழைக் காலத்திலும் விட்டு வைக்காமல் தொடர்கிறது. பழநி பகுதியை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காய்ச்சலால் மக்கள் பாதிப்புக்குள்ளாக தொடங்கி உள்ளனர்.

பலியாகும் மாணவர்கள்

உலகம்பட்டியைச் சேர்ந்த சூசைராஜ் மகள் செர்லின்பவிஸ்கா (9). அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இவர் டெங்கு காய்ச்சலால் பலியானார். கன்னிவாடி அருகே குட்டுத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்த தோமையார் மகன் ஆல்பர்ட் (13). காய்ச்சல் பாதிப்பால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவரும் பலியானார். இந்த இரண்டு இறப்புகளும் நேற்று முன்தினம் நடந்தன.

சாணார்பட்டி அருகே நத்தமாடிப்பட்டி நாகராஜன் மகள் பூஜா (9). 3-ம் வகுப்பு மாணவி. இவர் டெங்கு பாதித்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்பு வேடசந்தூர், நெய்க்காரப்பட்டி பகுதிகளிலும் காய்ச்சலால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதில் பெரும்பாலானோர் மாணவர்கள்.

திணறும் அரசு

மருத்துவமனைகள்

திண்டுக்கல் பகுதியில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 700 பேருக்கு மேல் காய்ச்சல் காரணமாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போதிய இடவசதி இல்லாததால் உள்நோயாளிகளுக்கு படுக்கைவசதியை ஏற்படுத்தி தர முடியவில்லை. காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், அரசு மருத்துவர்கள் முனைப்புடன் செயல்பட்டுவரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் வராத நிலையிலேயே தொடர்ந்து காணப்படுகிறது.

விரைவில் கட்டுக்குள் வரும்

மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் மாலதி கூறியதாவது: அரசு மருத்துவர்கள் அனைவரும் முழுவீச்சில் பணிபுரிந்து வருகின்றனர். லேசான காய்ச்சல் கண்ட முதல்நாளே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

காய்ச்சல் பாதிப்பு விரைவில் கட்டுக்குள் வர அனைத்து நடவடிக்கைகளும் சுகாதாரத்துறையால் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மது போதையில் கார் ஓட்டி விபத்து; ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் 6 மாதம் ரத்து: சைதை நீதிமன்றம் உத்தரவு

Published : 07 Oct 2017 20:01 IST

சென்னை




மது போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதம் ரத்து செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ஜெய் கடந்த மாதம் 21 ஆம் தேதி அதிகாலையில் குடிபோதையில் அடையாறு பாலத்தின் மீது காரை மோதினார். இதில் கார் மட்டும் சேதமடைந்தது. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, வேகமாக காரை ஓட்டியது, ஆவணங்கள் இல்லாதது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீஸார் நடிகர் ஜெய்யை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

இந்த வழக்கு சைதாப்பேட்டை குற்றவியல் 4வது நடுவர் மன்றத்தின் முன் நடந்தது ஒரு தடவை ஆஜரான ஜெய் அதன் பின்னர் ஆஜராகவில்லை.

இதையடுத்து ஜெய்யை இரண்டு நாளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீஸாருக்கு நடுவர் ஆப்ரகாம் லிங்கன் உத்தரவிட்டார். இந்நிலையில், நடிகர் ஜெய் இன்று (அக்.7) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இன்று காலை 10 மணிக்கே ஜெய் ஆஜரானார். அடையாளம் தெரியாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்து நண்பர்களுடன் ஆஜரானார்.

காலை 10 மணிக்கு முதல் வழக்காக ஜெய் வழக்கு வர நீங்கள் தான் ஜெய்யா? என்று குற்றவியல் நடுவர் கேட்க ஆமாம் என்று பணிவுடன் ஜெய் கூறினார். கூப்பிடுகிறேன் வெயிட் பண்ணுங்க என்று கூறிவிட்டு மற்ற வழக்குகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

பின்னர் 12 மணி அளவில் ஜெய் வழக்கை கையிலெடுத்த குற்றவியல் நடுவர் ஜெய்யிடம் உங்களுக்கு லைசென்ஸ் இருக்கிறதா? குடித்து விட்டு கார் ஓட்டினீர்களா? உங்கள் கார் நம்பர் பிளேட்டை ஏன் புரியாத அளவிற்கு எழுதியுள்ளீர்கள்? காருக்கு காப்பீடு சான்றிதழ் இருக்கிறதா? காருக்கு மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இருக்கிறதா? சீட் பெல்ட் ஏன் அணியவில்லை? கார் கண்ணாடியில் கருப்பு கலர் பிலிம் ஒட்டியது ஏன்? என்பது போன்ற கேள்விகளை சரமாரியாக கேட்க பல கேள்விகளுக்கு ஆமாம், இல்லை என ஒற்றை வரியில் குனிந்த தலை நிமிராமல் பதில் சொன்னார் ஜெய்.

காரில் கருப்பு கலர் பிலிம் ஒட்டியதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, வாகன சான்றிதழ், இன்ஷுரன்ஸ் உள்ளதா என ஏன் எப்.ஐ.ஆரில் குறிப்பிடவில்லை என்று போலீஸாரிடமும் கேள்வி எழுப்பினார். பின்னர் உணவு நேரம் வர குற்றவியல் நடுவர் சென்றுவிட்டார். வெளியில் சாப்பிட சென்றால் பத்திரிகைகாரர்களை சந்திக்க வேண்டுமே என்று ஜெய் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரவே இல்லை.

மதியம் மூன்றரை மணிக்கு பின்னர் சில வழக்குகளை கவனித்துவிட்டு ஜெய் பக்கம் திரும்பிய குற்றவியல் நடுவர் குற்றச்சாட்டுகளை கூறி ஒத்துக்கொள்கிறீர்களா? என கேட்க ஒத்துக்கொள்கிறேன் என்று ஜெய் கூற தனித்தனியாக ஒவ்வொரு குற்றத்திற்கும் அபராதத் தொகையை சொன்ன நடுவர் முடிவில் ரூ.5200 அபராதம் விதிப்பதாகவும், 6 மாத காலம் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார்.

ஓட்டுநர் உரிமம் ரத்து உத்தரவை காவல் ஆணையருக்கு அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் அபராதத்தை செலுத்திய ஜெய் மீடியாக்கள் கண்களில் படாமல் இருக்க தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் ஏறி பறந்தார்.

VIT UNIVERSITY

146 medicos petition HC for place in Govt college


Karur Vysya Bank opens 750th branch

Karur Vysya Bank’s 750th branch was inaugurated at 21, Kaliamman Koil Street, Chinmaya Nagar recently. This is the 46th branch of the bank in Chennai. It is equipped with a cash recycler which accepts and dispenses cash. B.A. Kothandarama Shetty, chairman and managing director, Viveks Private limited, and A.J. Suriyanarayana, bank director, were present.

Vels University celebrates silver jubilee

Variety entertainment by students and felicitations offered by film personalities, political leaders marked the silver jubilee celebrations of Vels University at Pallavaram on Saturday.
Normally, October 7, the birthday of Chancellor Isari K. Ganesh is celebrated as family day on the campus. The silver jubilee of the university coincided with the 50th birthday of its Chancellor. Apollo Hospitals chairman Prathap C. Reddy presided.
He said education and medicine were two important areas of focus in the country. Vels University had opened educational institutions covering both school and collegiate education apart from touching upon the medical field.
Mr. Ganesh distributed prizes to the winners of various competitions held at school/college level.

NEWS TODAY 23 AND 24.12.2024