Tuesday, October 31, 2017

MMC student hangs himself, 2nd in 2 weeks

TNN | Oct 31, 2017, 00:06 IST


Chennai: A second year Madras Medical College student hanged himself in his hostel room on Sunday night, allegedly over depression, police said.

The suicide of M Arun Selva, the second such death of an MMC student in less than two weeks, has caused concern, with the Doctors Association for Social Equality (DASE) calling for a probe by the administration.

Police said Arun Selva, a 20-year-old native of Vandavasi in Tiruvannamalai district, refused to accompany his friends for dinner, claiming he had to make a phone call. When he returned, they found him hanging from the ceiling of the room and called police. A team arrived and sent his body for autopsy.

On Monday, a student told TOI that Arun usually kept to himself. "He would rarely talk unless spoken to. This was often mistaken for disinterest. Everyone knew he was a bright student," said the third year student.

On October 16, P Soujanya, a second year student, committed suicide, after appearing depressed for two days. Police, quoting her parents, said the 20-year-old had joined the course despite having little interest in it and even told them that she might not be able to cope up with the pressure. On October 13, she was said to have been taken to a private hospital on Greams Road with a complaint of depression.

"Soon after her suicide, the MMC management conducted counselling session for students. Since then, Arun Selva had appeared depressed," said a police officer quoting some of Arun Selva's friends.

On Monday, DASE general secretary Dr G R Ravindranath said the trend was disturbing. "The management should investigate and take necessary steps," he added.

With regard to Arun Selva's death, MMC dean Dr Narayana Babu said, police were investigating the cause. He ruled out harassment by professors to be among the reasons that pushed the student to the brink. "Some of our students complain of high stress levels. That is bound to happen in a medical college. We have several programmes and facilities on campus to help students cope, including mentorship and counselling," he said.

Rain: Holiday declared for schools in Chennai, Tiruvallur and Kancheepuram districts; Chennai colleges also to remain closed

Vinayashree J| TNN | Updated: Oct 30, 2017, 21:23 IST


The education department took a decision on Monday evening after weathermen said there would be heavy to very ... Read More

CHENNAI: The Tamil Nadugovernment declared a holiday for all schools in Chennai, Tiruvallur and Kancheepuram districts on Tuesday due to forecast of heavy rain.

The education department took a decision on Monday evening after weathermen said there would be heavy to very heavy rainfall in the city till Friday.

Colleges in Chennai district will remain closed on Tuesday due to rain, collector announced on Monday night.

Chennai rain: Roof of Chennai Central railway station starts to leak again

Siddharth Prabhakar| TNN | Oct 30, 2017, 20:22 IST



CHENNAI: Despite assurances and work taken up by Southern Railway, the roofof Chennai Central railway station, which caters to three lakh daily passengers, has started to leak again in the wake of heavy rain in Chennai.

The roof started to leak on Monday the evening. A video shared by a passenger on social media shows that the area on the old concourse and new concourse near the closed food plaza have been covered in water.
A senior official in the Southern Railway said men were working to remove water. However, since the roof would be slippery, they could not be sent up to unclog the drains.

On several occasions, the roof used leak even after a brief spell of rain. It must be noted that the divisional railway manager of Chennai Railway Division had issued strict instructions to ensure that such an issue would not crop up this year.

Doctors leave scissors inside man’s abdomen

TNN | Oct 31, 2017, 01:24 IST



NELLORE: Almost a month after a 45-year-old man underwent an appendicitis operation at the Nellore Government General Hospital (GGH) here, he had to be readmitted only to learn that a pair of surgical scissors was left behind in his stomach during the earlier surgery.

Hospital sources said the patient Sireekapu Chalapathi had been suffering from appendicitis for the past few years and upon examination, it was found that the appendix had damaged a portion of his intestines. On October 3, a team of doctors headed by Dr Padma Shree removed Chalapathi's appendix as well as the damaged portion of intestines.

TOP COMMENTwell this is what happens when u induce reservation in critical sectors like healthcare  TANUJ PARIHAR

On October 27, however, Chalapathi returned to the hospital complaining of severe stomach and abdominal pain. Upon examination, doctors found that a large pair of surgical scissors was left behind in his stomach after the previous surgery. He was immediately operated upon and the scissors were removed, but his condition is still critical.

GGH superintendent Dr Hari has ordered an internal inquiry.The botched operation became public on Monday after the X-Ray showing the scissors inside Chalapathi's stomach was leakedto the media.
ஐ.ஏ.எஸ்., தேர்வில் காப்பியடித்து தில்லுமுல்லு

ஐ.ஏ.எஸ்., தேர்வில் காப்பியடித்து  தில்லுமுல்லு
சென்னை: சென்னையில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., சினிமா பட பாணியில், ஐ.ஏ.எஸ்., தேர்வில் காப்பி அடித்த, தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியமான, யு.பி.எஸ்.சி., இந்த ஆண்டு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளில், 985 காலியிடங்களை நிரப்ப, ஜூன், 18ல், முதல் நிலை தேர்வை நடத்தியது. இதில், 13 ஆயிரத்து, 350 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கான மெயின் தேர்வு, அக்., 28ல் துவங்கி, நவ., 3 வரை நடக்கிறது. சென்னை உட்பட, நாடு முழுவதும், 24 முக்கிய நகரங்களில் தேர்வு நடக்கிறது. 

அக்., 28ல், சென்னை எழும்பூரில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த, தமிழக, ஐ.பி.எஸ்., அதிகாரி, ஷபீர் கரிம், 30, தேர்வு எழுதினார்.
பொறியியல் பட்டதாரியான இவர், 2014ல், யு.பி.எஸ்.சி., தேர்வில், 112வது இடத்தில் தேர்ச்சி பெற்று, ஐ.ஏ.எஸ்., தகுதி பெற்றார். ஆனால், ஐ.பி.எஸ்., அதிகாரியாக விருப்பம் தெரிவித்து, பயிற்சிக்கு பின், நெல்லை மாவட்டம், நாங்குநேரி, சப் - டிவிஷன், உதவி எஸ்.பி.,யாக பயிற்சி பெற்று வந்தார். கேரளாவில், பல பெயர்களில், மனைவியுடன் சேர்ந்து, ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்களையும் நடத்தி வருகிறார். இதனால், மீண்டும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக முயற்சித்துள்ளார்.அதற்காக, விடுமுறை எடுத்து படித்து வந்த, ஷபீர் கரிம், தேர்வு மைய கண்காணிப்பாளர்களின் கண்ணில் மண்ணை துாவி, அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, மொபைல் போன் மற்றும் சிறிய வகை, 'புளூடூத்' கருவியை எடுத்து சென்று உள்ளார். 

அதன் வாயிலாக, ஐதராபாதில் இருந்த, மனைவிக்கு கேள்விதாளை அனுப்பி, 'புளூடூத்' கருவி வழியாக பதிலை பெற்று, தேர்வு எழுதி உள்ளார்.

இவரது தில்லாலங்கடி வேலையை கண்டுபிடித்த, தேர்வு மைய கண்காணிப்பாளர், ஷபீர் கரிமை, எழும்பூர் போலீசில் ஒப்படைத்து உள்ளார். அவரிடம், நேற்று, சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர், சாரங்கன், இணை கமிஷனர், மனோகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது, நடிகர் கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., சினிமா பட பாணியில், ஷபீர் கரிம் காப்பி அடித்து, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார், அவர் மீதும், அவரது மனைவி மீதும் மோசடி வழக்கு பதிந்துள்ளனர். 

நேற்று ஹபீர் கரிமை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த, அவரது மனைவி ஜாய்சி என்.ஜியாவையும் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

சதய விழாவில் பிரகதீஸ்வரருக்கு பேராபிஷேகம்


சதய விழாவில் பிரகதீஸ்வரருக்கு பேராபிஷேகம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், ராஜராஜசோழன், 1,032வது ஆண்டு சதய விழாவை முன்னிட்டு, 48 வகையான பொருட்களால், பிரகதீஸ்வரருக்கு பேராபிஷேகம் நடந்தது.

தஞ்சையில், ராஜராஜசோழனின், 1,032வது சதய விழா, நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை, 8:00 மணிக்கு, திருமுறை வீதி உலாவுடன், யானை மீது, தேவாரம் - திருவாசகத்தை வைத்து, ஊர்வலமாக ராஜராஜன் சிலை வரை எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சோழன் சிலைக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, பிரகதீஸ்வரருக்கு தேன், தயிர், மஞ்சள், பால், பழம் ஆகிய, 48 வகையான பொருட்களால், பேராபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தை காண, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர், சிவனடியார்கள் திரண்டு இருந்தனர். கும்பகோணம் அடுத்த, உடையாளூரில் உள்ளதாக கூறப்படும் ராஜராஜசோழனின் நினைவிடத்தில், 1,032வது சதய விழா, நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமானோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
பாரிவேந்தர் மீதான வழக்கு: ரத்து செய்தது ஐகோர்ட்


சென்னை: எஸ்.ஆர்.எம்., குரூப் கல்வி நிறுவனங்களின் தலைவர், பாரிவேந்தருக்கு எதிரான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னையை அடுத்த, காட்டாங்குளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., மருத்துவப் பல்கலையில், மருத்துவப் படிப்புக்கு இடம் பெற்று தருவதாக, கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக, 'வேந்தர் மூவிஸ்' நிர்வாகி மதன் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பல்கலையின் நிர்வாகி பாரிவேந்தர் மீதும், புகார் கூறப்பட்டது; மதன், தலைமறைவானார்.
சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், 75 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டதை தொடர்ந்து, பாரிவேந்தருக்கு,
நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. தலைமறைவாக இருந்த மதன், பல மாதங்களுக்கு பின், திருப்பூரில் பிடிபட்டார். தற்போது, ஜாமினில் உள்ளார்.
வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பாரிவேந்தர் மனு தாக்கல் செய்தார். வழக்கை ரத்து செய்ய மறுத்த,
நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 'மாணவர்கள், பெற்றோருக்கு பணத்தை திருப்பி தர, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார், கமிஷனராக நியமிக்கப்படுகிறார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், டிபாசிட் செய்யப்பட்டுள்ள தொகையை, 136 பேருக்கும் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை 
எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பாரிவேந்தர் மனு தாக்கல் செய்தார். 
மனுவை விசாரித்த, நீதிபதிகள்
ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட, குற்ற நடவடிக்கையை ரத்து செய்ய, தங்களுக்கு ஆட்சேபனையில்லை என, உயர் நீதிமன்றத்தை அணுகி, பணம் கோரும் அனைவரும் மனு தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், மனுதாரருக்கு எதிரான வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
இதையடுத்து, பணம் கொடுத்தவர்கள் தரப்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பாரிவேந்தர் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் வி.டி.கோபாலன், பி.குமார், வழக்கறிஞர் வி.வெங்கடேசன், மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகினர்.
இவ்வழக்கில், நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவு:
பணம் கோரியவர்கள் அனைவரும், ஒப்புதல் தெரிவித்து, மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். மனுதாரர் தரப்பிலும் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் எல்லாம் சரியான நபர்கள் தான் என, உறுதி அளிக்கப்பட்டது. ௧௩௬ பேரில், ௧௧ பேர், மேற்கொண்டு விசாரணைக்காக, கூடுதல் துணை ஆணையரை அணுகலாம்.
மருத்துவ, 'சீட்' தொடர்பாக, யார் பணம் கொடுத்திருந்தாலும், அதை உறுதி செய்யும் விதத்தில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையரை அணுகலாம். அதிகாரியும், ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, ஒரு வாரத்தில், நீதிமன்றம் நியமித்த கமிஷனரிடம் அறிக்கை அளிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பச்சமுத்துவுக்கு எதிரான வழக்கு, ரத்து செய்யப்படுகிறது. நீதிமன்ற ஆணையரின் அறிக்கையை பதிவு செய்வதற்காக, விசாரணை, நவ., ௩௦க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆதாரை எதிர்த்த வழக்கில் மம்தாவுக்கு கோர்ட் கண்டனம்

புதுடில்லி, : 'சமூகநலத் திட்டங்களின் பயனை அளிக்க, ஆதாரை கட்டாயமாக்கும், பார்லி., நடவடிக்கையை, மாநில அரசு எவ்வாறு எதிர்க்க முடியும்?' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல், காங்., தலைவருமான, மம்தா பானர்ஜிக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.



மத்திய அரசு வழங்கும், சமூகநலத் திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு, 'ஆதார்' எண்ணை அவசியமாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு, திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவிக்கிறார். இது தொடர்பாக, அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர், கபில் சிபல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

தனிநபராகஇந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த
போது, கபில் சிபல் கூறுகையில், ''ஆதாரை கட்டாயமாக்கும், மத்தியஅரசின் திட்டத்தை எதிர்த்து, மேற்கு வங்க மாநில தொழிலாளர் துறை சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.

அப்போது, வழக்கை விசாரித்த, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு, 'கூட்டாட்சி அமைப்பில், பார்லிமென்டில் எடுக்கப்படும் நடவடிக்கையை, மாநில அரசு எவ்வாறு எதிர்க்க முடியும்?
'இந்த விஷயத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி, தனிநபராக, புதிதாக வழக்கு தொடரலாம்; அவரை, தனிநபராக கருதி, அவர் அளிக்கும் மனுவை, நீதிமன்றம் விசாரிக்கும்' என்றனர்.

இதற்கிடையே, தனிநபர்ஒருவர், மொபைல் போன் எண்களை, ஆதாருடன் இணைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், அது பற்றி பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு,

'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர்.

அரசியல் சாசன அமர்வு

இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, அரசியல் சாசன அமர்வை அமைக்கப் போவதாக, உச்ச நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு, நேற்று கூறியதாவது:ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின், அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு அமர்வு கூறியது.

சென்னையில் கனமழை : விமானங்கள் தாமதம்

சென்னை: கனமழை காரணமாக, சென்னையில் இருந்து, பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள், ஒரு மணி நேரம் வரை, தாமதமாக சென்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், நகரின் பல்வேறு சாலைகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான நிலையத்திற்கு வர வேண்டிய ஏராளமான பயணியர், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, விமான நிலையத்திற்கு, கால தாமதமாக வந்து சேர்ந்தனர்.
அதை போல, பைலட்டுகள், விமான பணிப் பெண்களும் தாமதமாக வந்தனர். இதனால், சென்னையில் இருந்து கோலாலம்பூர், துபாய், கொழும்பு, டில்லி, மும்பை, அந்தமான், புனே, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய, 23 விமானங்கள், ஒரு மணி நேரம் வரை, தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
வீடு புகுந்த 2 திருடர்கள் 'துவைத்தெடுத்த' இளம்பெண்

திருப்பூர்: திருப்பூரில், பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய இரண்டு வாலிபர்களை, இளம்பெண் அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்தார். திருப்பூரைச் சேர்ந்தவர் செல்வகுமார், 32; மனைவி கஸ்துாரி, 28. அதே பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில், வேலை செய்கிறார். நேற்று, வழக்கம் போல் வீட்டை பூட்டி, வேலைக்கு சென்று விட்டார். பிற்பகல், 3:30 மணியளவில், அவரது வீட்டின் பூட்டை திறந்து உள்ளே நுழைந்த இருவர், பீரோவில் இருந்த, 5 சவரன் நகை மற்றும், 8,000 ரூபாயை திருடி, தப்ப முயன்றனர். எதேச்சையாக வீடு திரும்பிய கஸ்துாரி, இதை பார்த்து அதிர்ச்சிஅடைந்தார்.
உடனே, அங்கிருந்த பெரிய தடியை எடுத்து, துணிச்சலுடன் உள்ளே சென்றார். திருடர்கள் இருவரையும், கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக தாக்கினார். 
வலி தாங்காமல் இருவரும் போட்ட சத்தத்தில், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இருவரையும் கட்டி வைத்து, போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார், இருவரையும் கைது செய்து, அழைத்து சென்றனர்.

டெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்'

ஓசூர்: ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், டெங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கதிரவன், சுகாதாரம் கடைபிடிக்காத பள்ளி தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், நேற்று காலை, இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி வர தாமதமானதால், முன்னதாக வந்த கலெக்டர் கதிரவன், பள்ளியில் டெங்கு ஒழிப்பு ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியின் கழிப்பறை, நீர்த்தேக்க தொட்டி மற்றும் மொட்டை மாடியில் ஆய்வு செய்தார். பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், மாணவ, மாணவியருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை இருந்தது.
பள்ளியை சுகாதாரமாக வைக்க தவறிய தலைமை ஆசிரியை லதாவை, சஸ்பெண்ட் செய்யுமாறு, கலெக்டர் உத்தரவிட்டார். இதேபோல், டெங்கு ஒழிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாத நகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரகுமாரும், கலெக்டர் உத்தரவுப்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குமரியில் தொடர்ந்து 3-வது நாளாக மழை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை மூன்று நாட்களாக பலத்த இடி மின்னலுடன் பெய்து வருகிறது. மாவட்டத்தில் 198 குளங்கள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 420 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. 590 குளங்கள் 50 சதவீதம் நிரம்பியுள்ளன. திற்பரப்பு அருவியில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.மூன்று நாட்களாக பெய்துவரும் மழையால் சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின.

மதுரையில் அரசு டாக்டர் மாயம் : விளக்கம் கேட்கிறது கேரளா


மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றி, மாயமான கேரளாவை சேர்ந்த டாக்டரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. கேரளா மாநிலம், புனலுார் அருகே கரியாரா கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் டாக்டர் வருண், 28. மதுரை அரசு மருத்துவ கல்லுாரியில், குழந்தைகள் நலம் குறித்து, முதுநிலை டிப்ளமோ படிக்கிறார். கல்லுாரி விடுதியில் தங்கியிருந்தார்.

மாணவர்கள் : குழந்தைகள் சிறப்பு வார்டில் டாக்டர் வருண் உட்பட, 20 முதுநிலை மாணவர்கள், தீவிர சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த, 27ம் தேதி மதியம், 12:40 மணிக்கு பணியில் இருந்த, டாக்டர் வருணின் சிகிச்சை முறை குறித்து, சக டாக்டர், நர்ஸ், நோயாளிகள் முன், பெண் உட்பட இரு சீனியர் டாக்டர்கள் உதாசீனம் செய்து பேசி, டாக்டர் பணியை விட்டு போகும்படி திட்டிஉள்ளனர். இதனால், மனமுடைந்த வருண், அன்று மதியம், 2:00 மணிக்கு அலைபேசியை, 'சுவிட்ச் ஆப்' செய்து, ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து, மாயமாகி விட்டார்.
மகன் காணாமல் போய், மூன்று நாட்களாகியும், மதுரை போலீஸ் விசாரணையில் சுணக்கம் இருப்பதாக, டாக்டர் வருணின் பெற்றோர், கேரளா முதல்வர், பினராயி விஜயனிடம் புகார் அளித்துள்ளனர். 

விளக்கம் கேட்பு : அவரது உத்தரவுப்படி, கேரளா உள்துறை அமைச்சகத்தில் இருந்து, தமிழக டி.ஜி.பி.,யிடம் டாக்டர் வருண் வழக்கு குறித்து, விளக்கம் கேட்டுள்ளனர்.

டீன் மருதுபாண்டியன் கூறுகையில், ''டாக்டர் அருணை கண்டுபிடிக்க வலியுறுத்தி இன்று, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து முறையிட உள்ளோம்,'' என்றார்.
ஜெ., மரணத்தில் மர்மம்: விசாரணையில் தாமதம்
நீதிபதி அலுவலகத்தில் கம்ப்யூட்டர், தொலைபேசி இல்லை


ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அலுவலகம், கம்ப்யூட்டர், தொலைபேசி இல்லாமல் இயங்குகிறது. அதனால், விசாரணை தாமதமாகுமோ என, அ.தி.மு.க., தொண்டர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.




ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என, அணிகள் இணைப்புக்கு முன், ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதித்தார். அணிகள் இணைப்புக்கு பின், விசாரணை கமிஷன் பற்றிய அறிவிப்பு, செப்., 25ல் வெளியானது. ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி, விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். கமிஷன் செயல்பட, சென்னை, எழிலகம் அருகே, பசுமை தீர்ப்பாயம் இயங்கும், கலாஸ் மஹால் கட்டடத்தின் முதல் மாடியில், இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

'ஜெ., மரணம் குறித்தும், மருத்துவமனையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், விபரம் அறிந்தவர்கள், நவ., 22க்குள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, தகவல்கள் அளிக்கலாம்' என, நீதிபதி, ஆறுமுகசாமி அறிவித்துள்ளார். விசாரணையை முடித்து, மூன்று மாதங்களில்

அறிக்கை அளிக்கும்படி, அரசு அறிவுறுத்தி உள்ளது.தற்போது, ஒரு மாதம் முடிந்து விட்டது. ஆனாலும், பணிகள் இன்னும் வேகம் பிடிக்கவில்லை. விசாரணை கமிஷன் அலுவலகத்தில், துணை செயலர் அந்தஸ்திலான அதிகாரி உள்ளிட்ட, நீதித் துறை மற்றும் பொதுத் துறை ஊழியர்கள், 10 பேர் நியமிக்கப்பட்டுஉள்ளனர். எனினும், அவர்களுக்கான, மேஜை, நாற்காலிகள், நேற்று வரை வரவில்லை.

மேலும், அந்த அலுவலகத்திற்கு, இதுவரை, தொலைபேசி இணைப்பும் தரப்படவில்லை. வழக்கு தொடர்பான முக்கிய தகவல்களை சேகரித்து வைக்க, கம்ப்யூட்டர்கள் வழங்கப்படவில்லை. அதனால், மூன்று மாதங்களுக்குள், விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய முடியுமா என, அ.தி.மு.க.,வினருக்கு கவலை ஏற்பட்டுள்ளது.

15 பேருக்கு, 'நோட்டீஸ்?'

அதே நேரத்தில், ஜெ., மரணம் தொடர்பாக, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், சென்னை, அப்பல்லோ மருத்துவர்கள், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறும் என, தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும், 'நோட்டீஸ்'அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 15 பேருக்கு, விசாரணைக்கு வரும்படி நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக, நேற்று செய்திகள் வெளியாகின. இது குறித்து, நீதிபதி தரப்பில் கேட்ட போது, 'இதுவரை, யாருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படவில்லை.அனைத்து நடவடிக்கைகளும், நவ., முதல் சூடுபிடிக்கும்.

இது தொடர்பான அறிவிக்கை, அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.

தனி கணக்கு

விசாரணை கமிஷன் அலுவலகத்தில், சென்னை, தலைமை செயலகத்தில் பணிபுரிந்த, பொதுத் துறை மற்றும் சட்டத் துறை அலுவலர்கள், 10 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான ஊதியம், விசாரணை செலவுகள் பராமரிப்புக்காக, சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சிண்டிகேட் வங்கியில், தனி கணக்கு துவங்கப்பட்டு உள்ளது.

விசாரணை கூண்டு

ஜெ., மரணம் குறித்த விசாரணை கமிஷனில், நீதிமன்றத்தில் நடைபெறுவது போலவே, விசாரணை நடைபெறும். அதற்காக, நீதிமன்றத்தில் இருப்பது போலவே, சாட்சி கூண்டுகள், நீதிபதி அமரும் மேஜை, நாற்காலி ஆகியவை அமைக்கப்படும். அதற்காக, தமிழக சிறு தொழில் நிறுவனமான, 'டான்சி நிறுவனத்தில், 'ஆர்டர்' தரப்பட்டுள்ளது. 

- நமது நிருபர் -

அரசு ஊழியர்களுக்கு ஊதியம்: புது உத்தரவு

சென்னை: அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு, அக்டோபர், முதல் நடைமுறைக்கு வரும் என, அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, ஊதிய உயர்வு வழங்குவதற்கான பணிகள் துவங்கின.
இந்நிலையில், நிதித்துறை செயலர், சண்முகம் நேற்று வெளியிட்ட உத்தரவில், 'அரசு ஊழியர்களுக்கு, நவம்பருக்கான ஊதியம், புதிய ஊதிய உயர்வுக்கேற்ப வழங்கப்படும். அத்துடன், அக்டோபருக்கான நிலுவை தொகையை சேர்த்து வழங்க, துறைத்தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.


கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு

காரைக்குடி: கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்குவதற்கான பணிகளில் உயர்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. 

கலை அறிவியல் கல்லுாரிகளில் 3500, இன்ஜி., பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 2 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஆறு மாதத்துக்கு ஒரு முறை இவர்கள் புதிய பணி அமர்த்தலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கல்லுாரி விடுமுறை காலமான மே மாதம் மட்டும் சம்பளம் கிடையாது. பணி நிரந்தரம் வேண்டும், குறைந்த பட்ச சம்பளமாக ரூ.25 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இவர்களது சம்பளத்தை ரூ.25 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டு அவர்களின் விபரத்தை உயர்கல்வித்துறை சேகரித்து வருகிறது.

கவுரவ விரிவுரையாளர் ஒருவர் கூறியதாவது: 20 ஆண்டுக்கும் மேலாக பணி நிரந்தரம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம். ஆனால், காலி பணியிடங்களில் அண்ணாமலை பல்கலையில் உபரியாக உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பே உரிய கல்வி தகுதிகளுடன் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என யு.ஜி.சி., பரிந்துரைத்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் கவுரவ விரிவுரையாளருக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையிலும் குறைந்த பட்ச சம்பளம் ரூ.21 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கையை ஏற்க வேண்டும், என்றார்.

மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி வழக்கில் பச்சமுத்து விடுவிப்பு


மருத்துவ, மாணவர் சேர்க்கை, மோசடி, வழக்கு, பச்சமுத்து, விடுவிப்பு
சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி வழக்கில் எஸ்.ஆர்.எம்.பல்கலை. வேந்தர் பச்ச முத்து விடுவிக்கப்பட்டார்.

எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் ரூ.85 கோடி மோசடி செய்ததாக பச்ச முத்து மீது புகார் கூறப்பட்டது. தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி பச்சமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். 
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ. 85 கோடியை திருப்பி தர உத்தரவாதம் அளித்த நிலையி்ல் நீதிமன்ற நடைமுறைகள் முடிவந்தன. இதையடுத்து நடந்த விசாரணையில் மனுவை விசாரித்த நீதிபதிகள், பச்சமுத்து மீதான வழக்கை ரத்து செய்து விடுவித்து உத்தரவிட்டனர்.

சென்னையில் மழை: வாகன நெரிசல்!



 சென்னையில், மழை, வாகன நெரிசல்!
Share this video : 
spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
புரட்டி எடுக்குது மழை: பீதியில் நடுங்குது சென்னை
சென்னை : சென்னையில் இன்று காலை முதல் மழை நின்று நின்று பெய்து வருகிறது.வடகிழக்குப் பருவமழையால் நகரின் பிரதான சாலைகளில் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.
கடும் போக்குவரத்து நெரிசல்

எனினும் மழை காரணமாகவும், சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததாலும் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. . இதனால் காலையில் அலுவலகத்திற்கு புறப்பட்டவர்கள் 12 மணியளவில் தான் அலுவலகம் சென்றடைய நேரிட்டது. இந்நிலையில் தொடர்ந்து விட்டு விட்டு பெய்த மழை 4 மணிக்குப்பிறகு ஓய்ந்த நிலையில் தற்போது மாலை 5.30 மணியையே இரவு போல மாற்றும் வகையில் கருமேகம் வானைச் சூழ்ந்து சென்னை மக்களை பீதிக்கு ஆளாக்கியுள்ளது. பலரும் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வேளையில் தொடங்கியுள்ள மழையால் மீண்டும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் முதல் எஸ்ஐடி சிக்னல் வரையில் வாகனங்கள ஊர்ந்தே செல்கின்றன. 

இதே போன்ற நந்தனம் தேவர் சிலை முதல் சின்னமலை வரையிலான சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து செந்நீர்குப்பம் வழியாக வேலப்பன்சாவடி செல்லும் சாலையிலும் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதே போன்று கிண்டி, அசோக் நகர், சூளைமேடு, ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

சென்னை மநாகர போலீசார் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்களை வழங்கி வருகின்றனர். இதே போன்று ஐடி அலுவலகங்கள் நிறைந்துள்ள வேளச்சேரி, மத்திய கைலாஷ், பெருங்குடி உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளதாக வாகன நெரிசல் காணப்படுகிறது.
Advertisement


பொதுப்பணி துறையில் 250 பேருக்கு கட்டாய ஓய்வு


லக்னோ: உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு பதவியேற்றதும், அரசு துறைகளில் உள்ள குறைகள் களையப்படும் என, உறுதி அளித்தது. 
அரசுத் துறைகளில் நடக்கும் ஊழலை தடுத்து, ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, முதல்வர் யோகி உத்தரவிட்டார்.

இந்நிலையில், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யாவின் பொறுப்பில் உள்ள, பொதுப் பணித் துறை, ஊழலில் முதலிடத்தை பெற்றது. இதையடுத்து, அந்த துறையில் உள்ள, நிர்வாக பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், கீழ்நிலை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட, 550க்கும் மேற்பட்டவர்கள் மீது விசாரணை நடந்தது.

அதில், 250க்கும் மேற்பட்டோர் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இது, ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட மிகப் பெரிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், மற்ற துறைகளில் உள்ள, ஊழல் அதிகாரிகள், ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர்
சென்னையில் நள்ளிரவிலும் விடாத கனமழை

Chennai,சென்னை
சென்னை: சென்னையில் நேற்று பகல் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து சாலைகளில் மழை நீர் பெருகி ஓடிய நிலையில் நள்ளிரவிலும் மேடவாக்கம், பள்ளிக்கரணை, கீழ்பாக்கம், முடிச்சூர், தண்டையார்பேட்டை, வடபழனி, போரூர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், உள்ளிட்ட இடங்களிலும் விடாத கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கனமழை: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை, ரெயில்கள் தாமதமாக இயக்கம்



மழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அக்டோபர் 30, 2017, 07:42 PM

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மாலையும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை மற்றும் சாலையில் தண்ணீர் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வேலை முடித்து வீட்டிற்கு செல்பவர்கள் பெரும் சிரமத்தை எதிர்க்கொண்டு உள்ளனர். கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை மாலையில் முன்னதாகவே வீட்டிற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

இலங்கையையொட்டி உள்ள வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்கள் உள்பட கடலோர மாவட்டங்களில் நாளை செவ்வாய்க்கிழமை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


மழை காரணமாக நாளை சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளநிலையில் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து உள்ளார் ஆட்சியர் சுந்தரவல்லி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விடுமுறையை அறிவித்து உள்ளார்.

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரெயில்கள் தாமதமாக இயக்கம்

சென்னையில் கனமழை காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் கனமழையால் விரைவு ரயில்கள் வழக்கமான வேகத்தைவிட குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Monday, October 30, 2017


தஞ்சை பெரிய கோயிலுக்கும் தலையாட்டி பொம்மைக்கும் என்ன தொடர்பு? #TanjoreSadhayaVizha

வெ.நீலகண்டன்

1,000 ஆண்டுகளைக் கடந்து தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், அந்நியர்களின் படையெடுப்புகள்... அனைத்தையும் தாங்கி, காலத்தின் சாட்சியாக கம்பீரம் குலையாமல் நிற்கும் தஞ்சை பெரிய கோயிலில் 1032-ம் ஆண்டு சதயவிழா இன்று (29.10.2017) தொடங்கி நாளை வரை நடக்கிறது.



தஞ்சைப் பெரிய கோயில், ஏராளமான அற்புதங்களைத் தன்னுள்ளே பொதிந்துவைத்திருக்கிறது. புவி அச்சின் சாய்வுகளைக் கணித்து, மிக நுட்பமாக அடித்தளத்தை அமைத்து, இருகாற்படை நுட்பத்தில் தொடங்கி, கனமில்லாத ஒற்றைக்கல்லால் கோபுரத்தை வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார்கள் சோழச் சிற்பிகள். புவியின் சுழற்சிக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கோயிலின் கட்டுமான நுட்பம் உலக வல்லுநர்களை எல்லாம் விழியுயர்த்தி வியக்கவைக்கிறது.

ஒவ்வொரு கல்லிலும் கலைநயம். ஒவ்வொரு சிற்பத்திலும் ஓராயிரம் கதைகள். வழிபாட்டுக்குரிய ஆலயமாக மட்டும் அல்லாமல், வங்கியாக, கலைக்கூடமாக, சமூக நிர்வாகத்துக்கான ஒருங்குகூடு மையமாக விளங்கியிருக்கிறது இந்தப் பெரிய கோயில். இதை இராஜராஜேச்வரம் என்று குறிப்பிடுகின்றன இங்குள்ள கல்வெட்டுகள்.

கல்லணை நீர் தழுவிச்செல்லும் திருச்சுற்று மாளிகை, நெடிதுயர்ந்த திருவாயில்கள், வான் கயிலாயமாகவே விளங்கும் விமானம், இயற்கையின் அத்தனை அம்சங்களையும் அணுக்கமாகச் சுமந்துகொண்டிருக்கும் சிற்பங்கள். என பிரபஞ்சத் தத்துவத்தின் கட்டுமான மொழிபெயர்ப்பாக இருக்கிறது இந்தக் கோயில்.



காஞ்சிபுரத்தில் ராஜசிம்மப் பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில்தான் பெரிய கோயில் எழுவதற்கான ஆதாரம். அக்கோயிலின் அழகிலும் கலையிலும் மயங்கிப்போன ராஜராஜன், தன் தலைநகரில் அப்படியான ஒரு கலைக்கோயிலை எழுப்ப வேண்டும் என்று விரும்பினான். அதன் விளைவுதான் இப்பெரிய கோயில்.

தஞ்சை பெரிய கோயில் உருவாக்கத்துக்குப் பல நூறு பேர் துணை நின்றிருக்கிறார்கள். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொருவரின் உழைப்பு இருக்கிறது. பொருள் படைத்தோர் பொருள் தந்தார்கள். இல்லாதோர் கல் தந்தார்கள். எல்லோரின் பெயரும் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கிறது.

சில வருடங்களுக்குத் திருப்பணி செய்தபோது திருச்சுற்று மாளிகையின் அஸ்திவாரத்தில் ஏராளமான முண்டுக்கற்கள் கிடைத்தன. ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொருவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பொன்னள்ளி கொடுத்தோர் முதல் கல் கொடுத்தோர் வரை எவரின் பெயரும் வரலாற்றில் விட்டுப்போய்விடக் கூடாது என்பதில் ராஜராஜன் காட்டிய அக்கறை வியக்கவைக்கிறது.



இக்கோயிலுக்கு ஏராளமானோர் பங்களிப்புச் செய்திருந்தாலும் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர்கள் 12 பேர். அரசன் ராஜராஜன், தலைமைத் தச்சன் குஞ்சரமல்லன், அவனது உதவியாளர்கள் நித்த வினோதப் பெருந்தச்சன், கண்டராதித்த பெருந்தச்சன். பெரும் கொடை வழங்கிய ராஜராஜனின் சகோதரி குந்தவை, பல்வேறு கட்டுமானப் பணிகளில் பங்கெடுத்துக்கொண்ட ராஜராஜனின் சேனாபதி கிருஷ்ணன் ராமன், நிர்வாக அதிகாரி பெய்கைநாட்டுக் கிழவன் தென்னவன் மூவேந்த வேளாண், ராஜராஜனின் குருமார்கள் ஈசான சிவபண்டிதர், சர்வ சிவ பண்டிதர், மகன் ராஜேந்திரன், கோயிலின் தலைமைக் குரு பவனப்பிடாரன், கல்வெட்டுகளைப் பதிப்பித்த இரவி பாருளுடையான்..!

தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டியது யார் என்பது பற்றி நெடுங்காலம் சர்ச்சைகள் இருந்தன. தஞ்சையை ஆண்ட கரிகாலன் தீரா நோயால் தவித்ததாகவும், இந்தப் பெரிய கோயிலைக் கட்டி இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கியெழுந்ததால் நோய் தீர்ந்ததென்றும், 'பிரகதீஸ்வர மகாத்மியம்' என்ற நூல் சொல்கிறது. 'கிருமி கண்ட சோழன்' என்ற கரிகாலனின் பட்டப் பெயரை இதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டியது அந்த நூல். ஆராய்ச்சியாளர் ஜி.யு.போப், 'காடுவெட்டிச் சோழன் என்பவனே பெரிய கோயிலைக் கட்டினான்' என்று என்று எழுதினார்.

1886-ம் ஆண்டில், ஹீல்ஷ் என்ற ஜெர்மானிய அறிஞர் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வுசெய்யும் பணியில் இறங்கினார். ஆறு ஆண்டுகால தீவிர உழைப்பில் கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆராய்ந்த ஹீல்ஷ், பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்ற வரியை முன்வைத்து, 'பெரிய கோயிலைக் கட்டியவன் ராஜராஜ சோழனே' என்று உறுதிசெய்தார்.



தஞ்சை பெரிய கோயில் அமைந்திருக்கும் பகுதி சுக்கான் பாறைகள் நிரம்பியது. இப்படி ஒரு சுக்கான் பாறை நிலத்தில் இவ்வளவு உயரம் கொண்ட ஒரு கோயில் எப்படி நிற்கிறது..? அதுதான் அக்காலத் தமிழர்களின் கட்டுமான நுட்பத்தின் சிறப்பு. இது குறித்து, கோயில் கட்டடக்கலை கலைஞரும், ஆராய்ச்சியாளருமான தென்னன் மெய்ம்மன் விரிவாகப் பேசுகிறார்.

"பெரிய கோயிலின் விமானம் மிகத் திறமையான தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுக்கான் பாறை நிலப்பரப்பில் 350 அடிக்குத் தொட்டி போன்ற பகுதியை உருவாக்கியிருக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்த காட்டாறுகளில் இருந்து மணலைக் கொண்டு அத்தொட்டியில் கொட்டியிருக்கிறார்கள். அதன் மேல் மரக்கால் வடிவில் அடித்தளம் அமைத்து கனமான கல் பொருத்தி தரைமட்டத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவரை ஒற்றைச் சுவராகக் கொண்டு வந்து தரைக்கு மேலே இரட்டைச் சுவராகக் கொண்டுபோய் கோபுரமாக உயர்த்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் வடிவத்தில் இருக்கிறது விமானக் கட்டுமானம். இதற்குப் பெயர், 'டைனமிக் ஆர்க்கிடெக்சர்'.

இதன் சிறப்பு என்னவென்றால், பூமியின் ஆட்டத்துக்கேற்றவாறு கோபுரமும் அசைந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ளும். அதனால்தான் எல்லா இயற்கைச் சீற்றங்களையும் தாக்குப்பிடித்து நிற்கிறது. பெரிய கோயில் இறைவனை `ஆடவல்லான்’ என்று சொல்வார்கள். தமிழகத்தில் எந்தப் பகுதியிலுமே இல்லாத தலையாட்டி பொம்மை தஞ்சாவூரில் மட்டும் எப்படிக் கிடைக்கிறது என்ற கேள்விக்குப் பதில், அந்தப் பொம்மையின் பெருவடிவம்தான் பெரியகோயில் என்பதுதான்..." என்கிறார் அவர்.



பெரிய கோயிலின் பிரதான நுழைவு வாயிலுக்குக் கிழக்கில் உடையார் சாலை இருக்கிறது. உள்ளே அக்னிதேவர் சந்நிதி இருக்கிறது. இந்த உடையார் சாலையில் 240 சிவயோகியர்கள் தங்கி, ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் 10 பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து 24 திருவிழாக்களை நடத்தியதாகவும் கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோயிலில் உள்ள செப்புத்திருமேனிகள் பற்றிய பல செய்திகள் இந்த உடையார் சாலையில் கல்வெட்டுகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணும் புத்தகங்களைப்போல எழுத்துகளால் நிறைந்திருக்கின்றன.

கேராளந்தக வாசல், ராஜராஜன் திருமண்டபம், திருச்சுற்று மாளிகை, அக்னி தேவர். எமராசா, பரிவார ஆலயத்துப் பிள்ளையார், உமா பரமேஸ்வரியார்... என்று பல பெயர்கள் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. ஆனால், சிவலிங்கம் என்ற பெயர் எந்த இடத்திலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. `உடையார் ஸ்ரீ ராஜராஜேஸ்வரமுடையார்’ என்றே இறைவனைக் குறிப்பிடுகின்றன கல்வெட்டுகள்.

இங்கிருக்கும் நந்தி மண்டபம், நந்தி, அம்மன் சந்நிதி, வாகன மண்டபங்கள் அனைத்தும் பிற்காலக் கட்டுமானங்கள். விமானத்தை ஒட்டி, கருவறைக்குத் தெற்கேயுள்ள தட்சிணாமூர்த்தியை உருவாக்கியது மராட்டியர்கள். வாராகியும் அண்மைக்கால வருகைதான். மகா மண்டபத்தின் மேற்பகுதியும் பிற்காலக் கட்டுமானம்தான். கோயிலைச் சுற்றியிருக்கும் திருச்சுற்றுமாளிகை, ராஜராஜன் காலமான பிறகு கட்டப்பட்டது.



"முகப்பில் உள்ள ஐந்து தளங்களைக் கொண்ட கேரளாந்தகன் திருவாயிலில் முதல்தளம் தவிர, மற்றவை செங்கற்களால் கட்டப்பட்டவை. இந்தச் செங்கற்கள் சிறப்பான தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. அடப்பமரம், மாமரம், கடுக்காய் மரம், தாணிக்காய் மரம் ஆகியவற்றின் பட்டைகளையும், திரிபலா எனப்படும் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றையும் கஷாயமாக்கி, மண்ணில் ஊற்றி, ஐந்து மாதங்கள் புளிக்கப் புளிக்கப் பிசைந்து, செங்கலாக அறுத்து, சுட்டு, ஒரு மாதம் ஆறவிட்டு, தண்ணீரில் ஊறவிட்டு, நன்கு உலரச்செய்து அதன் பிறகே கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1,000 ஆண்டு சரித்திரத்தில் தஞ்சையை ஐந்து முறை பூகம்பங்கள் தாக்கியுள்ளன. அனைத்தையும் தாங்கி கனகம்பீரமாக நிற்கிறதென்றால், நுட்பமான கட்டுமானமே காரணம்.

கருவறையைச் சுற்றி, நான்கு சுவர்கள். வெளியே சுற்றரை. அதன் வெளியே நான்கு சுவர்கள். இந்த எட்டு சுவர்களையும் இணைத்து, அதன் மேல் கூடையைக் கவிழ்த்து வைத்தாற்போல விமானம் அமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து 216 அடி உயரம் கொண்ட இந்தக் கோபுரம் 13 அடுக்குகள் உடையது. நான்கு பட்டை வடிவில், வெற்றிடமாகக் கூம்பிச் செல்லும் இதன் உச்சியில் 12 அடி உயரமுள்ள கலசம் பொருத்தப்பட்டுள்ளது..." என்கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.



மாலிக்குகளும், நவாப்களும், சுல்தான்களும் பலமுறை தஞ்சை பெரிய கோயிலைச்சூறையாடினர். பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயரும் பீரங்கிகளைவைத்துத் தகர்த்தனர். 30 ஆண்டுகளுக்கும் மேல் சிப்பாய்களின் கூடாரமாக இருந்த பெரிய கோயில் பல தாக்குதல்களைச் சந்தித்தது. இருந்தும் அதன் கம்பீரத்தை யாராலும் சிதைக்க இயலவில்லை. அதனால்தான் அது இன்றும் பெரிய கோயிலாக இருக்கிறது.


அடி தூள்... வெறும் கைகளால் சிறுத்தையைச் சமாளித்த இளம் பெண்..!

கார்க்கிபவா


மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மோரினா மாவட்டத்தில் இருக்கிறது அந்தக் கிராமம். காடுகளின் மடியில் அமைந்திருக்கும் அழகான கிராமம். 25 வயது ஆஷாவின் சொந்த ஊர் அங்கிருந்து சில கிலோமீட்டர்கள். திருமணமாகி வந்ததுதான் இந்த ஊர். இரண்டு வயது குழந்தையைத் தூக்கிக் கொண்டு தன் அம்மாவின் வீட்டுக்குப் போய்கொண்டிருந்தார். அவருடன் சூரியனும் வீடுதிரும்பிக்கொண்டிருந்த மாலை வேளை. ஊர் எல்லையைத் தாண்டும்வரை அறிமுகமான முகங்களை கடந்து வந்த ஆஷாவுக்கு, சிறிது தூரம் தாண்டியதும் கண்ணில்பட்ட அந்த முகம் அத்தனைப் பரிச்சயமில்லை. அது சிறுத்தையும் முகம்.



புதர்களின் உள்ளிருந்து திடிரென வில்லன் என்ட்ரி கொடுத்த சிறுத்தையைக் கண்டதும் ஆஷாவுக்கு பயம் தொற்றிக்கொண்டது. கையில் இரண்டு வயது குழந்தை. இரண்டு பேரையும் சுற்றி சுற்றி வந்த சிறுத்தை ஒரு கட்டத்தில் பாய்ந்திருக்கிறது. குழந்தையைக் காப்பாற்றியே தீருவேன் என நினைத்த ஆஷாவுக்கு தைரியம் வந்தது. வெறும் கைகளாலே சிறுத்தையை தாக்கியிருக்கிறார். அதன் கழுத்தைப் பிடித்து கடிக்க முடியாமல் தடுத்திருக்கிறார். இத்தனையும் நடக்கும்போதே உதவிக்கு குரலையும் எழுப்பியிருக்கிறார். சிறுத்தை ஆஷாவின் கைகளில் நல்ல காயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் கடிக்கவில்லை. அதற்குள் அருகில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு உதவிக்கு ஓடிவர, வில்லன் எஸ்கேப்.

அந்தப் பகுதி காடுகளில் சிலர் சிறுத்தையைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் யாரையும் தாக்கியதாக இதுவரை எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை. அபப்டியிருக்க, ஆஷா சிறுத்தையையே எதிர்த்தது பெரிய விஷயமாக அவர்களால் பாராட்டப்பட்டது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஆஷாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். “நான் நடந்துப் போய்க் கொண்டிருந்தேன். வயலைத் தாண்டியதும் எங்கிருந்தோ என் மீது சிறுத்தை பாய்ந்தது” என பயம் விலகாமல் நடந்தச் சம்பவத்தை விவரித்திருக்கிறார் ஆஷா.

விஷயம் வன அதிகாரிகளுக்கு சொல்லப்பட, அவர்கள் விரைந்து வந்திருக்கிறார்கள். நடந்ததை எல்லாம் விசாரித்திருக்கிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில்Pugmarks எதுவும் இல்லை என்கிறார்கள். (Pugmarks என்பது காட்டு விலங்குகளின் காலடித்தடம்.) வந்தது சிறுத்தைதானா என்பதில் வன அதிகாரிகளுக்கு சந்தேகம். ஆனால் கிரமாத்தினர் சிறுத்தைதான் என ஊர்ஜிதமாக சொல்கிறார்கள். ஆஷா உடம்பில் உள்ள காயங்களும் சொல்கின்றன.

இப்போது ஆஷா அந்தப் பகுதியின் வீரமங்கையாக பார்க்கப்படுகிறார். தைரியத்துக்கு அடையாளம் என்கிறார்கள். இவை எதுவும் புரியாமல் அந்த இரண்டு வயது குழந்தை மருத்துவமனையில் சிரித்துக் கொண்டிருக்கும். ஆஷா விரும்பியதும் அதுதான்.

சிறுத்தை:

பெண் சிறுத்தை ஒரு பிரசவத்தில் 2 முதல் 5 குட்டிகளைப் பெற்றெடுக்கும். குட்டியின் வாசனைகூட வெளியில் தெரியாத அளவுக்கு தடுப்பு வேலிகளை தாய் அமைக்குமாம். 18 மாதங்கள் முதல் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, தாயிடம் இருந்து தனியாக செல்வதற்கு சிறுத்தைக் குட்டி பழகிவிடும். பிற குட்டிகளுடன் சேர்ந்து திரியும். தாய் பூனை, தன் குட்டிப் பூனைகளுடன் மெல்லிய உறுமல் ஒலியுடன் பேசும். இதேபோலத்தான் சிறுத்தையும் தன் குட்டிகளுடன் பேசுமாம். ஆறு மாதத்தில் தன் குட்டிக்கு எப்படி வேட்டையாடுவது என்றும், பிற மிருகங்களிடம் இருந்து தப்பிப்பது பற்றியும் தாய் சிறுத்தை பயிற்சி கொடுக்கும். எனினும், பெரும்பாலான சிறுத்தைக் குட்டிகள் சிங்கங்கள், கழுதைப்புலிகளுக்கு இரையாகிவிடும் பரிதாபமும் நிகழ்கிறது.

போலி முகவரியில் சொகுசுக்கார்! -நடிகை அமலா பாலைத் துரத்தும் வரி ஏய்ப்புப் புகார்

தினேஷ் ராமையா

போலி முகவரி கொடுத்து சொகுசுக் கார் வாங்கி ரூ.20 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது புகார் எழுந்துள்ளது.



கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமலா பால் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக விலைகொண்ட பென்ஸ் எஸ் கிளாஸ் சொகுசுக் காரை வாங்கியதாகத் தெரிகிறது. அந்த சொகுசுக் காரை புதுச்சேரியில் போலி முகவரி மூலம் அவர் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சொந்தமாநிலமான கேரளாவில் அந்த காரைப் பதிவு செய்திருந்தால் வரியாக மட்டுமே, காரின் மொத்த மதிப்பில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமாக, அதாவது ரூ.20 லட்சத்துக்கும் மேல் செலுத்த வேண்டும். அதைத் தவிர்ப்பதற்காகவே, அவர் புதுச்சேரியில் வசிப்பதாக போலி முகவரி கொடுத்து அங்கு பதிவு செய்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள மாணவர் ஒருவரின் முகவரியில் அந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவருக்கு எந்த தகவலும் தெரியாது என்றும் கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த காரை கொச்சியில் உள்ள தனது வீட்டில் நிறுத்தியுள்ள நடிகை அமலாபால், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அந்த காரைப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

NEWS TODAY 21.12.2024