Tuesday, April 11, 2017

Sri Ramakrishna Hospital gets quality certification

Sri Ramakrishna Hospital recently received certification from the U.S. based Medical Travel Quality Alliance (MTQuA).

Julie W. Munro, president and founder of MTQuA, and Janet M. Geddes, finance and governance senior advisor from the U.S., visited the hospital for three days and assessed the facilities for certifying the hospital.

The certificate was handed over to Swathy Rohit, chief business officer, SNR Sons charitable Trust, in the presence of C. V. Ramkumar, chief executive officer, SNR Sons charitable Trust, in the presence of dean P. Sukumaran, and medical director Issac Moses.

Medical Travel Quality Alliance offers cross-services medical tourism certification for hospitals, clinics, agencies, speciality treatment centres, resorts, including training and workshops to support and enhance certification standards and protocols.

காயமடைந்த சிறுமி மேல் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு:சிவகங்கை அரசு மருத்துவமனையில் அலட்சியம்

சிவகங்கை; விபத்தில் மூக்கில் காயமடைந்த சிறுமி, சிவகங்கை அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெறமுடியால் தவிக்கும் நிலை ஏற்பட்டது. சிவகங்கை காமராஜர் தெரு கருப்பு. இவரது மகள் சுவேதா, 14. இவர் கடந்த ஏப்.,6ல் பழைய கோர்ட் அருகே நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த ஒரு டூவீலர் மோதியதில் கீழே விழுந்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களுடன், 'ஏ.ஆர்.,' ரிப்போர்ட் எனப்படும் விபத்து அறிக்கை (ஆக்ஸிடென்ட் ரெஜிஸ்டர்) இணைத்து அனுப்பப்பட வேண்டும். ஆனால், சிவகங்கை அரசு மருத்துவமனை வார்டு நர்ஸ்களின் அலட்சியத்தால்,'ஏ.ஆர். ரிப்போர்ட்' இல்லாமல் மதுரைக்கு அனுப்பப்பட்ட சிறுமி சுவேதாவை வார்டில் அனுமதிக்காமல் புறநோயாளிகள் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.
'ஏ.ஆர். ரிப்போர்ட்' வாங்கி வருமாறு கட்டாயப்படுத்தியதால், சிறுமி பெற்றோர், அங்கிருந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மீண்டும் வந்து கேட்டுள்ளனர்.

ஆனால், நர்சுகள் அலட்சியமாக இருந்ததுடன் 4 நாட்களாக சிறுமியின் பெற்றோரை அலைய விட்டுள்ளனர். நேற்று சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த சிறுமியின் பெற்றோர், கதறியழுதும் 'ஏ.ஆர். ரிப்போர்ட்' வழங்காமல் இழுத்தடித்து வந்தனர்.நடந்த விபரங்களை அறிந்த பேராசிரியர் மகேஸ்வரி, நேரில் வார்டுக்கு சென்று 'ஏ.ஆர். ரிப்போர்ட்'டை கண்டுபிடித்து கொடுத்து அனுப்பி வைத்தார்.

கொளுத்தும் வெயிலால் கருகும் மக்கள்... சதம் அடித்து வதம்! வரும் நாளில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் கோடை மழை ஏமாற்றி வரும் நிலையில், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று, இதுவரை இல்லாத அளவாக, 105 டிகிரி பாரன்ஹீட் அளவை எட்டியது.

திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால், கடும் வறட்சி நிலை காணப்படுகிறது.நடப்பு ஆண்டும், போதிய மழை பெய்யவில்லை. குளிர் காலமான, ஜன., மாதத்தில், திருப்பூரில், 21 மி.மீ.,; காங்கயத்தில், 14.4 மி.மீ.,; அவிநாசி,6 மி.மீ.,; உடுமலை, 4.1 மி.மீ.,; பல்லடம், ஒரு மி.மீ., என, 6.64 மி.மீ.,மழை மட்டுமே பெய்தது. பிப்., மாதம் மழை பெய்யவில்லை. குளிர் கால மழை ஆண்டு சராசரி, 9.02 மி.மீ., ஆக உள்ள நிலையில், இந்தாண்டு குறைந்தது.வறட்சிக்கு கோடை மழை கைகொடுக்கும் என்ற நிலையில், கடந்த மாதம் ஓரளவு மழை பெய்தது. தாராபுரத்தில், 74.5 மி.மீ.,; காங்கயம், 47.6 மி.மீ.,; பல்லடம், 14 மி.மீ.,; மூலனூர், 14 மி.மீ.,; அவிநாசி, 6.7 மி.மீ.,; திருப்பூர், 4 மி.மீ.,; உடுமலை, 3.6 மி.மீ., என, மாவட்டத்தில் சராசரியாக, 23.49 மி.மீ.,மழை பெய்தது.

மார்ச் மாத, சராசரி மழை பொழிவு, 21.32 ஆக உள்ள நிலையில், இரண்டு மி.மீ., கூடுதலாக பெய்தது. ஆனாலும், கடும் வறட்சி மற்றும் பாசனம், குடிநீர், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், போதிய மழை பெய்யவில்லை. நடப்பு ஏப்.,மாதத்திலும் போதிய மழை பெய்யவில்லை. 6ம் தேதி இரவு, அவிநாசியில் மட்டும், 18 மி.மீ.,மழை பெய்தது.மழை பெய்யாததால், கடுமையான வறட்சி நிலவி வருவதோடு, வெயிலின் தாக்கமும் முன்னதாவே துவங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக வெயிலின் கடுமை அதிகரித்த நிலையில், நேற்று, வெப்ப நிலை உச்சத்தை தொட்டுள்ளது.நேற்று <<<உச்ச அளவாக 105 டிகிரி பாரன்ஹீட் ( 41 டிகிரி செல்சியஸ்) வெயில் அடித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அக்னி நட்சத்திர வெயில் போல், வெப்பத்தின் தாக்கம் அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு சூழல் நிலவுகிறது.

 திருப்பூரிலுள்ள பெரும்பாலான ரோடுகளில், நேற்று "கானல்நீர்' தென்பட்டது.ஏற்கனவே, வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு என பாதிப்பை சந்தித்து வரும் திருப்பூரை, வெயிலும் சேர்ந்து கொண்டதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஏப்., மாதத்திலேயே "சதம்' தாண்டி, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தாண்டு கோடை காலத்தை சமாளிப்பது என்பது மிகப்பெரிய சவாலே

.இது குறித்து கோவை வேளாண் பல்கலை கால நிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில், ""திருப்பூரில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, 41 டிகிரி செல்சியல் (105 பாரன்ஹீட்) என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. வரும் நாட்களில், வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும். அடுத்த ஒரு வாரத்துக்கு கோடை மழைக்கு வாய்ப்பில்லை. 14ம் தேதி பொங்கலூர் பகுதியில், வானம் மேக மூட்டத்துடனும், சிறிய அளவில் மழையும் பெய்ய வாய்ப்புள்ளது,'' என்றார்.

டாஸ்மாக் கடையை மூடக்கோரி குடந்தையில் கடையடைப்பு

தஞ்சாவூர்: கும்பகோணத்தில், பொதுமக்கள் எதிர்ப்பை மீறி, திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி வர்த்தகர்கள் நேற்று கடையடைப்பு நடத்தினர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, கும்பகோணத்தில், 23 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதையடுத்து, டாஸ்மாக் இல்லாத நகரமாக கும்பகோணம் விளங்கியது. இந்நிலையில், சக்கரபாணி கோவில் தெற்கு வீதியில், கடந்த, 8ம் தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.இதனால், கும்பகோணத்தின் வர்த்தக பகுதியாக விளங்கும் பெரிய தெரு பகுதியில், அமைதி பாதிக்கப்படும் என கருதிய வர்த்தகர்கள் மற்றும் சுமை துாக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று பெரிய தெருவில் உள்ள, 200 கடைகளும் முழுமையாக நாள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தன. பின், வர்த்தகர்கள், சுமை துாக்கும் பணியாளர்கள், பெரிய தெருவிலிருந்து ஊர்லமாக, சப் - -கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று முறையிட்டனர். இதைத் தொடர்ந்து, திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை நேற்று மூடப்பட்டது

இதே போல், சுந்தரபெருமாள் கோவில் பகுதி யில் சுடுகாடு அருகே, புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் கும்பகோணம் - - தஞ்சாவூர் சாலையில் மறியலில் நேற்று ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
பல கோடி பணம் எப்படி?   அமைச்சரிடம் கிடுக்கிப்பிடி 

DINAMALAR

பல கோடி பணம் பட்டுவாடா மற்றும் தேர்தல் பேரம் தொடர்பாக, வருமான வரித்துறை அலுவலகத்தில், நேற்று, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமாரிடம், அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.





அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், எம்.எல்.ஏ., விடுதி உள்ளிட்ட, 38 இடங்களில், சமீபத்தில், வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அதில், அவரது கணக்காளர் சீனிவாசன் வீட்டில் இருந்து, வாக்காளர்களுக்கு தலா, 4,000 ரூபாய் தரப்பட்ட பட்டியல் கிடைத்தது. அதன் மூலம், அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன் மற்றும் முதல்வர் பழனிசாமி மூலமாக, 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்ததது தெரிய வந்துள்ளது.

8 மணி நேரம்

இந்நிலையில், வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ஏற்று, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரி புலானாய்வு அலுவலகத்தில், விஜயபாஸ்கர், நேற்று காலை, 11:15 மணிக்கு ஆஜரானார்.அவரைத் தொடர்ந்து, தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நடந்த, ஏழு கோடி ரூபாய் பேரம் தொடர்பாக விளக்கம் அளிக்க, 11:30 மணிக்கு சரத்குமார் ஆஜரானார்.
அவர்களுக்கு முன், முன்னாள் எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆஜராகியிருந்தார்.இதில், விஜயபாஸ்கரிடம், 89 கோடி ரூபாய் பணம் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது; விசாரணை முடிந்து, அவர் மாலை, 3:45 மணிக்கு வெளியேறினார்.

அப்போது அளித்த பேட்டியில், ''கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ளேன்; விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்துள்ளேன்,'' என்றார்.

சில நிமிடங்களுக்குப் பின் வெளியேறிய, சிட்லபாக்கம் ராஜேந்திரன், கோபமாக காணப்பட்டார்.

விஜயபாஸ்கரை விட சரத்குமாரிடம், நான்கு மணி நேரம் கூடுதலாக விசாரணை நடந்தது. அவர்,எட்டு மணி நேர விசாரணைக்குப் பின், இரவு, 7:30 மணி அளவில் சோர்வாக வெளியேறினார். அதன்பின், உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

விஜயபாஸ்கர் ஒப்புதல்!

விஜயபாஸ்கரிடம் நடந்த விசாரணையின் போது, குட்கா வியாபாரிகள் மாமூல், பணி நியமனம் மற்றும் மருந்து பொருட்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள்; எந்தெந்த அமைச்சர்களுக்கு எப்படி பணம் வழங்கப்பட்டது என்பது உள்ளிட்ட, பல கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன.
'முதலில், பட்டுவாடாவை மறுத்த விஜயபாஸ்கர், பின், ஓரளவிற்கு, உண்மைகளை கூறினார். அதனால், பணம் பட்டுவாடா உறுதியாகியுள்ளது. எனினும், நினைத்த அளவிற்கு அவர் முழு ஒத்துழைப்பு தரவில்லை என்பதால், மீண்டும் விசாரணைக்கு வரச் சொல்லி இருக்கிறோம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கீதாலட்சுமி 'டிமிக்கி'

வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, சில பணியிடங்களை நிரப்புவதில், இடைத்தரகர் போல செயல்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக,அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது சொத்துக் கணக்கு மற்றும் வருமான வரி கணக்குகளை ஆய்வு செய்து வருகிறோம்.
'சம்மன்' அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவர் குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சி இருப்பதாகக் கூறி விட்டார். அவருக்காக, ஓரிரு நாள் காத்திருக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஹவாலா பணமா?

வருமான வரி விசாரணையில், பணம் பெற்றதை, சரத்குமார் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், அவரது மனைவி ராதிகாவிடம் பணம் சேர்க்கப்பட்டதா அல்லது ஹவாலா முறையில் பரிமாற்றம் நடந்ததா என்றும், அவரிடம் அதிகாரிகள் கேள்விகளை அடுக்கினர். பதிலளிக்க, சரத்குமார் அடம் பிடித்ததால், அவருக்கு ஓய்வு கொடுத்து, மீண்டும் விசாரிக்க முடிவு எடுத்துள்ளனர்.

முதல்வரிடம் விசாரணையா?

வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: தினகரனிடமிருந்து, விஜயபாஸ்கருக்கு பணம் தரப்பட்டு, அவர் மூலமாக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். ஆனால், விஜயபாஸ்கர், அத்தகைய கேள்விகளுக்கு பிடிகொடுக்காமல் நழுவுகிறார். அதனால், தினகரன் மற்றும் முதல்வரை காட்டிக் கொடுக்காமல், அனைத்தும் தன் பணம் என, அவர் ஒப்புக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அதற்கு, அவர் வரி கட்டினால் விட்டு விடுவோம்.
மேல் நடவடிக்கையை, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தான் மேற்கொள்ள வேண்டும். எனினும், விஜயபாஸ்கரின் பினாமி நிறுவனங்களின் வருமானங்களை தோண்ட உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -


: ஏப்ரல் 10,2017,22:19 IST

 மூன்று மாதங்களுக்கு தேர்தல் இல்லை:
தேர்தல் அதிகாரிகள் தகவல்


'சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு, இன்னும் மூன்று மாதங்களுக்கு, தேர்தல் நடத்த வாய்ப்பில்லை' என, தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.





இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானதும், பணப் பட்டுவாடா அதிகம் இருக்கும் என, தகவல் வெளியானது.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஐந்து தேர்தல் பார்வையாளர்கள், ஒரு சிறப்பு தனி தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டனர்.

சமூக வலைதளங்களில் பரவின

துணை ராணுவ வீரர்கள், 720 பேர், பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டனர். பறக்கும் படை, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. நுண் பார்வையாளர்கள், மோட்டார் சைக்கிளில்,

ரோந்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்தையும் மீறி, தினகரன் அணி சார்பில், ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. பட்டுவாடா வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில், பட்டுவாடா ஆவணங்கள் சிக்கின.

ஜைதி ஆலோசனை

அதைத் தொடர்ந்து, தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். பட்டுவாடா செய்த வேட்பாளர்களை, தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.இது தொடர்பாக, நேற்று முன்தினம் டில்லியில், தலைமைத் தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகியோர் பங்கேற்றனர்.

தேர்தல் எப்போது?

கூட்டத்தில், தினகரனை தகுதிநீக்கம் செய்வது, தேர்தலை ஒத்திவைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசனை முடிவில், தேர்தலை ஒத்திவைக்க, முடிவு செய்யப்பட்டது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்போல,

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலும், சில மாதங்களுக்குப் பிறகே நடத்தப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: இடைத்தேர்தலை, ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஆனால், தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்படும்போது, எப்போது வேண்டுமானாலும் நடத்த, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், தேர்தல் கமிஷனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை, மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஜூலை, 5க்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னரே, தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -




நடத்தை விதிகள் விலக்கம் : புறப்பட்டனர் ராணுவ வீரர்கள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள், விலக்கிக் கொள்ளப்பட்டன.ஜெ., மறைவு காரணமாக, காலியான, சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு, ஏப்., 12ல் தேர்தல் நடைபெறும் என, மார்ச், 9ல், தேர்தல் கமிஷன் அறிவித்தது. அன்று முதல், ஆர்.கே.நகர் தொகுதியை உள்ளடக்கிய, சென்னை மாவட்டம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தலில் போட்டியிட்ட தினகரன் அணியினர், ஓட்டுக்கு, 4,000 ரூபாய் கொடுத்ததாக, புகார் எழுந்தது. அதற்கான ஆவணங்கள் சிக்கியதால், இடைத்தேர்தலை ரத்து செய்து, நேற்று முன்தினம் இரவு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. தேர்தல் ரத்தால், நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன. தேர்தல் பணிக்கு வந்திருந்த, தேர்தல் பார்வையாளர்கள், துணை ராணுவ வீரர்கள், சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

NEWS TODAY 30.12.2025