ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல்
நடத்தை விதிமுறைகள், விலக்கிக் கொள்ளப்பட்டன.ஜெ., மறைவு காரணமாக, காலியான,
சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு, ஏப்., 12ல் தேர்தல் நடைபெறும்
என, மார்ச், 9ல், தேர்தல் கமிஷன் அறிவித்தது. அன்று முதல், ஆர்.கே.நகர்
தொகுதியை உள்ளடக்கிய, சென்னை மாவட்டம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள்
அமலுக்கு வந்தன. தேர்தலில் போட்டியிட்ட தினகரன் அணியினர், ஓட்டுக்கு,
4,000 ரூபாய் கொடுத்ததாக, புகார் எழுந்தது. அதற்கான ஆவணங்கள் சிக்கியதால்,
இடைத்தேர்தலை ரத்து செய்து, நேற்று முன்தினம் இரவு, தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டது. தேர்தல் ரத்தால், நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.
தேர்தல் பணிக்கு வந்திருந்த, தேர்தல் பார்வையாளர்கள், துணை ராணுவ வீரர்கள்,
சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
- நமது நிருபர் -
No comments:
Post a Comment