சொத்து விபரங்களை சமர்ப்பிக்கஉ.பி., முதல்வர் கடைசி கெடு
லக்னோ: உ.பி.,யில், சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத, அரசு அதிகாரிகள், ஊழியர் களுக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத், இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மே, 3க்குள், விபரங்களை சமர்ப்பிக்காதோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
உ.பி.,யில், மார்ச், 19ல், முதல்வர் பொறுப் பேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள் அனைவரும், தங்கள், அசையும், அசையா சொத்து விபரங்களை, உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
அதிரடி
இதையடுத்து, 'அரசு துறைகளில் பணியாற்றும் உயரதிகாரிகள், 15 நாட்களுக்குள், தங்கள் வருமானம், சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என்றும் அதிரடியாக கூறினார். இதன்பின், அரசு ஊழியர்களும், தங்கள் சொத்து விபரங்களை வெளியிட உத்தரவிடப்பட்டது.
முதல்வர் ஆதித்யநாத்தின் இந்த அதிரடி உத்தரவுகளால், அமைச்சர்கள், அதிகாரிகள் பீதியடைந்தனர். இதையடுத்து, பெரும்பாலான அமைச்சர்கள், தங்கள் சொத்து விபரங்களை, முதல்வரிடம் நேரில் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் பலர், அரசு நிர்ணயித்த கெடுவுக்குள், சொத்து விபரங்களை வெளியிடாததால், முதல்வர் கோபமடைந்தார்.
எனினும், அரசு அலுவலகங்களில், ஆண்டு இறுதிக் கணக்கு முடிப்பு பணிகள் நடப்பதால், ஏப்., 15க்குள், அரசு அதிகாரிகள், ஊழியர்களால், சொத்து விபரங் களை வெளியிட முடியாதென கூறப்பட்டது. இதை அடுத்து, அவர்களுக்கான கெடு, ஏப்., 25க்கு நீட்டிக் கப்பட்டது. எனினும், 'மூத்த அதிகாரிகள் பலர், தங்கள் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை' என, தலைமை செயலர் ராகுல் பட்னாகர், முதல்வரிடம் தெரிவித்தார். இதையடுத்து, சொத்து விபரங்களை தாக்கல் செய்யாத, அதிகாரிகள், ஊழியர்களுக்கு, யோகி ஆதித்ய நாத் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, மாநில தலைமை செயலர் ராகுல் பட்னாகர் கூறியதாவது:முதல்வரின் உத்தரவை அடுத்து, பெரும்பாலான அமைச்சர்கள், தங்கள் சொத்து விபரங்களை, முதல்வரிடம் நேரில் சமர்ப்பித்து உள்ளனர்.
உத்தரவு
மாநில அரசின் கீழ் செயல்படும், 84 துறைகளில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள், ஊழியர் களும் ஆண்டுதோறும் தங்கள் சொத்து விபரங்கள், முதலீடுகள், வருமானத்திற்கான ஆதாரம் உள்ளிட்டவற்றை, அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுஉள்ளார். எனினும், சில துறைகளைச் சேர்ந்த அதிகாரி கள், இன்னும் தங்கள் சொத்து விபரங் களை வெளியிட வில்லை. அவர்களுக்காக, மே, 3 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கடைசி கெடுவையும் மதிக்காத அதிகாரிகள், அரசின் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என, முதல்வர் எச்சரித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
ரோமியோக்களை கைது செய்ய வேண்டாம்!
உ.பி., மாநில, டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்றுள்ள சுல்கான் சிங், மாநில சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து, போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். அதன்பின், போலீசாருக்கு சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன் விபரம்:
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை காப்பதில், போலீசார் சிறப்புடன் செயல்பட வேண்டும். ரவுடிகளை ஒடுக்குவதில், பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும். பெண்களிடம் அத்து மீறலில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்வதற்கு பதிலாக, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் அழைக்கப்பட்டு, அவர் களிடம், பிள்ளைகளின் அத்துமீறல்கள் குறித்து தெரிவித்து, எச்சரிக்கை விடுக்க வேண்டும். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில், வன்முறை யில் ஈடுபடுவோரை கைது செய்து, கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment