Thursday, April 27, 2017



இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப் பட்ட, சசிகலா அக்கா மகன் தினகரனை, ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, கோர்ட் அனுமதித்துள்ளது. தினகரனை சென்னை அழைத்து வந்து விசாரிக்கவும், போலீசார் முடிவு செய்துள்ளனர்.



தமிழகத்தில் ஆளும் கட்சியான, அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்ததால், அந்த கட்சியின் தேர்தல் சின்னமான, இரட்டை இலை முடக்கப்பட்டது.சின்னத்தை பெறுவதற்காக, சசிகலா அணியைச் சேர்ந்த, அவரது உறவினர் தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்தர் மூலமாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 50 கோடி ரூபாய் லஞ்சம் தர முன்வந்ததாக தெரிகிறது.

டில்லி ஓட்டல் ஒன்றில், 1.3 கோடி ரூபாயுடன் சிக்கிய, சுகேஷ் சந்தரிடம் போலீசார் நடத்திய
விசாரணையில், இந்த தகவல் அம்பலம் ஆனது. இதையடுத்து, தினகரன் - சுகேஷ் சந்தர் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவு ஆதாரம் அடிப்படையில், 'விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்' என, டில்லி போலீஸ், தினகரனுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.

அதன்படி, டில்லி சென்ற தினகரன், அவர் உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லி கார்ஜுனா ஆகியோரிடம், டில்லி போலீசார் விசாரணை நடத்தினர். நான்கு நாட்கள் நடந்த விசாரணையில், பல்வேறு ஆதாரங்களை முன் வைத்து கேட்கப்பட்ட, கிடுக்கிப்பிடி கேள்வி களுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய தினகரன், வேறு வழியின்றி உண்மையை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தினகரனை, நேற்று முன்தினம் நள்ளிரவு, போலீசார் கைது செய்தனர். பின், ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில், நீதிபதி பூனம் சவுத்ரி முன்,தினகரனை டில்லி போலீசார், நேற்று, ஆஜர்படுத்தினர். டில்லி போலீஸ் தரப்பு வழக்கறிஞர், தினகரன் வழக்கறிஞர் வாதங் களை கேட்ட நீதிபதி, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து, தினகரனை விசாரிக்க அனுமதி வழங்கினார்.

தினகரனுடன் கைது செய்யப்பட்ட, அவரது நீண்ட கால நண்பர் மல்லிகார்ஜுனாவையும், ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து, வரும், மே, 1ம் தேதி வரை, தினகரனிடம், மல்லிகார்ஜுனாவிடமும், போலீசார், அடுத்தக் கட்ட விசாரணை நடத்த உள்ளனர்.

சென்னை, பெங்களூரு, கொச்சி ஆகிய நகரங்க ளுக்கு, தினகரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும், டில்லி போலீசார் முடிவு செய்துள்ளனர்.அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும் கைப்பற்ற நினைத்த தினகரன், 70 நாட்களுக்கு முன், அவரது சித்தி, சசிகலா வால், துணைப் பொதுச் செயலராக நியமிக்கப் பட்டார். டில்லிபோலீசாரின் அதிரடியால், அவரது அரசியல் ஆட்டம், தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

மொபைல் போன் எங்கே?

டில்லி சிறப்பு கோர்ட்டில், தினகரன் ஆஜர் படுத்தப்பட்டபோது, போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சிங், வாதிட்டதாவது:

இடைத்தரகர் சுகேஷ் சந்தருடன், தினகரன் பேசிய மொபைல் போனை கைப்பற்ற வேண்டிய அவசியம் போலீசுக்கு உள்ளது. பணப்பரிமாற்றம் நடந்த விதம் குறித்து, மேல் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளது. எனவே, ஏழு நாட்கள், போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் வாதிட்டார்.

தினகரன் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறி ஞர், விகாஷ் பக்வா, தன் வாதத்தில் கூறியதாவது: தினகரனிடம், நான்கு நாட்களாக விசாரணை நடத்திய போலீசார், ஆதாரம் எதையும் சமர்ப்பிக்கவில்லை. எந்த சாட்சிய மும் இல்லாத நிலையில், பொய்யான விசாரணை நடக்கிறது. மிக அவசியமான சந்தர்ப்பத்தில் மட்டுமே, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.

ரூ.60 கோடி எப்படி வந்தது? தினகரனுக்கு ஐ.டி., 'நோட்டீஸ்':தேர்தல் கமிஷனுக்கு,

60 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றதாக, தினகரன் கைது செய்யப்ப ட்டதை தொடர்ந்து, அந்த வருமானம் வந்த விதம் தொடர்பாக விளக்கம் கேட்டு, அவருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, தமிழக வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: 

சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட தினகரன், வேட்புமனு தாக்கல் செய்தபோது, தன் சொத்து மதிப்பு, 70 லட்சம் ரூபாய் என குறிப்பிட்டு இருந்தார். தற்போது, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கும் வழக்கில் கைதாகியுள்ளார்.

அவர் கொடுத்த பணம், 1.30 கோடி ரூபாயும், இடைத்தரகரிடம் சிக்கியுள்ளது. அவ்வளவு பெரிய தொகையை, அவர் இடைத்தரகருக்கு கொடுத்திருப்பதாக, டில்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளதால், அவர்களை அணுகி, விபரங்களை கோரவுள்ளோம். மேலும், அந்த தொகை, தினகரனுக்கு எப்படி வந்தது என விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பவும் முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பலத்த பாதுகாப்பு

தினகரனும், அவரது நீண்ட கால நண்பர் மல்லிகார்ஜுனாவும், சிறப்பு கோர்ட் நீதிபதி முன், நேற்று பிற்பகல், 3:10 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர். தினகரனை ஆஜர் செய்வதற்கு சிறிது நேரத்துக்கு முன், கோர்ட் வளாகத்தில் இருந்த பத்திரிகையாளர்களை, அங்கிருந்து வெளியேறும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்கள், 45 நிமிடம் நடந்தது. முன்னதாக, 20 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார், கோர்ட் வளாகத்தில் திரண்டிருந்த பத்திரிகையாளர்கள், தினகரனை நெருங்க முடியாதபடி, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். முன்னதாக, டில்லி கிரைம் பிராஞ்ச் அலுவலகத்தில், தினகரனை, அவரது மனைவி சந்தித்ததாகவும் தெரிகிறது.

மன்னார்குடி கும்பல் பீதி!

தினகரனிடம், டில்லி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தும் நிலையில், இந்த பணப் பரிவர்த்தனை விஷயத்தில், அவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் யாரேனும் உதவி யுள்ளனரா என்ற விபரம் தெரிய வரும். அவர் கள் பெயரையும், வாக்குமூலத்தில், தினகரன் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே, வருமான வரித்துறை கண்காணிப் பில் இருக்கும் அமைச்சர்களின் பெயரை, தினகரன் சொல்லும் பட்சத்தில், அவர்களை நோக்கி, வருமான வரித்துறை திரும்பும் என தெரிகிறது. மேலும், தினகரனின் உறவினர் களும், தங்கள் மோசடியும் அம்பலமாகுமோ என்ற பீதியில் உறைந்துள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...