'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு 24 லட்சம் பேருக்கு கிடைக்குமா
பதிவு செய்த நாள் 28 ஏப்
2017
22:46
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு, புகைப்படம் எடுக்க வரும்படி, 24 லட்சம் பேருக்கு, உணவு துறை அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு வழங்கிய, 'ஆதார்' அட்டையில் உள்ள விபரங்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. மொத்தம் உள்ள, 1.90 கோடி ரேஷன் கார்டுகளில், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரமும் வழங்கிய கார்டுகளின் எண்ணிக்கை, 1.32 கோடி. அதில், 24 லட்சம் கார்டுகளில், குடும்ப தலைவர்களின் புகைப்படம் நல்ல நிலையில் இல்லை. இதனால், அவர்களின் ஸ்மார்ட் கார்டுகளை, அச்சிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புகைப்படம் சரியில்லாத நபர்களின் விபரம், ரேஷன் கடைகளில் உள்ளது. அவர்களை, அலைபேசியில் ஊழியர்கள் தொடர்பு கொண்டு, பொது வினியோக திட்ட இணையதளம் மற்றும் மொபைல், 'ஆப்' மூலம் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யும்படி கூறி வருகின்றனர்; அதை யாரும் செய்யவில்லை. இதனால், அவர்களின் கார்டு அச்சிடும் பணி தாமதமாகிறது. புது முயற்சியாக, அவர்கள் கடைக்கு வந்தால் போதும். ஊழியர் சொல்லும் இடங்களுக்கு சென்றால், அங்குள்ள அதிகாரிகளே, தங்கள் அலைபேசியில் புகைப்படம் எடுத்து, 'மெயின் சர்வருக்கு' அனுப்புவர். அடுத்த ஒரு மணி நேரத்தில், ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படும். மற்றவர்கள், தங்களின் முகவரி உள்ளிட்ட விபரங்கள், இணையதளத்தில் சரியாக இருக்கிறதா என சரிபார்க்கலாம், என்றார்.
எத்தனை : இம்மாதம் 1ம் தேதியிலிருந்து நேற்று மாலை வரை 76 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதில் 38 லட்சம் கார்டுகள்உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment