இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், தேர்தல் கமிஷன் செலவழித்த, 1.10 கோடி
ரூபாய் வீணாகி உள்ளது. ஒரு சட்டசபை தொகுதிக்கு, தேர்தல் நடத்த, 1.50 கோடி
ரூபாய் செலவாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி, மார்ச் 9ல்,
அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும்,
தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. தேர்தலுக்காக, 256 ஓட்டுச்சாவடிகள் தயார்
செய்யப்பட்டன. அங்கு, அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 1,842 பேர் தேர்வு செய்யப்பட்டு, இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, 720 துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். ஐந்து தேர்தல் பார்வையாளர்களும், ஒரு சிறப்பு தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தயார் செய்யப்பட்டன. நாளை, ஓட்டுப்பதிவு நடக்க இருந்தது. இந்நிலையில், தினகரன் அணியினரின், பணம் பட்டுவாடா ஆவணங்கள் சிக்கியதால், தேர்தல் ரத்து செய்யப்படுவதாக, நேற்று முன் தினம் இரவு அறிவிக்கப்பட்டது.
நேற்று முன் தினம் வரை, தேர்தல் பணிகளுக்காக, கமிஷன், 1.10 கோடி ரூபாய் செலவழித்து உள்ளது. தேர்தல் ரத்தால், அந்த செலவு வீணானது. மீண்டும் தேர்தல் நடத்தும் போது, இது போன்றே மறுபடியும் அனைத்து செலவுகளையும் செய்ய வேண்டும்.
- நமது நிருபர் -

No comments:
Post a Comment