சிவகங்கை; விபத்தில் மூக்கில் காயமடைந்த சிறுமி, சிவகங்கை அரசு மருத்துவமனை
ஊழியர்களின் அலட்சியத்தால் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை
பெறமுடியால் தவிக்கும் நிலை ஏற்பட்டது. சிவகங்கை காமராஜர் தெரு கருப்பு.
இவரது மகள் சுவேதா, 14. இவர் கடந்த ஏப்.,6ல் பழைய கோர்ட் அருகே நடந்து
சென்றபோது, அவ்வழியே வந்த ஒரு டூவீலர் மோதியதில் கீழே விழுந்தார். அவரது
மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. சிவகங்கை அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களுடன், 'ஏ.ஆர்.,' ரிப்போர்ட் எனப்படும் விபத்து அறிக்கை (ஆக்ஸிடென்ட் ரெஜிஸ்டர்) இணைத்து அனுப்பப்பட வேண்டும். ஆனால், சிவகங்கை அரசு மருத்துவமனை வார்டு நர்ஸ்களின் அலட்சியத்தால்,'ஏ.ஆர். ரிப்போர்ட்' இல்லாமல் மதுரைக்கு அனுப்பப்பட்ட சிறுமி சுவேதாவை வார்டில் அனுமதிக்காமல் புறநோயாளிகள் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.
'ஏ.ஆர். ரிப்போர்ட்' வாங்கி வருமாறு கட்டாயப்படுத்தியதால், சிறுமி பெற்றோர், அங்கிருந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மீண்டும் வந்து கேட்டுள்ளனர்.
ஆனால், நர்சுகள் அலட்சியமாக இருந்ததுடன் 4 நாட்களாக சிறுமியின் பெற்றோரை அலைய விட்டுள்ளனர். நேற்று சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த சிறுமியின் பெற்றோர், கதறியழுதும் 'ஏ.ஆர். ரிப்போர்ட்' வழங்காமல் இழுத்தடித்து வந்தனர்.நடந்த விபரங்களை அறிந்த பேராசிரியர் மகேஸ்வரி, நேரில் வார்டுக்கு சென்று 'ஏ.ஆர். ரிப்போர்ட்'டை கண்டுபிடித்து கொடுத்து அனுப்பி வைத்தார்.

No comments:
Post a Comment