தஞ்சாவூர்: கும்பகோணத்தில், பொதுமக்கள் எதிர்ப்பை மீறி, திறக்கப்பட்ட
டாஸ்மாக் கடையை மூடக்கோரி வர்த்தகர்கள் நேற்று கடையடைப்பு நடத்தினர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, கும்பகோணத்தில், 23 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதையடுத்து, டாஸ்மாக் இல்லாத நகரமாக கும்பகோணம் விளங்கியது. இந்நிலையில், சக்கரபாணி கோவில் தெற்கு வீதியில், கடந்த, 8ம் தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.இதனால், கும்பகோணத்தின் வர்த்தக பகுதியாக விளங்கும் பெரிய தெரு பகுதியில், அமைதி பாதிக்கப்படும் என கருதிய வர்த்தகர்கள் மற்றும் சுமை துாக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று பெரிய தெருவில் உள்ள, 200 கடைகளும் முழுமையாக நாள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தன. பின், வர்த்தகர்கள், சுமை துாக்கும் பணியாளர்கள், பெரிய தெருவிலிருந்து ஊர்லமாக, சப் - -கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று முறையிட்டனர். இதைத் தொடர்ந்து, திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை நேற்று மூடப்பட்டது
இதே போல், சுந்தரபெருமாள் கோவில் பகுதி யில் சுடுகாடு அருகே, புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் கும்பகோணம் - - தஞ்சாவூர் சாலையில் மறியலில் நேற்று ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

No comments:
Post a Comment