Sunday, January 7, 2018

‘Government putting passengers’ lives at risk by using casual drivers

Ram Sundaram | TNN | Jan 7, 2018, 06:50 IST




Private buses were operated along with a few government buses from Chennai Mofussil Bus Terminus, Koyambedu, a... Read More CHENNAI: In employing individuals without proper training to operate 'old' and 'ill-maintained' buses, the government is putting lives of millions at stake, say striking transport unions.

Two minor crashes were reported in the city on the third day of the strike. Both the buses were driven by temporary staff. In one incident, the driver smashed against the depot wall in Avadi, unable to turn the vehicle within the limited space. The second incident happened when the man behind the wheel, also a full-time auto driver, crashed against a pavement in Tambaram.

Though none was injured, unions said the government should not resort to hiring temporary staff and put the lives of passengers at risk. Union members alleged that the accident history of the drivers approaching regional transport offices (RTOs) was not being checked as the government was keen only on showing figures to the media that most buses were out on the roads.

"If holding licence is the only criteria, then what is the point in having training institutes for the government drivers," asked Sampath Kumar of State Transport Staff Federation. "Most of the temporary staff are lorry or auto drivers. Driving a lorry is completely different from driving a bus filled with passengers," admitted one of the temporary staff from Anna Nagar on anonymity.

"Moreover, nearly 72% government buses, particularly those used in the city, are overused and are in very bad shape. It is difficult to operate them safely without experience," said Perisamy of DMK's Labour Progressive Front.

Many temporary staff were not aware about the sharp curves, pot holes and other dangers on their routes unlike the seasoned and experienced MTC drivers.

"More than 70% of the technical staff in MTC and other TNSTC depots were also part of the protesting lot. Even those working were attached to the electrical and not the mechanical section," said Ajith Rahman, general sectary of Social Democratic Trade Union.

This indicated that there were not enough hands to attend to the repairs, he added.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறை

By DIN  |   Published on : 07th January 2018 04:48 AM 
lalu1
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் சிறைக்குச் செல்வது, இது, இரண்டாவது முறையாகும்.


லாலு பிரசாத் உள்ளிட்ட குற்றவாளிகளின் தண்டனை விவரத்தை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் சனிக்கிழமை அறிவித்தார்.


லாலு பிரசாத், கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு வரை முதல்வராகப் பதவி வகித்தபோது, தேவ்கர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சத்தைக் கையாடல் செய்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், லாலு பிரசாத் உள்ளிட்ட 16 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 23-ஆம் தேதி தீர்ப்பளித்தது. பிகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
நீதிமன்றம் தீர்ப்பளித்ததில் இருந்து லாலு பிரசாத், ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பது தொடர்பான வாதம், சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங், சிறையில் உள்ள லாலு பிரசாத் உள்ளிட்டோரிடம் விடியோ கான்ஃபரன்சிங் முறையில் விவாதித்து வந்தார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாதத்தின்போது, தனது முதுமையைக் காரணம் காட்டி, தனக்கு விதிக்கப்படும் தண்டனையைக் குறைத்து வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் லாலு பிரசாத் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், தண்டனை தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், சிறையில் உள்ள லாலு பிரசாத்திடம் விடியோ கான்ஃபரன்சிங் முறையில் தண்டனை விவரத்தை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் சனிக்கிழமை அறிவித்தார். இதுதொடர்பாக, சிபிஐ தரப்பு வழக்குரைஞர் ராகேஷ் பிரசாத் கூறியதாவது: 


இந்த வழக்கில், குற்றச் சதி செய்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் படி, லாலு பிரசாத்துக்கு 3.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.


மேலும், ஊழல் கண்காணிப்புச் சட்டத்தின் கீழ், லாலு பிரசாதுக்கு 3.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
எனவே, மொத்தம் ரூ.10 லட்சம் அபராதத்தை லாலு பிரசாத் நீதிமன்றத்தில் செலுத்தியாக வேண்டும். இந்தத் தொகையை செலுத்தத் தவறினால், அவர் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். 2 சிறைத் தண்டனைகளையும் அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றார் அவர்.


இதேபோல், மற்ற குற்றவாளிகளான பூல்சந்த், மகேஷ் பிரசாத், பேக் ஜூலியஸ், சுனில் குமார், சுஷில் குமார், சுதீர் குமார், ராஜா ராம் உள்ளிட்டோருக்கும் தலா மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சிவபால் சிங் உத்தரவிட்டார்.
முந்தைய வழக்கு: இதற்கு முன் கடந்த 2013-ஆம் ஆண்டில் வேறொரு கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாதுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2 மாதங்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று, அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

மேலும் சில வழக்குகள்: லாலு பிரசாத்துக்கு எதிராக, தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.97 கோடியை சட்ட விரோதமாக எடுத்தது, சைபாஸா கருவூலத்தில் இருந்து ரூ.36 கோடியை எடுத்தது, தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ.184 கோடியை எடுத்தது என மேலும் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பாஜக, ஜேடியு வரவேற்பு: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், லாலு பிரசாத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டதை பாஜகவும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியும் வரவேற்றுள்ளன.
இதுதொடர்பாக, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் கூறியதாவது:
இந்த வழக்கில் நீதிமன்றம் தனது கடமையை முடித்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தி விட்டது. நாட்டைக் கொள்ளையடிப்பவர்களுக்கு இறுதியில் என்ன கிடைக்கும் என்பதை நீதிமன்றத்தின் தீர்ப்பு தெரிவிக்கிறது என்றார் அவர்.
இதனிடையே, லாலு பிரசாத்துக்கு எதிராக பாஜக எழுப்பிய குற்றச்சாட்டுகளை இந்த தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் உறுதிசெய்துவிட்டது என்று பிகார் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி கூறினார்.


இதேபோல், ஜேடியு கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில், ''பிகார் அரசியலில் லாலு பிரசாத்தின் அத்தியாயம் முடிவடைந்து விட்டது; புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம், அரசியல்வாதிகள் முறைகேடுகள் செய்வதற்கு அஞ்சுவார்கள்'' என்றார்.


காங்கிரஸ் கருத்து: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், 'காங்கிரஸ் கட்சி எப்போதும் ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிறது. கூட்டணியைப் பொருத்தவரை, ஆர்ஜேடி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது; தனிப்பட்ட நபர்களுடன் அல்ல' என்றார்.

மேல்முறையீடு
 
லாலு பிரசாதுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நீதித் துறை தனது கடமையைச் செய்து விட்டது. தீர்ப்பின் விவரத்தை முழுமையாகப் படித்த பிறகு லாலு பிரசாதுக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடுவோம் என்றார் அவர்.


மகள், மருமகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
 
 சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிஸா பாரதி, மருமகன் ஷைலேஷ் குமார் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை 2-ஆவது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக தில்லியில் உள்ள மிஸா பாரதியின் பண்ணை இல்லத்தையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


இந்நிலையில், 2-ஆவது குற்றப்பத்திரிகை சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையை சிறப்பு நீதிபதி என்.கே.மல்ஹோத்ரா பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக, அவர் அமலாக்கத் துறையை கடிந்து கொண்டார்.
அவர் கூறுகையில், 'விசாரணையைத் தொடங்க விடுவீர்களா? இன்னும் எத்தனை குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வீர்கள்? தேசத்தின் மிக முக்கியமான விசாரணை அமைப்பு இப்படி நடந்துகொள்ளலாமா?' என்றார்.


மிஸா பாரதிக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றின் மூலம் ரூ.1.2 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

நடுவழியில் இறக்கி விடப்பட்ட பயணியருக்கு நஷ்ட ஈடு கோரி மனு

Added : ஜன 07, 2018 03:55


சென்னை:போக்குவரத்து கழக தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால், நடுவழியில் இறக்கி விடப்பட்ட பயணியருக்கு, உரிய நஷ்டஈடு வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், வி.பிரீதா தாக்கல் செய்த மனு:போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானது தான் என்றாலும், பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படும் விதத்தில், திடீர் போராட்டத்தில் இறங்க முடியாது.டிக்கெட் எடுத்து பயணம் செய்த பயணியரை, நடுவழியில் இறக்கி விட்டனர். இது, சேவை குறைபாடாகும். இதற்காக, நியாயமான நஷ்டஈடு பெற, பயணியருக்கு உரிமை உள்ளது.


அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தின் கீழ், ௨௦௦௩ல், ஒரு லட்சத்துக்கும் மேல், அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அது போன்று, போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடுவழியில் இறக்கி விடப்பட்ட பயணியருக்கு, நஷ்டஈடு வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.


நஷ்டஈடு தொகையை, போராடும் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும். நடுவழியில் இறக்கி விட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில், வேலை வாய்ப்பகத்தில் இருந்து, ஓட்டுனர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நாளை விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கொடைக்கானலுக்கு பொங்கல் சுற்றுலா

Added : ஜன 07, 2018 02:10

சென்னை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுலாத்துறை சார்பில், மூன்று நாள் கொடைக்கானல்சுற்றுலா அறிவிக்கப்பட்டு உள்ளது.


தமிழக சுற்றுலாவளர்ச்சிக் கழகம் சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும், 14 முதல், 17 வரை, மூன்று நாட்கள், கொடைக்கானல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து, உணவு, தங்கும் விடுதி சேர்த்து, நபர் ஒன்றுக்கு, 4,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 


வரும், 14ம் தேதி இரவு, 7:30 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்பட்டு, கொடைக்கானல் சுற்றிப் பார்த்துவிட்டு, 16ம் தேதி மாலை அங்கிருந்து புறப்பட்டு, 17ம் தேதி காலை, 6:00 மணிக்கு சென்னை திரும்பலாம்.மேலும் விபரங்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை என்ற முகவரியிலும், 044- - 2533 3333, 2533 3444 ஆகிய தொலைபேசி எண்களிலும், 1800 425531111 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
திருச்சி, சேலம் பல்கலைகளுக்கு வி.சி.,க்கள் நியமனம்

Added : ஜன 07, 2018 01:57 |


  சென்னை:திருச்சி பாரதிதாசன் மற்றும் சேலம் பெரியார் பல்கலைகளுக்கு, துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருச்சி பாரதிதாசன் பல்கலை துணை வேந்தராக, டாக்டர் மணிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 


இவர், காரைக்குடி, அழகப்பா பல்கலை, தொழில் வேதியியல் துறையில் பணியாற்றியவர். சேலம் பெரியார் பல்கலை துணை வேந்தராக, பேராசிரியர் குழந்தைவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கோவை பாரதியார் பல்கலை, இயற்பியல் துறையில் பணியாற்றியவர்.இவர்கள் துணை வேந்தராக, மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பர். இதற்கான உத்தரவை, தமிழக கவர்னரும், பல்கலை வேந்தருமான, பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார்.
'கூரியரில்' தபால் அனுப்ப உயர்கல்வி துறை தடை

Added : ஜன 07, 2018 00:37

கல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள், அரசு நிர்வாக தபால்களை அனுப்ப, தனியார் கூரியர் நிறுவனங்களை பயன்படுத்தக்கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.


தமிழக உயர்கல்வி செயலகத்தில் இருந்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில், கூடுதல் செயலர், கோபால் பிறப்பித்துள்ள உத்தரவு:
அனைத்து கல்லுாரிகள், பல்கலைகள், தொழில்நுட்ப இயக்குனரகம், கல்லுாரி கல்வி இயக்குனரகம் உள்ளிட்ட அலுவலகங்களும், உயர்கல்வி துறை அலுவலகங்களும், தங்களின் நிர்வாக பணிகளில், தபால்களை அனுப்ப, தனியார் கூரியர் நிறுவனங்களை பயன்படுத்த கூடாது.
தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு, அரசின் விரைவு தபால் சேவையான, 'ஸ்பீட் போஸ்ட்'டில் இருப்பது போன்ற விதிகள் இல்லை. எனவே, பாதுகாப்பான முறைக்கு, விரைவு தபால் சேவைகளையே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

தொலைந்த சான்றிதழ் பெற எளிய முறை அறிமுகம்

Added : ஜன 07, 2018 00:35

சென்னை:'அரசு தரப்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை தாக்கல் செய்து, தொலைந்த கல்வி சான்றிதழ்களின் நகல்களை பெறலாம்' என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
கல்லுாரி மற்றும் பல்கலைக கழகங்களின் மாணவர்கள், தங்கள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலை தொலைத்தால், போலீசில் புகார் அளித்து, அதற்கான உறுதி சான்று பெற வேண்டும். அந்த சான்றுடன், பல்கலை மற்றும் கல்லுாரிகளில் விண்ணப்பித்து, சான்றிதழ் நகல்களை பெறலாம்.


போலீசில் புகார் அளித்து சான்றிதழ் பெறுவதில், மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. அதனால், பலர் சான்றிதழ் நகல் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தொலைந்த சான்றிதழின் நகல்களை பெற, எளிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இதன்படி, ஆதார் எண், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை காட்டினால், மாணவர்களுக்கு சான்றிதழ் நகல் தரலாம் என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த திட்டம், பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை, பெரியார் பல்கலை உள்ளிட்ட, பல பல்கலைகளில் நடைமுறைக்கு வந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

NEWS TODAY 10.06.2026