Sunday, January 7, 2018

நடுவழியில் இறக்கி விடப்பட்ட பயணியருக்கு நஷ்ட ஈடு கோரி மனு

Added : ஜன 07, 2018 03:55


சென்னை:போக்குவரத்து கழக தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால், நடுவழியில் இறக்கி விடப்பட்ட பயணியருக்கு, உரிய நஷ்டஈடு வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், வி.பிரீதா தாக்கல் செய்த மனு:போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானது தான் என்றாலும், பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படும் விதத்தில், திடீர் போராட்டத்தில் இறங்க முடியாது.டிக்கெட் எடுத்து பயணம் செய்த பயணியரை, நடுவழியில் இறக்கி விட்டனர். இது, சேவை குறைபாடாகும். இதற்காக, நியாயமான நஷ்டஈடு பெற, பயணியருக்கு உரிமை உள்ளது.


அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தின் கீழ், ௨௦௦௩ல், ஒரு லட்சத்துக்கும் மேல், அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அது போன்று, போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடுவழியில் இறக்கி விடப்பட்ட பயணியருக்கு, நஷ்டஈடு வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.


நஷ்டஈடு தொகையை, போராடும் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும். நடுவழியில் இறக்கி விட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில், வேலை வாய்ப்பகத்தில் இருந்து, ஓட்டுனர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நாளை விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Man submits fake NEET cert at AIIMS, held

Man submits fake NEET cert at AIIMS, held  TIMES OF INDIA 28.10.2024  Ramanathapuram : Ramanathapuram district police have arrested a 22-yea...