Monday, January 15, 2018

மனிதாபிமானம் மிக்க ஜல்லிக்கட்டு வீரர்


இன்று  மிகவும் விறுவிறுப்பாககவும், மக்களின் ஆராவரத்துடனும் பெரிய அளவில் சலசலப்பில்லாமல் நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களில் முடக்கத்தான் மணி என்பவர் எட்டு மாடுகளை அடக்கி சிறந்த ஆட்டக்காரர் என்று அறிவிக்கப்பட்டார். இரண்டாவதாக பரத் அறிவிக்கப்பட்டார்.

ஜல்லிக்கட்டு

எட்டு மாடுகளை பிடித்ததால் முடக்கத்தான் மணிக்கு ஏகப்பட்ட பரிசுப்பொருட்களும், மாவட்ட நிர்வாகத்தின் பரிசும் வழஙகப்பட்டது.
இந்தப் போட்டியில் மட்டுமல்ல,  தொடர்ந்து ஜல்லிக்கட்டில் பல ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வருகிறார் முடக்கத்தான் மணி. காளைகளை அடக்குவதில் பல டெக்னிக்குகளை கற்று வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இன்று தனக்கு கிடைத்தப் பரிசுகள் அனைத்தையும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். இப்போது மட்டுமில்லாமல்  ஒவ்வொரு முறையும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் தனக்கு கிடைத்தப் பரிசுகளை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் முடக்கத்தான் மணி. அவருடைய வீரமும், மனித நேயமும் தொடரட்டும் என்று மக்கள் பாரட்டுகிறார்கள்.

பத்திரிக்கையாளர் ஞாநி சங்கரன் மறைவு..!

பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான ஞாநி சங்கரன் உயிரிழந்தார். அவருக்கு வயது 64.



தமிழகத்தின் முக்கியமான பத்திரிக்கையாளர்களில் ஒருவர் ஞாநி சங்கரன். செங்கல்பட்டில் பிறந்த அவர், எழுத்தாளர், நாட‍க‍க் கலைஞர், அரசியல் விமர்சகர் என்று பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவர், சமகால அரசியல் குறித்த விமர்சனங்களையும், கருத்துகளையும் ஊடகங்களில் வெளிப்படுத்திவந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைபாடு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக கே.கே.நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது

ஓடுதளத்திலிருந்து விலகிய விமானம்..! அதிர்ஷடவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

துருக்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. அதிர்ஷடவசமாக பெரும் உயிரிழப்பு ஏற்படவில்லை.


துருக்கி நாட்டு தலைநகர் அங்காராவில் இருந்து டிராப்சான் நகருக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 162 பயணிகளும், 2 பைலட்களும், 4 விமான நிலைய ஊழியர்களும் பயணம் செய்தனர்.

டிராப்சன் நகரை அடைந்த விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கியது. அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்தது. அதனால், கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி ஓடியது. அருகிலிருந்த பள்ளத்தில் சரிந்து விழுந்தது. 

இதில் அதிர்ஷ்டவசமாக 162 பயணிகளும் உயிர் தப்பினர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற விமான நிறுவன அதிகாரிகள் காயமடைந்த பயணிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விமான நிலையத்தின் ஓடுதளம் கருங்கடல் பகுதி கடற்கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ஏர்டெல்லின் அமே(சிங்)சான் ஆஃபர்!

 
 
ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு, அமேசான் ப்ரைம் உறுப்பினருக்கான ஒரு வருட சந்தாவை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது அமேசான் ப்ரைமில் உறுப்பினராக இணையும் வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தில் உறுப்பினராக இணைய ஆண்டுக்கு ரூ.999 வசூலித்துவருகிறது. இந்த நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் அதன் குறிப்பிட்ட சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, அமேசான் ப்ரைம் உறுப்பினருக்கான ஒரு வருட சந்தாவை இலவசமாக வழங்கவுள்ளது.

அதன்படி ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களில் ரூ.499 அல்லது அதற்கும் அதிக விலையில் திட்டங்களை பயன்படுத்துவோர், ஏர்டெல் வி-ஃபைபர் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களில் ரூ.1099 அல்லது அதற்கும் அதிக விலை கொண்ட திட்டங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் சந்தா ஒரு வருடத்துக்கு இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதைக்கொண்டு வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோக்களை ஒரு வருடத்துக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்த முடியும்.

அமேசான் பிரைம் வீடியோ சேவையில் 11 லட்சத்துக்கும் அதிகமான வீடியோக்கள், பிரத்யேக தொடர்கள், சிறப்பு சலுகைகள் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒரு வருடத்துக்கான அமேசான் பிரைம் சேவையை வாடிக்கையாளர்கள் ஏர்டெல் டி.வி செயலி மூலம் ஆக்டிவேட் செய்துகொள்ள முடியும்.

காச நோயாளிகளுக்கு உதவித்தொகை!!!

 
காசநோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘டியூபர்செல் பாசிலஸ்’ எனும் கிருமியால் வரும் நோயின் பெயர் ‘டியூபர் குளோசிஸ்’. இதைச் சுருக்கி ‘டிபி’ என்று அழைக்கிறோம். இந்நோய் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல் இருப்பதால்தான் வருகிறது. இது, நெஞ்சுப் பகுதி முழுவதும் சளி சேர்ந்து, பாதிக்கப்பட்டோரின் உடம்பை உருக்கிவிடும். இந்தியாவில் டிபியால் பாதிப்படையும் மக்கள் இறப்பது குறைந்திருந்தாலும், நோயால் மக்கள் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 28 லட்சம் பேர் காசநோயால் (டிபி) பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 17 லட்சம் பேர் மட்டுமே உரிய சிகிச்சை பெறுவதாக சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் காசநோயால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் பேருக்கு மாதம் 500 ரூபாய் உதவித்தொகை வழங்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், “காச நோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்க செலவு நிதி குழு ஒப்புதல் அளித்துள்ளது. நோயாளிகளின் மருத்துவ ஆவணங்கள் மற்றும் ஆதார் எண் அடிப்படையில் உதவித்தொகை வழங்குவது குறித்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. காச நோயாளிகளுக்கு நோய் குணமாகும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும். இதனால், காசநோயாளிகள் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துமிக்க உணவுகளை வாங்கி சாப்பிடவும், போக்குவரத்து செலவுக்கும் பயன்படுத்த முடியும். காசநோயை 2025ஆம் ஆண்டுக்குள் 90% ஒழிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை வாரத்துக்கு மூன்று முறை மருந்து உட்கொள்ளும் முறையைப் பின்பற்றி வந்தனர். “ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் என்று அழைக்கப்படும் இந்த டிபி மருந்து கலவையை உட்கொள்ளும் முறைகளில் தற்போது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, வாரத்துக்கு மூன்று முறை மருந்து எடுத்துக்கொள்ளாமல், தினமும் மருந்தை உட்கொள்ள வேண்டும். மேலும், குழந்தைகளுக்குக் கசப்பான மாத்திரைக்குப் பதிலாக எளிதில் கரையக்கூடிய இனிப்பு சுவையுள்ள மருந்துகள் வழங்கப்படவுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2016ஆம் ஆண்டு டிசம்பர் வரை டெல்லியில் 2 லட்சம் காசநோயாளிகள் இருந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2014இல் 73,096, 2015இல் 83,028, 2016இல் 69,169 ஆகவும் இருந்தது. இந்நோய் மூலம் கடந்த 2014இல் 4,350 பேரும், 2015இல் 3,635 பேரும் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் 2017ஆம் ஆண்டின் அறிக்கைபடி, காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28.2 லட்சத்திலிருந்து 27 லட்சமாகக் குறைந்துள்ளது. கடந்த ஓராண்டில் இறப்பு 60 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அரசு பணியில் சேர்ந்த ஒருவர் ஓராண்டு காலத்திற்குள் இறந்துப்போனால் அவருடைய விதவை மனைவிக்கு ஒய்வு ஊதியம் வழங்க வேண்டுமா?

தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 ல் விதி 45(3)(a) மற்றும் (b)  ன்படி ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இறந்த அரசு ஊழியருக்கு இறப்பு மற்றும் ஓய்வுகால பயனாக இரண்டு மாத காலச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில், விதி 49(2) ல் வரம்புரையில் (PROVISO) குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி ஓராண்டு காலத்திற்கு குறைவாக பணியாற்றிய அரசு ஊழியர் இறந்து போனால், அவருடைய விதவை மனைவிக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த விதி 49(2) கீழே தரப்பட்டுள்ளது.

49(2) துணை விதி 3-ல் கூறப்பட்டுள்ளதற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில், ஒரு அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் 1(a) ஓராண்டு காலத்திற்கு குறைவில்லாமல் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது அவருடைய பணிக் காலத்தில் எந்தவொரு நேரத்திலும் இறக்க நேரிடுதல்

(b)  பணி ஓய்வுக்கு பிறகு அவர் இறக்கும் நாளில் ஓய்வூதியம் பெற்றுவருவாரேயானால், இறந்த போனவரின் குடும்பத்தினர் அந்த குடும்ப ஓய்வூதியத்தை எப்படி பெற தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவரை அரசு ஊழியராக பணி நியமன செய்வதற்கு முன்பு உரிய மருத்துவ அதிகாரியால் பரிசோதிக்கப்பட்டு அவர் பணியில் சேர்வதற்கு தகுதி என்று அறிவிக்கப்பட்டு பணியில் சேர்ந்து ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக அந்த அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

எனவே மேற்கண்ட விதியின்படி ஓராண்டு காலம் பணி நிறைவடைவதற்கு முன்பாக ஓர் அரசு ஊழியர் இறக்க நேரிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை " தமிழ்நாடு அரசு Vs M. தெய்வசிகாமணி (2009-3-MLJ-1) மற்றும் உச்சநீதிமன்றம் S. K. துவா Vs ஹரியானா மாநில அரசு (AIR-2008-SC-1077) ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வழங்கியுள்ளது.

W. P. NO - 12437/2007, dt - 3.12.2014"

கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா?

பொங்கல் பண்டிகை முடிந்து  மறுநாள் தங்கள் குழந்தைகளின் வாய் வெந்திருப்பதைக் கண்டு  பதறி, டாக்டரிடம் அழைத்துச் செல்லும் பெற்றோர்களை மாநகரங்களிலும் சிறு நகரங்களிலும் பார்க்கலாம். 

காரணம்,அந்தப் பிள்ளைகள் கரும்புத் தின்ற உடனேயே தண்ணீர் குடித்திருப்பார்கள். அதன் காரணமாக, வாய் முழுக்க நமைச்சல் எடுக்கும் சிறு கொப்புளங்கள் தோன்றியிருக்கும்.
கரும்பு தின்ற உடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கை செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் பெரும்பாலான ,கிராமப்புறங்களில் இந்த அவதிகள் கிடையாது. அங்கு பெரியவர்கள்,கரும்பு தின்னும் குழந்தைகளிடம்,
*'எலெ,தண்ணீய குடிச்சுடாதே..வாய் வெந்துடும்'*

என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்துக் கொண்டே இருப்பார்கள்.

கரும்பை கடித்து சுவைத்து முடித்தபிறகு மெலிதாக தாகம் எடுக்கும். உடனே தண்ணீரை மொண்டு மடக்மடக் ஏன்று குடித்துவிடாதீர்கள். அப்படி செய்தால்,வாய் வெந்துவிடும். கரும்பு சாப்பிட்டு முடித்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தப் பிறகே தண்ணீர் அருந்த வேண்டும்.

*ஏன் தண்ணீர் குடித்தால் வாய் வேகிறது.*

"கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படக்கூடிய கால்சியம் அதிகம் இருக்கிறது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது.

அந்த சமயத்தில்,தண்ணீர் குடிக்கும்போது அதிகமான சூட்டைக் கிளப்பும் எதிர்வினை நடக்கிறது.இதனால்,நாக்கு வெந்து விடுகிறது. கொஞ்சம் இடைவெளிவிட்டு தண்ணீர் அருந்துவதால் இந்த பாதிப்பு வருவதில்லை"
என்கிறார்கள் மருத்துவர்கள்.

எனவே,இந்த சிறு விழிப்புணர்வுடன் நாம் பொங்கலைக் கொண்டாடுவோம்.

NEWS TODAY 11.06.2026