கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா?
பொங்கல் பண்டிகை முடிந்து மறுநாள் தங்கள் குழந்தைகளின் வாய்
வெந்திருப்பதைக் கண்டு பதறி, டாக்டரிடம் அழைத்துச் செல்லும் பெற்றோர்களை
மாநகரங்களிலும் சிறு நகரங்களிலும் பார்க்கலாம்.
காரணம்,அந்தப் பிள்ளைகள் கரும்புத் தின்ற உடனேயே தண்ணீர் குடித்திருப்பார்கள். அதன் காரணமாக, வாய் முழுக்க நமைச்சல் எடுக்கும் சிறு கொப்புளங்கள் தோன்றியிருக்கும்.
கரும்பு தின்ற உடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கை செய்யமுடியாமல் போய்விடும். ஆனால் பெரும்பாலான ,கிராமப்புறங்களில் இந்த அவதிகள் கிடையாது. அங்கு பெரியவர்கள்,கரும்பு தின்னும் குழந்தைகளிடம்,
*'எலெ,தண்ணீய குடிச்சுடாதே..வாய் வெந்துடும்'*
என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்துக் கொண்டே இருப்பார்கள்.
கரும்பை கடித்து சுவைத்து முடித்தபிறகு மெலிதாக தாகம் எடுக்கும். உடனே தண்ணீரை மொண்டு மடக்மடக் ஏன்று குடித்துவிடாதீர்கள். அப்படி செய்தால்,வாய் வெந்துவிடும். கரும்பு சாப்பிட்டு முடித்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தப் பிறகே தண்ணீர் அருந்த வேண்டும்.
*ஏன் தண்ணீர் குடித்தால் வாய் வேகிறது.*
"கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படக்கூடிய கால்சியம் அதிகம் இருக்கிறது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது.
அந்த சமயத்தில்,தண்ணீர் குடிக்கும்போது அதிகமான சூட்டைக் கிளப்பும் எதிர்வினை நடக்கிறது.இதனால்,நாக்கு வெந்து விடுகிறது. கொஞ்சம் இடைவெளிவிட்டு தண்ணீர் அருந்துவதால் இந்த பாதிப்பு வருவதில்லை"
என்கிறார்கள் மருத்துவர்கள்.
எனவே,இந்த சிறு விழிப்புணர்வுடன் நாம் பொங்கலைக் கொண்டாடுவோம்.
No comments:
Post a Comment