மனிதாபிமானம் மிக்க ஜல்லிக்கட்டு வீரர்
இன்று மிகவும் விறுவிறுப்பாககவும், மக்களின் ஆராவரத்துடனும் பெரிய அளவில் சலசலப்பில்லாமல் நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களில் முடக்கத்தான் மணி என்பவர் எட்டு மாடுகளை அடக்கி சிறந்த ஆட்டக்காரர் என்று அறிவிக்கப்பட்டார். இரண்டாவதாக பரத் அறிவிக்கப்பட்டார்.
எட்டு மாடுகளை பிடித்ததால் முடக்கத்தான் மணிக்கு ஏகப்பட்ட பரிசுப்பொருட்களும், மாவட்ட நிர்வாகத்தின் பரிசும் வழஙகப்பட்டது.
இந்தப் போட்டியில் மட்டுமல்ல, தொடர்ந்து ஜல்லிக்கட்டில் பல ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வருகிறார் முடக்கத்தான் மணி. காளைகளை அடக்குவதில் பல டெக்னிக்குகளை கற்று வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இன்று தனக்கு கிடைத்தப் பரிசுகள் அனைத்தையும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். இப்போது மட்டுமில்லாமல் ஒவ்வொரு முறையும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் தனக்கு கிடைத்தப் பரிசுகளை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் முடக்கத்தான் மணி. அவருடைய வீரமும், மனித நேயமும் தொடரட்டும் என்று மக்கள் பாரட்டுகிறார்கள்.
No comments:
Post a Comment