Thursday, January 18, 2018


Univ on course for accreditation from central body

TIMES NEWS NETWORK

Trichy: Preparations for the third cycle of accreditation to Bharathidasan University from the National Assessment and Accreditation Council (NAAC) have been put on fast track. Newly-appointed vice-chancellor P Manishankar said he would visit each department to monitor the progress starting Thursday.

Accreditation to the Bharathidasan University (BDU) with ‘A’ Grade by the NAAC had expired in September last year. A steering committee will oversee the process in the third cycle with the accreditation lasting for five years.

The Internal Quality Assurance Cell (IQAC) started preparations based on the new set of guidelines from September 2017. However, the process had slowed down in the absence of a vice-chancellor.

The format of the data required had been sent to each department, Manishankar said, adding, “Data has to be collected under seven major criteria from all departments and submitted to the NAAC online. The main idea is to assess the ground reality in each department which would help us in planning.”

As per the new guidelines, data from the last five years pertaining to the performance of the university has been sought. Since it has to be submitted mostly in numeric and tabular form, it has to be filed online as part of the assessment.

Director of IQAC S Rajasekar said, “We are expediting the process to try and apply in the next cycle which falls in April/May. While scoring above three in the four-point scale is our target, NAAC accreditation becomes crucial to claim strategic funding from the University Grants Commission.”

TN medico pursuing PG found dead in Delhi home

TIMES NEWS NETWORK

New Delhi: A 24-year-old Tamil Nadu doctor pursuing a postgraduate course in medicine at GTB Hospital here was found dead outside his room at a rented house in Dilshad Garden. Police found three insulin syringes in the room and have detained his roommates for questioning. An inquest under Section 174 CrPC has been initiated.

S Sharath Prabhu of Tiruppur joined the postgraduate course at University Medical College in May last year after completing his MBBS from Coimbatore Medical College.

The incident was reported at 10am when Prabhu’s room mate Arvind, a postgraduate student from Chennai, found him lying face down near the washbasin outside their room with a syringe lying next to him. 




We suspect foul play: Prabhu’s dad

He informed their other roommate Karthikeya about the incident and took Prabhu to GTB hospital where he was declared dead on arrival. “We were informed by the hospital authorities after which an investigation was initiated. We have lifted some evidences from the room and are probing into all angles. The cause of death can be ascertained after the autopsy,” said Nupur Prasad, DCP, (Shahdara).

Police recovered two more syringes from the room, beside Prabhu’s bed. Arvind and Karthikeya told the officers that Prabhu had dinner with them around 11pm, after which he went to bed . They said that he was talking to someone on phone before going to sleep. Arvind and Karthikeya are being questioned further.

Police are also probing whether he had an argument with someone, due to which he may have committed suicide. Officers, however, said that the possibility of foul play has not been ruled out since Prabhu had an injury on his forehead and an injection mark on his right hand. Some vials were also recovered from the room.

The body has been sent for postmortem at GTB hospital and would be handed over to his parents on Thursday.

“My son spoke to me on Tuesday night around 9pm, during which he did not seem upset. He was a topper in the district. We suspect a foul play in the incident,” said Prabhu’s father Selvamani, who reached Delhi on Wednesday evening.
 எம்.ஜி.ஆர்: வரலாற்று நாயகன்!
 

எம்.ஜி.ஆரைப் பற்றிய தகவல்கள் என்றைக்குமே ஆச்சரியப்படுத்துபவை. பேசித் தீராதவை. எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது வாழ்நாளில் சில வீழ்ச்சிகளையும் பெரும் வெற்றிகளையும் சந்தித்த முக்கியமான தலைவர் அவர். அவரது திரைப்பட, அரசியல் ஆளுமை, அவர் பொதுவாழ்வில் தொட்ட உயரங்கள், மக்கள் அவர்பால் பொழிந்த அன்பு - தமிழக அரசியல் இன்று வரை காணாதது.
எம்.ஜி.ஆரின் வளர்ச்சியில் திமுகவுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. அவரை ‘திராவிடக் கர்ணன்’ என்று திமுக போற்றியது. ‘முரசொலி’யும் எம்.ஜி.ஆரின் புகழ்பாடியது. திமுகவை, அதன் கொள்கைகளை, அண்ணாவை எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் வசனங்களும் பாடல்களும் தாங்கிப் பிடித்தன. ‘‘தம்பி ராமசந்திரன் முகத்தைக் காட்டினால் 30 ஆயிரம் வாக்குகள்’’ என்று 1967 திமுக விருகம்பாக்கம் மாநாட்டில் அண்ணா சொல்லும் அளவுக்கு எம்.ஜி.ஆர். வளர்ந்திருந்தார்.

பிரிந்த கைகள்

அண்ணா மறைவுக்குப் பின் நாவலரை முந்தி கருணாநிதி முதல்வராவதற்கு எம்.ஜி.ஆர். துணை நின்றார். பிரதிபலனாக திமுகவின் பொருளாளர் பதவி கிடைத்தது. ஒன்றாகப் பயணித்த இந்த இரு பெரும் ஆளுமைகள் ஒருகட்டத்தில் மெதுவாக விலகத் தலைப்பட்டனர். 1971 தேர்தலில் அசுர பலத்துடன் திமுகவும் கருணாநிதியும் ஆட்சிக்குத் திரும்பியிருந்தனர். எம்.ஜி.ஆர். அமைச்சராக விரும்பினார். நடிப்பதை விட்டுவிட்டு வருமாறு கருணாநிதி சொல்ல விரிசல் அதிகமாகியது.

பொருளாளர் என்ற முறையில் தேர்தல் செலவுகள் செய்யப்பட்ட விதத்திலும், 1972-ல் மு.க.முத்துவின் திரைப்பட வருகையிலும் எம்.ஜி.ஆருக்கு வருத்தம் இருந்தது. 1972 அன்று திருக்கழுக்குன்றத்தில் திமுகவினர் கணக்கு காட்ட வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர். இரண்டு நாட்களில் சஸ்பெண்ட், பின்னர் 14 அக்டோபர் விலக்கம் என்று எம்.ஜி.ஆர். கணக்கை முடித்துவைத்தது திமுக தலைமை.1972 அக்டோபர் 18-ல் அதிமுக உருவானது. எம்.ஜி.ஆருக்குத் திரண்ட கூட்டம் அனைவரையும் மலைக்கவைத்தது. காமராஜர், “ஒரே குட்டையில் ஊறிய மட்டை” என்று எம்.ஜி.ஆரை விமர்சித்தார். ‘‘சினிமா மாயை சில மாதங்களில் மறைந்துவிடும்’’ என்றது திமுக. கட்சி தொடங்கிய ஆறே மாதங்களில் எம்.ஜி.ஆரின் திண்டுக்கல் தேர்தல் வெற்றி, திமுகவை விட காமராஜரைக் கலவரப்படுத்தியது. 1969-ல் காங்கிரஸ் காமராஜ் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என்று ஏற்கெனவே இரண்டாகியிருந்தது.

வெற்றி வாசல்

திமுகவுக்கு மாற்று ஸ்தாபன காங்கிரஸ் என்பதை எம்.ஜி.ஆர். முடித்து வைக்கப்போவதை காமராஜர் தொடக்கத்திலேயே புரிந்துகொண்டார். திமுகவினரும் எம்.ஜி.ஆரைக் குறைத்தே மதிப்பிட்டனர். கருணாநிதி யின் மாநில சுயாட்சித் தீர்மானம், தலைமைப் பண்புகளைச் சகித்துக்கொள்ள முடியாத இந்திரா காங்கிரஸ் ஆட்சி, திமுகவை வீழ்த்தும் ஒரு கருவியாக எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திக்கொண்டது. அவர் கேட்டபடி சர்க்காரியா விசாரணை கமிஷன் அமைத்தது. சாட்சி சொல்ல எம்.ஜி.ஆர். வரவில்லை என்பது தனிக் கதை. எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்காலும் வீழ்த்த முடியாத கருணாநிதி அரசை இந்திரா அரசு கலைத்தது. அவசர நிலை திமுகவை வதைத்தது. மத்திய அரசை என்றும் பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு அப்போது எம்.ஜி.ஆர். வந்திருப்பார் என்றே சொல்லலாம்.

இரட்டைச் சவாரி

1977 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸோடு களம் கண்டு வென்றவர், சட்ட மன்றத் தேர்தலில் தனியாகவே நின்றார். அதிமுக, இந்திரா காங்கிரஸ், ஜனதா, திமுக என்று நான்முனைப் போட்டியாக இருந்த அந்தத் தேர்தலில் 30.4 % வாக்குகள் பெற்று ஆட்சிக்கு வந்திருந்தது அதிமுக. இனி தமிழகத்தில் போட்டி என்பது திராவிட இயக்கங்களுக்கு மத்தியில்தான் என்று எம்.ஜி.ஆர். ஒரு புதிய வரலாற்றைப் படைத்திருந்தார். முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் என்ற புதிய எம்.ஜி.ஆர். - கருணாநிதி உறவில் கனிவு, கசப்பு, கண்ணியம் அனைத்தும் சேர்ந்தே இருந்தன.

‘என்ன தவறு செய்தேன்?’

திமுகவும், இந்திரா காங்கிரஸும் 1980 நாடாளுமன்றத் தேர்தலில் கைகோத்தன. அதிமுகவுக்குக் கிடைத்தது இரண்டே இடங்கள்தான். எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை முடிந்தது என்றே நாஞ்சில் மனோகரன் உட்பட பலரும் எண்ணினர். 1980 பிப்ரவரி 17 அன்று அவரது ஆட்சி கலைக்கப்பட்டபோது “நான் என்ன தவறு செய்தேன்?” என்று மக்களிடம் கேட்டார். மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர். திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி வலிமையை அவர் தனியாகவே, பெரிய அளவு நிதி இன்றியும் சந்தித்தார். அதிமுக 38.8% வாக்குகள் பெற்றுச் சாதனை புரிந்தது.
எம்.ஜி.ஆரின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. மது ஆலை அதிபர்கள் புதிய நண்பர்களாய் மாறினர். முதல் ஆட்சியின்போதே கப்பல் பேர ஊழல், பஸ் தடங்கள் ஊழல் என்று திமுக குற்றம்சாட்டியிருந்தது. இம்முறை எரி சாராய ஊழல், எங்கும் எதிலும் ஊழல் என்று திமுக சுட்டிக்காட்டியது. எம்.ஜி.ஆர். இரண்டு விசாரணை கமிஷன்கள் அமைக்க.. மத்திய அரசு ரே கமிஷன் அமைத்தது. ஊழல் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர், இன்று அவரே ஊழல்வாதி என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தார். எனினும், மக்கள் கடைசி வரை அவர் நேர்மையானவர் என்றே நம்பினர்.

 கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம், அதிக உரிமைகள் கோரி - தென்னக மாநில முதல்வர்கள் மாநாடு, பொதுத் தொகுப்பிலிருந்து அரிசிக்காக உண்ணாவிரதம் போன்றவை முக்கிய நிகழ்வுகள்.

எம்.ஜி.ஆரின் இரண்டாம் ஆட்சி இலவசங்களுக்கு வித்திட்டது. 1982-ல் ரூ.100 கோடி செலவில் அவர் கொண்டுவந்த சத்துணவு அவரை உச்சத்தில் கொண்டு நிறுத்தியது. எம்.ஜி.ஆர். தமிழகத்தை ஒரு நலத்திட்ட மாநிலமாகவும், ஊரக வளர்ச்சியில் அக்கறை உள்ளதாகவும் மாற்றினார். 1982-ல் கட்சிக்குக் கைகொடுக்க ஜெயலலிதாவைக் கொண்டுவந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட அதீத மரியாதை மூத்த தலைவர்களைக் காயப்படுத்தியது. 1984 நவம்பர் எம்.ஜி.ஆர். உடல்நிலை கவலைக்கிடமாக ஆனது. கட்சியும் ஆர்.எம்.வீ., ஜெயலலிதா அணிகள் என்று இரண்டாகப் பிரிந்திருந்தது.

திராவிட இயக்கக் கோட்டை

‘நானும் பிரார்த்தனை செய்கிறேன்’ என்று கருணாநிதி நண்பருக்காக இயற்கையை இறைஞ்சினார். இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்திருந்த பின்னணியிலும், எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் இருந்த பின்னணியிலும் நடந்த 1984 பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர். வென்றார். ‘சாவுக்கும் நோவுக்கும் ஓட்டு’ என்றார் கருணாநிதி.
எம்.ஜி.ஆரின் மூன்றாவது ஆட்சி 1985-ல் தொடங்கியது. உட்கட்சி சண்டை, ஈழப் பிரச்சினை, பேச முடியாத எம்.ஜி.ஆர். என்று நடந்தது நிர்வாகம். இம்முறை சட்ட மேலவை கலைப்பு, இந்தி எதிர்ப்புக்கு அரசியல் சட்டத்தைக் கொளுத்தியதற்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பறிப்பு என்று ஒரு குறுகிய அரசியல் போக்கையே எம்.ஜி.ஆர். கொண்டிருந்தார். எனினும், இந்த மண்ணை ஒரு திராவிட இயக்கக் கோட்டையாக மாற்றியதில் எம்.ஜி.ஆரின் பங்கு யாராலும் மறக்கவோ மறைக்கவோ முடியாதது!
- இரா.கண்ணன், ஐக்கிய நாடுகளின் சோமாலியா ஹிர்ஷபெல்லே மாநில அலுவலகத் துணைத் தலைவர்,
அண்ணா, எம்.ஜி.ஆர். நூல்களின் ஆசிரியர்.

ஜனவரி 17: எம்.ஜி.ஆர். பிறந்தநாள்

தோவாளை சந்தையில் வரலாறு காணாத விலை உயர்வு: மல்லிகை கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை

By DIN | Published on : 18th January 2018 07:41 AM |

பனிப்பொழிவால் வரத்து குறைவு காரணமாக, தோவாளை சந்தையில் புதன்கிழமை மல்லிகைப்பூ கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.
தோவாளை பூச்சந்தைக்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாது, வெளிமாவட்ட வியாபாரிகள், கேரள மாநிலத்திலிருந்தும் வியாபாரிகள் வந்து போட்டி போட்டு பூக்களை கொள்முதல் செய்கின்றனர்.

தற்போது பண்டிகைக் காலம் மற்றும் சுபமுகூர்த்தம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், பனியுடன் அதிவேக காற்றால், மல்லிகைப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் மல்லிகைப்பூவுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்த ஆண்டு மல்லிகைப்பூ வருகை மிகவும் குறைந்து விட்டது. பொங்கல் தினத்துக்கு முந்தைய நாள் (ஜன.13) மல்லிகைப்பூ கிலோ ரூ. 3 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. கடந்த 2 நாள்களாக விலை குறைந்திருந்த நிலையில், புதன்கிழமை கிலோ ரூ. 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ கிலோ ரூ.650, சம்பங்கி ரூ. 300, கோழிக்கொண்டை ரூ.50, ஓசூர் ரோஜா ரூ.200, சேலம் அரளி ரூ.220, வாடாமல்லி ரூ.70, மரிக்கொழுந்து ரூ.120, வெள்ளை செவ்வந்தி ரூ.160, தாமரைப்பூ ஒன்று ரூ.12 என்ற விலையில் விற்பனை ஆனது.

எம்ஜிஆர் 101-ஆவது பிறந்த நாள்: முதல்வர் - துணை முதல்வர் மரியாதை

By DIN | Published on : 18th January 2018 01:32 AM |


அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான மறைந்த எம்ஜிஆரின் 101-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்
புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களும் பங்கேற்றனர்.

அதிமுக அலுவலகம்: ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்திலும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதிமுக அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதல்வரும், துணை முதல்வரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.

நிதி உதவி: எம்ஜிஆர் கட்சி தொடங்கிய பிறகு 1973-இல் திண்டுக்கல்லில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் அதிமுக முதல்முறையாக போட்டியிட்டது. அப்போது கட்சி பணியில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆறுமுகம் படுகொலை செய்யப்பட்டார். ஆறுமுகத்தின் மனைவி சுந்தரி தனது வீட்டுக் கடனை மீட்டு, வங்கி ஏலத்திலிருந்து மீட்டுத் தருமாறு கோரியிருந்தார். இதனையேற்று அவருக்கு கடன் தொகையான ரூ.4.80 லட்சத்தை அதிமுக சார்பில் முதல்வரும் துணை முதல்வரும் வழங்கினர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது மாரடைப்பால் உயிரிழந்த திருநெல்வேலியைச் சேர்ந்த ரவிக்குமாரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியல் அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இட்லி சாப்பிடும் போட்டியில் பலி

Added : ஜன 18, 2018 01:53






புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே, பாண்டிக்குடி கல்லிச்சியம் கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி, பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு, பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், அதிக எண்ணிக்கையில் இட்லி சாப்பிடும் போட்டி நடந்தது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த, சமையல் ஏஜன்ட் சின்னதம்பி, 45, என்பவரும் பங்கேற்றார். வேகமாக இட்லி சாப்பிட்ட போது, இட்லி தொண்டையில் அடைத்து கொண்டதால், மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
'டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியம்' : பல்கலைகளில் பணிகள் தீவிரம்

Added : ஜன 18, 2018 02:03


போலி சான்றிதழ்களை முற்றிலும் களையெடுக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, 'டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியம்' திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கீழ், பல்கலை மானியக் குழுவின் நேரடி கட்டுப்பாட்டில், 'டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியம்' செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதில், நாடு முழுவதுமுள்ள, 359 மாநில பல்கலைகள், 123 நிகர்நிலை, 47 மத்திய மற்றும் 260 தனியார் பல்கலைகள், 12 மத்திய நிதி உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், 55 வகையான பாடத் திட்டங்களின் கீழ் செயல்படும் பள்ளிகள் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம், பட்டம், பட்டயம், ஆராய்ச்சி, தகுதித் தேர்வுகள், மதிப்பெண் உள்ளிட்ட, அனைத்து வகை சான்றிதழ்களும், டிஜிட்டல் முறையில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், பிரத்யேக பதிவு எண் வழங்கப்படும். இதன் மூலம், சான்றிதழ்களை எந்த நேரத்திலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தொழில் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் சமயங்களில், சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை எளிதாக அறிந்து கொள்ளலாம். டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியம் பதிவு, பராமரிப்பு, பதிவிறக்கம் போன்ற செயல்பாடுகளுக்கு, அதற்கேற்ப கட்டணங்களை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. மாணவர்கள், 27 வயது வரை, இச்சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.பல்கலைகளில், இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு, மாணவர்களின் தகவல்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

- நமது நிருபர் -

NEWS TODAY 11.06.2026