Monday, May 14, 2018

காலா ஓடியதும் ரஜினியும் ஓடிவிடுவார்!:அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Published : 13 May 2018 09:44 IST
 
டி.எல்.சஞ்சீவிகுமார்
 


தினகரன், ரஜினி, கமல் தொடங்கி ஆடிட்டர் குருமூர்த்தி வரையில் எவரையும் விட்டுவைக்காமல் பட்டாசாக வெடிக்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். சமீபத்திய வெடி ரஜினிக்கு!

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து..?

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஜனநாயக நாடு இது. ஆனால், அவர்களை அங்கீகாரம் செய்ய வேண்டியது மக்கள்தான். ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவரை உசுப்பேற்றி விடுவதற்கென்றே ஒரு கும்பல் இருக்கிறது. அவர்கள் மூலம் ரஜினி அரசியலுக்கு வந்தாலும், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். சிலைக்கு ரஜினி மாலை அணிவித்தார். ‘எனக்குத் திருமணத்துக்குப் பெண் பார்த்ததே எம்.ஜி.ஆர். தான்’ என்றார். ஒருவேளை, எம்.ஜி.ஆரை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறாரா ரஜினி?

ஆமாம், கூடவே ‘எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொண்டுவருவோம்’ என்றும் சொல்கிறார். வருவோர் போவோர் எல்லாம் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்த முடியாது. ரஜினி அரசியலுக்கு வந்தால், தன்னுடைய ஆட்சியைக் கொண்டு வருவேன் என்று சொன்னால் அதில் நியாயம் இருக்கிறது. அதை விடுத்து, எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பது அவரது இயலாமையையும் தன்மீதான நம்பிக்கையின்மையையும்தான் காட்டுகிறது.

ஆடிட்டர் குருமூர்த்தி, ‘அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்’ என்று சொல்லியிருக்கிறார், அப்படியானால் பாஜக-தான் பின்னிருந்து ரஜினியை இயக்குகிறதா?

முதலில் தமிழக அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை. அரசியல் வெற்றிடம் என்பதே ஒரு மாயை. அதுபோலவே ரஜினியை யார் இயக்கினாலும், அதுபற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நீந்தத் தெரிந்தவர்களுக்கு ஆழத்தைப் பற்றிய பயம் இருக்காது.

(இன்னும் ஏராளமான கேள்விகள்...

முழு பேட்டியும் படிக்க... ‘காமதேனு’!)
13 வயது சிறுவனுக்கு 23 வயது பெண்ணுடன் திருமணம்: பெற்ற தாயே நடத்தி வைத்த அவலம்

Published : 13 May 2018 12:41 IST



படம்: சிறப்பு ஏற்பாடு

ஆந்திர மாநிலத்தில் 13 வயது சிறுவனுக்கும் 23 வயது இளம் பெண்ணுக்கு நடந்த ரகசிய திருமணம் புகைப்பட்டத்தால் அம்பலமானது. இது குறித்து தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்தச் சிறுவனின் தாய் நோயுற்று இருக்கிறார். தனக்குப் பின் தனது மகனை யாரும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என நினைத்ததால் மகனுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார். சொந்த பந்தகள் வாயிலாக 23 வயது பெண் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளார்.

தாயின் முழு சம்மதத்தோடு திருமணமும் நடந்துள்ளது. திருமண நிகழ்வில் உறவினர்களில் யாரோ ஒருவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக போலீஸார் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போலீஸ் விசாரணை குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களும், பெண் வீட்டாரும் தலைமறைவாகிவிட்டனர். போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர். இதற்கிடையில் துணை ஆட்சியர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
கொடைக்கானலில் கூட்டம் : சுற்றுலா பயணியர் ஏமாற்றம்

Added : மே 14, 2018 02:51

கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று சுற்றுலா பயணியர் அதிகளவில் குவிந்ததால், இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல், பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.கோடை விடுமுறையை தொடர்ந்து, கொடைக்கானலில் பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஸ்தம்பித்தது. சுற்றுலா இடங்களுக்கு செல்லும் அப்சர்வேட்டரி ரோட்டில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல இடங்களை பார்க்க முடியாமல், பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.'கூட்டத்தை முறைப்படுத்த, போக்குவரத்து போலீசாருடன், தன்னார்வ அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும். கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்' என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பதவி, ஊதிய உயர்வை ரத்து செய்ய நிதித்துறை, 'கிடுக்கிப்பிடி' உத்தரவு 

dinamalar 14.05.2018

'பணியாளர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும். அவற்றால் ஏற்பட்ட கூடுதல் செலவை, அவர்களிடமிருந்து திரும்ப வசூலிக்க வேண்டும்' என, நிதித்துறை உத்தரவிட்டு உள்ளது.

41 நிறுவனங்கள் :

தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ், 74 பொதுத்துறை நிறுவனங்கள், கம்பெனிகள் சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தற்போதைய நிலவரப்படி, 68 பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், 41 நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் மொத்தம், 2.91 லட்சம் பேர் பணியாளர்களாக உள்ளனர்.

இவர்களுக்கான ஊதியத்தை, அந்தந்த நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இருப்பினும், பல நிறுவனங்களில், நிர்வாக நிலையில் நடக்கும் முறைகேடுகளால், சில அதிகாரிகளுக்கு, விதிகளை மீறி, கூடுதல் ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நடவடிக்கைகள் :

இதனால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு கடுமையான இழப்பு ஏற்படுகிறது. இந்த முறைகேடுகளை சரி செய்யவும், மக்களின் வரி பணம் முறையாக செலவிடப்படுவதை உறுதி செய்யவும், சில நடவடிக்கைகளை எடுக்க, நிதித்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, நிதித்துறையின் செலவுகள் பிரிவு செயலர், எம்.ஏ.சித்திக் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு:
* பொதுத்துறை நிறுவனங்களில், அதிகாரிகளின் ஊதியம், பதவி உயர்வால் ஏற்பட்ட செலவு வகையில், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பணியாளர் ஊதியம் என்ற வகையில் செலவிடப்பட்ட, கூடுதல் தொகைகளை திரும்ப வசூலிக்க வேண்டும்

* தவறுதலாக வழங்கப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இதற்கான நிர்வாக ஒப்புதல்களை ஆராய்ந்து, ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணியாளர்களுக்கு, 'நோட்டீஸ்' அளித்து. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

* இந்த உத்தரவை செயல்படுத்த ஒத்துழைக்காத, மறுக்கும் அதிகாரிகள் மீது, நிர்வாக மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

* இந்த விவகாரத்தில் சிக்கியோரை காப்பாற்றும் நோக்கில், அவர்களுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக குழுக்கள், சலுகை வழங்க கூடாது. நிர்வாக குழுக்களின் அடுத்த கூட்டத்தில், இந்த உத்தரவை தாக்கல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 25 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் : நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற தேவஸ்தானம் வேண்டுகோள்

2018-05-14@ 00:58:35



திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் 25 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்க ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரும் பக்தர்களுக்கு தரிசன நேரம் குறிப்பிட்ட டிக்கெட் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிட்ட நேரத்தில் கோயிலுக்கு வந்தால் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் நேரம் ஒதுக்கீடு திட்டம்’’ கடந்த 2ம்தேதி முதல் முழு அளவில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 88 ஆயிரத்து 102 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை காண்பித்து டிக்கெட் பெற்ற 16 ஆயிரத்து 844 பக்தர்கள் 2மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

நேற்று காலை நிலவரப்படி வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால், தரிசனத்திற்கு 25 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். ரூ.300 மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் நேற்றுமுன்தினம் இரவு தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் கோயில் எதிரிலும் வெட்ட வெளியிலும் படுத்து உறங்கினர். எனவே பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரே இடத்தில் காத்திருக்காமல் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மூலம் இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
லாலு மகன் திருமணத்தில் சர்ச்சையை கிளப்பிய, 'பேனர்'

Added : மே 14, 2018 00:47 



பாட்னா : பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் மகன் திருமணத்தில் வைக்கப்பட்ட சிவன் - பார்வதி, 'பேனர்' கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

பரபரப்பு:

லாலு பிரசாத் மகன், தேஜ் பிரதாப் யாதவுக்கும், பீஹார், எம்.எல்.ஏ., சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும், பீஹாரில், நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இதில், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உட்பட, பல தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த திருமணத்தை முன்னிட்டு, லாலு பிரசாத் வீட்டு வாசலில் வைக்கப்பட்ட பேனர், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், மணமகன் தேஜ் பிரதாப், சிவன் வேடத்திலும், மணமகள் ஐஸ்வர்யா ராய், பார்வதி வேடத்திலும் நிற்கின்றனர். அவர்களின் காலருகே அமர்ந்து, ராஷ்ட்ரீய ஜனதா தள இளைஞர் அணி துணை தலைவர், பீம்லேஷ் யாதவ், சிவலிங்கத்துக்கு பூஜை செவது போல், பேனர் வைக்கப்பட்டு உள்ளது.

கண்டனம் :

அதில், மணமக்களுக்கு திருமண வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேனரை வைத்த, பீம்லேஷின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேனர் தொடர்பாக, சமூக வலைதளங்களில், கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. லாலு மகனை, சிவனை போல சித்தரித்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மாசில்லா ராஜபாளையம் தேனீ வளர்ப்பிற்கு உதவும் விவசாயி

Added : மே 14, 2018 02:27

ரசாயன உரம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகள் பேச ஆரம்பித்துள்ளனர். மேலும் மாற்றுமுறை விவசாயத்தில் விளைநிலங்களில் ஊடுபயிரிடுதல், அகத்தி மரம் வளர்த்தல் போன்றவற்றுடன் தற்போது தேனீ வளர்ப்பும் சேர்ந்து உள்ளது. இதன் மூலம் வருமானம் கிடைப்பதால், விவசாயிகளிடையே ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.பூக்களில் மகரந்த சேர்க்கை ஏற்பட்டால் தான் காய், கனி என விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். இந்த சேர்க்கைக்கு துணையாக இருக்கும் தேனீக்களை பெட்டிகள் மூலம் தோட்டத்தில் வளர்க்கின்றனர். இதன் மூலம் விளைபொருள் உற்பத்தி அதிகமாகும். தேன் கிடைக்கும். தோட்டத்தில் தேனீ வளர்ப்பு பெட்டி வைக்க ராஜபாளையம் வேலாயுதராஜா, பல ஆண்டுகளாக விவசாயிகளுக்கு உதவுகிறார்.வேலாயுதராஜா கூறுகையில், ''ஆர்வமுள்ள விவசாயிகளின் தோப்புகளில் தேனீ வளர்ப்பு பெட்டி அமைத்து தேன் சேகரித்து வருகிறேன். இதன் மூலம் விவசாயிகளுக்குவிளைச்சல் அதிகரிப்பதோடு, ரசாயன உரங்களின் பயன்பாடும் குறைகிறது.அயல்மகரந்த சேர்க்கையை அதிகரித்து காய்ப்புத்தன்மையை பெருக்கும் இம்முறையின் பலன்கள் தெரிந்ததும், பலர் தேனீ வளர்ப்பு பெட்டி அமைக்கின்றனர்'' என்றார். இவரிடம் 91595 22114 என்ற அலைபேசி எண்ணில் ஆலோசனை பெறலாம்.ரமேஷ், இயற்கை விவசாயி, ராஜபாளையம்: நிலத்தை பண்படுத்தும்முறை முதல் உற்பத்தியை அதிகரிக்க பயன்படும் ரசாயன உரங்கள் வரை, மண்ணின் தன்மையை மாற்றி விடுகின்றன. இது வரும் தலைமுறைக்கு உடலளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதிகவிளைச்சலுக்காக விவசாயிகள் ரசாயன உரம் பயன்படுத்துகின்றனர். இதற்கு மாற்றாக குறைந்த செலவில் தேனீ வளர்ப்பு முறையை தொடர வேண்டும்.

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...