Monday, May 14, 2018

காலா ஓடியதும் ரஜினியும் ஓடிவிடுவார்!:அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Published : 13 May 2018 09:44 IST
 
டி.எல்.சஞ்சீவிகுமார்
 


தினகரன், ரஜினி, கமல் தொடங்கி ஆடிட்டர் குருமூர்த்தி வரையில் எவரையும் விட்டுவைக்காமல் பட்டாசாக வெடிக்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். சமீபத்திய வெடி ரஜினிக்கு!

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து..?

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஜனநாயக நாடு இது. ஆனால், அவர்களை அங்கீகாரம் செய்ய வேண்டியது மக்கள்தான். ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவரை உசுப்பேற்றி விடுவதற்கென்றே ஒரு கும்பல் இருக்கிறது. அவர்கள் மூலம் ரஜினி அரசியலுக்கு வந்தாலும், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். சிலைக்கு ரஜினி மாலை அணிவித்தார். ‘எனக்குத் திருமணத்துக்குப் பெண் பார்த்ததே எம்.ஜி.ஆர். தான்’ என்றார். ஒருவேளை, எம்.ஜி.ஆரை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறாரா ரஜினி?

ஆமாம், கூடவே ‘எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொண்டுவருவோம்’ என்றும் சொல்கிறார். வருவோர் போவோர் எல்லாம் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்த முடியாது. ரஜினி அரசியலுக்கு வந்தால், தன்னுடைய ஆட்சியைக் கொண்டு வருவேன் என்று சொன்னால் அதில் நியாயம் இருக்கிறது. அதை விடுத்து, எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பது அவரது இயலாமையையும் தன்மீதான நம்பிக்கையின்மையையும்தான் காட்டுகிறது.

ஆடிட்டர் குருமூர்த்தி, ‘அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்’ என்று சொல்லியிருக்கிறார், அப்படியானால் பாஜக-தான் பின்னிருந்து ரஜினியை இயக்குகிறதா?

முதலில் தமிழக அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை. அரசியல் வெற்றிடம் என்பதே ஒரு மாயை. அதுபோலவே ரஜினியை யார் இயக்கினாலும், அதுபற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நீந்தத் தெரிந்தவர்களுக்கு ஆழத்தைப் பற்றிய பயம் இருக்காது.

(இன்னும் ஏராளமான கேள்விகள்...

முழு பேட்டியும் படிக்க... ‘காமதேனு’!)

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024