Tuesday, July 31, 2018

வேலூரில் வெயில் மீண்டும், 'செஞ்சுரி'

Added : ஜூலை 31, 2018 01:07

வேலுார்: கோடை முடிந்தும், வேலுாரில், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்துகிறது.தமிழகத்திலேயே வேலுாரில் தான், வெயில் அதிகளவு பதிவாகும். இந்த ஆண்டு, கோடை காலம் தொடங்கும் முன்பே, 100 டிகிரியை தாண்டி, வெயில் கொளுத்தியது. இது கோடை காலத்தில், 108 டிகிரி வரை பதிவானது. இந்த மாத தொடக்கத்தில், 2ம் தேதி வேலுாரில், 102.2 டிகிரி வெயில் பதிவானது. பின், 100 டிகிரிக்கும் குறைவாகவே வெயில் பதிவானது. 29ம் தேதி, 100.8 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது.நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்தது; அனல் காற்றும் வீசியது. தொடர்ந்து, இரண்டாம் நாளாக, நேற்றும் செஞ்சுரி அடித்த வெயில், 100.4 டிகிரியாக பதிவானது.இதனால், 'மழை பெய்யாதா' என, வேலுார்மக்கள் எதிர்பார்த்து,காத்திருக்கின்றனர்.
ஒரு நாள், 'ஸ்டிரைக்' : அரசு டாக்டர்கள் முடிவு

Added : ஜூலை 31, 2018 00:47

நாமக்கல்: மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி, அரசு டாக்டர் கள், செப்., 21ல், ஸ்டிரைக் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். நாமக்கல்லில் நடந்த, அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டத்தில், மாநிலத் தலைவர் செந்தில் பேசியதாவது:தமிழக அரசு டாக்டர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி, ஆக., 1 முதல், 20 வரை, கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடத்தப்படும். ஆக., 27 முதல், செப்., 21 வரை ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும். மாநிலம் முழுவதும், செப்., 21ல், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
'குரூப் - 4' தேர்வு,'ரிசல்ட்' வெளியீடு

Added : ஜூலை 30, 2018 23:22

சென்னை: நமது நாளிதழ் செய்தியை தொடர்ந்து, ஐந்து மாதங்களாக வெளியிடப்படாமல் இருந்த, 20 லட்சம் பேர் எழுதிய, 'குரூப் - 4' தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவியில் அடங்கிய, 9,351 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2018, பிப்., 11ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவிக்கு, 494 காலி இடங்களும், இந்த தேர்வில்இணைக்கப்பட்டது. இதில், 4,096 இளநிலை உதவியாளர், 3,463 தட்டச்சர், 815 சுருக்கெழுத்தர், 156 வரைவாளர் உட்பட, மொத்தம், எட்டு வகை பதவிகளுக்கு, தேர்வு நடந்தது.

20.69 லட்சம் பேர் : எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ஒரு நாளில் நடந்த போட்டி தேர்வில், 20.69 லட்சம் பேர், தேர்வு எழுத அனுமதி வழங்கப் பட்டது.ஐந்து மாதங்களாக தேர்வு முடிவு வெளியாகாததால், அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல், தேர்வர்கள் தவித்து வந்தனர்.இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, தேர்வு முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று மாலைவெளியிட்டது.முடிவுகளை பார்க்க, தேர்வர்கள் ஒரே நேரத்தில் முயற்சிப்பர் என்பதால்,http://results.tnpsc.gov.inமற்றும்http://www.tnpsc.gov.in ஆகிய, இரண்டு இணையதளங்களில், பதிவு எண் வாரியாக, முடிவுகள் வெளியிடப்பட்டன.

அறிவிப்பு : எவ்வளவு பேர் தேர்ச்சி; விடை திருத்தம் நடந்தது எப்படி; தேர்ச்சி பெற்றவர்களின் அடுத்த நிலை என்ன என்பது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்த குமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் ஆகியோர், இன்று அறிவிப்பை வெளியிட உள்ளனர்.
மருத்துவமனையில் கருணாநிதி: விசாரித்தார் பழனிசாமி

31.07.2018


  சென்னை : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நேற்று நேரில் விசாரித்தனர்.




உடல் நலக்குறைவு காரணமாக, கருணாநிதி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், காமராஜ், விஜயபாஸ்கர், கருப்பண்ணன் ஆகியோர், மருத்துவமனைக்கு சென்றனர்.

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி ஆகியோரை சந்தித்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். கருணாநிதியை, அவர் சிகிச்சை பெறும் அறைக்கே சென்று, முதல்வர் மற்றும் துணை முதல்வர் பார்த்தனர்.

அதன்பின், நிருபர்களிடம், முதல்வர் பழனிசாமி கூறுகையில், ''கருணாநிதி உடல்நிலை, தற்போது சீராக உள்ளது. அவரை, நானும், துணை முதல்வரும் நேரில் பார்த்தோம். ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர். மருத்துவக் குழுவினர் அங்கேயே இருந்து, அவரை கவனித்து வருகின்றனர்,'' என்றார்.

முதல்வர் சென்ற பின், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு, செய்தித்துறை அமைச்சர் ராஜு ஆகியோர், மருத்துவமனைக்கு வந்தனர். ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

அதைத் தொடர்ந்து, பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், மருத்துவமனைக்கு வந்து சென்றனர். அவர்கள் கூறியதாவது:ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: வாழ்நாள் எல்லாம், தமிழர்களுக்காக போராடியவர். டாக்டர்கள் சிகிச்சை அளித்தாலும், தானாகவே அதிலிருந்து மீண்டு விட்டார் என்பது அதிசயம். வாழ்நாள் எல்லாம் தமிழர்களுக்காக, தமிழுக்காக, பல்வேறு சக்திகளை எதிர்த்து, போராடி உள்ளார்.

தற்போது, எமனோடு போராடுகிறார். எமனையும் ஜெயித்து, மீண்டு வருவார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா: உடல் நலக்குறைவு காரணமாக, அவரை சந்திக்கக் கூடாது என, மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்தபோதும், அதைபொருட்படுத்தாமல், வியாபாரிகளை சந்தித்தவர். பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தவர். அவர் மீண்டும் வருவார். வணிகர்களுக்கு, பல்வேறு நன்மைகள் செய்வார்.

தென்னிந்திய திருச்சபை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன்: கருணாநிதி சுகம் பெற வேண்டி, இறை வேண்டல் செய்ய வந்தோம். தென்னிந்திய திருச்சபை சார்பாக, எல்லா ஆலயங்களிலும், இறை வேண்டல் செய்து வருகிறோம். ஸ்டாலினை சந்தித்து, அவரது நல் வார்த்தைகளை கேட்டு, மகிழ்ச்சி அடைந்தோம்.

* தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், நேற்று மாலை, காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்தித்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றார். பின், தன், 'டுவிட்டர்' பதிவில், 'கருணாநிதி விரைவில் பூரண குணமடைய வேண்டும்' என, தெரிவித்துள்ளார்

* இலங்கை அமைச்சர்கள் செந்தில் தொண்டைமான், ராமேஸ்வரன், இலங்கை தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், ஆறுமுக தொண்டைமான் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டி, இலங்கை அதிபர் மைத்ரி பாலசிறிசேனா கொடுத்தனுப்பிய கடிதத்தையும், ஸ்டாலினிடம் வழங்கினர்
* புதுச்சேரி மாநில அமைச்சர்கள், நமச்சிவாயம், கந்தசாமி, ஈஷா யோகா மைய தலைவர் ஜக்கி வாசுதேவ் ஆகியோரும் நேற்று வந்து, உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.

மொட்டை போட்ட தொண்டர்கள்:

தி.மு.க., தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன் தி.மு.க., தொண்டர்கள் குவிந்துள்ளனர். இரவு பகலாக மூன்று நாட்களாக அங்குகாத்துக் கிடக்கின்றனர்.கருணாநிதி கடவுள் மறுப்பு கொள்கை உடையவர் என்றபோதிலும் அவரது கட்சியில் உள்ள கடவுள் நம்பிக்கை உடைய தொண்டர்கள் அவர் உடல் நலம் பெற வேண்டும் என இறைவனை வேண்டியபடி உள்ளனர். நேற்று மருத்துவமனை முன் சிலர் கருணாநிதி குணமடைய வேண்டி மொட்டை அடித்தனர்; திருஷ்டி பூசணிக்காய் உடைத்தனர்.
ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு நிபந்தனை அந்தஸ்து

Added : ஜூலை 31, 2018 03:30 |



  புதுடில்லி : லோக்சபாவில் நேற்று, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: பல்கலை மானியக்குழு விதிமுறைப்படி, தங்கள் செயல்பாடுகளை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையிலேயே, ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு, சிறந்த கல்வி நிறுவன சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

'நீட்' தேர்வு, 'ஆன்லைன்' கிடையாது மத்திய அரசு அறிவிப்பு

31.07.2018

புதுடில்லி : ''நீட் மற்றும் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகள், கணினி முறையில் நடத்தப்படுமே தவிர, 'ஆன்லைன்' முறையில் நடத்தப்படாது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர்,பிரகாஷ் ஜாவடேகர், லோக்சபாவில் நேற்று தெரிவித்தார்.




மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட், ஐ.ஐ.டி.,யில் பொறியியல்படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுதேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலைகல்வி வாரியம் நடத்தி வந்தது.
இந்நிலையில், மத்தியமனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ்செயல்படும், என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு நிறுவனம் என்ற அமைப்பு, இந்த தேர்வுகளை, 'ஆன்லைன்' முறையில், நடத்தப் போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், லோக்சபாவில்

நேற்று கூறியதாவது: நீட் மற்றும் ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளை, ஆண்டுதோறும், 24 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மாநில அரசுகள் நடத்தும் இதர தேர்வுகளை, 1.5 கோடி மாணவர்கள் எழுதுகின்றனர்.

நாடு முழுவதும்பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள்உள்ளன. அனைத்துஇடங்களிலும், இணைய வசதி, சீராக இருக்கும்என, சொல்ல முடியாது. இதை மனதில் வைத்து, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை, ஆன்லைன் தேர்வுகளாக அல்லாமல், கணினி முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

'ஆன்லைன்' எனப்படும், இணைய வசதியில் தேர்வை எழுதும்போது, விடைகள், உடனுக்கு உடன், தேர்வை நடத்தும் அமைப்புக்கு சென்று விடும்.ஆனால், கணினி முறையில், தேர்வுக்கான கேள்வி தாள்கள் ஏற்கனவே, தரவிறக்கம்செய்யப்பட்டு, கணினியில் தயாராக இருக்கும்.

மாணவர்கள், 'மவுஸ்' உதவியுடன்,அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும். இதற்கு இணைய வசதி தேவையில்லை.அடுத்த ஆண்டு நடக்கஉள்ள, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகள், கணினி உதவியுடன் நடக்கஉள்ள முதல் தேர்வு என்பதால், அதில் மட்டும்,

வினாத்தாள் முறையிலும் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

'அ.தி.மு.க., வலியுறுத்தல்

அ.தி.மு.க., - எம்.பி.,யும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை நேற்று பேசியதாவது: 'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களால், பிளஸ் 2பாடங்களில் கவனம் செலுத்த முடியாது. இந்த தேர்வுகள், வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

இதுபோன்ற நுழைவு தேர்வுகளை, மாநிலஅரசுகள் நடத்த அனுமதிக்கப்படாததால் தான், கிராமப்புறங்களில், டாக்டர்கள் குறைவாக உள்ளனர். எனவே, இந்த நுழைவு தேர்வுகளை நடத்த, மாநில அரசுகளை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

வருமான வரி கணக்கு தாக்கல்: இருமடங்கு உயர்வு


Updated : ஜூலை 30, 2018 20:16 | Added : ஜூலை 30, 2018 20:09




சென்னை: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில் அதிகமாகச் செலுத்திய வரியைத் திரும்ப பெறுவோர் எண்ணிக்கையும் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

2017-2018 ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் தாக்கல் செய்தவர்களை விட இருமடங்காக அதிகரித்து 3 கோடியாக உள்ளது. இந்நிலையில், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோரின் வசதிக்காக அதற்கான காலக்கெடு ஆக., 31ம் தேதி வரை மத்திய நிதியமைச்சகம் நீட்டித்துள்ளது.
இந்நிலையில் அதிகமாகச் செலுத்திய வரியைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையும் கடந்த ஆண்டைவிட 81 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அதிகமாகச் செலுத்திய வரி 57,551 கோடி ரூபாயை, வரி செலுத்தியவர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் செலுத்தியதில் 77,700 கோடி ரூபாயைத் திரும்பக் கேட்டுக் கோரிக்கைகள் வந்துள்ளது.

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...