Friday, January 11, 2019


போலி பல்கலைக்கழகம் மருத்துவ அதிகாரிகள், 'சீல்'

Added : ஜன 11, 2019 04:05

மயிலாடுதுறை:நாகை அருகே குத்தாலத்தில் இயங்கிய, போலி பல்கலைக்கழகத்தை மூடி, மருத்துவத் துறை அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.

நாகை மாவட்டம், குத்தாலத்தில், 'அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவ பல்கலைக்கழகம்' என்ற பெயரில், கல்வி நிறுவனத்தை, திருவேள்விக்குடியை சேர்ந்த செல்வராஜ் என்பவன், ஒன்பது ஆண்டுகளாக நடத்தி வருகிறான்.தொலைதுார பல்கலை என்ற பெயரில், சான்றிதழ்கள் அளித்துள்ளான்.

இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் இந்த பல்கலையில், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், பட்டங்கள் பெற்றுள்ளனர்.இவனிடம் சான்றிதழ் வாங்கிய ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதும், மாற்று முறை மருத்துவராக மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

இக்கல்வி நிறுவனம் தொடர்பாக, பத்திரிகை ஒன்றில், செல்வராஜ் விளம்பரம் செய்திருந்தான். அந்த விளம்பரம் குறித்து அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், கல்வி நிறுவனத்தில், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.இதில், குத்தாலத்தில் ஒரு வீட்டில், உரிய அனுமதி இல்லாமல் போலி பல்கலை நடத்தி வருவது தெரிந்தது.

ஏராளமான போலி சான்றிதழ்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பல்கலையை, அதிகாரிகள் மூடி, 'சீல்' வைத்தனர். செல்வராஜை, போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி ஜவுளி கடையில் வருமான வரி, 'ரெய்டு'

Added : ஜன 11, 2019 03:36

திருச்சி:திருச்சி சாரதாஸ் ஜவுளிக் கடையில், நேற்று வருமான வரித் துறையினர், அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

திருச்சி, என்.எஸ்.பி., சாலையில், பிரபல ஜவுளி நிறுவனங்கள் மற்றும் நகை கடைகள் உள்ளன. இந்த சாலையில், அடுக்குமாடி கட்டடத்தில், பிரசித்தி பெற்ற சாரதாஸ் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. ஒரு நாளைக்கு, பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் இந்த ஜவுளி நிறுவனத்தில், வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

நேற்று காலை, 11:00 மணிக்கு, எட்டுக்கும் மேற்பட்ட கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், 35க்கும் மேற்பட்டோர், சாரதாஸ் ஜவுளி கடைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.தொடர்ந்து, வாடிக்கையாளர்களை வெளியேற்றி, கடையின் ஷட்டர்களை மூடி, சோதனையை துவங்கினர்.நேற்று இரவு, 8:00 மணி வரை, சோதனை நீடித்தது. ஆவணங்களை சரி பார்த்தல், வருமான வரி கணக்குகளை ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதில், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
டீன் பணியிடங்களை நிரப்புவது எப்போது: உயர்நீதிமன்றம் கேள்வி

Added : ஜன 11, 2019 06:14

மதுரை:மதுரை பீ.பி.குளம் விஜயலட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை, திருச்சி, சேலம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் டீன் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் கண்காணிப்பாளர்கள், நிலைய மருத்துவ அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மருத்துவமனைகளில் நிர்வாகம் மற்றும் இதர பணிகள் முடங்கியுள்ளன. டீன் மற்றும் இதர பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மதுரை அரசு மருத்துவமனையை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். கழிவுகள் தேங்காமல் அகற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு விஜயலட்சுமி மனு செய்தார்.நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு:டீன் மற்றும் இதர பணியிடங்கள் எவ்வளவு கால அவகாசத்திற்குள் நிரப்பப்படும் என தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜன.,21 ல் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றனர்.

நர்ஸ் கவுன்சிலிங்: ஐகோர்ட் தடை

Added : ஜன 11, 2019 03:42

மதுரை:இன்று துவங்க இருந்த நர்ஸ்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத் துறை ஊழியர்கள் நலச் சங்க செயலர், கார்த்திக் தாக்கல் செய்த மனு:நர்ஸ்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், சென்னையில் இன்று நடக்கிறது. இதற்கான அரசின் அறிவிப்பு, விதிமுறைகளை பின்பற்றாமல், அவசரகதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டார்.

நீதிபதி, ஆர்.சுப்பிரமணியன், ''இந்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை, கவுன்சிலிங் நடத்த தடை விதிக்கப்படுகிறது. சுகாதாரத் துறை செயலர், மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது,'' என்றார்.
சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க அனுமதிகேட்டு தமிழக அரசு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை


சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

பதிவு: ஜனவரி 11, 2019 05:30 AM
சென்னை,

சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்க அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1,000 பரிசும் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் வசதிபடைத்தவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்க தடை விதித்தனர்.

அதாவது சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கும், எந்த பொருளும் வாங்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு அ.தி.மு.க. வக்கீல் பாலசுப்பிரமணியம் ஆஜராகி, தடை உத்தரவை மாற்றியமைக்கக்கோரி வழக்கு தொடர உள்ளதாக கோரிக்கை விடுத்தார். அதனை நீதிபதிகள் ஏற்கவில்லை. இதையடுத்து பிற்பகலில் நீதிபதிகள் முன்பு கூடுதல் அரசு பிளடர் மனோகர் ஆஜராகி, ‘சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்க அனுமதிக்க வேண்டும் என்று அரசு மனு தாக்கல் செய்ய உள்ளது. அந்த மனுவை உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு நீதிபதிகள், வழக்கை உடனே விசாரணைக்கு ஏற்கமுடியாது. வழக்கு தொடர்ந்தால், வரிசைப்படி விசாரணைக்கு ஏற்கப்படும் என்றனர்.

இதையடுத்து தடை உத்தரவை மாற்றியமைக்கக்கோரி உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ரேஷன் கடைகளில் எந்த பொருளும் வாங்காதவர்களுக்கும், சர்க்கரை வாங்குபவர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க தடை விதித்து ஐகோர்ட்டு கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டது. இதில் சர்க்கரை வாங்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த ரொக்கப்பரிசு வழங்க அனுமதிக்க வேண்டும்.

பொது வினியோக திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. ரேஷன் அட்டைகள் வழங்கும்போது அதை யாரும் தவறாக பயன்படுத்திவிட கூடாது என்பதில் அரசு கூடுதல் கவனத்துடன் செயல்படுகிறது.

இவ்வாறு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினர், நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பத்தினர், வசதிபடைத்த குடும்பத்தினர் என்று 3 வகையில் பிரித்து ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர். இவர்கள் மொத்தம் 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 உள்ளனர். இவர்களில் கடந்த 9-ந் தேதி வரை 4 லட்சத்து 12 ஆயிரத்து 558 ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசான ரூ.1,000 வாங்கிச் சென்றுவிட்டனர்.

இதனால் பொங்கல் ரொக்கப்பரிசு வாங்காத மீதமுள்ளவர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர். அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதால் பொங்கல் பரிசான ரூ.1,000-த்தை அவர்களுக்கும் வழங்க அனுமதிக்க வேண்டும். இதற்கு ஏற்ப 9-ந் தேதி ஐகோர்ட்டு பிறப்பித்த தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Madras HC refuses to reconsider its order restricting Rs 1000 Pongal cash gift to BPL families

The court had observed that the distribution of money to all irrespective of economic status is non-productive use of public funds.

Published: 10th January 2019 01:22 PM 



Madras HC (File | EPS)

By Express News Service

CHENNAI: The division bench of the Madras High Court, which on Wednesday restricted the Pongal gift of payment of Rs, 1,000 to families of below poverty of line (BPL) alone, on Thursday rejected a plea to re-consider it.

While passing interim orders on a PIL from advocate Daniel Jesudoss of Coimbatore, the bench of Justices M Sathyanarayanan and P Rajamanickam has ordered the restriction on Wednesday. The court had observed that the distribution of money to all irrespective of economic status is non-productive use of public funds.

Today, when the judges resumed their work, AIADMK advocate R Balasubramanian made a mention, requesting them to reconsider their order. He argued that the petitioner has no locus-standi to prefer the PIL petition. Moreover, payment of Rs, 1,000 was halfway through, he pointed out.
UGC committee to review MPhil, PhD regulations

Published: 10th January 2019 04:01 AM |

By Express News Service

COIMBATORE: The University Grants Commission (UGC) has constituted a high level committee headed by Indian Institute of Science’s (Bengaluru) former director P Balram to review the MPhil and PhD regulations. The committee will also review the UGC’s quality mandate relating to promotion of research in higher education institutions, Minister of State (Human Resource Development) Satya Pal Singh said in a written reply in the Lok Sabha on Monday.

It was in 2016 that the UGC introduced a new regulation called Minimum Standards and Procedure for Award of MPhil and PhD Degrees, which superseded the 2009 regulation. The 2016 regulation prescribed 55 percentage marks in masters degree for MPhil admission and 55 percentage mark in MPhil for PhD admission. It gave a relaxation of five percentage marks for SC, ST, OBC (non-creamy layer) candidates and for people with disabilities (PwD). While the minimum duration for MPhil is one years, for PhD it is three years. Similarly, the maximum duration for MPhil is two years and for PhD, six years. Any full time regular professor with at least five research publications in referred journal and any full time regular associate or assistant professor with PhD and at least two research publications in referred journal can be recognised as research supervisor (MPhil or PhD guide).

A professor can guide three MPhil and eight PhD scholars at any given point of time. Similarly, an associate professor can guide two MPhil and six PhD, while an assistant professor can guide one MPhil and four PhD scholar at a time. The regulation barred higher education institutions from offering both MPhil and PhD programmes under the distance education mode.

Commenting on the formation of committee to review MPhil and PhD regulation, Association of University Teachers (AUT) former general secretary C Pichandy claimed that this would lead to more confusion. Given that the regulation was introduced only in 2016, only now have many universities adopted the norms and standardised the programmes. There were a few more universities who were yet to adopt the regulation. A review now would only cause confusion, he said. It remains to be seen if this was being done in alignment with UGC’s plan to make PhD as entry qualification for teaching positions in colleges and universities from 2021, he added.

NEWS TODAY 24.08.2026